Total Pageviews

Thursday, April 26, 2012

அய்யோ.....அய்யோ....









நவீன கட்டண(மில்லாத) கழிப்பிடம் 




இதுதான் ஸ்ட்ரைட்டனிங்கா........?



இந்த பைக் ல வீலிங்....பண்ணலாமா...? 



இலவச டிவி யோ....?









ஆய கலைகள் 64


ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த
அறுபத்துநான்கு கலைகள் என்னென்ன என்பதைத் தெரிந்தவர்கள் மிகக் குறைவே.
என் நண்பர் ஒருமுறை கேட்டபோது அந்த அறுபத்து நான்கு கலைகளையும்
பட்டியலிட்டுச் சொன்னார். பிரமிப்பாக இருந்தது எனக்கு. உங்களுக்காக
அவற்றை இங்கே தருகிறேன்.

1. ‌முதலில் எழுதப் பழகும் மொழியின் அட்சரங்கள், 2. லிகிதம், 3. கணிதம்,
4. வேதம், 5. புராணம், 6. வியாகரணம், 7. ஜோதிடம், 8. தர்ம சாஸ்திரம், 9.
யோக சாஸ்திரம், 10. நீதி சாஸ்திரம்,
...
11. மந்திர சாஸ்திரம், 12. நிமித்த சாஸ்திரம், 13. சிற்ப சாஸ்திரம், 14.
வைத்ய சாஸ்திரம், 15. சாமுத்ரிகா லட்சணம், 16. சப்தப் பிரம்மம், 17.
காவியம், 18. அலங்காரம், 19. வாக்கு வன்மை, 20. கூத்து,

21. நடனம், 22. வீணை இசை, 23. புல்லாங்குழல் வாசிப்பு, 24. மிருதங்க இசை,
25. தாளம், 26. ஆயுதப் பயிற்சி, 27. ரத்னப் பரீட்சை, 28. கனகப் பரீட்சை
(தங்கம் எது என அறிதல்), 29. யானை ஏற்றமும் ஜாதி அறிதலும், 30. குதிரை
ஏற்றமும் ஜாதி அறிதலும்,

31. ரத சாஸ்திரம், 32. பூமியறிதல், 33. போர்முறை சாஸ்திரம் மற்றும்
தந்திரம், 34. மற்போர் சாஸ்திரம், 35. வசீகரித்தல், 36. உச்சாடனம், 37.
பகை மூட்டுதல், 38. காம சாஸ்திரம், 39. மோகனம், 40. ஆகர்ஷணம்,

41. ரஸவாதம், 42. கந்தர்வ ரகசியம், 43. மிருக பாஷையறிவு, 44. துயர்
மாற்றுதல், 45. நாடி சாஸ்திரம், 46. விஷம் நீக்கும் சாஸ்திரம், 47. களவு,
48. மறைந்துரைதல், 49. ஆகாயப் பிரவேசம், 50. விண் நடமாட்டம்,

51. கூடு விட்டுக் கூடு பாய்தல், 52. அரூபமாதல், 53. இந்திர ஜாலம், 54.
மகேந்திர ஜாலம், 55. அக்னி ஸ்தம்பனம், 56. ஜல ஸ்தம்பனம், 57. வாயு
ஸ்தம்பனம், 58. கண்கட்டு வித்தை, 59. வாய் கட்டும் வித்தை, 60. சுக்கில
ஸ்தம்பனம், 61. சுன்ன ஸ்தம்பனம், 62. வாள் வித்தை, 63. ஆன்மாவைக்
கட்டுப்படுத்துதல், 64. இசை.



