Total Pageviews

Wednesday, December 28, 2011

ஆறு மனமே ஆறு
”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் துரோகங்கள் தான்.


ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார். 

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள். 

“சரி. அந்த சினிமாவின் சி.டி, டி.வி.டி எல்லாம் தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.

ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.

“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.

அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”

இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?

இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும். 

ஒன்று, எந்த துரோகமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது. 

எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்குச் சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு. அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடையச் செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது துரோகக் காயத்தின் தீவிரம் குறையும்.

இரண்டாவது உண்மை, நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்குச் சிறிது காலமாகலாம்,கஷ்டமாகக் கூட இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை. 

இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது. 

இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.

சும்மா இரு சொல்லறசும்மா சும்மா சும்மா


சும்மா இருப்பதே சும்மா


சும்மா வாழ்வதும் சும்மா


சும்மா வீழ்வதும் சும்மா


சும்மா சும்மா எழுதி


கவிதை எல்லாம் சும்மா


கற்றதெல்லாம் சும்மா


கடவுளெல்லாம் சும்மா


நீயும் சும்மா


"நானும்" சும்மா


சும்மா சும்மா சும்மா


எல்லாமே சும்மா


"சும்மா இரு சொல்லற"

Tuesday, December 20, 2011

ஆன்மீக அறிவியல்

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.


ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.


இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே

நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.


-பாகீ-


விலகிய பந்தம்அடிக்கடி திரும்பி 
பார்க்கிறேன்
புதிதாய் விலகியவர்
யாரென தெரிந்துக்கொள்ள...

ஒவ்வோர் முறையும்
குழம்புகிறேன்
அவரா இப்படியென
யோசித்து யோசித்தே...

எல்லா விளக்குகளுக்கும்
குறையளவு எண்ணையூற்றி
இருப்பு தீர்ந்ததென
அணைத்து விடுகிறார்கள்...

பாதியிலே முடிகிறது
வெளிச்சத்துடன் இரவு
மீதியெல்லாம் கழிகிறது
இருட்டினிலே பொழுது...

வீட்டிலுள்ள அரிசியிலே
கல் பொறுக்கும்
கிழவியாய் ஏமாற்றங்களை
பொறுக்கி வீசுகிறேன்...

திரும்பி பார்த்தால்
நினைவு சின்னம்
எழுப்பும் அளவு
குவிந்திருக்கிறது கற்கள்...

யாரும் தொடர்வதில்லை
எப்போதும் தொடர்வதில்லை
அவரவர் நிழலானாலும்
அந்தந்த நேரமே...

ஆழ்மன குகையிருட்டில்
தேக்கி வைத்த
அர்த்தமற்ற உறவுகள்
அத்தனையும் போலிகள்...

பூத்துக் குலுங்கிய
மரக்கிளைகள் இன்று
மொட்டையாகி ஒதுங்கவும்
ஆள் அரவரமின்றி...

நேற்றுக்கும் இன்றைக்கும்
தொடர்பில்லாத நிமிடங்களில்
தேங்கி நின்ற
குட்டையாய் உறவுகள்...

ஆரம்பத்தில் இடிபோல
அதற்கடுத்து கண்ணீரோடு
அதைத்தாண்டி விரக்தியோடு
இப்போதெல்லாம் சிரிப்புடன்...

Monday, December 19, 2011

பரோட்டா பிரியர்களே..............!தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? உங்களுக்குத்தான் இந்தப் பதிவு......

இன்று தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது பரோட்டா கடை. அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு, குற்றாலம் பார்டர் பரோட்டா,
விருதுநகர் பரோட்டா தூத்துக்குடி பரோட்டா ,கொத்துப் பரோட்டா ,சில்லிப் பரோட்டா சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே . பின்னாடி படிங்க!....


பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் ஒரு பதார்த்தம். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.


பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவில் உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டித், திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.பரோட்டா மட்டுமல்லாது நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,

மைதா எப்படித் தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்கப்பட்டக் கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மை யாக்குகிறார்கள்,அதுவே மைதா .


Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரழிவிற்குக் காரணமாகிறது .


இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப் படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .


இந்த Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரழிவு நோய் வரவழைப்பதற்குப் பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சீரண சக்தியை குறைத்து விடும் .


இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்பதைத் தவிர்ப்பது நல்லது.


மைதாவை நாம் உட்கொள்ளும் போது சிறுநீரகக் கோளாறுகள் ,இருதய கோளாறு ,நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .மைதாவின் தீமைகள் குறித்து நமது அண்டை மாநிலமான கேரளத்தில் ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.
முதுகுத்தண்டுக் கோளாறு, ருமாடிசம், ஆர்தரடிஸ், வாய்வுத் தொல்லை போன்ற நோயினால் அவதிப்படும் நண்பர்கள், தயவு செய்து பரோட்டாவைப் பார்க்கக் கூடச் செய்யாதீர்கள். பரோட்டா மலச்சிக்கலை ஏற்படுத்தி வாதத்தன்மையை அதிகப்படுத்தும்.

நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, தினை,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .பாலு

Friday, December 16, 2011

திருக்கண் நோக்கம்மாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன? எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா?.........bhaskar rajaதியானம் கற்றுத்தருமாறு கேட்டான் சீடன், "நான்" இறந்தபின்பு வா என்றார் குரு.  சீடனோ, குருவைக்கொன்றான். இது ஒரு ஜென் கவிதை. இன்றைய கால கட்டத்தில் நோக்குவர்மம் பற்றி எழுதுவது கூட ஆபத்தானதோ என நினைக்கத் தோன்றுகிறது........ ஏழாம் அறிவுக்குப்பின் நோக்கு வர்மம் மிகவும் மலிவு விலைச் சரக்காகிவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது. நோக்குவர்மம் பற்றித் தெரியாதவர்கள் இன்றையத் தேதியில் இருக்க முடியாது, கற்றுக்குட்டிகளால் ஆரம்பிக்கப்படும் யோகப்பள்ளிகள் போல நோக்குவர்மா வகுப்புகளும் இனி நடத்தப்படலாம்.!!!!!!! பணத்திற்காக யோகச்சான்றிதழ் வழங்கிய பல்கலைகழகங்கள் நோக்குவர்மத்திற்கும் சான்றிதழ் வழங்கலாம்!!!!!!!

நோக்கு வர்மம் என்பது தனது பார்வையினால் எதிரிகளைத் தாக்கும் ஒரு போர்க்கலையாக மட்டுமே அரங்கேற்றப்பட்டுவிட்டது. ஒரு தகுதி வாய்ந்த குரு, தான் பெற்ற ஆன்ம அனுபவத்தை, அறிவை, தனது பிராண சக்தியைத், தனது மேம்பட்ட சீடனுக்குப் பகிர்ந்து கொடுக்கக்கூடிய "நயன தீட்சை" முறையையும், ஒரு மேம்பட்ட யோகி, நோயாளியைத் தொடாமலேயே தனது பார்வையால் நோயாளிக்குப் பிராண ஆற்றலை வழங்கி அவரைக் குணப்படுத்தும் மருத்துவ முறையையும் உள்ளடக்கியதே "நோக்குவர்மம்" நமது ஒப்பற்ற ஞான குரு, ரமண பகவான், தனது அணுக்கத் தொண்டர்களான முருகனாருக்கும், தேவராஜமுதலியாருக்கும், இன்னும் சிலருக்கும் ,தான் பெற்ற ஞான அனுபவத்தைக், கண்களின் மூலமாகக் கடத்திக் கொடுத்ததும், சீரடி மகான், குஷ்ட நோயாளியின் உள்ளுக்குள் இருந்த கர்மக் கழிவுகளைத் தனது பார்வை தீட்ஷணியத்தால் விரட்டி அடித்து நோயைக் குணமாக்கியத் திருக்கண் நோக்கமும், நோக்கு வர்மமே! 
நோக்குவர்மத்தின் மர்மம் என்ன? திறவுகோல் எங்கு உள்ளது? இதைக்கற்றுக்கொள்ளும் வழிமுறை என்ன? இதற்கான விடையைப் போதிதர்மரின் வரலாற்றுக் குறிப்புகளையும், சித்தர்களது யோகப்பயிற்சிகளையும் இணைத்து ஒப்பீடு செய்வதின் மூலம் அறிய முடியும்.


