Total Pageviews

Saturday, April 21, 2012

காலை முழுவதும் படிப்பு மாலை முழுவதும் விளையாட்டு


சித்திரை வருடப்பிறப்பு ,ரொம்ப அதிகாலை.
குற்றாலம் ரோடில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.
 “என்ன சிவா, இவ்வளவு காலைல? கோவிலுக்கா?”
"இல்லைங்கையா, தென்காசி கோவிலுக்குள் இருக்கிற சித்தர்பீடத்துல இன்னைக்கி குருபூஜை.....காசிமேஜர்புரத்துல ஒருத்தர்கிட்ட செண்பகப்பூ சொல்லியிருந்தேன்....வாங்கிட்டு போகலாம்னு......"
"ஓ...செண்பகப்பூவில் அப்படி என்ன விஷேசம். "
"விஷேசதுக்காக இல்லை.... இது நம்ம பக்கத்துல கிடைக்கிற ஒரு அபூர்வமான பூ அவ்வளவுதான் . ஆனா நீங்க சொன்ன பிறகு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது, ஒவ்வொரு மலருக்கும் ஒரு விஷேச குணம் உண்டு. மருத்துவ குணமில்லாத மலரே கிடையாது என்பது எனது குருமார்களிடமிருந்து கற்றுகொண்ட செய்தி. இந்த செண்பக மலரின் வாசனை, ரத்த ஓட்டத்தை வேகமாக்குமுனு சொல்வாங்க......அதுசரி....இந்த நேரத்துல நீங்க எங்க போறீங்க???
 “பாத்தாத் தெரியல்லையா? மார்னிங் வாக்குக்காக வந்தேன்”
அப்போதுதான் பார்த்தேன். பந்தாவாக ஒரு டிராக் சூட்டும் டீ ஷர்ட்டும் போட்டிருந்தார். சட்டைப் பையில் மொபைல். காதில் இயர் ஃபோன்.
 “டிரஸ்ஸு பொருத்தமாத்தான் இருக்கு. ஆனா நீங்க நடக்கிற ஸ்பீடு.........இந்த வயசுல இந்த ஸ்பீடு வேண்டாமே!!!"
"என்ன சிவா எனக்கு வயசாயிருச்சுன்னா சொல்றீங்க?"
 “நீங்க அப்பமே பெரிய வெயிட் லிப்டருன்னு அப்பா சொல்லி கேள்வி பட்டிருக்கேன்....அதுக்காக, கார்ட்டுல ப்ராப்ளத்த வச்சுகிட்டு இவ்வளவு ஸ்பீட் வேண்டாமேன்னு தான் சொன்னேன்." ”

 “மெல்ல நடந்தா பிரயோஜனம் இருக்காது சிவா?”
 “உண்மைதான். வாக்கிங்கோட தாத்பர்யமே உடம்பில இருக்கிற சர்க்கரையையும், கொலஸ்ட்ராலையும் பர்ன் பண்றதுதான். ஆனா அதுக்காக இவ்வளவு ஸ்பீட் இந்த வயசுல வேண்டாமே."
"உண்மைதான்.....ஸ்பீடா நடந்து பழகிட்டேன்....குறைச்சுக்கிறேன்"
 “கேக்கணும்ன்னு நினைச்சேன். இப்பல்லாம் வாக்கிங் போறவங்க காதுல ஈயற் போன மாட்டிக்குறாங்க.....”
 “மத்தவங்க எப்படியோ, நான் காலைல நல்ல இசை கேட்டுக்கிட்டுத்தான் நடப்பேன்.......இது தப்பு தானா?”
"நீங்க பெரியவங்க.....உங்களுக்குத் தெரியாதது இருக்காது......இருந்தாலும் நம்ம யோக நூல்களெல்லாம் சுவாசத்தை கவனிச்சுக்கிட்டே நடந்தா உடல் ஆரோக்கியத்தோட உள்ள ஆரோக்கியமும் அதிகப்படும்னு சொல்லுது...அதுபோல மாலையில் வாக்கிங் போறதுதான் நல்லதுன்னு சொல்லுது!!!!!
"என்ன காரணம் சிவா?"
நம்ம உடம்புல ஒரு உயிர்கடிகாரம் செயல்பட்டுகிட்டு இருக்கு ...ஒவ்வொரு ரெண்டு மணி நேரத்துக்கும் ஒரு குறிப்பிட்ட உள்உறுப்புல பிராண சக்தி செயல்படுறத நம்ம யோகிகள் அப்பவே கண்டுபிடிச்சிருக்காங்க.....அதன்படி அதிகாலை நேரம் நுரையீரலுக்கான நேரம். இந்த நேரத்துல சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளைத்தான் செய்யணும்.......சுவாச பந்தனம் செய்யாமல், சுவாசத்தை செலவழிக்கும் தேகப் பயிற்சிகளைச் செய்தால் மூலப்பிராண சக்தி குறைஞ்சிடும்......"


