Total Pageviews

Saturday, July 30, 2011

"குண்டலினி" கிலோ என்ன விலை?




ஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா?

"குண்டலினி"

ஆம் நண்பர்களே!........மாறிவரும் ஆன்மீகச் சந்தையில் "குண்டலினி கிலோ என்ன விலை?" எனும் பாணியில் விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

பாரதப் பாரம்பரியத்தில் தன்னையுணர, சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சம், உத்தரமீமாம்சம், எனும் ஆறுவிதமான பாதைகள் உண்டு. அதில் ஒன்று யோகப் பாதை. யோகத்தின் பாதையில் பல்வேறு படிநிலைகள் உண்டு. ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்மயோகம் மற்றும் ராஜ யோகம் என பல பிரிவுகள் யோகத்தில் உண்டு. 

நண்பர்களே! பதஞ்சலியின் யோக சூத்திரம் என்ற நூல் ராஜ யோகத்திற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. உண்மையில் பதஞ்சலி நேரடியாகக் குண்டலினியைப் பற்றி ஏதும் கூறவில்லை...! 


ஹதயோகப் பிரதீபிகா, சிவயோக சம்கிதா போன்ற நூல்களில் "குண்டலினி" பற்றிக் கூறப்பட்டுள்ளது. 

சிவராஜ யோகம் என்ற யோகப் பாதையின் உட்பிரிவில் குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் உண்டு. உண்மையில் குண்டலினி என்பது மூலப்பிராண சக்தியே, இதனை பயிற்சி முறைகளால் விழிப்படையச் செய்தால் ஞானம் ஏற்படும் என்பதை யோக நூல்கள் விவரிக்கிறது. 


நம் மூலாதாரத்தில் மூன்றரைச் சுற்றுகளாகக் குண்டலினிச் சக்தி படுத்து உறங்குகிறது. மூலாதாரத்தில் இருக்கும் சக்தியைப் பிரணாயாமத்தால் விழிக்கச் செய்து தலையின் உச்சியில் இருக்கும் சகஸ்ராரம் என்ற சக்கரத்திற்கு உயர்த்தினால் ஞானம் பிறக்கும் என்பது ராஜயோகத்தின் அடிப்படை. 


காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலின் மூன்றரைச்சுற்றுப் பிரகாரம். ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள மூன்றரைச் சுற்று பாம்பணை, ஸ்ரீரங்கத்தின் ஏழு பிரகாரங்கள், திருப்பதியின் ஏழு மலைகள், மற்றும் பகவான் கிருஷ்ணனின் புல்லாங்குழலில் உள்ள ஏழு துளைகள் ஆகியவை இந்த குண்டலினி சக்தி மற்றும் ஏழு ஆதாரங்களைத்தான் குறிக்கின்றன. 

ஔவையார் தனது விநாயகர் அகவலில், 


“குண்டலினி அதனில் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்தின் மூண்டெழு கனலை

காலால் எழுப்பும் கருத்தறிவித்தே.”

என்று பாடுகிறார் 

யோகக் கலாசாரத்தில் சிவராஜயோகத்தை பயில விரும்புபவர்கள் குருவை நாடி, தங்கள் முயற்சியை ரகசியமாக மேற்கொள்வார்கள். யோகத்திற்கெல்லாம் முதன்மையானது தலையானது என்பதாலும் ,ரகசியமாக பயிற்றுவிக்கப் பட்டதாலும் இது சிவராஜயோகம் என பெயர் பெற்றது. ராஜாங்க விஷயங்கள் எப்படி அனைவருக்கும் தெரியக்கூடாதோ அதுபோல சிவராஜ யோக விஷயங்கள் தெரிய வேண்டியவர்களுக்குத் தெரிந்தால் போதுமானது. ஆனால் தற்சமயம் ராஜயோகம் பலசரக்குக் கடையில் விற்கும் மலிவு சரக்காகிவிட்டது. 

எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடாதா? இதுக்கும் ரகசியமா? உயர்ந்த ஜாதி என்பது போன்ற கட்டுப்பாடுகள் உண்டா என நீங்கள் நினைத்தால் அது தவறு..! 


குண்டலினி யோகம் என்பது ஒருவர் மற்றொருவருக்குக் கற்று கொடுக்கும் விஷயமல்ல. ஒரு தகுதியான குரு தன்னுடைய தகுதி வாய்ந்த சிஷ்யனுக்கு தான் அனுபவித்த உணர்வை கடத்திக் கொடுக்கும் ஒரு அனுபவம். அந்த அனுபவத்தை விவரிக்க முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும்.ஆனால் தற்சமயம் குண்டலினி யோகத்தை ஒருவர், 
பலநூறு நபர்களுக்கு ஒரே வகுப்பாக நடத்திச் சந்தைப்படுத்தி இருக்கிறார்கள். 







ராஜயோகிகள் குண்டலினி அனுபவத்தை ஒரு தாய் தன்னுடைய குழந்தைக்கு அமுதூட்டும் இன்பத்துடன் ஒப்பிட்டு சொல்லுவார்கள். தாய், சேய் இருவருக்குள்ளும் ஏற்படும் இந்த உறவு இயல்பானது, இருவருக்கும் என்ன நிகழ்ந்தது என நமக்கு தெரிந்தாலும் , அவர்களிடம் உங்களுக்குள் நடந்த விஷயத்தைப் படிப்படியாக கூறுங்கள் எனக் கேட்பது எப்படி அபத்தமான விஷயமோ அது போன்றது குண்டலினி அனுபவத்தை விவரிக்க சொல்வதும். அதனால் தான் சொல்லுகிறேன், இது நிகழவேண்டியது அல்ல அனுபவமாக உணர வேண்டியது. 

தற்போது சிலர் தனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவத்தை விளக்க முற்பட்டு வார்த்தைகள் கிடைக்காமல் நெளிவதைப் பார்த்திருக்கிறேன். பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரே இதனை வார்த்தைகளால் விளக்க முற்பட்டு முடியாமல் போனதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 


குண்டலினி சக்தி என்பது உண்மை, அதனால் ஏற்படும் அனுபவங்களும் உண்மை. ஆனால் அதற்காகத் தற்சமயம் கொடுக்கும் பயிற்சிகளே போலியானது. உண்மையான குண்டலினி அனுபவங்கள் பெற நீங்கள் உங்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மன நிலையில் மாற்றம் செய்ய வேண்டும். இம்மாற்றம் நிகழாமல் குண்டலினி மட்டுமல்ல வேறு எந்த மாற்றமும் நிகழாது. 

