Total Pageviews

Thursday, January 20, 2011

ஜென் என்றால் என்ன?





ஜென் என்கிற சொல், சம்ஸ்கிருத சொல்லாகிய தியான் என்கிற சொல்லில் இருந்து வருகிறது.

கெளதமபுத்தர் தியானம் சொல்லித்தந்தார்.போதிதர்மா சீன நாட்டுக்கு தியானத்தை சொண்டு சேர்த்தார்.அது அங்கே சீயான் என்று ஆனது.

இந்த சீயான் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்ற போது ஜென் என்று ஆனது.ஜென் என்பது வேதங்கள் இல்லாத, விதிமுறைகள் இல்லாத,குறிப்பிட்ட பயிற்சிகள் இல்லாத ஒரு தன்மை. அது வரையறுக்கப்படாத பாதை. அது யோகாவிலிருந்து வேறுபட்டதல்ல அது தான் யோகா.



விவரிக்க முடியாத நிலையே ஜென் . பாதையும் , பயணமும், பயணத்தின் முடிவும் அதுவே . ஜென் ஒரு புரிந்து கொள்ளலே . அதையும் மீறி ஜென்னைவிமர்சிக்க முயற்சி செய்தால் அது ஜென்னை இழிவு படுத்தியதற்க்குச் சமம் ..............



ஜென் மார்க்கத்தில் ஹீயூட்டி என்று ஒருவர் இருந்தார். அவர் யாருக்கும் ஜென் போதித்ததில்லை .ஆனால் குருமாராக அறியப்பட்டார். எல்லோரும் அவரை குரு என்று மதித்தார்கள்.

ஆனால் அவர் எந்த போதனைகளையும் தந்ததில்லை. தோள்களில் ஒரு பெரிய பையை அவர் சுமந்து கொண்டு செல்வார்.அதில் பெரும்பான்மையானவை இனிப்புகளாக இருக்கும். அவர் போகிற ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் அவரை சூழ்ந்து கொள்ளுவர். அவர் இனிப்புகளை வினியோகிப்பார் பிறகு சென்றுவிடுவார். அவ்வளவு தான் .

மக்கள் அவரிடம் வந்து போத்னைகளை கேட்பார்கள். அவர் சிரித்து விட்டு சென்று விடுவார்....

இன்னொரு குரு என்பனின் என்பவர் மிகவும் புகழ்பெற்றவர். அவர் ஹீயூட்டியை சந்திக்க வருகிறார். அவர் ஹீயூட்டி உண்மையாகவே ஜென் மார்க்கத்தில் இருக்கிறாரா??? இல்லையா ?? என்பதை தெரிந்து கொள்ள வந்தார்.

அவரிடம் ஜென் என்றால் என்ன??? என்றார். உடனே ஹீயூட்டி கையிலிருந்த சாக்கை நழுவவிட்டு நேராக நின்றார். அவர் அடுத்து ஜென்னின் நோக்கம் என்னவென்றார்??? ஹீயூட்டி அந்த சாக்கை எடுத்து தன் தோள்களில் போட்டுக்கொண்டு நகர்ந்து விட்டார்.

இது தான் யோகா என்பது எனவே நீங்கள் யோகாவையோ ஜென்னையோ அடைய வேண்டும் என்று விரும்பினால் உங்களிடம் இருக்கிற சுமையை கீழே போட்டு விட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுதந்திரமாக நேராக நிற்கவேண்டும். இது தான் முக்கியம்.சில சமயம் சுமையோடும் அதை செய்ய முடியும். அது மிக மிக அரிது . லட்சத்தில் ஒருவரால் அது முடியும். எனவே சுமையை இறக்குங்கள்


ஜென் என்றால் என்ன?..” கேள்வி எழுந்தது ஒரு மாணவனிடமிருந்து.





துறவி அவனைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார், “யாரும் அதைத் தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்”





மாணவன் விடுவதாய் இல்லை “அப்படியனால் சுவாமி. ஜென் என்னதான் சொல்லுகிறது?”





“zen teaches nothing. ஜென் சொல்லித்தருவது எதுவுமில்லை”.





“அப்படியானால்…..” மாணவன் இழுத்தான்…





“சும்மாயிரு..” வெகு வேகமாய் குருவின் குரல்.





மாணவன் தெளிந்தான்.

4 comments:

Aravind S said...

Sir, ஜென் 'யோகாவிலிருந்து வேறுபட்டதல்ல அது தான் யோகா' என சொல்றீங்க. ஆனா யோகால விதி, பாதை எல்லாம் உண்டு அல்லவா? உதாரணம் பதஞ்ஜலி இன் ashtanga yoga.

போஹின்ற பாதை, சேரகூடிய இடம் எல்லாம் ஒன்றாக இருந்தாலும், முறை இருந்தால் - என்ன செய்ய லாம், என்ன செய்ய கூடாது நு தெரியும் தான?

சும்மாயிருன்துகுடே வேலை பண்ணுவது எப்படிநு இன்னும் புரியலயே சார். விதிஹல் இருக்குமோ?

Aravind S said...

In a different blog post (See Reference below), you had documented that the path taken or the rules followed should NOT be taken as the final destination. This explains my questions here. Thank You, sir.

Reference: http://yogashiva.blogspot.com/2011/01/blog-post_9260.html

Aravind S said...

சும்மா இருகிற வேற்றுஇடத்தில ஆனந்தம் ( Bliss ) எப்படி சாத்தியம்? அது வெற்றிடமா அல்ல ஆனந்தமா?

சும்மாயிருன்துகுடே வேலை பண்ணுவது எப்படிநு இன்னும் புரியலயே சார். Rules இருக்குமோ?

sm.sakthivel. said...

summa irukirathuthan kadinam sir.

Post a Comment