Total Pageviews

Sunday, January 23, 2011

நடை கவனி வளி தெரியும்- விளக்கம்







நடை கவனி
வளி புரியும்
வளி கவனி
ஒளி தெரியும்
ஒளி கவனி
"நான்' அழியும்
சத்குருவே
'நான்" அழிய வரம் தா.

Sir I cannot understand. please explain. by Shankar

வணக்கம் சங்கர்,,

உங்களது மின்னஞ்சல் பார்த்தேன்.

நடை என்றால் மூச்சோட்டம் எனப்பொருள் . நமது மூச்சு நடந்து கொண்டிருக்கக்கூடிய ஸ்டைல். அதாவது நமது மூச்சோட்டம் ஒவ்வொரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் மாறுபடுகிறது. உதாரணமாக ,நாம் செல்லமாகக் கோபித்துக்கொள்ளும்போது உள்ள மூச்சோட்டத்திற்கும் , உண்மையிலேயே கோபித்துக்கொள்ளும்போது உள்ள மூச்சோட்டத்திற்கும் வேறுபாடு இருக்கிறது சங்கர். இரண்டு மூச்சோட்டமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.


நமக்கு பயம் வரும்போதோ , பாசம் அதிகமாகும்போதோ , பொறாமை கொள்ளும்போதோ , தோல்விகளைக்கண்டு துவண்டு விழும்போதோ, வெற்றியைக்கண்டு ஆனந்தப்படும்போதோ , இப்படி பல்வேறு உணர்ச்சி நிலைகளில், நமது மூச்சோட்டம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அந்தந்த உணர்ச்சிகளுக்கு தகுந்த மாதிரி கூடுதலாகவோ, குறைவாகவோ, ஆழமாகவோ,அல்லது ஆழமற்றதாகவோ தானே மூச்சோட்டம் நடைபெறுகிறது.,


இதைத் தெரிந்து கொண்டால் என்ன பயன் என்கிறீர்களா? பயன் இருக்கிறது சங்கர், உதாரணமாக பயம் வரும்போது கவனித்தால் இதயம் வேகமாகத்துடிக்கும். ஓடிவந்த மாதிரி சீக்கிரம் சீக்கிரமாக மூச்சு வரும். அந்த நேரத்தில் வேண்டுமென்றே மூச்சு ஓடும் ஸ்டைலை மாற்றினால் பயம் போய்விடும். பயம் வரும்போது ஒரு நாலைந்து மூச்சு நீளமாக இழுத்து விட்டால் பய உணர்வு குறைந்துவிடும்.


கோபத்தில் உள்ள மூச்சோட்டத்தை மாற்றி பக்தியில் உள்ள மூச்சோட்டம் மாதிரி, விட முயன்றால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கோபம் பக்தியாக
மாறிவிடும். பக்தியில் உள்ள மூச்சோட்டத்தை மாற்றி செக்ஸில் கொண்டுவந்தால் காமம்கூட புனித உறவாகிவிடும்!.(ஓஷோவிற்கு நன்றி)


அதாவது இந்த மூச்சோட்டத்தை வேண்டுமென்றே மாற்றுவதன் மூலம் உணர்ச்சிகளை மாற்ற முடியும். மூச்சை மாற்றுவதின் மூலம் ஒரு மனிதனுடைய குணத்தையே மாற்ற முடியும். சீர்திருத்தப் பள்ளிகளிலும், சிறைச்சாலைகளிலும் கொண்டுவரமுடியாத மாற்றத்தை மூச்சுப்பயிற்சி சாதித்துவிடும். அதனால்தான் நவீனகால குருமார்கள் கைதிகளுக்கெல்லாம் மூச்சுப்பயிற்சி கற்றுக்கொடுக்கிறார்கள்.