போதிதர்மர் தென்னிந்தியாவிலிருந்து முதலாவதாக தென் சீனப்பகுதியை அடைகிறார்.அங்கு அவரது போதனைகள் வரவேற்பு அற்றுப் போகிறது. அதனால் அவர் வடசீனப்பகுதி ராஜதானியான "வேயி" னை அடைந்து அங்குள்ள புத்த விகாரத்தினை அடைகிறார். திரவிடப்பிக்குவான இவரை அந்தஆலயத்தினுள் செல்ல விடாமல் தடுக்கின்றனர். அதனால் அருகில் உள்ள குகையினுள்சென்று அந்த குகையின் சுவரினைக் கண்ணினால் உற்று நோக்கியவண்ணம் ஒன்பதுவருடம் தொடர்ச்சியாகப் பயிற்சியில் ஈடுபடுகிறார். இந்த பயிற்சியின் போது கண்மூடுவதைத் தவிர்ப்பதற்காகத் தனது கண்ணிமைகளை வெட்டி எறிந்ததாகவும், அந்த இமைகள் நிலத்தின் மீது விழுந்தபோது உருவான தாவரம் தான் "தேயிலை" எனவும் அவரது வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இதன் உண்மைத்தன்மை என்னவெனில் தேயிலை மனதை விழிப்புணர்வில் வைத்திருக்கும் என்பதுதான். அதனால் தான் இன்றும் ஜென் கலாச்சாரத்தில் தேனீர் விருந்து ஒரு முக்கியமான ஒரு விழிப்புணர்வு விழாவாகக்கொண்டாடப்படுகிறது.


இதன் பின் அவர் புத்த குருமார்களால் வரவேற்கப்பட்டார், ஷாவலின் ஆலயத் துறவிகள் உடல் வலுவற்று இருப்பது கண்டு உடல் நலத்திற்காக அவர்களுக்குப் பகிரங்க யோகப்பயிற்சியான ஆசனப்பயிற்சிகளையும், மனநலத்திற்காக அந்தரங்க யோகப்பயிற்சிகளானப் பிராணயாம, பிரத்தியாகாரத், தாரணைப் பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்தார். 


சரி நோக்கு வர்மத்திற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்?


போதிதர்மர் எப்படி நோக்கு வர்ம சித்தியடைந்தார் என்பது பற்றிய குறிப்புத்தான் இந்தக்கதை. அதாவது குகைச் சுவரை உற்று நோக்கியவண்ணம் ஒன்பது ஆண்டுகள் தவமிருந்தார் என்பதுதான் இதில் முக்கியச்செய்தி.


இந்தப்பயிற்சியின் இரகசியம் என்ன வென்பது பற்றி அறிய வேண்டுமானால் நாம்திரும்பவும் இந்திய யோகிகளிடம் வரவேண்டும். ஆம் யோகக்கலையின் அடிப்படைதெரியவேண்டும்.


அஷ்டாங்க யோகத்தின் ஆறாவது படியான "தாரணை" பற்றித் தெரியவேண்டும். அட்டாங்கயோகத்தின் இறுதி நிலையான சமாதியினை அடைவதற்கு தாரணைப்பயிற்சி மூலம் சாதனை பயின்று புத்த நிலையினை அடைந்தார் என்பது தான் இந்தக்கதையின் உண்மை விளக்கம். சமாதி எனும் இந்த புத்த நிலைச் சித்தியினைப் பெறுவதற்காகத்தான் ஒன்பது வருடங்கள் போதிதர்மர் குகைச் சுவரினை உற்றுப்பார்த்த வண்ணம் "திராடகச்"சாதனையிலிருந்தார். திருமூலரது திருமந்திரம், போகர் 7000, அகஸ்தியர் பாடல்கள்,பதஞ்சலி முனிவரது யோக சூத்திரம், ஔவையாரின் ஞானக்குறள் என்பவற்றில் தாரணையைப் பற்றியக் குறிப்புகள் உள்ள‌ன.