----வேல்விஜயன்

Saturday, April 21, 2012

காலை முழுவதும் படிப்பு மாலை முழுவதும் விளையாட்டு


சித்திரை வருடப்பிறப்பு ,ரொம்ப அதிகாலை.
குற்றாலம் ரோடில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.
 “என்ன சிவா, இவ்வளவு காலைல? கோவிலுக்கா?”
"இல்லைங்கையா, தென்காசி கோவிலுக்குள் இருக்கிற சித்தர்பீடத்துல இன்னைக்கி குருபூஜை.....காசிமேஜர்புரத்துல ஒருத்தர்கிட்ட செண்பகப்பூ சொல்லியிருந்தேன்....வாங்கிட்டு போகலாம்னு......"
"ஓ...செண்பகப்பூவில் அப்படி என்ன விஷேசம். "
"விஷேசதுக்காக இல்லை.... இது நம்ம பக்கத்துல கிடைக்கிற ஒரு அபூர்வமான பூ அவ்வளவுதான் . ஆனா நீங்க சொன்ன பிறகு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது, ஒவ்வொரு மலருக்கும் ஒரு விஷேச குணம் உண்டு. மருத்துவ குணமில்லாத மலரே கிடையாது என்பது எனது குருமார்களிடமிருந்து கற்றுகொண்ட செய்தி. இந்த செண்பக மலரின் வாசனை, ரத்த ஓட்டத்தை வேகமாக்குமுனு சொல்வாங்க......அதுசரி....இந்த நேரத்துல நீங்க எங்க போறீங்க???
 “பாத்தாத் தெரியல்லையா? மார்னிங் வாக்குக்காக வந்தேன்”
அப்போதுதான் பார்த்தேன். பந்தாவாக ஒரு டிராக் சூட்டும் டீ ஷர்ட்டும் போட்டிருந்தார். சட்டைப் பையில் மொபைல். காதில் இயர் ஃபோன்.
 “டிரஸ்ஸு பொருத்தமாத்தான் இருக்கு. ஆனா நீங்க நடக்கிற ஸ்பீடு.........இந்த வயசுல இந்த ஸ்பீடு வேண்டாமே!!!"
"என்ன சிவா எனக்கு வயசாயிருச்சுன்னா சொல்றீங்க?"
 “நீங்க அப்பமே பெரிய வெயிட் லிப்டருன்னு அப்பா சொல்லி கேள்வி பட்டிருக்கேன்....அதுக்காக, கார்ட்டுல ப்ராப்ளத்த வச்சுகிட்டு இவ்வளவு ஸ்பீட் வேண்டாமேன்னு தான் சொன்னேன்." ”

 “மெல்ல நடந்தா பிரயோஜனம் இருக்காது சிவா?”
 “உண்மைதான். வாக்கிங்கோட தாத்பர்யமே உடம்பில இருக்கிற சர்க்கரையையும், கொலஸ்ட்ராலையும் பர்ன் பண்றதுதான். ஆனா அதுக்காக இவ்வளவு ஸ்பீட் இந்த வயசுல வேண்டாமே."
"உண்மைதான்.....ஸ்பீடா நடந்து பழகிட்டேன்....குறைச்சுக்கிறேன்"
 “கேக்கணும்ன்னு நினைச்சேன். இப்பல்லாம் வாக்கிங் போறவங்க காதுல ஈயற் போன மாட்டிக்குறாங்க.....”
 “மத்தவங்க எப்படியோ, நான் காலைல நல்ல இசை கேட்டுக்கிட்டுத்தான் நடப்பேன்.......இது தப்பு தானா?”
"நீங்க பெரியவங்க.....உங்களுக்குத் தெரியாதது இருக்காது......இருந்தாலும் நம்ம யோக நூல்களெல்லாம் சுவாசத்தை கவனிச்சுக்கிட்டே நடந்தா உடல் ஆரோக்கியத்தோட உள்ள ஆரோக்கியமும் அதிகப்படும்னு சொல்லுது...அதுபோல மாலையில் வாக்கிங் போறதுதான் நல்லதுன்னு சொல்லுது!!!!!
"என்ன காரணம் சிவா?"
நம்ம உடம்புல ஒரு உயிர்கடிகாரம் செயல்பட்டுகிட்டு இருக்கு ...ஒவ்வொரு ரெண்டு மணி நேரத்துக்கும் ஒரு குறிப்பிட்ட உள்உறுப்புல பிராண சக்தி செயல்படுறத நம்ம யோகிகள் அப்பவே கண்டுபிடிச்சிருக்காங்க.....அதன்படி அதிகாலை நேரம் நுரையீரலுக்கான நேரம். இந்த நேரத்துல சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளைத்தான் செய்யணும்.......சுவாச பந்தனம் செய்யாமல், சுவாசத்தை செலவழிக்கும் தேகப் பயிற்சிகளைச் செய்தால் மூலப்பிராண சக்தி குறைஞ்சிடும்......"


