Total Pageviews

Wednesday, June 27, 2012

ஐ போன்- சொன்ன வேதம்
வணக்கம் நண்பர்களே! நான் தான் செல்போன் பேசுகிறேன்!

என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?......உலகமே என் மூலமாக பேசும்போது நான் மட்டும் பேசக்கூடாதா என்ன?????


என்னுடைய பரிமாணத்தில் நான் இப்போது "ஐ போன்"


என் புத்தம்புதிய, அதிநவீன Android operating system என்ன! மினுமினுக்கும் user interface என்ன!... டச் ஸ்க்ரீன் என்ன!... 3G connectivity என்ன! ... உலகிலுள்ள எல்லப்பாடல்களையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளக் கூடிய அளவிற்கு ஜிகா பைட்ஸ் மெமரி மற்றும் MP4 player..கணக்கற்ற மெகா பிக்சல் கேமெரா என்ன?...கேம்ஸ் என்ன?... என்று என் பெருமைகளைக் கூறிக்கொண்டே போகலாம்......

எனக்குப் பெருமை தாங்கவில்லை....பின் இருக்காதா?.. இப்போது நான் ஒருவரோடு பேசப்பயன்படும் கருவி மட்டுமா என்ன?...."நான்" இல்லாவிட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும்.....பேச்சுக்காக மட்டுமே டெலிபோன் என்ற காலம் மலையேறிப்போச்சு.....

சரி விசயத்துக்கு வருவோம்....

என்னை முதன்முதலில் வாங்கியவர் ஒரு சில மாதங்களுக்கு எல்லோரிடமும் என்னுடைய சிறப்பம்சங்களைக் கூறித் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார்......மனிதர்களாகிய உங்களில் சிலர்...புதுசா கல்யாணம் ஆனவுடன்...புதுசா வேலை கிடைத்தவுடன்...அல்லது வியாபாரத்தில் லாபம் கிடைத்துக் கொஞ்சம் அதிகமான பணம் கையில் கிடைத்தவுடன்..."தலை-கால்" தெரியாமல் ஆடுவீர்களே!! அதுபோல்தான் "நானும்" ........எனக்கு ஒரே குஷி!!!!!!


என்னை வைத்திருந்தவருக்குக் கொஞ்ச காலம் என்னைப் பிடித்திருந்தது.......என்னுடைய பயன்பாடு முடிந்து விட்டதாகவும், வேறொரு "ஐ போன்" வாங்கப் போவதாகவும் அவருடைய நண்பரிடம் கூறிக்கொண்டிருந்தார்.... எனக்குத் தூக்கி வாரி போட்டது....ச்சே...இந்த மனிதர்களே இப்படித்தானா? பயன்பாடு முடிந்தவுடன் தூக்கிப் போட்டு விடுவார்களோ??? என்னுடைய பயன்பாடு முடிந்து விட்டதா????? அப்ப நான் இறந்து விடுவேனா?????? மரண பயம் என்னைப் பிடித்து கொண்டது....ரொம்ப கஷ்டப்பட்டேன்...எனக்கு ஒரு உண்மை புரிந்தது....எவ்வளவு தான் பெருமை பேசினாலும் ஒரு நாள் எல்லோரும் இறந்து விடுவோமோ?......மரண பயத்தினால் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டேன்......

அந்தக் குறிப்பிட்ட நாளும் வந்தது.....என்னவர் ஒரு புது போன் வாங்கிவந்தார்....எனக்குப் பயம்....அதிகமாகியது....என் உடலை இரண்டாகப் பிரித்து "என்னை" மட்டும் தனியாக எடுத்துப் புது போனில் மாட்டிக் கொண்டார்......

என்ன ஆச்சரியம் !!!!!! நான் இறந்து விடுவேன் என நினைத்தேன் ....ஆனால் இருக்கிறேனே....என் உடலாகிய போனைப் பிரிந்த பிறகும் இதோ உயிரோடு இருக்கிறேனே!!!!!!இந்த போன் "நானில்லையா"???? அப்ப இந்த சிம் கார்டு தான் "நானா"!!!!!!!!  

