Total Pageviews

Sunday, January 9, 2011

தியான ஆசை-கவிதை




தியானம் செய்வதற்கு மனம் திரிந்து பறக்குதடி 

தேடித் தேடிக் கடைசியாய்த் தெரிந்து கொள்ளுதடி

அந்தி அங்கு அமர ஆழ்ந்து கொள்ளுதடி

அதுவரையில் கதிரவனைச் சூழ்ந்து கொள்ளுதடி

தாமரைப் பூவோ மலர்ந்து கொள்ளுதடி

தன்னிலை மறந்து ஆசனம் கொள்ளுமடி

தண்டின் வளர்ச்சியிலே தலைதான் உயருதடி

தவழும் தென்றலங்கேப் பிரணயாமம் கற்றதடி

தேனீ மனம் சுற்றி சுற்றித் திறந்து கொள்ளுதடி

தீண்டும் கிளைகளோ முத்திரை கொள்ளுதடி

உள்வெளியில் உச்சிநீரில் உண்மைத் தெளியுமடி

உயிர் வளியில் மூச்சின் முடிவின் அச்சம் குறையுமடி

எந்த பொருளும் பரம் பொருளாய் மகரந்தம் விரியுமடி

இருக்கும் தாமரை அத்தனைக்கும் சேர்க்கை நடக்குமடி

காலைப் பொட்டில் காட்சி பட்டுத் தெரிக்குமடி

காணும் ஆன்ம குயிலோ பாட்டும் படிக்குமடி

ஆனந்தம் ஆனந்தம் என்று ஆசை மலருதடி

ஆறறிவு எழுத்தாய் என் கவிதை நிறையுமடி

No comments:

Post a Comment