"ஓ.....அப்படியா?.......அப்ப வாக்கிங் எப்பதான் போறது?"


"மாலையில் 5 மணிக்கு மேல் உயிர்கடிகாரத்தில் கிட்னிக்கான நேரம் இந்த நேரத்தில் தேகப் பயிற்சி செய்தால் கிட்னியின் வேலைப்பளு கொஞ்சம் குறையும்........மேலும் உடற்பயிற்சியின் களைப்பு தீர இரவில் ஓய்வெடுக்க முடியும்......இதனால்தான் பாரதி கூட "காலையில் படிப்பு ......மாலை முழுவதும் விளையாட்டு" என்கிறான்."


"பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை நேரம் மனத்தை படிக்கக் கூடிய நேரம்.......ஞானத்தேடலுக்கான நேரம்....அதனால்தான் ஜீசஸ், "அதிகாலையில் தேடுகிறவன் கண்டடையப்படுவான்" என்கிறார். சித்தர் சிவவாக்கியர், மூலமாம் குளத்தினுள்ளே முளைத்தெழுந்த கோரையைக் காலையில் எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பேரில் பாலனாகி வாழலாம், பரப்பிரமம் ஆகலாம் ஆலம்உண்ட கண்டர் ஆணை அம்மைபாதம் உண்மையே" என்கிறார்.
"சாயங்காலம்.......நேரங் கிடைக்காதே சிவா"


"பரவாயில்ல.....ஆனால் இவ்வளவு அதி காலையில் வாக்கிங் வேண்டாம்.......அதுவும் அதிகமா செடி கொடிகள் இருக்கிற இந்த மாதிரி இடத்துல வேண்டாம்"
 “செடி கொடி இருக்கிற ஏரியாவிலதான் நிறைய ஓஸோன் கிடைக்கும்”
 “தப்பு”
 “என்ன தப்பு?”
 “செடி கொடியிலர்ந்து வர்ரது ஓஸோன் இல்லை. அது ஆக்ஸிஜன்”
 “சரி அப்படியே இருக்கட்டும். அது நல்லதுதானே?”
 “செடி கொடிகள் சூரிய வெளிச்சம் வந்த பிறகுதான் ஆக்ஸிஜன் வெளியிட ஆரம்பிக்கும். ஃபோட்டோஸிந்தஸிஸின் கழிவுதான் ஆக்ஸிஜன். இந்த அஞ்சரை மணி காலைல தாவரங்கள் ஆக்சிஜன் வெளியிட சான்ஸே கிடையாது”
 “சரி, அதிகாலைல ஓஸோன் ரிச்சா இருக்கும்ன்னு சொல்றாங்களே, அது கரெக்ட்தானே?”
 “ஓஸோன் எப்பவுமே இருக்கு. அதிகாலைல அது டிஸிண்டக்ரேட் ஆகி பழையபடி ஆக்ஸிஜனா மாறும்”
 “புரியல்லை”
 “ஓஸோன்ங்கிறது மூணு ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்த ஒரு அன்ஸ்டேபிள் காம்பவுண்ட். சூரிய ஒளியில இருக்கிற அல்ட்ரா வயலட் ரேய்ஸ் வெளியில இருக்கிற ஆக்ஸிஜனை இரண்டிரண்டு ஆக்ஸிஜன் அணுக்களாகப் பிரிக்குது. இப்படிப் பிரிக்கப்பட்ட அணுக்கள் அன்ஸ்டேபிளாவும், ரியாக்‌ஷணுக்கு அஃப்ஃபினிட்டியோடவும் இருக்கிறதால ஆக்ஸிஜன் மாலிக்யூல்களோட இணைஞ்சி ஒரு அன்ஸ்டேபிள் காம்பவுண்ட் உருவாகுது. அதுதான் ஓஸோன். அல்ட்ர வயலட் ஃபில்ட்டரா இது செயல்படுது”
 “நமக்கு சுவாசிக்கவும் நிறைய ஆக்ஸிஜன் கிடைக்குமில்லே?”
 “இல்லை, அதிகாலைல டிஸிண்டக்ரேட் ஆகி பழையபடி ஆக்ஸிஜனா மாறிகிட்டு இருக்கும். அப்படி டிஸிண்டக்ரேட் ஆகிற ஓஸோனை சுவாசிச்சா உடம்பின் சுவாச அமைப்பு பாதிக்கப்படுது. ஆஸ்த்மா மாதிரி வியாதிகள் ஏற்படலாம்”
 “ஓஸோன் நல்லதில்லைங்கிறீங்களா”
 “சுவாசிக்கக் கூடாதுங்கிறேன்”
"வெரிகுட்..சிவா.....நேரமாயிடுச்சி..... வீட்டிற்கு வாரேன் நிறைய பேசலாம்.


