Total Pageviews

Tuesday, July 19, 2011

கால நாகம்











குருபூர்ணிமா இரவு சேஷாத்ரி மகானின் சமாதிக்கு வெளிப்புறமாக இருக்கும் கல்லால மரத்தின் கீழிருக்கும் திண்ணையில் அமர்ந்திருந்தேன். இரு இளைஞர்கள் ஆன்மீக விவாதத்தில் இருந்தார்கள். விவாதத் தலைப்பு ஆஸ்ரமத்தின் நுழைவாயிலில் வைத்திருகிறாரர்களே அந்தக் “காலநாகம்” பற்றியது. அவர்களுக்குள் அளவளாவிய செய்திகளை நாகரீகம் கருதி இங்கே பதிவு செய்ய விரும்பவில்லை நண்பர்களே!. நமது இளைஞர்களுக்கு யார் இப்படியான செய்திகளையெல்லாம் கட்டவிழ்த்து விடுகிறார்களோ தெரியவில்லை. 


."புத்தருக்கு ஞானத்தைத் தந்த மரம் எது..?" 

"போதி மரம்"னு டக்கென்று பதில் சொல்லிவிடுவீர்கள்..

தமிழ்நாட்டில் போதி மரங்கள் உள்ளனவா..? போதி மரத்தை பார்த்ததுண்டா?.."




நண்பர்களே! போதி மரம் என்பது ஏதோ சொர்கத்தில் மட்டுமே இருக்கும் மரம் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நாம் அன்றாடம் பார்க்கும் அரசமரம்தான் போதி மரம் என்பது பலருக்குத் தெரியாத நிலையை நான் கண்டிருக்கிறேன். 




மரங்களில் உயர்ந்த குணமுடையதால் இந்தமரம் அரசமரம் ஆயிற்று. அரசனாக இருந்து பின்பு ஆண்டியாகியப் புத்தருக்கு ஞானம் போதித்ததால் அரசமரமே போதி மரம் ஆயிற்று. 



அது ஏன் மரங்களில் அரசன்?




photosynthesis என்கிற ஒளிசேர்க்கையை ஓய்வு ஒழிச்சலின்றி வருடம் முழுவதும்,24 மணி நேரத்துக்கும் நிகழ்த்தக்கூடிய ஒரே மரம் அரசமரம். 




அதாவது மனிதனுக்கு தேவையான காற்றுப் பிராணசக்தியைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் மரம் அரசமரம். மற்றவையெல்லாம் சூரியன் மறைந்ததும், இரவில் ஒளி சேர்க்கையை நிறுத்திவிடும். 




அதனால்தான் ஸ்தல விருட்சங்கள் என்கிற பெயரில் ஆலய்ங்களில் அரசமரத்தையும் அதன் குணம் ஒத்த மற்ற மரங்களையும் நம்மவர்கள் நட்டு வைத்தார்கள். 

அரசமரத்தின் கதையே தெரியாவிட்டால் அதன் கீழே வைக்கப்பட்டிருக்கும் காலநாகத்தைப் பற்றிய உண்மை நமது இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே!. அந்த கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்று வேறு சொல்லி வைத்தாயிற்று. இளம் சமூகம் எப்படி நம்பும்..? 



சரி “காலநாகம்” என்றால் என்ன?.







சில கோவில்களின் வாசலிலும், ஆற்றங்கரையிலும் அரசமரத்தையும், வேப்பமரத்தையும் இணைத்துவைத்து அதனடியில் இரண்டு பாம்புகள் ஒன்றை ஒன்றுப் பின்னிய நிலையில் உச்சியில் ஒரு சிவலிங்கத்தைக் கவ்விப் பிடித்திருக்குமாறு ஒரு சிலா ரூபத்தை பிரதிஷ்டைப் பண்ணியிருக்கிரார்களே, அந்த சிலாரூபத்திற்குப் பெயர்தான் “காலநாகம்”. 

இதை நாம் ஏன் வணங்கவேண்டும்? இதை வணங்கினால் மகப்பேறு எப்படி உருவாகும்..? 


மூடநம்பிக்கை போல தோன்றுகிறதா??........இது மூட நம்பிக்கையல்ல நண்பர்களே!
 

நம் முன்னோர்கள் மூடர்கள் அல்லர்.