"ஓ.....அப்படியா?.......அப்ப வாக்கிங் எப்பதான் போறது?"


"மாலையில் 5 மணிக்கு மேல் உயிர்கடிகாரத்தில் கிட்னிக்கான நேரம் இந்த நேரத்தில் தேகப் பயிற்சி செய்தால் கிட்னியின் வேலைப்பளு கொஞ்சம் குறையும்........மேலும் உடற்பயிற்சியின் களைப்பு தீர இரவில் ஓய்வெடுக்க முடியும்......இதனால்தான் பாரதி கூட "காலையில் படிப்பு ......மாலை முழுவதும் விளையாட்டு" என்கிறான்."


"பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை நேரம் மனத்தை படிக்கக் கூடிய நேரம்.......ஞானத்தேடலுக்கான நேரம்....அதனால்தான் ஜீசஸ், "அதிகாலையில் தேடுகிறவன் கண்டடையப்படுவான்" என்கிறார். சித்தர் சிவவாக்கியர், மூலமாம் குளத்தினுள்ளே முளைத்தெழுந்த கோரையைக் காலையில் எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பேரில் பாலனாகி வாழலாம், பரப்பிரமம் ஆகலாம் ஆலம்உண்ட கண்டர் ஆணை அம்மைபாதம் உண்மையே" என்கிறார்.
"சாயங்காலம்.......நேரங் கிடைக்காதே சிவா"


"பரவாயில்ல.....ஆனால் இவ்வளவு அதி காலையில் வாக்கிங் வேண்டாம்.......அதுவும் அதிகமா செடி கொடிகள் இருக்கிற இந்த மாதிரி இடத்துல வேண்டாம்"
 “செடி கொடி இருக்கிற ஏரியாவிலதான் நிறைய ஓஸோன் கிடைக்கும்”
 “தப்பு”
 “என்ன தப்பு?”
 “செடி கொடியிலர்ந்து வர்ரது ஓஸோன் இல்லை. அது ஆக்ஸிஜன்”
 “சரி அப்படியே இருக்கட்டும். அது நல்லதுதானே?”
 “செடி கொடிகள் சூரிய வெளிச்சம் வந்த பிறகுதான் ஆக்ஸிஜன் வெளியிட ஆரம்பிக்கும். ஃபோட்டோஸிந்தஸிஸின் கழிவுதான் ஆக்ஸிஜன். இந்த அஞ்சரை மணி காலைல தாவரங்கள் ஆக்சிஜன் வெளியிட சான்ஸே கிடையாது”
 “சரி, அதிகாலைல ஓஸோன் ரிச்சா இருக்கும்ன்னு சொல்றாங்களே, அது கரெக்ட்தானே?”
 “ஓஸோன் எப்பவுமே இருக்கு. அதிகாலைல அது டிஸிண்டக்ரேட் ஆகி பழையபடி ஆக்ஸிஜனா மாறும்”
 “புரியல்லை”
 “ஓஸோன்ங்கிறது மூணு ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்த ஒரு அன்ஸ்டேபிள் காம்பவுண்ட். சூரிய ஒளியில இருக்கிற அல்ட்ரா வயலட் ரேய்ஸ் வெளியில இருக்கிற ஆக்ஸிஜனை இரண்டிரண்டு ஆக்ஸிஜன் அணுக்களாகப் பிரிக்குது. இப்படிப் பிரிக்கப்பட்ட அணுக்கள் அன்ஸ்டேபிளாவும், ரியாக்‌ஷணுக்கு அஃப்ஃபினிட்டியோடவும் இருக்கிறதால ஆக்ஸிஜன் மாலிக்யூல்களோட இணைஞ்சி ஒரு அன்ஸ்டேபிள் காம்பவுண்ட் உருவாகுது. அதுதான் ஓஸோன். அல்ட்ர வயலட் ஃபில்ட்டரா இது செயல்படுது”
 “நமக்கு சுவாசிக்கவும் நிறைய ஆக்ஸிஜன் கிடைக்குமில்லே?”
 “இல்லை, அதிகாலைல டிஸிண்டக்ரேட் ஆகி பழையபடி ஆக்ஸிஜனா மாறிகிட்டு இருக்கும். அப்படி டிஸிண்டக்ரேட் ஆகிற ஓஸோனை சுவாசிச்சா உடம்பின் சுவாச அமைப்பு பாதிக்கப்படுது. ஆஸ்த்மா மாதிரி வியாதிகள் ஏற்படலாம்”
 “ஓஸோன் நல்லதில்லைங்கிறீங்களா”
 “சுவாசிக்கக் கூடாதுங்கிறேன்”
"வெரிகுட்..சிவா.....நேரமாயிடுச்சி..... வீட்டிற்கு வாரேன் நிறைய பேசலாம்.


"வணக்கம்"

No comments:

Post a Comment