"வணக்கம்"

ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள்

சித்த புருஷர்களின் வாழ்வில் அவர்கள் நடத்திக் கட்டும் அற்புதங்கள் ஏராளம்....அவற்றிலெல்லாம் முதன்மையானது.....சமாதியடைந்தபின்பும் மீண்டெழுந்து பிறிதொரு இடத்திலோ,பிறிதொரு உடலிலோ தோன்றி தனது சீடர்களுக்கு யோகபாடத்தையும், ஞானபாடத்தையும் கற்றுத்தருவது.......இது நவீன விஞ்ஞானத்தால் புரிந்து கொள்ளமுடியாத சூக்கும விஞ்ஞானம்.. இவர்களது நோக்கம் சித்தாட வேண்டும் என்பதல்ல!!!! தனது மேம்பட்ட சீடனுக்கு இப்படி ஒரு விஞ்ஞானம் இருக்கிறது என்பதை உணர்த்தவே.....இதோ ஒரு சித்த யோகியின் வாழ்வைப் பார்ப்போம்.......





ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் மதுரை மீனாட்சியின் அருந்தவப்புதல்வர். 1627ல் மதுரையை அடுத்த சமயநல்லூரில் அண்ணாஸ்வாமி சர்மா, திரிபுரசுந்தரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைச் செல்வம் இல்லை. இருவரும் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தனர். திரிபுர சுந்தரி மனமுருகி பிரார்த்தித்தார். அம்மா, மீனாட்சி ! கிளி ஏந்திய காரிகையே ! எங்களுக்கு குழந்தை பிறந்தால், அதை நாங்கள் கூட வளர்க்க பிரியப்படவில்லையம்மா ! நீயே வைத்துக் கொள். குழந்தை பிறந்ததும், உன் பாதத்தில் விட்டு விடுகிறோம். நீயே அந்தக் குழந்தைக்கு தாயாக இரு, என கண்ணீர் விட்டு மனமுருகி வேண்டினார். ஒன்றுக்கு இரண்டாக இரட்டை குழந்தைகளைக் கொடுத்தாள். பாதங்களில் சங்கு சக்கரங்களுடன் பிறந்த மூத்த குழந்தையை தாங்கள் வேண்டியபடி அன்னை மீனாட்சியிடம் ஒப்படைத்தனர் அந்த தம்பதியர். ஒரு குழந்தையை தாங்கள் வளர்த்தனர்.  கோயிலில் வளர்ந்த குழந்தையை குழந்தைசாமி என பக்தர்கள் அழைத்தனர்.