மகரிஷிபதஞ்சலியின் உபதேசப்படிக் "கட்டுப்படுத்தப்பட்டு அசைவற்றிருக்கும் சித்தமே தாரணை" எனப்படும், அதாவது மனதில் ஏற்படும் எண்ண அலைகளுக்கும் மூலமான சித்த விருத்திகளை உருவாக்கும் சித்தத்தினைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிலைகொள்ளச்செய்யும் செயல் முறைதான் "தாரணை" எனப்படும்.12 வினாடிகள் சித்தம் செயல்படாமல் இருந்தால் அது ஒரு தாரணை எனப்படும். 12 தாரணைகள் சேர்ந்ததே ஒரு தியானம் எனப்படுகிறது.


யோகத்தின் ஆறாவது நிலையான "தாரணை"யே, நோக்கு வர்மத்தின் அடிப்படை , "தாரணா" சித்தியின் ஒரு பிரயோகம்தான் நோக்குவர்மமே ஒழிய அது தனியாக பயிலவேண்டிய கலை அல்ல, யோகத்தின் படிநிலையில் அடையப்படுகின்ற ஒரு உப அன்பளிப்புதான் நோக்குவர்மம். இயமம், நியமம், பிரத்தியாகாரம் பழகுவதாலும், தனது நோக்கம் சமாதிநிலையே என உணர்ந்து கொண்டதாலும், ஒரு தகுதி வாய்ந்த யோகி, எந்தச் சூழ்நிலையிலும் இந்த சித்தியினை மற்றவரைத் தாக்குவதற்கு உபயோகிப்பதில்லை. மாறாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், தவத்தால் தான் பெற்ற தனதுப் பிராண சக்தியை, அறிவாற்றலைத், தகுதி வாய்ந்த மாணவர்களுக்குப் பரிசாகப் பகிர்ந்து கொடுக்கவும், நோயால் அவதிப்படும் மனிதர்களைக் காப்பாற்றுவதற்காகவும் இந்தத் தாரணசித்தி இன்றளவும் யோகியரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

தென்பொதிகைச் சித்தர்களால் யோகத்தாரணப்பயிற்சி சில தகுதிவாய்ந்த போர்வீரர்களுக்கும், ராஜாக்களுக்கும், நல்லெண்ணம் கருதி கற்பிக்கப்பட்டது என்பதையும், சில சித்தர்குறிப்புகளில் காணமுடிகிறது. குறிப்பாகத் தென்காசிக் கோவிலைக் கட்டிய மன்னன் பராக்கிரமபாண்டியனுக்கு சில ஒழுக்க நிபந்தனைகளுக்குப் பிறகு அஸ்வினியாத்தேவர் எனும் சித்தகுருவால் நோக்குவர்மம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. இந்த சித்தகுருவின் ஜீவசமாதி இன்றும் தென்காசிக் கோவிலினுள் யோக அருள் வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஜீவசமாதியில் ஒரு தூணில் பராக்கிரமபாண்டியன் சித்தகுருவை வணங்கியவண்ணம் நிற்கும் உருவம் செதுக்குச் சிற்பமாகப் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றளவும் காணமுடிகிறது. இந்த சமாதியில் தியானம் செய்தபோது ஏற்பட்ட அனுபவங்களை என்றுமே மறக்கமுடியாது.அஷ்டாங்க யோகம் என்பது ஒருவர் ஆதியுடன் கலக்கும் சமாதி எனும் நிலைக்கு செல்வதற்கான மிகச்சரியான வழியில், ஒழுங்கு படுத்தப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட ஒரு பயிற்சி முறையாகும். பதஞ்சலியார், திருமூலர் ஆகிய சித்தர்கள் இதனை தெளிவாக விரிவாக முறைப்படுத்தி வைத்தனர். இந்தப் பயிற்சி முறையின்படி ஒரு யோகசாதகன் தன் உடலையும், உள்ளத்தையும் இயம, நியமங்களால் சுத்தி செய்து, பின் சூஷ்ம ஸ்தூல உடலை ஆசன, பிராணாயாமங்களால் பக்குவப்படுத்தி, பின் மனதை பிரத்தியாகாரத்தினால் புறப்பொருட்களில் இருந்து பிரித்தெடுத்து, குறித்த ஒரு இலக்கில் தாரணை எனும் பயிற்சியால் ஒருமுகப்படுத்தி, பின் ஒருமைப்படுத்திய வஸ்துவில் மனதை கரைத்து (தியானம்), மனமற்ற நிலையுடன், ஆதியான பரம்பொருளுடன் ஒன்றாதல் (சமாதியாகும)


