Total Pageviews

Sunday, January 9, 2011

சக்தி பிறக்குது மூச்சினிலே-கவிதை






கடந்து வந்த பாதை தனை 
பின்னோக்கிப் பார்கின்றேன்
காலத்தால் கிழித்து எறியப்பட்ட
காகிதக் குப்பைகளில்,
.கடந்த காலம்
என்னை சிலுவையில் ஏற்றியது
நிகழ் காலம்
எனது கல்லறை ஆகிவிட்டது
எதிர்காலம் புத்துயிர்ப் பிற்காய் போராடுகிறது .
பாதையில் முட்களைப் பரப்பி
பாதத்திற்கு பலமூட்டிய
என்னவர்களை"நான்" நேசிக்கிறேன்
நீங்கள் கற்று தந்தது பாடமல்ல
"பட்டறிவு "
தனியறையில் மாட்டிக் கொண்டால்
பூனையும் புலியாகிறது
குஞ்சுக்கு துன்பமென்றால்
கோழியும் பருந்தாகிறது
பாரதிக்கு மட்டுமல்ல
'எனக்கும்" சக்தி பிறக்குது
"மூச்சினிலே"

No comments:

Post a Comment