Total Pageviews

Wednesday, January 5, 2011

மதம் சிறை - மனிதம் இறை"

ரமண பகவான் நான் யார் என விசாரிக்கச் சொல்கிறார் ..அவருடைய "நான் யார் "விசாரம் பற்றி செங்கோட்டை வகுப்பில் விவாதித்துக் கொண்டிருந்தோம் . நான் யார் என்ற கேள்விக்கு ஒரு யதார்த்த மாணவரின் யதார்த்த பதில் "நான் மனிதன்" என்பதாக அமைந்தது .இந்த பதில் என்னை யோசிக்க வைத்தது . உடல் கடந்து, உள்ளம் கடந்து உணர வேண்டிய வஸ்துவை "மனிதன் என்ற ஒரு வார்த்தையால் முற்று பெற வைக்க முடியுமா?

ஒருமுறை திருவண்ணமலையில் சாமியை பார்க்க போயிருந்தேன் . சாமி என் கையில் ஒரு புத்தகத்தை கொடுத்தார் .

"என்ன இது"

"பகவத் கீதை"

"இதைப்பற்றி உனக்கு என்ன தெரியும்"

"கீதை பிராணனைப் பற்றிய பாடம்னு எனக்கு தோணுது, ஆனால் சிலர் இதை கர்மம்னும் , சிலர் ஞானம்னும் , சொல்றாங்க"

"நீ என்ன நினைக்கிற"

"............................."

"கீதையின் முதல் சுலோகம் என்ன?"

"தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே"

"கடைசி சுலோகம்"

"த்ருவா நீதிர் மதிர் மம"

"கடைசி சுலோகத்தின் கடைசி வார்த்தையையும் , முதல் சுலோகத்தின் முதல் வார்த்தையையும் இணைக்கும்போது கிடைப்பது "மம தர்ம" இதன் பொருள் "உனது உண்மையான தர்மம்".இதைத்தான் கீதை போதிக்கிறது "

"புரியல சாமீ'

"உன் தர்மம் என்ன?. நீ மனித வாழ்கை வாழவேண்டும் .... நீ மனிதப்பிறவிதான்: மகானுமல்ல, மிருகமும் அல்ல என்பதை அடிக்கடி ஞாபகப் படுத்திக்கொள்".

அதன் பிறகு யோசிக்க ஆரம்பித்தேன் . உலகில் சொல்லப்படுகிற மதங்கள் யாவும் இறுதியில் ஒரு புள்ளியில் தான் சங்கமமாகின்றன . அது "மனிதன்
மனிதனாக வாழவேண்டும்' என்ற புள்ளிதான். இன்றைய மனிதன், தான் ஒரு மனிதன் என்பதனை முதலில் உணர வேண்டியதிருக்கிறது .

ஒருமுறை தம்பி திரவியத்தின் கணணி மையத்தில் ஒரு வாசகம் பார்த்தேன் . அதை நினைவு கொண்டு இந்த கட்டுரையை முடிக்கலாம் என நினைக்கிறேன் 
."மதம் சிறை - மனிதம் இறை"
                                      
                                                          ஓம் சத் தத்

1 comment:

gayathri said...

மனிதன் மனிதனாய் வாழ்ந்தால் உலகில் என்றும் ஆனந்தமே.

Post a Comment