Total Pageviews

Monday, January 17, 2011

உன்னையே நீ அறிவாய்




கி.மு.469 ல் கிரேக்க நாட்டில் ஓர் ஏழைச் சிற்பியின் மகனாகப் பிறந்தவர் சாக்ரட்டீஸ்.
 "நீ யார்?, எதற்காக வந்திருக்கிறாய்? என்ன செய்யப்போகிறாய்? என்பதை முதலில் தெளிவாக அறிந்துகொள், பின், அதன்படி நட!" என்றார் அவருடைய அப்பா. தனது நாற்பதாவது வயதுவரை ஒதுங்கி இருந்த சாக்ரட்டீஸ்அதன் பின்பு தன் எண்ணங்களை தைரியமாக, பேசத்தொடங்கினார்.


கடவுளை அவர் மறுக்கவில்லை, ஆனாலும் கடவுள் பெயரால் நடைபெறும் முட்டாள்தனங்களை எதிர்த்தார். உருண்டையான சப்பை மூக்கு , பிதுங்கி நின்ற கண்கள், குட்டையான உருவம், அசிங்கமான தோற்றம் இதுதான்
சாக் ரட்டீஸ்.ஆனாலும் அவர் பேச்சைக் கேட்க இளைஞர்கள் கூட்டமாக வந்தார்கள்.

எழுபதாவது வயதில் இளைஞர்களைக் கெடுக்கப் பார்க்கிறார் எனும்குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டது . "மன்னிப்பு கேட்டால் உயிர் பிழைக்கலாம் என நீதிபதிகள் சொன்ன போதும் "உயிரை விட என்னுடைய
கருத்துக்கள் உயர்ந்தவை" என்று உயிர்விட தயாரானார்.




மரணத்தேதி குறித்த அந்தக் குறிப்பிட்ட நாளும் வந்தது .


"நீங்கள் வாழ்வதற்கு தயாராகுங்கள் நான் விடை பெறுகிறேன்" என சுற்றி நின்ற, சீடர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு மகிழ்ச்சி குறையாமல் தனக்கான நஞ்சுக்கொப்பையை வாங்கிக் கொண்டார் சாக்ரட்டீஸ். " நஞ்சினை இப்பொழுதே குடிக்க வேண்டாம் சற்று நேரம் கழித்து குடிக்கலாம்" என சீடர்கள் சொல்ல 'காலம் தாழ்த்துவதால் நீங்கள் வீடு திரும்ப நேரமாகலாம் " எனக்கூறி விஷத்தை ஒரு சொட்டுக் கூட மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தார்.


"உங்கள் இறுதிச்சடங்கு எப்படி அமைய வேண்டும்," என சீடர்கள் கேட்டனர் .



"மரணத்துக்குப் பின் என்னை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது, என் உடலை என்ன செய்தாலும் எந்தப் பயனும் இல்லை" எனக்கூறி விடைபெற்றார் சாக்ரட்டீஸ்.




அந்த மாமனிதன் நமக்காக செய்த உபதேசம் என்ன தெரியுமா?




"உன்னையே நீ அறிவாய்"




"நண்பர்களே ! உண்மையான அறிவு என்ன தெரியுமா? தன்னை அறிவது தான்."

தன்னை அறிந்தால் மட்டுமே சுற்றி உள்ள உண்மைகளை உள்ளது உள்ளபடி அறிய முடியும். வாழ்வை வெல்லமுடியும்.







"தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே ."





                                                                         ஒம்தத் சத் 

2 comments:

gayathri said...

தன்னை அறியும் அறிவு என்பது எதை பற்றி அறிவது மாஸ்டர் ,தயவு செய்து விளக்கம் அளிக்கவும்

sm.sakthivel. said...

thannai ariyum arivu enpathu,than moolathai.uyirai ariyum arivagum.arive jothi.saint.VALLALAR.

Post a Comment