Total Pageviews

Wednesday, July 13, 2011

குரு பூர்ணிமா





முழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் "குரு பூர்ணிமா ". குரு பௌர்ணமி என்பது சாதாரண உயிர் கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயரக் கூடியத் திருநாள். குருவின் ஆற்றல் எல்லா நாளும் இருந்தாலும், குரு பூர்ணிமா தனி மனிதன் தனதுகுருவின் வழிகாட்டுதலுடன் தன்னை உணரும் சாதனையைத் துவங்கும் தொடக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைவது உறுதி என வேதம் கட்டியம் கூறுகிறது . 


குருபூர்ணிமா அன்று பயிற்சியும், அன்று கிடைக்கும் குருவின் தொடர்பும் இப்பிறவியில் மட்டுமல்ல , பல பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும். நமது தேசத்தில் பல ஞானிகள் - ரிஷிகள், குரு இல்லாமல் தானாக ஆன்மீகத்தில் உயர்ந்ததாகத் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஏதோ ஒரு பிறப்பில் குரு பூர்ணிமா அன்று தூண்டப்பட்ட விளக்காக இருந்து இப்பொழுது ஒளிவீசுகிறார்கள் என்பதே உண்மை.


மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள்,  இதில் மாதா என்றால் இடகலை என்னும் இடது சுவாசம், பிதா என்பது பிங்கலை என்னும் வலது சுவாசம்.  குரு என்பது சுழுமுனை சுவாசம் இந்த சுழுமுனை சுவாசத்தின் மூலமாகவே மனமற்ற தெய்வ நிலையை உணர முடியும் என்பதே சித்தர்கள் கண்ட சிவராஜ யோகத்தத்துவம். சுழுமுனை என்னும் சூட்சும சுவாசம் அதிகமாக நடைபெறும் ஒரு அற்புத நாளே குருபூர்ணிமா.   இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிகொண்டு குருவின் துணையோடு யோகசாதனையைத் தொடங்கும் அற்புத நாளே குரு பூர்ணிமா.யோகப்பண்பாட்டில் இந்தத் திருநாள் ஆனந்தமான ஒரு நாளாகக் கொண்டாடப் படுகிறது. 

உலகத்தில் உள்ள அனைவருக்கும் செல்வத்தின் மீது ஆசை. அழியக் கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே, பல பாடுகள் பட்டாக வேண்டி இருக்கிறது. ஆனால் அழியாத சொத்தான 'ஞானத்தை' நமக்கு அளிக்க வேண்டுமென்றால், அது யாரால் முடியும்?.......................
குருவால் மட்டும்தான் முடியும். குரு வெளியில் உலகத்தினருக்குப் பிசைக்காரனாகத் தெரியலாம். அதனால் தானோ என்னவோ யோகிராம் போன்ற மகான்கள் தன்னைப் பிச்சைக்காரன் என்றே பிரகடனப்படுத்திக்கொண்டார்கள்.  ஆனால் குருவிடம் இருப்பதோ எப்போதும், யாராலும் அழிக்க முடியாத ஞானப் பொக்கிஷம். 

எந்த விதமான காரணமும் இல்லாமல் வெறும் கருணை மாத்திரத்தால் மட்டுமே, நமக்கு ஞானச் செல்வத்தை அள்ளித்தரும் குருநாதருக்கு 'அவ்யாஜ கருணாமூர்த்தி' என்றே ஒரு திருநாமமும் உண்டு. தனது அக வாழ்விற்கு வழிகாட்டித் தன்னையுணர வழிசெய்த அந்த தியாகத்தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தக்கூடியத் திருநாளே குருபூர்ணிமா.

ஆடி மாதப் பௌர்ணமியை "ஆஷாட சுத்த பௌர்ணமி' என்பர். இந்நாளில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரதத்தினை மேற்கொள் வார்கள். அன்று துறவிகள் வியாச பூஜை செய்வார்கள்.

சாதுர்மாஸ்ய விரதம் என்பது மகான்கள், துறவிகள் ஓரிடத்தில் நான்கு மாதங்கள் தங்கி வேதங்களை ஆய்வு செய்வதாகும். இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள். முதல் மாதம் உணவில் காயும் பழங்களும் இருக்கும்.

இரண்டாம் மாதம் பால் தவிர்ப்பார்கள். மூன்றாம் மாதம் தயிர் சாப்பிட மாட்டார்கள். நான்காம் மாதம் பருப்பு வகையறாக்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இவையெல்லாம் அந்தக் காலத்தில் மேற்கொண்டதாக வரலாறு சொல்கிறது. இந்தக் காலத்திலும் ஒருசில துறவிகள் இதனைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த சாதுர்மாஸ்ய விரதமென்பது,  ருது சரியையைக் கருத்தில் கொண்டு திரிதோசத்தைச் சமப்படுத்தும் ஒரு மருத்துவ வழிமுறையே.

குரு பூர்ணிமா என்று சொல்லப்படும் வியாச பௌர்ணமி நாளில் (ஆடிப் பௌர்ணமி) குருவுடன் இருந்தால், தாங்கள் பெற்ற ஞானச்செல்வம் மேன்மேலும் வளர்ந்து தங்கள் வாழ்வு ஒளிமயமாகத் திகழும் என்பது யோகரகசியம்.



“த்யான மூலம் குரோர் மூர்த்தி
பூஜாமூலம் குரோர் பதம்
மந்த்ரமூலம் குரோர் வாக்யம்
மோக்ஷமூலம் குரோக்ருபா!’

“தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்; பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்; மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்; குருவின் அருள், மோட்சம் நல்குகிறது…’ 
உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே.

9 comments:

abarnavijay said...

குரு பூர்ணிமா அன்று நேரில் வந்து ஆசி பெற முடியாவிட்டாலும் ,இந்த வலை பதிவின் மூலம் தங்கள் ஆசி பெற வணங்கி வேண்டுகிறேன் .நன்றி மாஸ்டர்

Yoga Yuva Kendra said...

sathguru blesses u

sheeba said...

குரு பூர்ணிமா அன்று தங்களுடன் இருக்கும் பாக்கியம் கிடைக்காவிட்டாலும் தாங்கள் கருணையோடு எங்களுக்கு அளித்த யோக சாதனைகளை கடை பிடித்து யோக ஞானத்தை பெற்று மேன்மேலும் வளர தங்கள் கருணையையும் ஆசியையும் வேண்டுகிறோம்!

manjushiva said...

master,

Annamalaiku vara mudiyatha engaluku unga aashirvaadham kidaikuma master.

Yoga Yuva Kendra said...

manjushiva, sheeba, sathguru blesses u

manjushiva said...

Thank you master

Radhika said...

Though i saw this only today i thankyou for the information u gave us all,who couldnot make it to Annamalai on gurupurnima .We always need your blessings master.

vairam said...

We all at Sivakasi seek your blessings, master. Vairam

Yoga Yuva Kendra said...

vairam anna,sathguru blesses u and ur family

Post a Comment