ஒருவன் நோக்கு வர்மத்தினை பிரயோகிக்க தியானம், சமாதி ஆகிய இருநிலைகளை மட்டும் தவிர்த்து அஷ்டாங்க யோகத்தின் மற்ற ஆறு படிமுறைகள் அனைத்தையும் அறிந்திருத்தல் அவசியம். 

இயம, நியமம் அவனது மனம் தவறு செய்ய தூண்டாமல் வைத்திருக்கும். 
ஆசனம் - உடலைப் பக்குவப் படுத்தி, அதனைப் பிராணனைத் தேக்கி வைத்துக் கொள்ளும் கொள் களமாக மாற்றும். 
பிரணாயாமம் - பிராண சக்தியினைச் சீர் செய்யும். பிராண சக்தியினைக் கட்டுப்படுத்தும் 
பிரத்தியாகாரம் - உணர்ச்சி வசப்பட்டு தாக்குதல் நடத்தாமல் இருக்க மனதை பண்படுத்தும். 
தாரணை - நோக்கு வர்ம தாக்குதல் நடத்தும் முறை. மனிதமனம் மேல்மனம், ஆழ்மனம், மறைமனம் என்ற மூன்று அடுக்குகளை உடையது. சாதரணமாகப் பெரும்பாலானோர்க்கு மேல்மனம் மாத்திரமே உபயோகத்தில் இருக்கும், எப்படியென்றால் கேள்வி கேட்டுத் தர்க்கத்தின் மூலம் அறிதல் மேல் மனத்தின் செயல்முறை, சற்று ஆழ்ந்து சிந்திப்பவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு ஆழ்மனம் செயல்பாட்டில் இருக்கும், இதைத்தான் பதஞ்சலி முனிவர் சித்தம் என்று கூறுகிறார். இந்த சித்தம்தான் மனதில் வரும் எண்ணங்களுக்குத் தூண்டுகோல், சக்தியின் இருப்பிடம், இந்த சித்தத்தினை ஒரு நிலைப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சும் சக்தி பெற்றால் அது பல சித்திகளை கொடுக்கும். இதனைப் பொதுவாக தாரணா சக்தி/ஏகாக்ர சக்தி எனக் கூறலாம். 


நோக்குவர்மத்தைப் பிரயோகப் படுத்தத் தாரணாசக்தி மட்டும் போதுமா? ஆண்டெனா இருந்தால் மட்டும் போதுமா, மின்சாரமும் வேண்டுமல்லவா! ஆதாலால் இதனைச் சாதிப்பதற்குப் பிராணசக்தியும் அவசியம். அதற்கு பிராணாயாம பயிற்சி கட்டாயம் சித்தியாகியிருக்க வேண்டும். தாரணா சித்தியுடன் பிராண சக்தியும் கலக்கும் போது மட்டுமே நோக்கு வர்மம் சாத்தியம்.