குழந்தைசாமியின் 16ம் வயதில் அவரது தந்தையும் தாயும் இயற்கை எய்தினர். இதன்பின் வட திசை நோக்கி பயணமானார் குழந்தை சுவாமி. காசி சென்று அங்கே திரைலிங்க ஸ்வாமிகள் என்ற பெயருடன் கடுமையாக தவம் செய்து நிர்விகல்ப சமாதியில் 150 ஆண்டு காலம் காசிநிவாசியாக அருள் பாலித்தார். பின் கங்கை கரையில் சமுத்திரகூடம் என்னுமிடத்தில் உள்ள குகையில் நீண்ட காலம் தவமிருந்தார். (இந்த குகையைத்தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கண்டு பிடித்து இந்த இடத்தில் தவம் இருந்து விஜய யாத்திரையை ஆரம்பித்தார்.) பிறகு கைலாய மலையிலும், மகாமேரு சிகரத்திலும் அமர்ந்து அருள்பாலித்தார். மானஸரோவர், கங்கோத்ரி, அமர்நாத், கேதார்நாத் ஸ்தலங்களில் நிர்விகல்ப சமாதியில் நீண்ட நாட்கள் இருந்திருக்கிறார். கஜானந்தேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன் இமாலயத்திலுள்ள ஆதிசங்கர பீடத்தை அலங்கரித்தார். நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தென் தேசத்திற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள்பாலித்துள்ளார். மதுரையை அடுத்த சித்தாலங்குடி என்ற கிராமத்தில் குழந்தை சித்தராய் தங்கி, பல சித்துகள் செய்து சமாதி அடைந்து மீண்டும் வெளியே வந்து வேறொரு இடத்தில் தோன்றியருளினார். சித்தாலங்குடியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 4,5,6 தேதிகளில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில், கதிர்வேலப்பர் என்ற திருநாமத்துடன் சமாதியடைந்து அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் குருபூஜை கொண்டாடப்படுகிறது. இதன்பிறகு காசியில் அவதரித்த ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்சர் நேரில் தரிசித்து, இவர் தான் உண்மையான பரமஹம்சம் என போற்றி புகழ்ந்தார். குழந்தையானந்தர் காசியில் தங்கியிருந்த காலத்தில் விஸ்வநாதர் கோயிலையும், காலபைரவர் கோயிலையும் சிறப்பாக பராமரித்தார். 1887ல் காசியில் தன்னை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விடுமாறு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டு, அப்பெட்டியுடன் தென்னகத்தில் திருவண்ணாமலை, சுருளி ஆகிய இடங்களில் தோன்றி பக்தர்களுக்கு நீண்ட காலம் அருள்பாலித்தார். 1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலக்குண்டு சென்றார். அங்கு தனக்கு தன் சீடர் மூலம் ஒரு கோயிலை நிர்மாணித்தார். அதேபோல் மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சமாதி அடைந்தார். தான் சமாதி ஆகும் போது வழக்கமாக செய்யகூடிய சடங்குகள் ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறிய சுவாமிகள், அங்கிருந்து வத்தலக்குண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் எழுந்தருளினார். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.

Saturday, April 7, 2012

கேள்வியின் பிறப்பிடம்


சாரிபுத்தர் என்பவர் ஞானம் பெறப் புத்தரைத் தேடி வந்தார்.

புத்தர் சொன்னார்.., ''உன் மனதில் ஏராளமான கேள்விகள்..., எண்ணற்ற சந்தேகங்கள்..., உன் மனம் அலை பாய்கிறது.. நீ என்னுடன் இரு, ஒரு வருடம் எதுவும் பேசாது மெளனமாக இரு.., அடுத்த ஆண்டு உன் கேள்விகளுக்கு நான் தெளிவான பதில் சொல்வேன்..!''


