Total Pageviews

Wednesday, January 5, 2011

மீன் வளர்க்கிறீர்களா?- இதப்படிங்க



நமஸ்காரம் ! உங்களது வீடுகளில் செல்லபிராணி வளர்க்கிறீர்களா?கவனத்துடன் செயல்படுங்கள். . சில பிராணிகளால் த்ரி தோஷம் என்று சொல்லக்கூடிய வாத, பித்த, கபத்தில் மாறுபாடு ஏற்படுவதை யோகிகள் கூறி இருக்கிறார்கள்.  லவ்பேர்ட்ஸ்,மீன்கள் போன்றவற்றை வீடுகளில் வளர்க்கும்போது, வாதம் கூடுவதாக யோகிகள் கூறுகிறார்கள் . எனவே, முதுகுத்தண்டில் பிரச்னை இருப்பவர்கள் , ருமடிசம், ஆர்த்தரிடீஸ் மலச்சிக்கல் போன்ற நோய் இருப்பவர்கள் வீடுகளில் லவ்பேட்ஸ் , மீன்கள் போன்றவற்றை வளர்க்கவேண்டாம். அதற்குப்பதிலாக இவர்களது வீடுகளில் பசு, வாத்து போன்றவற்றை வளர்க்கும்போது வாதத்தன்மை குறைகிறது. 


அதுபோல பித்த நோய் களான தோல் வெடிப்பு நோய்கள் , மன சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் வீடுகளில் காளை, நாய், பூனை போன்ற பிராணிகளை வளர்க்கும்போது நோய் அதிகரிக்கிறது இந்நோயாளிகள் வீடுகளில் மீன்கள்,பச்சைக்கிளி,பசு, மான் போன்ற பிராணிகளை வளர்க்கலாம். கபநோய் களான , ஆஸ்துமா, இதய அடைப்பு நோய்கள் இருப்பவர்கள் வீடுகளில் புறா, முயல் ஆகிய பிராணிகளை வளர்க்கவேண்டாம் . பதிலாக ஆடு, காளைமாடு, நாய் போன்றவற்றை வளர்க்கலாம் .

1 comment:

gayathri said...

பயனுள்ள செய்தியை தந்தமைக்கு நன்றி அய்யா

Post a Comment