Total Pageviews

Tuesday, January 11, 2011

அன்னம் போல் எண்ணம்

.


ராஜ பாளையம் வகுப்பிற்கு ரயிலில் பயணப்பட்டுக்
 கொண்டிருந்தேன்.வழக்கமாக ரயில் பயணத்தின் போது "சாதனை". செய்வதே எனது வழக்கம். அன்று வழக்கத்திற்கு மாறாக சிவானந்த பரமஹம்சரின் சித்தவேதம் எனது கையில்,  பாம்பு கோவில் சந்தை ரயில் நிலையத்தில் வண்டி நின்றது . ஒரு மனிதர் எனது அருகில் வந்தமர்ந்தார் . பரஸ்பரம் வணக்கங்களைப் பரிமாறிக்கொண்டோம். அவரது வணக்கமுறை அவர் சித்தவித்யார்த்தி சகோதரர் என்பதைத் தெளிவு படுத்தியது .மாதவானந்த சாமியின் சமாதிக்கு சென்றுவருவதாக தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

"நீங்க யோகா சிவா தானே"?

"......................."

''முன்பு ஒருமுறை உங்கள் பேச்சை கேட்டிருக்கிறேன்."

"......................"

'நீண்ட நாளாக உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசை, எனக்கு ஆறு வருடங்களாக சுகர் இருக்கிறது. நான்கு வருடங்களாக சித்த வித்தை செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் நோய் தீர்ந்த பாடில்லை"

இதற்கு மேல் என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. "அய்யா , சித்த வித்தை என்பது சாதாரண உடல் நோய் தீர்க்கும் மருந்தல்ல, மரணப்பிணி நீக்கக் கூடியது. சித்தவித்தை சாகாக்கலை.         மரணத்தையே வெல்லக்கூடிய வித்தை, உங்கள் உடல் நோயைக் குணமாக்காதா என்ன?.     என்னைப்பொருத்த வரையில் சுகர் என்பது உடல் நோயல்ல ! மனதில் வரக்கூடிய நோய்.  கட்டுப்பாடான சாப்பாடு , சரியான உடற்பயிற்சி என இருப்பவர்களுக்குக் கூடமனஅழுத்தம் வந்து விட்டால் சுகர் கூடுவதை நான் நேரிடையாகப் பார்த்து இருக்கிறேன். மனதை சரியாகப் பராமரித்துக் கொள்ளுங்கள், மனமடங்கும் வித்தைதான் சித்தவித்தை. தொடர்ந்து செய்து வாருங்கள் குணமாகும்.".
மறுபடியும் சித்தவேதத்தில் மூழ்கினேன்.


"சாப்பாட்டிற்கும், மனதிற்கும் சம்பந்தம் உண்டா ?.

"எல்லோரும் உண்டு என்றுதான் சொல்கிறார்கள்.  எனக்கும் அதில் உடன்பாடுண்டு. இருந்தாலும் ஆகார நியமத்தால் மட்டும்
மனம் அடங்கும் என சொல்லமுடியாது. மனமடங்க காற்றைச் சாப்பிடச் சொல்லி சிவானந்த சாமி சொல்றார். மனமடங்க சுவாஸப் பயிற்சி ஒரு நல்லவழி என்பது என்னுடைய அனுபவம். மூலர் கூட 'மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு. மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை.எனச் சொல்றார். யோக நூல்களும் இதைத்தான் சொல்கின்றன.

"அன்னம் போல் எண்ணம்" என்கிறார்களே?


"அன்னம் என்றால் சுவாசம் எனப்பொருள்.''அசனமாக இருக்கின்ற வாயு 'என்று முதன்முதலில் சொன்னவர் சிவானந்தசாமிதான். அன்னதானம் என்றால் காற்றைத் தானமாக கொடுப்பது என்பதை சாமி சித்தவேதத்தில் தெளிவுபடக் கூறி இருக்கிறார்.        ஒரு மனிதனுக்கு அவனுடைய சுவாசம் எப்படி இருக்கிறதோ அதன்படிதான் அவனுடைய எண்ணமும் இருக்கும் என்பதை "சலே வாதம் ,சலே சித்தம், நிச்சலம் நிச்சல பவதி."எனக் கூறுகிறார்
"பதஞ்சலி மகரிஷி."     ................................ராஜபாளையம் வந்துவிட்டது .
 ஆத்மநமஸ்காரங்களைப் பகிர்ந்து கொண்டு விடைபெற்றேன்..

.

No comments:

Post a Comment