சில யோகப் பள்ளிகள் தலைமைக்கானக் குண்டலினி யோகம், குடும்ப பெண்களுக்கானக் குண்டலினி யோகம், குழந்தைகளுக்கானக் குண்டலினி யோகம், என நடத்துகிறார்கள். இன்னர் மெடிக்கல், எஞ்சினியரிங் , லா என்றல்லாம் பயிற்சிகள் குண்டலினியின் பெயரால் நடக்கிறது. இதில் கலந்துகொள்பவர்கள் யார் தெரியுமா? 

தினமும் வீட்டிலும், வாரம் தவறாமல் கம்பெனியின் பார்டியில் மது அருந்துபவர்களும், தினமும் புகைப்பிடிப்பவர்களும், தங்களின் உடலை சிறிது கூட அசைக்காமல் ஏஸி அறையில் வைத்திருக்கும் கார்ப்பிரேட் அதிகாரிகளும். இவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏழு நாளில் குண்டலினியை உயர்த்திகாட்டுகிறார்களாம். 


இது போன்ற குண்டலினி பயிற்சி பெறும் பலர் தங்களுக்கு அவ்வனுபவம் ஏற்படவில்லை என ஒருபோதும் கூறுவதில்லை. பயிற்சியில் என் சக்கரங்கள் அப்படி ஆனது இப்படி ஆனது என்பதுடன், வலது புறமாக சுற்றியது இடது புறமாக சுற்றியது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது எப்படி நிகழ முடியும்????????????????

 யோக வகுப்பில் யோகப்பயிற்சிகளை முடித்தபின் எல்லோரையும் சவாசனத்தில் கிடத்தி உடல் ஓய்வு பெறுவதற்கானக் கட்டளைகளைக் கூறிக்கொண்டிருந்தேன். திடீரென ஒருவர் எழுந்து, தனது குண்டலினி எழுந்து விட்டதாகக் கத்திக்கொண்டு ஆட ஆரம்பித்தார். அவருக்குள் என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அவசரமாக அவர் அருகில் சென்று "ஐயா, உங்கள் குண்டலினி எழுந்ததென்னவோ உண்மையென்றே வைத்துக்கொள்வோம், ஆனால் இப்படி சப்தம் போட்டீர்கள் என்றால் உங்கள் குண்டலினி வாய் வழியாகப் போய்விட வாய்ப்பிருக்கிறது எனவே சப்தம் போடாமல் படுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினேன். நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது, அந்த நபர் ஆரவாரமில்லாமல் படுத்துக்கொண்டார். என்ன நடந்திருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா? 


இந்த நண்பர் குறிப்பிட்ட யோகப்பள்ளியில் ஏற்கனவே ஒருவார குண்டலினி யோகப் பயிற்சி முடித்திருக்கிறார். ஆயிரக்கணக்கான ரூபாய் செலுத்தி பயிற்சிக்குப் போயாகி விட்டது. தன் அருகில் இருப்பவனோ பாம்பு போல நெளிகிறான். பயிற்சி முடித்தபின்பு நாம் மட்டும் சும்மா இருந்தால் நம்மை ஏளனமாக பார்ப்பார்களோ எனத் தன்னைத் தானே பலர் இப்படி ஏமாற்றிக் கொள்கிறார்கள். 


ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு தாம்பத்யம் பற்றிக் கற்றுக்கொடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படுமோ அதுபோலத்தான் தகுதி இல்லாதவர்களுக்குக் குண்டலினி பற்றிக் கற்றுக் கொடுப்பதும். ஐந்து வயது சிறுவனுக்கு உடலாலும், மனதாலும் வளர்ச்சி ஏற்பட்டால் ஒழிய, கற்றது பயன்படாது. அது போன்றதே “ராஜ யோகம்” என்பதை உணருங்கள். 











ஒரு "பியுஷ் கேரியரில்" இத்தனை வாட் மின்சாரம் தான் செலுத்த முடியும் என வரையறுக்கப் பட்டிருக்கிறது. அதையும் மீறி அதிக மின்சாரத்தை செலுத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைத் தெரிந்திருக்கிறோம். அதுபோல குண்டலினி என்பது உயர் அழுத்த மின்சாரம் போன்றது, உடலைப் பக்குவப் படுத்தாமல் குண்டலினியை எழுச்சி பெறச் செய்வதால் உடல் நோய்கள் மட்டுமல்லாது மன நோய்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும். 




இன்றைய சூழலில் சிலருக்கு யோகப் பயிற்சிகள் செய்யவும் விருப்பமில்லை, ஆனால் குண்டலினியும் ஏற வேண்டும்.(இவர்கள் எதற்காகக் குண்டலினியை ஏற்ற நினைக்கிறார்கள் என்பதற்கு ஒரு தனிப் பதிவே போட வேண்டும்) பணம் கொடுத்து "பீசா" வாங்குவது போல, குண்டலினியையும் வாங்க நினைப்பதால்தான் தகுதியுள்ள குருமார்கள் மறைந்து கொள்கிறார்களோ??????

Friday, July 29, 2011

பாசத்தளை



அடர்ந்த காடு. யாருமே தனியாகப் போவதற்குப் பயம் கொள்வர். ஆனாலும் இரண்டு பெரிய நகரங்களுக்கு நடுவில் இந்தக் காடு இருந்ததால் பலருக்கு இந்தக் காட்டுப்பாதையின் வழியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரும் கூட்டம் கூட்டமாகத் தகுந்த பாதுகாப்புடனேயே இந்தக் காட்டுப் பாதையில் செல்லமுடியும்.


