Total Pageviews

Thursday, January 13, 2011

இன்றே இப்பொழுதே -ஜென் கதை

அமைதியாக இருந்தார் துறவி .

"இறந்த பின் நமது புண்ணிய ஆத்மா எங்கே செல்லும்"-அந்நாட்டு மன்னன் கேட் டான்"

'"அதை ஏன் என்னிடம் கேட்கிறாய்?"

"நீங்கள் தானே எனது குரு"

"நீ சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் நான் இன்னும்
சாகவில்லையே. சில விஷயங்களை அனுபவித்த பின்பு தான் சொல்லமுடியும்.
இப்போது அந்தப் புண்ணிய ஆத்மா எங்கே உள்ளது."?


"................................"!


"அதைக் கண்டுபிடி. போகிற இடம் தானாகத் தெரியும்."

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திட லாமென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனித ரவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்.-----பாரதி



.

1 comment:

sm.sakthivel. said...

vazumpothu vizipu nilai vendum.thannai ariya thanakoru kedillai.

Post a Comment