நோக்குவர்மத்தைச் சாதிப்பதற்கான பயிற்சிமுறை "யோகத்திராடகம்" எனப்படும். இதனை (அந்தர்)அகத்திராடகம், (பாஹ்ய)புறத்திராடகம் என இருவகைப்படுத்தலாம். நோக்கு வர்மத்திற்கு தேவையானது புறத்திராடகம். அதாவது கண்களால் சித்த சக்தியினையும், பிராணசக்தியினையும் செலுத்தும் ஆற்றலைப்பெறுவது. இப்படி கண்களால் பிராண, சித்த சக்திகளை செலுத்தும் ஆற்றலைப்பெற்ற ஒரு தகுதி வாய்ந்த யோகியே நோக்கு வர்மத்தினைப் பிரயோகப்படுத்தமுடியும்.


"திராடகம்" என்ன என்பது பற்றி ஒரு நல்ல குருவிடம் பயிற்சி பெறுதலே சித்தியைத் தரும், முறையானப் பயிற்சி இல்லாமலும், தேர்ந்த வழிகாட்டுதல் இல்லாமலும் இதனை செய்தால் கண்கள் பழுதாகும் அபாயம் உண்டு, ஆதலால் இங்கு அதன் செயல்முறை பற்றி விளக்கம் தரவில்லை. முறையானத் திராடகப் பயிற்சியினால் மட்டுமே தாரணையில் திடம் பெறுவது சாத்தியம்.

"பிராண சக்தி", தமிழில் "வாசி" எனவும், சீன மொழியில் "Chi- சீ" எனவும்,ஜப்பானிய மொழியில் "Ki-கீ" எனவும் அழைக்கப்படுகிறது. இது சுவாசத்தினால் பெறப்படும் ஆக்ஸிஜன் வாயுவல்ல! பிராணன் என்பது பிரபஞ்ச சக்தி, அதனது ஓட்டம் மூச்சுடன் தொடர்புடையதேதே அன்றி உட்சுவாசிக்கும் மூச்சு பிராணன் அல்ல, பிராணனைக் கட்டுப்படுத்தும் இலகுவான வழி மூச்சுப்பயிற்சியாகிய பிராணாயாமம், அதே வேளையில் பிராணனைக் கட்டுப்படுத்தும் வேறு பயிற்சி முறைகள் இருக்கிறதா? எனக்கேட்டால் மற்றைய சாதனைகளான மந்திரம், முத்திரைகள், சிலவகையான மூலிகை மருந்துகள் போன்றவற்றாலும் பிராணணைக் கட்டுப்படுத்தமுடியும்.

இந்த பிராணன், உடலிலுள்ள சூட்சும பஞ்சபூத குழிகளின் மூலமாக ஈர்க்கப்பட்டு(பஞ்சபூத சங்கமம்) பின் ஆறாதாரங்களில் சேமிக்கப்பட்டு(நாத சங்கமம்), பின் எழுபத்தீராயிரம் நாடிகளின் வழியாக தச வாயுக்களாக(பிராண சங்கமம்) உடல் முழுவதும் பரவுகிறது. இந்த பிராண ஓட்டம், குறிபிட்ட நாழிகைகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடிகளில் மாறி ஓடும். அந்த ஓட்டத்தின் படியே உடலியக்கம், மனவியக்கம் என்பன ஆளப்படுகின்றன என்பதுவே சித்தர்களது யோகமருத்துவ சாஸ்திர அடிப்படை, சீன மருத்துவத்தின் அக்குபிரசர், அக்குபஞ்சர் என்பவற்றின் அடிப்படையும் இதுவே. 


 நோக்கு வர்மத்தில் ஒரு யோகி தன்னுடைய தாரணா சக்தியையும், பிராணசக்தியையும் ஒன்று திரட்டி, தீட்சண்யப் பார்வை மூலமாக பிறிதொரு மனித உடம்பிலுள்ள 72000 நாடிகளில் மூன்று விதங்களில் தாக்கத்தை உண்டாக்க முடியும்.. 


1. நாடிகளில் அதிக பிராணனை உட் செலுத்துதல்.