வணிகர் கூட்டம் அடிக்கடி இந்த வழியே செல்வதால் வழிப்பறி செய்யும் ஒரு கொள்ளைக்கூட்டம் இந்த காட்டில் நிரந்தரமாகவே கூடாரம் இட்டு வாழ ஆரம்பித்தது. எத்தனைப் பாதுகாப்புடன் வந்தால் தான் என்ன, இந்த கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டால் அவ்வளவுதான். தலை தப்புவது தம்பிரான்புண்ணியம் என்று ஆகிவிடும்.



அந்தக் கொள்ளைக் கூட்டத்துக்குத் தலைவன் ஒருவன் இருந்தான். பெயர் ரத்னாகரன்.பெரிய சம்சாரி. கொள்ளையடிப்பதில் மிகத் திறமைசாலி என்பதால் கொள்ளையர் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர்.

சில நேரம் அவன் தனியாகவே வழிப்பறி செய்யக் கிளம்பிவிடுவான்.என்ன செய்வது!!!!!  பெரிய குடும்பம்…காப்பாற்ற வேண்டாமா?




"மனைவியர்களும் குழந்தைகளும் உறவுகளும் என் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளனர்? எனக்காக அவர்கள் உயிரையும் கொடுக்க முன்வருவார்களே? அவர்களைக் காப்பது என் கடமையல்லவா?"என்று அடிக்கடி எண்ணிக்கொள்வான் அந்த தலைவன்.

ஒரு முறை அவன் தனியே கொள்ளையடிக்கச் சென்றபோது அவனிடம் மாட்டிக்கொண்டார் ஒரு முனி. கையில் தம்புரா வைத்துக்கொண்டு ‘நாராயண, நாராயண‘ என்று பாடிவந்த முனி முன்பு ரத்னாகரன் மலையென நின்றான்.




‘யாரப்பா நீ. உனக்கு என்னவேண்டும்?’




‘நான் யாராய் இருந்தால்உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும்‘.


முனிவருக்கு அவன் கொள்ளைக்காரன் என்பது அப்போதுதான்புரிந்தது.

‘அப்பா. நீ செய்வது மகா பாவம் அல்லவா? இப்படி எல்லோரிடமும் கொள்ளையடித்துக் கொண்டிருந்தால் யமன்உன் உயிரைக் கொள்ளையடித்துச் செல்ல வரும் போது உனக்கு நரகம் தானே கிடைக்கும்." .




"முனிவரே,   தேவையில்லாமல்பேசி என் நேரத்தை வீணாக்காதே. என் மனைவி மக்கள் உறவுஎல்லோரும் இன்று என்ன கொண்டு வரப்போகிறேன் என்றுவழிமேல் விழிவைத்துக் காத்திருப்பர். நீர் சீக்கிரம் உம்மிடம் இருப்பதைக் கொடுத்தால் உயிர் பிழைக்கலாம். இல்லை இங்கேயே செத்துப்போக உம்மை தயார் செய்து கொள்ளும்".


இதற்குள் முனிவருக்கு ரத்னாகரன் மேல் அனுதாபம் வந்தது. இவன் அறியாமையில் இருக்கிறான் இவனை நல்வழிக்குத் திருப்பிவிடலாம் என்று அவன் மேல் கருணை கொண்டு மேலும் பேச ஆரம்பித்தார்.


‘அப்பா…நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதில் சொன்னபிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொள்ளை கொண்டு போகலாம்‘


"சீக்கிரம் கேட்டுத் தொலையும்".


‘ நீ யாருக்காக இந்தக் கொடுமையான கொள்ளையும் கொலையும் செய்கிறாய்? ‘


‘வேறு யாருக்காக, என் மனைவி மக்களுக்காகத்தான். அவர்கள்தானே  எல்லா சுக துக்கங்களிலும் என்னுடன் இருக்கிறார்கள்.எனக்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள்.’


‘உன் எல்லா சுகங்களிலும் பங்கு கொள்கிறார்கள். சரி. உனக்காக தங்கள் உயிரைத் தருவதாக எப்போதாவது சொல்லி இருக்கிறார்களா? இல்லை உன் பாவங்களில் தான் அவர்கள் பங்கேற்பார்களா? "



"என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். அவர்கள் வாய் திறந்து எனக்காக உயிரைக் கொடுப்பதாய் சொன்னதில்லைதான். ஆனால் என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு அளவு கடந்தது. முற்றும் துறந்து முனியான உமக்கு அதெல்லாம் புரியாது".





"அப்படியா? சரி......!. உன் பாவங்களில் அவர்கள் பங்குகொள்வார்களா?"


‘அதிலென்ன சந்தேகம். நான் கொள்ளையடித்துக் கொண்டு வருவதைப் பங்கு கொள்ளும் அவர்கள் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள்‘.


‘அதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டாயா?’


‘இல்லை. அதற்குத் தேவையும் இல்லை‘.


‘அது அவசியம் தேவை. அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ளமாட்டார்கள் என்கிறேன் நான். நீ அதை இல்லையென்று நிரூபிக்கமுடியுமா?’


‘ஆகா முனிவரே! தப்பித்துப் போக முயல்கிறீரா? இதெல்லாம் என்னிடம்முடியாது‘.


‘இல்லையப்பா. நீ வேண்டுமானால் என்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போ.போய் அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்.’


கொள்ளையர் தலைவன் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து அந்த முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு சென்றான்.


திரும்பி வந்த ரத்னாகரன் முற்றிலும் மாறியிருந்தான் . அவனுள் இருந்த பீஜம் முளைவிடும் நேரம் நெருங்கி இருந்தது. வந்தவன்முனிவரின் காலில் விழுந்து ‘சுவாமி, நீங்கள் சொன்னது சரிதான்‘ என்றுகண்கலங்கிய படியே முனிவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான்.


"என்னப்பா நடந்தது"


‘சுவாமி. நீங்கள் சொன்ன படி நான் போய் என் மனைவியர், குழந்தைகள்,நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லோரிடமும் என் பாவத்தில் பங்குகொள்வீர்களா? என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் ‘எங்களைகாப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டுவருகிறாய் என்பது எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை" என்று கூறிவிட்டார்கள்.


"அவர்கள் சொன்னதில் தவறில்லையே. மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை!!!. அதை நல் வழியில் செய்கிறாயா? இல்லையா ? என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை".


