Total Pageviews

Friday, January 28, 2011

ஜோதிடம் உண்மையா?






மாஸ்டர், ஜோதிடம் உண்மையா? நம்பலாமா?.........by.கல்யாணி


விக்கிரமாத்திதனின் அரசவையில் ஒரு ஜோதிடர் இருந்தார் அவருடைய பெயர் "மிஹிரர்". ஜோதிட சாஸ்திரத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் இவரே. இவருக்கு "வராஹ மிஹிரர்"என இன்னொரு பெயர் வந்ததற்குக் காரணம் இருக்கிறது!

அரசன் விக்கிரமாதித்தனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது . ஜாதகம் கணித்த மிஹிரர், "இன்ன வருடம், இன்ன நாளில், இத்தனை நாழிகையில்,இந்தக் குழந்தைக்கு காட்டுப்பன்றியால் மரணம், ஏற்படும்" எனக்கூறுகிறார்.

"அப்படி நடக்காது, நடக்கவும் விடமாட்டேன் "என்கிறான் அரசன்.


மிஹிரரோ, "ஜோதிடக்கணிப்பு பொய்யாகாது"என்கிறார்.


அப்படி நடக்கவில்லை என்றால் மிஹிரரின் தலையைக்
கொய்து விடுவதாகக் கூறுகிறான் அரசன்.



வருடங்கள் கடந்தன.............



மிஹிரர் குறிப்பிட்ட நாளில் அந்தத் துயரச் சம்பவம் நடந்தேறவே செய்தது.


பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்ட அந்த அரண்மனையின் மொட்டை மாடியில், விளையாடிக்கொண்டிருந்த இளவரசனின் தலையில் உலோகத்தால் செய்யப்பட்டக் காட்டுப்பன்றியின் சிலை விழுந்ததில் இளவரசன் பலியானான்.

விக்கிரமாதித்தனது அரசுச் சின்னம் காட்டுப்பன்றி. அரசு சார்ந்த இடம் எதுவானாலும், காட்டுப்பன்றியின் சிலை வைப்பது வழக்கம். காட்டுப்பன்றியின் சிலை இளவரசனைக் கொல்லும் என யாரும்எதிர்பார்க்கவில்லை.

இந்த சம்பவத்தைச் சரியாகக் கணித்ததாலேயே மிஹிரருக்கு,"வராஹ மிஹிரர்"எனப் பெயர் வந்தது.

"இதைத் தவிர்த்திருக்க முடியாதா?" எனக் கேட்டஅரசனுக்கு , மிஹிரரின் பதில்
என்ன தெரியுமா?

"ஜோதிடர்களால், கணித்து சொல்ல முடியும். ஆனால் ஒரு நல்ல யோகியால்
நடக்க இருப்பதையும் மாற்ற முடியும்"

மனிதனின் சுவாசம் எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மையான, மகத்துவம் பொருந்திய ஒரு கலைதான் ஜோதிடக்கலை. இது நமது பாரதக் குருமார்களால், இந்த உலகத்திற்கு அளிக்கப்பட்ட அருட்கொடை.

நண்பர்களே! ஜோதிடமும், யோகமும், ஒரே மரத்தின் இரு கிளைகள். அதனால்தான் ஜோதிடம் பார்த்து "யோகத்தை" கூறுகிறார்கள். "சரம்பார்ப்பான், பரம்பார்ப்பான்" என்றொரு பழமொழி உண்டு. சரம் என்றால் மூச்சு, பரம் என்றால் மறைந்திருக்கும் இரகசியம் ,எனப்பொருள்..

மூச்சின் இரகசியத்தைத் தெரிந்தவனால் வாழ்க்கையில் மறைந்திருக்கும் இரகசியத்தையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

சூரியனையும், சந்திரனையும் அடிப்படையாக வைத்துதான் ஜோதிட சாஸ்திரம் வந்தது. சந்திரன் மனோகாரகன். சூரியன் ஆத்மகாரகன். சூரிய
குடும்பத்தில்,சந்திரன் தாய் என்றால் , சூரியன் தகப்பன்.

"ஹ" என்றால் சூரியன். "ட" என்றால் சந்திரன். சூரியனையும், சந்திரனையும் இணைப்பதுதான் "ஹட யோகம்"

"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது." என்பதற்கிணங்க நமது உடலில்,
சூரியன், சூரிய கலையாகவும், சந்திரன், சந்திர கலையாகவும்
பரிணமித்துள்ளது. இதனை உணர்ந்து கொண்டால் ஜோதிடம் எளிதாகிவிடும்.

அமாவாசை, பௌர்ணமிகளில், மனிதனுடைய மன நிலையில் மாற்றம் ஏற்படுவதை நவீன கால விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்கிறது.

ஜோதிடக்கலை, மறுக்கமுடியாத உண்மை!

ஆனால் நவீன காலச் சோதிடர்கள்........................?






"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர் இல்லை

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளருக்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே."



ஓம் தத் சத்

5 comments:

vijay said...

valuable words for me .thank you master

Aravind S said...

sir, ஜோதிடம் உண்மையாநாள் விதியும் உண்மை தானே? அப்படி என்றல் முயற்சிக்கு அர்த்தம் இல்லையா? விதிக்கும், முயற்சிக்கும் உள்ள relationship, balance பற்றி விலகினால் நல்ல இருக்கும் master.

gayathri said...

மாஸ்டர் ,மூச்சை புரிந்துகொண்டால் நமக்கு ஜோதிடம் தேவையில்லையா ?

Yoga Yuva Kendra said...

புரிந்து கொள்வதை விட, மூச்சை உணர்ந்தால் ஆருடமோ, ஜோதிடமா தேவையில்லை.

vijay said...

moochai matratherinthaal ,nammai sutri ulla suzhnilai maarum ,athu panchapoothangalilum ethirolikum ,'nam vaazhkai nam kaiyil' enpathai puriavaitha master-ku nanri

Post a Comment