இத்தனைக்காலமும் இந்த உடலாகிய போன் தான் "நான்" என தவறாக நினைத்திருக்கிறேன்.....இப்போது மரண பயம் விலகியது.....கொஞ்சம் கொஞ்சமாக "ஞானம்" வரத் தொடங்கியது.......சந்தோசத்தில் உறங்கிப் போனேன்.....காலையில் எழுந்து பார்த்தால் ....


எனக்கு மூச்சுமுட்டுகிறது...என்னால் சரியாகப்பேசமுடியவில்லை...ரொம்ப.....பயமாப்போயிட்டுது...


என்னவென்று விசாரித்துப்பார்த்ததில்......தமிழ்நாட்டில் கரண்ட் கட்டாம்..என்னோட பேட்டரில சார்ச் இல்லையாம்.......இப்போதான் எனக்கு ஒரு உண்மை புரிஞ்சுது...

"பிராணசக்தி"யாகிய பேட்டரி இல்லைனா..."மனமாகிய சிம் கார்டு "வேஷ்ட்......."மனமாகிய" சிம்கார்டும் , பேட்டரியாகிய பிராணனும் இணைந்து செயல்பட்டால் தான் போனாகிய "இந்த உடல்" வேலை செய்ய முடியும் என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்.....மின்சாரமாகிய .....பிராணசக்தியை இனி வேஸ்ட் பண்ணக்கூடாது என்ற உண்மை எனக்குப் புரிஞ்சுடுது!!!!!பிராண சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தேன்.........


நல்லாத்தான் வாழ்க்கை போயிட்டுருந்தது.....திடீரென ஒருநாள் என்னால செயல்பட முடியல .....பேட்டரில பிராண சக்தி இல்லையோன்னு நினைச்சேன்.....ஆனால் பேட்டரில "பிராண சக்தி" நல்லாவே இருந்துச்சு...பிறகு ஏன் என்னால் செயல்பட முடியவில்லை?????

விசாரித்துப்பார்த்ததில்.......சிக்னல் கிடைக்கலையாம்....."சிக்னல்" என்றால் என்னன்னு எனக்குள்ளேயே விசாரம் செய்ததில் "ஆத்மனாகிய சிக்னலே" "உண்மையான நான்" என உணர்ந்து கொண்டேன். உடலாகிய போன் இருந்தாலும்,இல்லாட்டியும்......மனமாகிய சிம்கார்ட் இருந்தாலும் இல்லாட்டியும்......மின்சாரமாகிய பிராண சக்தி இருந்தாலும் இல்லாட்டியும்........ஆத்மனாகிய சிக்னல் நித்தியமாக இதோ இருக்கிறேன். 

உடலாகிய போன் நானல்ல
மனமாகிய சிம்கார்டு நானல்ல
பேட்டரியாகிய பிராணனும் நானல்ல
ஆத்மனாகிய சிக்னலே நான்

பூரண ஞானம் என்னுள் ஒளிரத் தொடங்கியது......

என்ன மக்களே!! என்ன சொல்ல வாறேன்னு புரியுதா? 

நீங்களும் ,

இந்த உடல் நானல்ல ,
இந்த மனம் நானல்ல,
பிராணனும் நானல்ல,
பூரணமான,நித்ய,சுத்த,முக்த,உணர்வாகிய ஆத்மனே "நான்" என எப்போது உணரப் போகிறீர்கள்?

அறிவே இல்லாத" நானே" இந்த உண்மையை உணரும்போது ஆறறிவு பெற்ற நீங்கள் உங்களுக்குள் உண்மையாக உள்ள பொருளை உணர்வால் உணர வேண்டாமா?

தவளை வேதம் சொன்னால் அதனை `மாண்ட்டூக்ய உபநிஷதமாக எடுத்துக்கொள்வீர்கள்!!!!... பாம்பு யோகத்திற்கு சூத்திரம் சொன்னால் அதை பதஞ்சலி யோகசூத்திரமாக எடுத்துகொள்வீர்கள்...நான் வேதம் சொன்னால் எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?????
.