"ஆமாம் சுவாமி. அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான், நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்கவேண்டும்‘


‘நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் ராம நாமத்தைச்சொல்லிக் கொண்டு இருப்பதே‘


‘சுவாமி. என்ன நாமம் அது?’


‘ராம நாமம்‘


‘என் வாயில் நுழையவில்லையே சுவாமி‘


‘கவலையில்லை. இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன?’


‘இதுவா சுவாமி. இது மரா மரம்‘.


‘நீ இந்த மரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. அது போதும்‘.


‘ஆகட்டும் சுவாமி. நீங்கள் யார் என்று இன்னும் சொல்லவில்லையே‘


‘என் பெயர் நாரதன். திரிலோக சஞ்சாரி என்றும் சொல்வார்கள்‘.


‘நல்லது சுவாமி. நீங்கள் சொன்ன படியே இந்த மரா மரத்தின் பெயரைச்சொல்லிக் கொண்டிருக்கிறேன்‘ .


நாரதரும் தன் வழியே சென்றார்.


அவர் போனபின் அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து ‘மரா மரா மரா‘ என்று ஜபிக்க ஆரம்பித்தான். அது ‘ராமராம ராம‘ என்று ஒலித்தது. விண்ணதிர, மண்ணதிர இடைவிடாத ஜபம். கடுமையானத் தவம். ராம மந்திரம் அவனது பாசத் தளையைத் தகர்த்து பாதை காட்டியது.


நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது.  ராம நாம ஜபத்தால்அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான். யோக தவத்தின் பயனால் ரத்னாகரன் மிக உயர்ந்த ஞானியானார்.புற்றிலிருந்து வந்ததால் ‘வால்மீகி‘ என்று அழைக்கப் பட்டார்.  பின்னர் இராமாயணம் எழுதி அழியா புகழ் பெற்றார் .



கட்டியனைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்
கொட்டிமுழக்கி அழுவார்; மயானம் குறுகி அப்பால்
எட்டி அடி வைப்பரோ?  இறைவா! கச்சி ஏகம்பனே!





Wednesday, July 27, 2011

பாரத விஞ்ஞானம்.





இன்று வானில் ஏராளமான செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவருகின்றன.இவை அனைத்தும் பூமியை ஒவ்வொரு விநாடியும் கண்காணித்து வருகின்றன.அமெரிக்க செயற்கைக்கோள்கள் இந்தியாவின் முழு நிலப்பரப்பையும் ஒவ்வொரு விநாடியும் படம் பிடித்து வருகின்றன.


வானியலில் வெள்ளைக்காரர்கள்(அமெரிக்க ஐரோப்பாவினர்)தான் முன்னோடிகள் என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மறந்துவிடுங்கள். அவர்கள் எல்லா விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் நமது நாட்டிலிருந்து களவாடப்பட்டவை.

வரலாறு என்ற ஒன்று உண்டு.அதில் நிஜங்கள் மட்டுமே நிலைத்திருக்கும். டாக்டர் டேவிட் எட்வின் பின்கிரீ என்ற அமெரிக்க கணிதப்பேராசிரியர் 1952 ஆம் வருடம் தற்செயலாக ரோம் நகரில் உள்ள நூலகத்தில் ஒரு புத்தகத்தைப்பார்த்தார்.அதில் ஒரு ஹிந்து வான சாஸ்திர அறிஞரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருந்த வானியல் உண்மைகளைப்பார்த்து வியந்துபோனார். அதனால் அவர் அன்று முதல் தனது ஆராய்ச்சியை ஹிந்து கணிதம்,வான சாஸ்திரம் நோக்கித் திருப்பினார்.
கி.பி.1965 ஆம் ஆண்டு நமது பாரதத்திற்கு வந்தார்.இத்துறையில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட 20,000 கிரந்தங்கள்(பாடல்கள்)உள்ளன என்று கணக்கிட்டு அவற்றின் விவரத்தைத் தொகுக்கத்தொடங்கினார்.கி.பி.1995 வரை ஐந்து பெரிய தொகுப்புகளாக அவற்றை வெளியிட்டார்.அவற்றிற்கு Census of Exact Science எனப் பெயரிட்டார். 

பூகோள விஞ்ஞானத்திலும், வான சாஸ்திரத்திலும் நம்மவர்கள் உலகின் மற்ற நாகரிகங்களையும், நாடுகளையும்விட முந்தியிருந்தார்கள்.

நம்மவர்கள் பூமியின் மொத்த வயதை 432 கோடி வருடங்கள் என்று கணித்தார்கள். பிரம்மனின் ஒரு நாள் (கல்பா) கணக்கில், பூமியின் வயது ஆயிரம் சதுர்யுகம் என்றார்கள். ஒரு யுகம் என்பது 108 கோடி ஆண்டுகள் என்று எழுதினார் ஆர்யபட்டர்.

ஒரு நொடியை 33,750-ஆல் (முப்பத்தி மூன்றாயிரத்து எழுநூற்றைம்பது) வகுத்து, அதை ‘த்ருதி’ என்றார்கள். அந்த நாட்களில் உலகின் மற்ற நாடுகள் நொடியைவிடச் சிறிய கால அளவை கண்டுபிடிக்கவே இல்லை.

ஒளியின் வேகத்தை 19-ஆம் நூற்றாண்டில் மேலைநாட்டு விஞ்ஞானிகள் நொடிக்கு 2,99,792 கி.மீ. என்று கணக்கிட்டார்கள். ஆனால், ரிக்வேதத்தில் குறிப்பிட்ட அளவுக் கணக்கை இதற்கு நிகராக வைத்துப் பார்த்தால், ஒளியின் வேகம் நொடிக்கு 2,99,334 கி.மீ. என்று வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடித்த Black-Hole-ஐ (அண்ட சராசரத்தின் மேல் பகுதி), விஷ்வருசி என்ற பெயரில் முண்டக உபநிஷத்தில் எழுதி வைத்தார்கள்.


அதேபோல் பரம அணு என்பது 0.000000614 கிராமுக்கு நிகரானது என்ற அளவுக் கணக்கை அந்தக் காலத்திலேயே கண்டுபிடித்ததும் நம்மவர்கள்.