ஒரு மனிதனுடைய மூச்சோட்டம் 18 நிலைகளில்(style) நடக்கிறது. இதைத்தான் நடை என்கிறார்கள் யோகிகள். மன அமைதி பெற்றவனுடைய மூச்சோட்டம் எப்படி இருக்கும் என்பதை மட்டுமாவது தெரிந்துகொண்டு அதைப்போல நமது மூச்சோட்டத்தையும் ஒவ்வொரு நாளும் மாற்ற முயன்றாலே போதும். வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றி நம்மை வந்து சேரும். ஏனென்றால் மன
அமைதி பெறாதவன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.

அமைதியானவனுடைய மூச்சோட்டம் என்பது rythamic ஆன மூச்சோட்டம்தான். அதை எப்படி ஏற்படுத்துவது, அதற்கு நம்மை எப்படி தயார் செய்து கொள்வது எவ்வளவு நேரம் செய்வது என்பதெல்லாம் உங்கள் விருப்பத்தையும், உங்களது குருவின் கருணையையும் பொறுத்தது. மூச்சுப்பயிற்சியின் முக்கியத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே மூச்சைப் பற்றிய உண்மைகளை பதிவு செய்திருக்கிறேன்.

ஒரு குருவின் முன்னால் நாம் அமரும்போது நமக்கு அமைதி ஏற்படுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? அவருடைய மூச்சின் லயத்திற்கு நமது மூச்சோட்டமும் மாறியிருப்பதால்தான்.அதனால்தான் குருவின் சத்சங்கம் அடிக்கடி வேண்டும் என்று கூறுகிறார்கள். குருவின் அருகாமையில் இருந்திருந்து அந்த மூச்சோட்டம் நமக்கு பரிச்சயமாகிவிட்டால் நாளடைவில் குருவை நினைக்கும்போதெல்லாம் நமக்கு மூச்சில் அந்த லயம் ஏற்பட்டுவிடும். இதைத்தான் "தெளிவு குருவுரு சிந்த்திதல்தானே" என திருமூலர் கூறுகிறார்.

நடை என்றால் மூச்சோட்டம் எனப்புரிந்திருக்கும். "வளி" என்றால் காற்று. (வளிமண்டலம் என்று கூறுகிறோமே. ).

"ஒளி" என்றால் உயிர் பற்றிய தகர(ஆகாய)ஞானம்(wisdom).

" நான்" என்பது அஹங்காரம(ego)


நடை கவனி
வளி புரியும்
வளி கவனி
ஒளி தெரியும்
ஒளி கவனி
"நான்' அழியும்
சத்குருவே
'நான்" அழிய வரம் தா.




இப்ப, இந்தக்கவிதைக்கு அர்த்தம் புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.



         மூச்சை கவனித்தால் நமது முழு வாழ்கையையும் கவனிப்பதாக அர்த்தம். மூச்சைப் பற்றிய அறிவு இல்லையென்றால் நமது வாழ்க்கையைத் தூக்கத்திலேயே கழித்துக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

            தன்னை அறிதல்(self realisation) என்ற தத்துவத்தின் முதல்படி மூச்சை அறிந்து கொள்வதுதான்.ஞானம் பெறுவதற்காகப் புத்தரின் கடைசிப்  பயிற்சியாக இருந்த மூச்சுப்பயிற்சி நமது வாழ்வில் முதல் பயிற்சியாக இருந்தால் நல்லது.


குருவருள் துணை புரிய வாழ்த்துக்கள்.

                                                          ஓம் தத் சத்


6 comments:

Ram kumar said...

thanq 4 ur detailed answer sir

Jananiramya said...

Master i'm weak in tamil and hence have a doubt. what does vali mean & what is valimandalam. Is it space....

Yoga Yuva Kendra said...

vanakkam ramya,

"vali" means air(piranan). valimandalam- pirana mandalam.

sm.sakthivel. said...

arumaiyana thagaval.nalla solli irukinga.vazga ungal sevai.

Unknown said...

Master namaskaram,
nalla thagaval. miga thelivana vilakkam. nanri.

Unknown said...

Master Athmanamaskaram !

Post a Comment