சாரிபுத்தர் மெளனமானார். அன்று முதல் ஏதும் பேசுவதேயில்லை. ஓராண்டு கழிந்தது..! ''சாரிபுத்தா..! உன் கேள்விகளைக் கேள்,'' என்றார் புத்தர்..! ''கேட்க ஏதுமில்லை..!'' என்றார் சாரிபுத்தர். ஆம்.. அவர் ஞானம் பெற்றுவிட்டார்.


(மனமே கேள்வியின் பிறப்பிடம்.. பதிலும் அங்கேதான் இருக்கிறது..மெளனத்தின் கதவுகள் திறக்கும் போது.. அங்கு நிறைந்த ஆரவாரங்களும் ஐயங்களும்.. மறைந்து விடுகின்றன..!)

Thursday, April 5, 2012

பழைய சாதம்

அருவி நீர் பித்தம் போக்கும்..
ஆற்று நீர் வாதம் போக்கும்....
கிணற்று நீர் கபம் போக்கும்...
பழைய நீரமுது திரி தோஷத்தையும் போக்கும்.......தேரையர்

Wednesday, April 4, 2012

மனமது செம்மையானால்........













மிஸ்டர் பரந்தாமன், உங்களுக்குத் தலைச் சுற்றல் வருதுன்னு சொன்னீங்க கவலையே படாதீங்க, நான் பாத்துக்கறேன், காரணத்தைக் கண்டு பிடிச்சிடறேன். என்னோட 20 வருஷ அனுபவத்திலே எவ்ளோ பேரைக் குணப்படுத்தி இருக்கேன். சரி இப்போ நான் கேக்கற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க. காரணத்தைக் கண்டு பிடிச்சிடலாம். தலைச்சுத்தல் ஓடிப்போயிடும். பொதுவா காதிலே எல்லாருக்கும் ஒரு திரவம் இருக்கு, அது குறைந்தாலோ, பாதிக்கப்பட்டாலோ தலைச்சுற்றல் வரும். அதுனாலேதான் சின்ன வயசிலே தட்டாமாலை சுற்றிட்டு நின்னா தலை சுத்தும்.


நான் அதைச் செக் பண்ணிட்டேன் இந்தாங்க இதைப் பாருங்க, அது மாதிரி எனக்கு எதுவுமில்லே.


சரி, உங்களுக்கு ரத்த அழுத்தமும் இல்லே. சரி, பித்தம் அதிகமானா தலைச்சுற்றல் வரும், பித்தம் அதிகரிக்கும் ஏதாவது உணவுப் பொருள் அதிகமா சாப்டீங்களா?


இல்லே சார், நான் காலையிலே எழுந்தவுடனே ஓட்ஸ் கஞ்சி சாப்புடுவேன், மதியம் கீரை, காய்கறிகள் அதிகமா சாப்டுட்டு, அரிசி சாதம் கொஞ்சமா சாப்பிடுவேன். அப்புறம் இரவு ரெண்டு சப்பாத்தி ஒரு கப் பால் அவ்ளோதான்.
காப்பி அதிகமாக் குடிக்கறீங்களா?
காப்பியே குடிக்க மாட்டேன் 


