Total Pageviews

Monday, January 31, 2011

இதெல்லாம் சைவ உணவா?



புலால் உணவு/மிருக பகுதிகள் தவிர்த்த அனைத்தும் சைவ உணவு என்பதும், தாவரங்கள் சார்ந்த, செடிகளில் இருந்து கிடைக்கும் தானியங்கள், காய் கறிகள், பழங்கள், மர வகை உணவுகள், பால், வெண்ணை, நெய் அனைத்தும் சைவ உணவுகள் என்பதும் பொதுவான கருத்தாகும். இது சரிதானா?

ஐஸ் க்ரீம்கள், சாக்லேட்டுகள், கேக்குகள் போன்றவை குளிர் சாதனப் பெட்டிக்குள் இல்லாத சமயங்களில் அதன் திடத் தன்மையை நீடிக்க ஜெலாட்டின் என்ற மிருகக் கொழுப்பு வகையும்,முட்டையும் சேர்க்கப்படுகிறது.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அப்படியே சாப்பிடும் உணவு வகைகள்(ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் போன்றவை) பெருப்பாலும் மாட்டுக் கொழுப்பு கலந்த எண்ணையில் தான் பொறித்து எடுக்கப் படுகிறது.

துரித உணவு வகைகளின் (பாஸ்ட் புட்) அடிப்படையான சீஸில் கன்று குட்டியின் குடலிலிருந்து எடுக்கப்படும் என்சைம்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பால் சார்ந்த இனிப்பு வகைகளின் (மில்க் ஸ்வீட்) மேல் ஒட்டப்பட்டிருக்கும் பளபளப்பான வெள்ளி இழைகள் (சில்வர் லேயர்) மெல்லியதாக தயாரிக்க மாட்டின் குடல் உபயோகப்படுத்தப் படுகிறது. மாட்டின் சூடான இரண்டு குடல் தட்டுகளுக்கு இடையே வெள்ளி மூலப்பொருள் வைக்கப்பட்டு அழுத்தம் கொடுத்து மெல்லிய இழைகளாக மாற்றப்படுகிறது

ஆப்பிள் போன்ற பழங்கள் நீண்ட நாள் வாடாமல் இருக்க மெழுகும்,கொழுப்பும் கலந்த கலவை பூசப்படுகிறது

தாணியங்கள், காய்கறிகள் நல்ல விளைச்சலைத் கொடுக்கவும் நெடு நாள் கெடாமல் இருக்கவும் அவற்றின் விதைகளில் மரபணுச் சோதனைகள் மூலம் மிருக மூலக்கூறுகள், அணுக்கள் (டி என் ஏ) சேர்க்கப்படுகின்றன.

இப்பொழுது சொல்லுங்கள்; சைவ உணவு என்று ஒன்று உள்ளதா என்ன?!!


புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்?
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்கனே?
புலாலுமாய்ப் பிதற்றுமாய்ப் பேருலாவும் தானுமாய்ப்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே!-
                                                                                                                     சிவவாக்கியார்-

                                                                                                            

4 comments:

gayathri said...

மாஸ்டர்,பிறகு எதைத்தான் சாப்பிடுவது?

Yoga Yuva Kendra said...

காற்றைச் சாப்பிடுங்க, ஆமா... காற்று அசைவமா?, சைவமா?

gayathri said...

இதற்கும் நீங்களே பதில் சொல்லிவிடுங்கள் மாஸ்டர்.

sm.sakthivel. said...

thaniya vagai food veg.dont use fast food.any packed item food.biologically men veg type.veg is nature food.dont side effect it sure.

Post a Comment