இன்றைய அணுசக்தி விஞ்ஞானத்துக்குத் தந்தை மேலைநாடுகள் என்றால் கொள்ளுத்தாத்தன் நம்மவர்கள்தான். அணுவிலிருந்து வெளிவரும் அபார சக்தியை முண்டக உபநிஷத்திலேயே விவரித்திருக்கிறார்கள்.


இயற்கைதான் வாழ்வின் ஆதாரம் என்ற கருத்தில்தான் பூமாதேவியை வழிபட்டார்கள். ஒரு இடத்தில் கட்டடம் கட்டும்போது பூமி பூஜை செய்வதே, அந்த பூமி கட்டுமானத்துக்கு ஏற்றதா என்று ஆய்வு செய்து, சரியென்றால், அதை வாழ்த்தும் வகையில் செய்யும் பூஜைதான். சீதை என்றாலே, ஏர் என்று பொருள். சீதை பூமியிலிருந்து பிறந்தாள் என்பதுடன் ராமாயண வாழ்க்கை முடிந்ததும், பூமி பிளந்து சீதையை ஏற்றுக்கொள்வதாக புராணம் சொல்கிறது. ஏரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே சீதை கதாபாத்திரத்தை ஏராகவும், பூமாதேவியாகவும் சித்தரித்தார்கள்.


மரங்களிலேயே சுற்றுப்புறத்துக்கு அதிக நலன் தரும் மரத்தை ‘அரசமரம்’ என்றதுடன், போதிமரம் என்றும் சொன்னார்கள். புத்தருக்கு ஞானம் போதித்த மரம் என்பதாலும், பூதேவியின் மரம் என்பதாலும் போதிமரம் என்ற பெயர் வைத்தார்கள். அரச மரத்தைத்தான் கல்பதரு என்று சொல்லி வணங்கினார்கள். இன்று Global Warming பிரச்னையை எதிர்கொள்ள, மேலைநாட்டு விஞ்ஞானிகள் சொல்வது - மரங்களை நடுங்கள் என்பதுதான். அதுவும் அரச மரங்களை!


மனிதர்களின் நோய்க்கு வைத்தியம் நமக்குத் தெரியும். பிராணிகளுக்கும் வைத்தியர்கள் உண்டு. மரம், செடி, கொடிகளுக்கு வைத்தியம் உண்டா? விருக்ஷ ஆயுர்வேதாவில் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஒருவகை மலரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மலர்ந்திருக்கும் அந்த மலரின் அருகில் சென்றால் மலர் மூடிக்கொள்ளுமாம். கவலை அகன்றாலோ, கவலையாயிருப்பவர் நகர்ந்து விட்டாலோ திறந்து கொள்ளுமாம். இன்றும் நீலகிரியில், தோடர்கள் இந்த மலர் இருப்பதை உறுதி செய்கிறார்கள் (Gentiana Pedicellata என்பது இன்றைய பெயர்).


கலியுகத்தில் செடி, மரம் நடுவது, பூங்கா அமைப்பது, கிணறு, குளம் தோண்டுவது குறையும். அதனால் இயற்கையின் சீற்றம் அடிக்கடி ஏற்படும் என்று சிவ புராணத்தில் (பாடல் 11.1.23), அன்றே சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்!

நவீன விஞ்ஞானம் இன்னும் சாதிக்காத மாஜிக்குகளைக்கூட நம்மவர்கள் எளிதாக செயல்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை!

Tuesday, July 26, 2011

நன்றி.....! நன்றி.....!நன்றி.......!


நேரிலும், அலைபேசியிலும், வலையிலுமாக பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன அன்பான அனைத்து உறவுகளுக்கும் நன்றி!





Monday, July 25, 2011

சற்குரு மணமாலை.............



நேரிலும், அலைபேசியிலும், வலையிலுமாக பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன அன்பான அனைத்து உறவுகளுக்கும் நன்றி!


நண்பர்களே! இது யோகயுவ கேந்திராவின் 150 வது பதிவு.
                                                             

                                                        சொற்களைக் கடந்த
அற்புதக் கருவைச்
சொற்களாய் இறைக்கும்
சற்குரு சரணம்

பொய்யை நசிக்கும்
மெய்யைக் காட்டும்
மெய்யே வடிவாம்
சற்குரு சரணம்

பற்றிய பற்றுகள்
பற்றற விடவே
பற்றும் பற்றாம்
சற்குரு சரணம்


பராபர வெளியில்
பராபரை ஒளியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்

பரசிவப் பரப்பில்
பரையருட் சத்தியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்