ஆல்கஹால் சாப்புடுவீங்களா?
வழக்கமே இல்லே டாக்டர்
சிகரெட் பிடிப்பீங்களா?
யாராவது சிகரெட் பிடிச்சா, அந்த இடத்தை விட்டே போயிடுவேன்.
சரி, நான் எடுக்கச் சொன்ன எக்ஸ்ரே எடுத்தீங்களா?
எடுத்துட்டேன், இதோ பாருங்க.
கழுத்துலே இருக்கற எலும்பு தேஞ்சு போனா, அந்த எலும்புக்கு நடுவில ரத்தக் குழாய் மாட்டிண்டா மூளைக்கு ரத்தம் ஒழுங்கா போகாது. அதுனாலேயும் வரும், இந்த எக்ஸ்ரேவிலே, ஸ்கேன் ரெண்டும் பாத்துட்டேன் அப்பிடி எதுவும் இல்லே, எலும்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு. பொதுவா உடம்பிலே சர்க்கரை அதிகமானா தலைச்சுற்றல் வரும்.
இதோ பாருங்க நேத்து எடுத்த சர்க்கரைப் பரிசோதனை ரிசல்ட்.
அட! உங்களுக்குச் சர்க்கரை கட்டுக்குள்ளதான் இருக்கு. ஆமா கொழுப்பு செக் பண்ணீங்களா?
இதோ இந்த ரிசல்ட்டைப் பாருங்க
இல்லையே கொழுப்பும் சரியான அளவுதான் இருக்கு. அப்பிடீன்னா ஒரே ஒரு காரணம்தான் இருக்கும். உங்களுக்கு உடம்பிலே ஒரு வியாதியும் இல்லே.. பிறகு உங்களுக்கு எப்பிடித் தலைச்சுற்றல் வருது?
என்ன டாக்டர் என்னையே கேக்கறீங்க?. டாக்டர், காலையிலே 5 மணிக்கு எழுந்துடுவேன். பல் தேச்சிட்டு ஒரு சொம்பு நல்ல தண்ணீ குடிப்பேன், அப்பிடியே நிதானமா வாக்கிங் போயிட்டு வீட்டுக்கு வந்து கால் மணிநேரம் தியானம், அப்புறம் ஓட்ஸ் கஞ்சியைக் குடிப்பேன். இதான் என்னோட வழக்கமான நடைமுறை. வாரத்திலே ஒரு நாள் வேப்பம்பூ ரசம், ஒரு நாள் மிளகு ரசம், ஒருநாள் எலுமிச்சை ரசம், அதே மாதிரி சுக்கு மிளகுப் பொடி செஞ்சு அதைச் சுடு சாதத்திலே போட்டு நல்ல எண்ணை கொஞ்சமாக் காச்சி ஊத்திப்பிசைஞ்சு சாப்பிடுவேன். சளி ஜுரம் மாதிரி இருந்தா சுக்குக் கஷாயம், நெலவேம்புக் கஷாயம். அப்புறம் நல்லா வாஷ் பண்ண வாழை இலையிலேதான் சாப்பாடு சாப்டறேன். பூண்டுக் கொழம்பு சாப்புடுவேன். தேங்கா கூடிய வரையிலே சேக்கறதில்லே. உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு இது மாதிரிக் கிழங்கு வகையெல்லாம் விட்டுப் பத்து வருஷம் ஆச்சு. எண்ணெயிலே பொறிச்ச எதையும் சாப்படறதில்லே,
திடீரென்று மருத்துவர் கீழே சாய்கிறார். அங்கே வந்த நர்ஸ் அவரைத் தாங்கிப் பிடிக்கிறார். என்ன ஆச்சு டாக்டர்?
தலை சுத்துதும்மா...........

மனமது செம்மையானால் மருத்துவமும் தேவையில்லை.....

Tuesday, April 3, 2012

தேன்சிட்டு....

"இன்னைக்கு செம வெயில்னு" சொல்லிக்கிட்டே வீட்டுக்குள் நுழைந்தாள் வேலைக்காரி செல்வி.........


"அம்மா...... வாட்டர் டேங் நிறைஞ்சு தண்ணி வெளிய போகுது ......எங்க இருக்கீங்க"..... கத்தினாள்...


"அய்யய்யோ.....வேலையில கவனமா இருந்ததுல மோட்டர ஆப் செய்ய மறந்துட்டேன் செல்வி .... மோட்டர் சுவிச்ச ஆப் பண்ணிடுமா "...


..........சொன்னவங்க ஜான்சியம்மாள் 


செல்வி முனகிக்கொண்டே மோட்டர் ரூமுக்குள் போனாள்,,


இப்போ போடற வெங்காய வத்தல் ஒரு வருசத்துக்கு வருமுன்னு... சொல்லிகிட்டே மாடியிலிருந்து ஜான்சியம்மா இறங்கி வந்தாங்க..