2. நாடிகளில் பிராண ஓட்டத்தினை தடைப்படுத்துதல்


3. நாடிகளிளுள்ளப் பிராணணை உறிஞ்சுதல்


அதிக பிராணனை உட் செலுத்தும் இந்த முறை பாதிப்பில்லாதது, இதனால் பிராணனைச் செலுத்துபவரிடம் இருந்து வாங்குபவர் அதிகப் பிராணனைப் பெற்று அதனைத் தாங்க முடியாமல் மயங்கி, நிலை குலைந்து போவர். அல்லது ஆரோக்கியம், அமைதி பெறுவார். பிராணனைச் செலுத்தும் யோகியின் நோக்கத்தினைப் பொறுத்து விளைவுகள் வேறுபடும். உயிர் போய்விடும் நிலையிலுள்ள ஒரு நோயாளியைக்கூட இந்த முறையினால் இன்னும் கொஞ்சநாள் உயிருடன் வாழவைக்கமுடியும். அங்குலிமாலன் போன்ற மிகப்பெரிய கொலைகாரனைக்கூட புத்தபெருமான் அமைதியடையச் செய்தது இந்த முறையினால்தான்.


பிராண ஓட்டத்தினைத் தடைப்படுத்தும் முறை ஆபத்தானது, மரணத்தினை ஏற்படுத்தவோ, அல்லது பஞ்சபூத உள்ளுறுப்புகளைச் செயலிழக்கச் செய்யவோ வல்லது. மறுபடி சரியான நேரத்தில் பிராண சக்தி கொடுக்கப்படாவிட்டால் பாதிப்பு அதிகமாகும்.  பிராணனை உறிஞ்சும் முறை ,அதி ஆபத்தான முறை, இதனைத்தான் மெய்தீண்டாகாலம் என்பர், அதாவது மெய் (உடலினை) தீண்டாமல் பிறிதொரு மனிதனிடம் உள்ள பிராண சக்தியை யோகி கிரகித்துக் கொள்ளும் முறை. இதனை ஒரு பக்குவப்பட்ட யோகி செய்யமாட்டார். உயிர் பிரிய முடியாமல் வலியினால் வேதனைப் படும் நோயாளிக்கு இந்த முறை பயன்பட்டதாகச் சித்தர் குறிப்புகள் காணப்படுகிறது.


நோக்குவர்மா சாதனையில் சித்த சக்தியினையும் பிராணசக்தியினையும் செலுத்தும் சாதனமாக கண் விளங்குகிறது. எனவே கண்களைப் பலப்படுத்தும் பயிற்சிகளையும், சில மருத்துவ வழிமுறைகளையும் சாதகன் பின்பற்றவேண்டியது அவசியமாகிறது.


இவைதான் நோக்கு வர்மத்தின் அடிப்படை, நோக்குவர்ம பயிற்சியைக் குருவில்லாமல் கற்பது கற்பவர்களுக்கே ஆபத்தினை விளைவிக்க வல்லது, ஏனெனில் தமது உடலிலுள்ள பிராண ஓட்டத்தின் மூலம் மற்றவரை கட்டுப்படுத்தும் போது சரியான முறையில் அணுகவில்லையானால் தாக்க விளைபவரையே பாதிப்புறச் செய்யும்.வள்ளல்பெருமான் தாரணைத் தவத்தாலேயே ஜோதியுடன் ஐக்கியமானார் என்பது குறிப்பிடத் தக்கது.பகவான் ஓஷோவின் வழியிலுள்ள "சுரக்க்ஷா"தியானமும், பிரம்மராஜகுமாரிகளின் ராஜயோக வழிமுறையும் தாரணத்திராடகாவை மையப்படுத்திய பயிற்சி முறைகளே.

இந்தப்பதிவின் நோக்கமே ஆர்வமுள்ள இளைஞர்கள் உண்மையினை உணர்ந்து விஞ்ஞான பார்வையுடன் இக்கலைகளைக் கற்க முற்பட வேண்டும். நமது "சிவராஜயோகம்" எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதனை உணரவேண்டும் என்பதே. 


நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்-  -   எட்டையபுரச் சித்தன்.


நோக்கியேக் கருதி மெய்தாக்கியேப் பக்குவம் 
ஆக்கியே ஆண்டெனை அருணாச்சலா-ரமண பகவான்Monday, December 5, 2011

ஆச்சர்ய கணிதம்

1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888

Brilliant, isn't it?

And look at this symmetry:

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321தனலட்சுமி

"நான்" "தான்"

என்னுள் இருப்பது இரண்டு ‘நான்’கள்
என்னையே கேட்டேன் எண்ணிலா ‘ஏன்’கள்

நான் என்பது முரண்பாட் டுருவம்
நானும் நானும் எதிரெதிர் துருவம்

பொய்யைச் சொல்லி உதவியும் செய்வேன்
மெய்யைச் சொல்லி மாட்டியும் கொள்வேன்

புதுமை கண்டு போற்றவும் செய்வேன்
பழமை கண்டும் வியந்தும் போவேன்

முதிர்ந்த அறிவுடன் கருத்தும் சொல்வேன்
முட்டாள் தனமாய் நடந்தும் கொள்வேன்

தெளிந்த கருத்தில் குழப்பம் அடைவேன்
குழம்பிய நிலையில் தெளிவும் பெறுவேன்

கண்டதை எழுதி கவிதை என்பேன்
கவிதை படைத்துக் குப்பை என்பேன்

சிறுமை கண்டு சீறவும் செய்வேன்
துரோகம் கண்டு ஒதுங்கியும் செல்வேன்

வறியவர் கண்டு வாடவும் செய்வேன்
வறுமை கண்டு ஓடவும் செய்வேன்

பாசம் கண்டு உருகியும் விடுவேன்
அதே பாசத்தால் இருகியும் விடுவேன்

இயந்திர ஒலியில் இசையை உணர்வேன்
இசையைக் கூட இரைச்சல் என்பேன்

காதலை ஒருநாள் கடவுள் என்பேன்
காமம் என்று மறுநாள் சொல்வேன்

அடக்கம் ஒரு நானில் அடங்கி இருக்கும்
ஆணவம் இன்னொரு நானில் அடக்க நினைக்கும்

நானே வெல்வேன்! நானே தோற்பேன்!
நானின் தன்மை அறியா தலைந்தேன்

எதிரெதிர் ‘நான்’கள் என்னுள் இயங்கும்
ஏனெனச் சொன்னால் இதயம் வணங்கும்.

Saturday, December 3, 2011

magic image
Magic Image ..


 
This Is So Cool! Try it guys! It's going viral all over the net!
 
 
Amazing Magic Image
1. Stare at the red star on the girl’s nose for 30 seconds
2. Turn your eyes towards the wall/roof or somewhere else on a plane surface
3. Keep blinking your eyes!
 
 
You'll be amazed!

 
__._,_.___
venkat

தேடல்.......ஏதோ ஒன்றைத் தேடித்தான் 
எந்தன் மனதும் அலைகிறது
தேடும் பொருளேத் தெரியாமல்-அது
திசைகள் எங்கும் பறக்கிறது.

காற்றில் ஏறிப் பறக்கிறது
கடலின் மீது மிதக்கிறது
மலையில் ஏறி மலைக்கிறது-கவலைக்
கடலில் மூழ்கி தவிக்கிறது

எல்லாம் எனக்கு இருந்தாலும்
ஏதோ ஒன்று இருக்காது
எதுவும் இல்லை என்றாலும்- அதுக்கு 
"சும்மா" இருக்கத் தெரியாது

அதனால் என்ன பூ மனமே
நீ அலையாதே என் மனமே
வெளியில் தேடும் பொழுதெல்லாம்-நீ
உந்தன் இருப்பை உணர்வாயே

ஞானம் தேடி நான் அலைந்தேன்
ஞானமோ என்னைத் தேடியது
தேடுவதை நிறுத்திக் கொண்டேன்-நானே
ஞானமாக உணர்ந்து கொண்டேன்.