பற்றப் பற்றப்
பற்றும் மெய்க்கனல்
பற்றும் மெய்வழி
சற்குரு சரணம்

தொற்றிய குற்றம்
அற்றே நசியும்
சிற்பர உயிர்மெய்
சற்குரு சரணம்

நாதமும் விந்தும்
பாத மிரண்டாம்
தற்பர போதமாம்
சற்குரு சரணம்

நோயுந் தேய்வுஞ்
சாயும் மரணமும்
அற்றே போம்வழி
சற்குரு சரணம்

அருவாய் உருவாய்
அருவுரு ஒன்றாம்
மந்திரத் திருவுரு
சற்குரு சரணம்

கற்பகத் தருவாய்
அற்புதப் பசுவாய்
எண்ணில் வரந்தரும்
சற்குரு சரணம்

பிண்ட மாமிசம்
அண்ட மாவெளி
புக்கொளிர் வழிசெய்
சற்குரு சரணம்

மாமிச இதயமும்
மாவெளி இருதயம்
என்றே மாற்றும்
சற்குரு சரணம்

கசடறக் கற்று
நிசமாய் நிற்கும்
உத்தியைச் சொல்லும்
சற்குரு சரணம்

நான்தான் நீக்கி
நானே என்றே
உய்யும் ஓர்வழி
சற்குரு சரணம்

நான்நீ நீக்கி
நானே என்றே
உய்யும் ஓர்வழி
சற்குரு சரணம்

பெருவெளி உற்று
அருளொளி காணும்
மெய்வழி காட்டும்
சற்குரு சரணம்

பெருவெளி உய்த்து
அருளொளி தந்தே
நித்திய வாழ்வளி
சற்குரு சரணம்

சத்தியம் நிச்சயம்
நித்தியம் என்றே
உள்ளதைக் காட்டும்
சற்குரு சரணம்

நிர்க்குணப் பிரம்மமே
சகுணப் பிரம்மமாம்
உன்னுரு எனப்பகர்
சற்குரு சரணம்

திரிகுண மாயை
உரித்தவ் விடத்தே
சச்சிதா னந்தமாம்
சற்குரு சரணம்

என்றும் இளசாய்க்
குன்றாப் பொலிவுடன்
நன்றாய் இருக்கும்
சற்குரு சரணம்

பராபரம் பராபரை
பரம்பரம் பரைபரம்
அப்பாற் பரநிலை
சற்குரு சரணம்

பராபரம் பராபரை
பரம்பரம் பரைபரம்
இப்பால் இகநிலை
சற்குரு சரணம்


பரநிலைத் தலையே
இகநிலைக் காலாம்
ஒப்பிலா மெய்வழி
சற்குரு சரணம்


பரநிலை மெய்யே
இகநிலை உயிராம்
செப்பரும் ஓர்வழி
சற்குரு சரணம்


தற்பர போத
சற்குரு சரணம்
சிற்பர ஞான
சற்குரு சரணம்


உச்சியைப் பிளந்து
உள்ளே புகுந்து
நெற்றியில் ஒளிரும்
சற்குரு சரணம்


வெளியைக் காட்டி
வெளியில் ஒளியாம்
அற்புதம் காட்டிய
சற்குரு சரணம்


வெளியும் ஒளியும்
வளியும் ஒன்றும்
நற்றலம் காட்டிய
சற்குரு சரணம்


ஒன்றிய மூன்றும்
நன்னீர் அளியாய்ப்
பெய்வதை காட்டிய
சற்குரு சரணம்


பெய்யும் அளியே
மெய்யாம் களியென
உற்றறி நீயெனும்
சற்குரு சரணம்


பொய்ப்புலன் சுட்டு
மெய்ப்புலன் சுட்டி
உய்வகை அருளிய
சற்குரு சரணம்


மெய்யாம் உடம்பும்
மெய்யாம் பரத்தில்
உய்ந்திடும் வழிசெய்
சற்குரு சரணம்


மெய்யும் உயிரும்
ஒன்றும் வழியும்
மெய்யோ டுயிராம்
சற்குரு சரணம்


நிராதா ரமேனிலை
ஆறாதா ரமேவிட
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்


தராதரம் பாராப்
பராபரப் பேரை
என்னுளம் பதித்த
சற்குரு சரணம்


பராபரப் பேரே
தராதலத் தெவர்க்கும்
என்றே விதித்த
சற்குரு சரணம்


தானாம் பராபரம்
நானே என்றுணர்
வுற்றதை விளக்கிய
சற்குரு சரணம்


உற்றவ் வுணர்வைப்
பற்றியே வணங்கிப்
பெற்றபேர் போற்றெனும்
சற்குரு சரணம்


பராபர இருப்பில்
நானெனும் முனைப்பெழும்
சட்டெனப் பற்றெனும்
சற்குரு சரணம்


இருக்கிறேன் என்றே
இருப்பின் உணர்வெழும்
பட்டெனப் பற்றெனும்
சற்குரு சரணம்


தானாம் இருப்பில்
நானே அறிவெழும்
சிக்கெனப் பற்றெனும்
சற்குரு சரணம்


முனைப்பும் உணர்வும்
முளைக்கும் அறிவும்
சுற்றுஞ் சுழலெனும்
சற்குரு சரணம்


அச்சுழல் தொற்றித்
துச்சமாம் பற்றெலாம்
பற்றற ஒழியெனும்
சற்குரு சரணம்




சாதி சமய
பேதச் சழக்கை
முற்றிலும் அறுக்கும்
சற்குரு சரணம்


ஒருவனாம் தேவனை
இருதயத் தலத்தே
மெய்யெனக் காட்டிய
சற்குரு சரணம்




ஒன்றே குலமென
இச்சக உயிர்களைச்
சுற்றாமாய்க் காட்டிய
சற்குரு சரணம்


அருட்தவ நெறியில்
பொருத்தியே என்னை
முற்றிலும் திருத்திய
சற்குரு சரணம்


அரும்பெரும் பரம்பொருள்
அருட்பெருங் கடவுளை
நெஞ்சகம் நிறுத்திய
சற்குரு சரணம்


மெய்யுடம் பாலயம்
உய்ந்தங் கிருந்தே
மெய்யுணர் வளிக்கும்
சற்குரு சரணம்


மெய்யகக் கோயிலில்
உய்ந்தங் கொலிக்கும்
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்


சக்கரக் கோயிலில்
புக்காங் கொளிரும்
நற்றவ ஜோதியர்
சற்குரு சரணம்


நாறும் தேகம்
மாறும் படிப்பே
ரற்புதம் புரியும்
சற்குரு சரணம்


பிணமாய் நசியும்
கணக்கை முடித்து
மந்திர உருதரு
சற்குரு சரணம்


இட்டுஞ் சுட்டும்
பட்டுப் போங்கடம்
நிற்கும் நிலைதரும்
சற்குரு சரணம்


அவம்பல செய்து
சவமெனக் கிடந்த
என்னை எழுப்பிய
சற்குரு சரணம்


கொன்றும் கொன்றதைத்
தின்றும் திரிந்தேன்
என்னைத் திருத்திய
சற்குரு சரணம்


நஞ்சைக் கக்கும்
வஞ்சநா கமெனை
நல்லவ னாக்கிய
சற்குரு சரணம்


நலிந்து மெலிந்து
விழுந்தே னென்னை
வல்லவ னாக்கிய
சற்குரு சரணம்


புல்லேன் பொய்யேன்
கன்னெஞ் சேனை
மெய்யோ னாக்கிய
சற்குரு சரணம்


கல்லேன் நல்லதில்
நில்லேன் பொல்லேன்
புல்லனைத் திருத்திய
சற்குரு சரணம்


புன்னிக ரில்லேன்
வன்பே புரிவேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்