இந்த வருடம் வெயில் அதிகம்னு தொலைக்காட்சியில் அறிவிப்புச் செய்து கொண்டிருந்தார்கள் ,


எங்கு நோக்கினும் பவர் கட் பற்றியே பேச்சு ....


ஆனால் எங்களுக்கு எந்த கவலையுமில்ல ,
நாங்க ஜான்சியம்மா வீட்டுக்கு வந்ததிலிருந்து , நோ பவர் கட் ...


அந்த பிரச்னையை டிவி செய்தியில மட்டுந்தான் கேட்போம் 


ஜான்சியம்மா வீடு சூப்பரா இருக்கும் .
நிறைய பூச்செடிகள் ,பெரிய மரங்கள்னு வீட்டை சுற்றி
ரொம்ப அழகா இருக்கும் ...


வீட்டை ரொம்ப..சுத்தமா வைத்திருப்பாங்க ஜான்சியம்மா


நாங்க கொஞ்சம் அப்படி இப்படின்னு ,இருந்தா கூட 
செல்விய விட்டுச் சரி செய்யச் சொல்வாங்க..


எங்களை ஏதும் சொல்ல மாட்டாங்க ... 


ஆனால் இதுக்கு முன்னாடி நாங்க இருந்த வீடு
ஒண்டிக் குடித்தனம்...நிறைய பிரச்சனைகள் ..நகரத்தில
இருந்தோம் ,அங்கக் காத்துக் கூடச் சரியா வராது ...


நாங்க இருந்த வீட்டுக்கு மாடில செல் போன் கோபுரம்
போடுவதற்கு வந்தாங்க...எங்களைக் காலி செய்ய 
சொல்லிட்டாங்க ..... கஷ்டத்தில ,ஆளாளுக்கு ஒரு
மூலையில இருந்தோம் ...............


கிராமத்துல இருந்து ஒரு மாமா எங்க வீட்டுக்கு வந்தாங்க, இப்படி நகரத்தில
இருந்து என்னத்தை கண்டீங்க....




என்னோட பேச்சைக் கேளு "தம்பி னு எங்க அப்பா கிட்ட
பேசி ,எங்களை அவர் இருக்கிற கிராமத்துக்குக் கூட்டிட்டு
வந்திட்டாங்க ..


அழகான கிராமம்,அமைதியான ஊர் .. மேலகரம்.....அதிலும் 
நாங்க இருக்கிற ஜான்சியம்மா வீடு நினச்சாலே ரொம்ப 
சந்தோசமா இருக்கு ..




கதவைத் திறக்கிற சத்தம் , ஜான்சியம்மாதான் வர்றாங்க ..






"கண்ணு சீக்கிரமா வா.... சாப்பிடு ..நான் 
திரும்பப் போயிட்டுச் சீக்கிரமா வரேன்....
இல்லேன்னா ஜான்சியம்மா "சாமிக்கு பூ"பறிச்சிட்டு 
போய்டுவாங்க ....அப்புறமா உனக்குப் பிடிச்சத் தேன் கிடைக்காதுடா"
என்றாள் ,என் அம்மா கீச் கீச்...எனும் .........கொஞ்சு மொழியில் ...


அவ எப்பவுமே இப்படித்தான் காலையிலேயே இரைதேடக் கிளம்பி விடுவாள் !!!!!!!




அட என்ன பாக்கறீங்க ...இந்தப் பசுமை மாறா
கிராமத்தில் சிறகடிக்கின்றோம் ..
இன்னும் இருகின்றோம் .கீச் கீச் கீச்...


இங்கு வாழும் மக்கள் இங்கிருக்கும் எங்களை 
போன்றவர்களுக்காக "செல் கோபுரத்தை"
தவிர்த்ததால் இன்னும் இருக்கிறோம் .."நாங்க தேன்சிட்டுக் குருவிகள்தான் " 
வாங்க எங்களையும் கணக்கெடுங்க ....கீச் கீச் ...