Total Pageviews

Wednesday, July 27, 2011

பாரத விஞ்ஞானம்.

இன்று வானில் ஏராளமான செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவருகின்றன.இவை அனைத்தும் பூமியை ஒவ்வொரு விநாடியும் கண்காணித்து வருகின்றன.அமெரிக்க செயற்கைக்கோள்கள் இந்தியாவின் முழு நிலப்பரப்பையும் ஒவ்வொரு விநாடியும் படம் பிடித்து வருகின்றன.


வானியலில் வெள்ளைக்காரர்கள்(அமெரிக்க ஐரோப்பாவினர்)தான் முன்னோடிகள் என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மறந்துவிடுங்கள். அவர்கள் எல்லா விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் நமது நாட்டிலிருந்து களவாடப்பட்டவை.

வரலாறு என்ற ஒன்று உண்டு.அதில் நிஜங்கள் மட்டுமே நிலைத்திருக்கும். டாக்டர் டேவிட் எட்வின் பின்கிரீ என்ற அமெரிக்க கணிதப்பேராசிரியர் 1952 ஆம் வருடம் தற்செயலாக ரோம் நகரில் உள்ள நூலகத்தில் ஒரு புத்தகத்தைப்பார்த்தார்.அதில் ஒரு ஹிந்து வான சாஸ்திர அறிஞரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருந்த வானியல் உண்மைகளைப்பார்த்து வியந்துபோனார். அதனால் அவர் அன்று முதல் தனது ஆராய்ச்சியை ஹிந்து கணிதம்,வான சாஸ்திரம் நோக்கித் திருப்பினார்.
கி.பி.1965 ஆம் ஆண்டு நமது பாரதத்திற்கு வந்தார்.இத்துறையில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட 20,000 கிரந்தங்கள்(பாடல்கள்)உள்ளன என்று கணக்கிட்டு அவற்றின் விவரத்தைத் தொகுக்கத்தொடங்கினார்.கி.பி.1995 வரை ஐந்து பெரிய தொகுப்புகளாக அவற்றை வெளியிட்டார்.அவற்றிற்கு Census of Exact Science எனப் பெயரிட்டார். 

பூகோள விஞ்ஞானத்திலும், வான சாஸ்திரத்திலும் நம்மவர்கள் உலகின் மற்ற நாகரிகங்களையும், நாடுகளையும்விட முந்தியிருந்தார்கள்.

நம்மவர்கள் பூமியின் மொத்த வயதை 432 கோடி வருடங்கள் என்று கணித்தார்கள். பிரம்மனின் ஒரு நாள் (கல்பா) கணக்கில், பூமியின் வயது ஆயிரம் சதுர்யுகம் என்றார்கள். ஒரு யுகம் என்பது 108 கோடி ஆண்டுகள் என்று எழுதினார் ஆர்யபட்டர்.

ஒரு நொடியை 33,750-ஆல் (முப்பத்தி மூன்றாயிரத்து எழுநூற்றைம்பது) வகுத்து, அதை ‘த்ருதி’ என்றார்கள். அந்த நாட்களில் உலகின் மற்ற நாடுகள் நொடியைவிடச் சிறிய கால அளவை கண்டுபிடிக்கவே இல்லை.

ஒளியின் வேகத்தை 19-ஆம் நூற்றாண்டில் மேலைநாட்டு விஞ்ஞானிகள் நொடிக்கு 2,99,792 கி.மீ. என்று கணக்கிட்டார்கள். ஆனால், ரிக்வேதத்தில் குறிப்பிட்ட அளவுக் கணக்கை இதற்கு நிகராக வைத்துப் பார்த்தால், ஒளியின் வேகம் நொடிக்கு 2,99,334 கி.மீ. என்று வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடித்த Black-Hole-ஐ (அண்ட சராசரத்தின் மேல் பகுதி), விஷ்வருசி என்ற பெயரில் முண்டக உபநிஷத்தில் எழுதி வைத்தார்கள்.


அதேபோல் பரம அணு என்பது 0.000000614 கிராமுக்கு நிகரானது என்ற அளவுக் கணக்கை அந்தக் காலத்திலேயே கண்டுபிடித்ததும் நம்மவர்கள்.


இன்றைய அணுசக்தி விஞ்ஞானத்துக்குத் தந்தை மேலைநாடுகள் என்றால் கொள்ளுத்தாத்தன் நம்மவர்கள்தான். அணுவிலிருந்து வெளிவரும் அபார சக்தியை முண்டக உபநிஷத்திலேயே விவரித்திருக்கிறார்கள்.


இயற்கைதான் வாழ்வின் ஆதாரம் என்ற கருத்தில்தான் பூமாதேவியை வழிபட்டார்கள். ஒரு இடத்தில் கட்டடம் கட்டும்போது பூமி பூஜை செய்வதே, அந்த பூமி கட்டுமானத்துக்கு ஏற்றதா என்று ஆய்வு செய்து, சரியென்றால், அதை வாழ்த்தும் வகையில் செய்யும் பூஜைதான். சீதை என்றாலே, ஏர் என்று பொருள். சீதை பூமியிலிருந்து பிறந்தாள் என்பதுடன் ராமாயண வாழ்க்கை முடிந்ததும், பூமி பிளந்து சீதையை ஏற்றுக்கொள்வதாக புராணம் சொல்கிறது. ஏரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே சீதை கதாபாத்திரத்தை ஏராகவும், பூமாதேவியாகவும் சித்தரித்தார்கள்.


மரங்களிலேயே சுற்றுப்புறத்துக்கு அதிக நலன் தரும் மரத்தை ‘அரசமரம்’ என்றதுடன், போதிமரம் என்றும் சொன்னார்கள். புத்தருக்கு ஞானம் போதித்த மரம் என்பதாலும், பூதேவியின் மரம் என்பதாலும் போதிமரம் என்ற பெயர் வைத்தார்கள். அரச மரத்தைத்தான் கல்பதரு என்று சொல்லி வணங்கினார்கள். இன்று Global Warming பிரச்னையை எதிர்கொள்ள, மேலைநாட்டு விஞ்ஞானிகள் சொல்வது - மரங்களை நடுங்கள் என்பதுதான். அதுவும் அரச மரங்களை!


மனிதர்களின் நோய்க்கு வைத்தியம் நமக்குத் தெரியும். பிராணிகளுக்கும் வைத்தியர்கள் உண்டு. மரம், செடி, கொடிகளுக்கு வைத்தியம் உண்டா? விருக்ஷ ஆயுர்வேதாவில் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஒருவகை மலரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மலர்ந்திருக்கும் அந்த மலரின் அருகில் சென்றால் மலர் மூடிக்கொள்ளுமாம். கவலை அகன்றாலோ, கவலையாயிருப்பவர் நகர்ந்து விட்டாலோ திறந்து கொள்ளுமாம். இன்றும் நீலகிரியில், தோடர்கள் இந்த மலர் இருப்பதை உறுதி செய்கிறார்கள் (Gentiana Pedicellata என்பது இன்றைய பெயர்).


கலியுகத்தில் செடி, மரம் நடுவது, பூங்கா அமைப்பது, கிணறு, குளம் தோண்டுவது குறையும். அதனால் இயற்கையின் சீற்றம் அடிக்கடி ஏற்படும் என்று சிவ புராணத்தில் (பாடல் 11.1.23), அன்றே சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்!

நவீன விஞ்ஞானம் இன்னும் சாதிக்காத மாஜிக்குகளைக்கூட நம்மவர்கள் எளிதாக செயல்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை!

1 comment:

manjushiva said...

viyaka vaikum unmaigal...nandri master

Post a Comment