உருவம் வன்பாம்
மருளே பொருளாம்
என்னைத் திருத்திய
சற்குரு சரணம்


பற்றெலாம் பற்றிக்
குற்றமே புரிந்தேன்
அற்பனென் ரட்சகர்
சற்குரு சரணம்


குருட்டினை நீக்காக்
குருவொடு குழிவிழ
அங்கெனை மீட்ட
சற்குரு சரணம்


குருட்டினை நீக்காக்
குருவிடம் சிக்கிய
குருடெனை மீட்ட
சற்குரு சரணம்


சிற்றின் பசாகரம்
உற்றே மூழ்குமென்
பற்றுக் கோடாம்
சற்குரு சரணம்


வேடம் பலவாய்
நாடக மாடினேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்


அகமதை மறந்தே
முகம்பல தரித்தேன்
எத்தனைத் திருத்திய
சற்குரு சரணம்


உள்ளே பொழிந்திடும்
தெள்ள முதுண்ணேன்
நஞ்சனைத் திருத்திய
சற்குரு சரணம்


விழித்திரேன் தனித்திரேன்
வழியுறப் பசித்திரேன்
பித்தனைத் திருத்திய
சற்குரு சரணம்


பத்தியுஞ் செய்யேன்
புத்தியு மில்லேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்


பேசியே திரிவேன்
வாசியைப் பாரேன்
அற்பனைத் திருத்திய
சற்குரு சரணம்


அருள்வாக் குறுதியை
ஒருகணம் நினையேன்
புல்லனைத் திருத்திய
சற்குரு சரணம்


புதியஏற் பாடுவுள்
பதியவே ஏற்றிலேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்


மெய்யாம் ஒருசொல்
மெய்யதன் உணர்விலேன்
பொய்யனைத் திருத்திய
சற்குரு சரணம்


வள்ளலின் பாடலைக்
கொள்ளவே மனமிலேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்


