Total Pageviews

Friday, July 22, 2011

மறதி வரம்........



நினைக்கத் தெரிந்த மனிதனுக்கு, மறதியும் ஒரு வரமே!
மறக்கத் தெரிந்த மனது, நமக்கு சத்குரு அளித்த வரமே!
எத்தனை எத்தனைப் பிறவிகள்; எத்தனை எத்தனை உறவுகள்!
எத்தனை எத்தனைப் பிரிவுகள்; எத்தனை எத்தனைத் துயரங்கள்!


பாரில் புழு, பூச்சி, வண்டுகளாக ஊர்ந்ததும்,
நீரில் மீன், நண்டு, ஆமைகளாக மிதந்ததும்,
விண்ணில் புல்லினனமாய்ப் பறந்ததும்,
மண்ணில் விலங்கினமாய்ப் பிறந்ததும்,
வீட்டில் , பூனை, நாய் என வளர்ந்ததும்,
காட்டில் புலி சிங்கமெனத் திரிந்ததும்,
கரடி, நரி, பரி என அலைந்ததும்,
பிளிரும் யானையாய் அசைந்ததும்,
பித்தனைப் போலக் குரங்காய்க் குதித்ததும்,
எத்தனை எத்தனைப் பிறவிகள் ,
அத்தனையும் முற்றிலும் மறப்பதென்றால்,
எத்தனை நன்மை மறதியால், எண்ணுவீர்!
பிறந்து, அலைந்து, திரிந்து, அல்லாடி,
இறக்கும்வரை துன்புற்றுத் திண்டாடி,


உணவுக்காக, உறவுக்காக
நாயாய்ப் பேயாய்,

உழன்றதனைத்தும் நம் உணர்வில் நின்றால்…
நொடியேனும் மனதில் நிம்மதி இருக்குமா?
ஒரு நாளேனும் உயிர் வாழ முடியுமா?
பிரகிருதி கொடுத்த வரங்களில் எல்லாம்,
மறதிச் செல்வமே மிகச் சிறந்த வரம் !
முற்பிறவி நினைவுகளயகற்றி,
இப்பிறவி பயனுற மலர்த்தாள் பணிவோம்!
நல்லதைக் கொண்டும், அல்லதைக் களைந்தும்,


பல்லாண்டுகள் நாம் பண்புடன் வாழ்வோம்.

4 comments:

gayathri said...

மறதி வரம் கிடைக்குமா மாஸ்டர் .............

Yoga Yuva Kendra said...

sathguru blesses u

gayathri said...

THANKS A LOT MASTER.

manjushiva said...

master,

Ithunaalvarai niraiya maranthu vidukiromae endru varunthiyadhu undu....athu varam endru purinthathu...........nandri guruvae.

Post a Comment