Total Pageviews

Tuesday, September 1, 2015

முத்திரை பிராணாயாமம்


மனநிலை பாதிப்படையும்போது உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பிராணஓட்டம் அதிகமாகவோ குறைவாகவோ செல்கிறது. அப்போது பிராணனின் சரநிலை பாதிப்படைகிறது. சரநிலை மாறும்போது, நோய் என்று நாம் அழைக்கின்ற ஒன்று உண்டாகிறது. பிராண தேக்கம் இருக்கும் இடத்திலிருந்து அதை எடுக்கவோ, பிராணக்குறைவு இருக்கும் இடத்தில் பிராணனை நிரப்பவோ செய்யும்போது நோய் குணமாகிறது.                                    
உடலின் எந்தப் பகுதியிலாவது தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ பிராணன் உள்ளதா என்பதை அறிவதற்கும், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பிராணனை செலுத்துவதற்கும் முத்திரைப்பிராணாயாமத்தால் மட்டுமே முடியும்.                                                

முத்திரைப்பிராணாயாமத்தால்,உணரும் சக்தி மிக நுட்பமாகி, அதன்மூலம் கால் விரலிலோ அல்லது கை விரலிலோ உடலின் எந்தப் பகுதியில் பிராணன் குறைந்துள்ளது என்பதை அறிவதோடு அங்கு அதைச் செலுத்துவதற்கான ஆற்றலையும் யோகி பெறுகிறான். பிராணாயாமத்தின் பல்வேறு பயன்பாடுகளில் இதுவும் ஒன்று. 
                                         
இதனை மெதுவாக, படிப்படியாகப் பயில வேண்டும். பிராணனைப் பல தளங்களில் கட்டுப்படுத்துவதும் கையாள்வதும் எப்படி என்பதைக் கற்பிப்பதே சிவராஜயோகத்தின் முழு நோக்கம். ஒரு மனிதன் தன் ஆற்றல்களை ஒருமுகப்படுத்தும்போது, தன் உடலிலுள்ள பிராணனையே ஒருமுகப்படுத்துகிறான்.
 —