வள்ளலின் வருகை
கொள்ளுமு றுதியிலேன்
எத்தனைத் திருத்திய
சற்குரு சரணம்


அம்மை யப்பனை
இம்மை யிலறியேன்
அற்பனைத் திருத்திய
சற்குரு சரணம்


சத்திய சரிதமும்
புத்தியில் ஏற்றிலேன்
பித்தனைத் திருத்திய
சற்குரு சரணம்


அதிசய மாலை
பதியு மனமிலேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்


உயிர்நலம் பேணும்
உயர்மெய் விழையேன்
கொல்வனைத் திருத்திய
சற்குரு சரணம்


அங்குமிங் கெங்குமே
தங்கா மலோடுவேன்
நில்லென நிறுத்திய
சற்குரு சரணம்


இருக்குமி டமறியேன்
இருப்பது வுமறியேன்
சவமெனை எழுப்பிய
சற்குரு சரணம்


இருகால் மிருகமாய்த்
தெருவெலாம் திரிவேன்
உய்வழி அருளிய
சற்குரு சரணம்


குண்டலிக் கனலால்
அண்டிய வினையெலாம்
சுட்டுப் பொசுக்கும்
சற்குரு சரணம்


மண்டை யினுள்ளே
மண்டிய நோயெலாம்
சட்டெனத் தீர்க்கும்
சற்குரு சரணம்


பிண்டம் புகுந்த
பண்டை வினையெலாம்
அற்றுப் போம்வழி
சற்குரு சரணம்


அண்டத் தில்துரி
சண்டா திருக்குமோர்
மந்திர மண்டலம்
சற்குரு சரணம்


அருள்வாக் குறுதியை
இருதயத் துள்திரு
மந்திர மாய்த்தரு
சற்குரு சரணம்


புதியஏற் பாடுவுள்
பதியஏற் பாயென
கற்பித் தருளிய
சற்குரு சரணம்


மெய்யாம் ஒருசொல்
மெய்யதன் உணர்வால்
என்மெய் தழுவிய
சற்குரு சரணம்


வள்ளலின் பாடலைக்
கொள்ளவென் மனத்தைப்
பண்படுத் தியசிவ
சற்குரு சரணம்


வள்ளலின் வருகை
கொள்ளுமு றுதியை
சித்தம் பதித்த
சற்குரு சரணம்


அம்மை யப்பனை
இம்மை யிலறியும்
நற்கல் விதந்த
சற்குரு சரணம்


சத்திய சரிதமென்
புத்தியி லேற்றியே
பித்தெலாம் நீக்கிய
சற்குரு சரணம்


அதிசய மாலை
பதித்தென் மனத்தில்
அற்புத வாழ்வளி
சற்குரு சரணம்


உயிர்நலம் பேணும்
உயர்மெய் விழைந்தே
கொல்வதைத் தவிரெனும்
சற்குரு சரணம்


பரம ரகசியம்
திறந்தெ னக்கதைத்
தெற்றென விளக்கிய
சற்குரு சரணம்


பரம பதத்தைச்
சிரமேற் பதித்து
நெஞ்சகந் திறந்த
சற்குரு சரணம்


அன்பும் அருளும்
இன்பும் பொருளும்
என்றும் தருமென்
சற்குரு சரணம்


உருவுன தன்பே
பொருளுன தருளே
என்றே புகட்டிய
சற்குரு சரணம்


சிதம்பர ரகசியக்
கதவந் திறந்தென்
நெற்றியை விளக்கிய
சற்குரு சரணம்


மாயத் திரையெலாம்
மாய நிசமெனும்
வத்துவைக் காட்டிய
சற்குரு சரணம்


சத்துமாம் சித்துமாம்
நித்திய இன்புமாம்
மெய்ப்பொருள் விளக்கம்
சற்குரு சரணம்


சத்தியுஞ் சித்தியுஞ்
சுத்தபூ ரணமும்
மொத்தமும் விளக்கிய
சற்குரு சரணம்


வரம்பிலாப் பூரண
இருப்பே யார்க்கும்
சத்திய வீடெனும்
சற்குரு சரணம்


அவியாச் சுயஞ்சுடர்
ஒளியே யார்க்கும்
சின்மய விளக்கெனும்
சற்குரு சரணம்


உள்ளபே ரிருப்பாம்
ஒன்றதே யார்க்கும்
நித்திய வாழ்வெனும்
சற்குரு சரணம்


ஆன்மநே யமனப்
பான்மை யார்க்கும்
நல்லளி இன்பெனும்
சற்குரு சரணம்


தழுவுபே ரன்பாம்
இயல்பே யார்க்கும்
உண்மை அகமெனும்
சற்குரு சரணம்


பொருந்துபே ரறிவாம்
நிறைவதே யார்க்கும்
மெய்யுணர் வழியெனும்
சற்குரு சரணம்


அருட்பே ராற்றலாம்
இருப்பே யார்க்கும்
சச்சிதா னந்தமென்
சற்குரு சரணம்


அருட்பெருஞ் ஜோதியாம்
ஒளிநெறி யார்க்கும்
உள்நிறை ஒளியெனும்
சற்குரு சரணம்


தனிப்பெருங் கருணைப்
பெருங்குணம் யார்க்கும்
உள்ளுறை இறையெனும்
சற்குரு சரணம்


கடவுட் தன்மைப்
பெருநிலை யார்க்கும்
உள்ளுயிர் இயலெனும்
சற்குரு சரணம்


அருட்பே ரரசெனும்
சமரசம் யாவரும்
ஒன்றிடும் முறையெனும்
சற்குரு சரணம்


நானே நானெனும்
பூரணம் யாவிலும்
உள்ளதாம் மெய்யெனும்
சற்குரு சரணம்


மெய்வழி ஜீவனாய்
உய்ந்தே யாவிலும்
ஒன்றினேன் நானே
சற்குரு சரணம்


ஜோதிமா வெளியில்
போதியாய் விளங்கி
புத்தராய் எமைச்செய்
சற்குரு சரணம்


ஆதியாம் இருப்பில்
ஜோதியாய் எழுந்து
எம்விழி திறக்கும்
சற்குரு சரணம்


ஜோதிமா மலைமேல்
வீதியாய் வளர்ந்த
மெய்வழிச் சாலை
சற்குரு சரணம்


ஆதியாம் தாய்தன்
பாதியாய் விளங்கும்
அப்பனின் கொழுந்தாம்
சற்குரு சரணம்


புந்தியின் உள்ளே
நந்தியாய் அமர்ந்துமுச்
சந்தியை விளக்கும்
சற்குரு சரணம்


நாதமாம் வெளியின்
பாதமாம் விந்தாய்
உள்ளொளிர் ஜோதியர்
சற்குரு சரணம்


சத்திய வெளியில்
சின்மய ஒளியாம்
இன்பமெய்ச் சித்தர்
சற்குரு சரணம்


சத்தாம் வெளியொளிர்
சித்தாய்க் களித்தே
சித்தராய் எமைச்செய்
சற்குரு சரணம்


ஜோதியாம் பகவனாய்
ஆதியில் எழுந்த
உட்போ தகராம்
சற்குரு சரணம்


பூஜ்ஜிய மென்னைப்
பூரண னாக்கி
இராஜ்ஜியஞ் செய்யெனும்
சற்குரு சரணம்


இருட்கிடங் கெனவே
மருண்டே கிடந்தவென்
உட்புகுஞ் சுயஞ்சுடர்
சற்குரு சரணம்


பிறந்திறந் துழன்றெனை
மறந்துறங் கியவெனை
நித்யவாழ் விலுய்த்த
சற்குரு சரணம்


ஆணவப் பேயனை
ஆன்ம நேயனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்


வன்பிருள் வம்பனை
அன்பருள் நம்பனாய்த்
தன்னியல் தந்தருள்
சற்குரு சரணம்


மருண்டே மயங்கிச்
சுருண்டே கிடந்தவென்
மெய்ஞ்ஞா னபோதகர்
சற்குரு சரணம்


மெலிந்தே தேய்ந்தவென்
நலிந்தே வீழ்ந்தவென்
மெய்யெழு வல்லவர்
சற்குரு சரணம்


தாமசப் பொய்க்குணம்
போக்கியே என்னைச்
சத்தனாய் மாற்றும்
சற்குரு சரணம்

ராஜசப் பொய்க்குணம்
போக்கியே என்னைச்
சித்தனாய்ச் மாற்றும்
சற்குரு சரணம்


சத்துவப் பொய்க்குணம்
போக்கியே என்னை
இன்பனாய் மாற்றும்
சற்குரு சரணம்


துர்க்குணப் பிரமை
அற்றே போக
என்மனந் தெருட்டிய
சற்குரு சரணம்


திரிகுண மாயை
சரிந்தே மாய
சச்சிதா னந்தமாம்
சற்குரு சரணம்


ஒடிந்தேன் உயிரினை
முடிக்கவுந் துணிந்தேன்
அக்கணம் அணைந்தருள்
சற்குரு சரணம்


வெறுஞ்சவ மாய்நான்
கிடந்தேன் எனில்சிவ
சத்தியாய் எழுந்தருள்
சற்குரு சரணம்


முடமெனக் கிடந்தவென்
முடக்கம் நீக்கி
சித்தியெ லாமருள்
சற்குரு சரணம்


இற்றே தீர்ந்தவென்
வெற்று டல்சடத்
துற்றே எழுப்பிய
சற்குரு சரணம்


கடும்பெருங் கொடியனைப்
பெருங்கரு ணையனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்


இருள்மயச் சழக்கனை
அருட்ஜோ தியனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்


மனிதமி ருகமெனை
அருட்பெருங் கடவுளாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்


கொடுங்கோ லாளனை
அருட்பே ரரசனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்


தனையறி யாவெந்
தன்மடம் நீங்கநான்
என்றுணர் நானே
சற்குரு சரணம்


பொய்த்தளை மரணத்
துய்ந்தவென் நோய்தீர்
மெய்வழி ஜீவனாம்
சற்குரு சரணம்


நான்நீ இருமை
மாய்ந்தே போக
ஒன்றாம் நானே
சற்குரு சரணம்


அருளா தாரமே
பொருளா தாரமாம்
உண்மை உணர்த்திய
சற்குரு சரணம்


நரகமாம் நகரிலே
மருண்டவென் அகந்தான்
சொர்க்கமே சேர்வழி
சற்குரு சரணம்