Total Pageviews

Sunday, January 9, 2011

அன்பு

ஓரல் ராபர்ட்ஸ் என்ற போதகர் இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களை பற்றி பிரசங்கம் செய்வார் . ஒவ்வொரு நாளும் தன்னை நாடி வந்த மக்களுக்காக மனதுருகி ஜெபிப்பார்.ஒரு நாள் கூட்டம் அதிகமாக இருந்ததால் .,

எல்லோருக்காகவும் ஜெபம் செய்து முடித்ததும் களைப்பு அதிகமானது. காரில் ஏற சென்ற அவரை ஒரு பெண் வழிமறித்து.,

" ஐயா எனக்கு தீராத வியாதி இருக்கிறது ., நீங்கள் தொட்டாலே எனது வியாதி குணமாகிவிடும் ., எனக்காக ஒருசில நிமிடங்கள் ஜெபியுங்கள் " என்று மன்றாடினார் !

காரில் எறசென்றவரை தடுத்த அந்த மூதாட்டியின் மீது கோபம் கொண்ட ராபர்ட்ஸ் ., எனக்கு நேரமாகிவிட்டது என்று கூறிக்கொண்டே அந்த மூதாட்டியை இடித்து தள்ளிவிட்டு காரில் ஏறி சென்றார்.

அடுத்த நாள் கூட்டம் கூடியதும் அந்த மூதாட்டி முதல் ஆளாக மேடையில் ஏறி பேசத்த் துவங்கினார்.!


"அன்புள்ள மக்களே! நேற்று நான் இந்த போதகரை சந்தித்து என்னை தொட்டு என் வியாதியை நீக்குமாறு கேட்டுக்கொண்டேன்... அவர் என்னை தொட்டுத் தள்ளி விட்டார். எப்படியோ எனக்கு சரியாகிவிட்டது. இது அவர் கை என்மேல் பட்டதால் தான் நடந்திருக்கிறது என்று நம்புகிறேன்.,!" என்றார்.

போதகருக்கு கண்ணீர் பெருகியது.,ஆண்டவரே அவரின் முன் வந்து பேசுவதை போல் இருந்தது
"நான் உனக்கு கொடுத்த வரத்தினால் ., நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த பெண்ணுக்கு நோய் குணமாகி அற்புதம் நிகழ்ந்துவிட்டது..!நீ அன்போடு நடந்து கொள்ளாததால் உனக்கு இந்த அர்ப்புதத்தில் பங்கோ பலனோ இல்லை." என்று அவருக்குள் ஒரு குரல் ஒலித்தது அதை இயேசு கிறிஸ்த்துவின் குரலாகவே கருதினார்.



என் உள்ளுணர்வு :அன்பில்லாத சேவையால் எந்தப் பலனுமில்லை! தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்! சாதியால்.,பிறப்பால் ,நிறத்தால் ,பணத்தால், வேறுபட்டாலும் அன்பை எல்லோருக்கும் சமநீதியாய் வழங்க வேண்டும் ! எல்லா செயல்களிலும் அன்பினை குழைத்துச் செய்ய வேண்டும்

1 comment:

Hemamalini said...

anbu ullagai jeyicum hema

Post a Comment