நவீன அறிவியலில் மிகச் சமீபமாய் கண்டு சொன்ன (genetics) மரபியலை அன்றே சொல்லி வைத்ததற்கானச் சாட்சிதான் இந்த காலநாகம். 



ஞாபகமிருக்கிறதா? ............இந்த காலநாகத்தின் படத்தை வேறு மாதிரி சாய்த்து வைத்த நிலையில் நாம் டி,என்.ஏ. என்று அறிவியல் பாடத்தில் படித்திருக்கிறோம். 










இப்போது புரிகிறதா? நேர்மறை மற்றும் எதிர்மறையாக செயல்படும் மரபணுகூறின் வடிவத்தை இப்படி கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். 

.நாம் உணர வேண்டியது இந்தக் காலநாகத்தைச் சுற்றும்போதுநமது உடலுக்குள் டி.என்.ஏ.விலும் மாற்றத்தைக் கொண்டுவரமுடியும் என்பதே. .

.

காலநாகத்தில் பிராண பிரதிஷ்டை எனும்பெயரில் பாட்டரியில் மின்சாரத்தை சேமிப்பது போலப் பிராணனைச் சேமித்து வைத்திருப்பார்கள். நமது டி. என். ஏ விலும் மூலப்பிராணன் இருக்கும். இரு காந்த துருவங்கள் ஒன்றையொன்று வெட்டிகொள்ளும்போது அங்கே மின்சாரம் உண்டாகிறது எனும் அறிவியலைத்தானே டைனமோவில் உபயோகப்படுத்துகிறோம். அதுபோல காலநாகத்தைச் சுற்றும்போதும் பிரதிஷ்டை செய்யப்பட்டப் பிராண அலைகளும், நமது மரபணுவிலுள்ள மூலப்பிராண அலைகளும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்வதால் அங்கே உயிர் ஆற்றல் உண்டாக்கப்படுகிறது. 









இந்த உயிராற்றல் மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் பயப்பதாக உள்ளது. இதே அறிவியலைத்தான் , கோவில்களிலும் பிரதட்சணம் எனும் பெயரில் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் கோவில் எனும் பாட்டரியில் 12 வருடம் மட்டுமே உயிராற்றலை சேமிக்கமுடியும். பின்பு கும்பாபிஷேகம் எனும் பெயரில் மீண்டும் பிராணனை பிரதிஷ்டை செய்யவேண்டும். ஆனால் காலநாகத்திற்கு மீண்டும் மீண்டும் பிராண பிரதிஷ்டை தேவையில்லை காரணம் இங்கே ஒரு விஷேசத் தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. என்ன தெரியுமா?? காலநாகத்திற்கு மேலிருக்கும் அரசமரம் இயல்பாகவே வருடம் முழுவதும் ,24 மணி நேரமும் காற்றுப்பிராணனைக் கிரகித்து காலநாகத்தில் சேமித்து வைத்துக்கொண்டே இருக்கிறது. 





அதனால்தான் காலநாகத்தை அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்து நம்மை வலம்வர வைதார்கள். உடல், உள்ள நோய்களுக்கும் சுவாசத்துக்கும் மிகுந்த தொடர்பு உண்டு என்பதை பலமுறை யோக வகுப்புகளில் பேசியிருக்கிறோம் 

தூய்மையான ஆக்ஸிஜன் உள்ள வெளியை கொஞ்ச நேரம் சுற்றி வந்தாலே மனமும் உடலும் தெளிவாகிவிடும். 

நாம் கோவிலுக்குப் போனதும் மனம் அமைதியடைவதும்,பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிட்டதாய் தோன்றுவதும் ..இந்த தூய காற்று டி.என்.ஏ. அணுக்களீல் செய்யும் அதிரடி மாற்றங்களே. 



பிராணசக்தியே நம் உயிர் வாழ்வுக்கான ஆதாரம். பிராணசக்தி நம் உடலில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்த வடிவத்தில் வலது இடதாய் நம் உச்சி தலையை நோக்கிப் பயணப்படுகிறது. அங்கேதான் நம் ஜீவன் என்கிற சிவ லிங்கம் உள்ளது.





பாம்புகள் பின்னியிருக்கும் சந்திப்புப் புள்ளிகளே நம் ஆதார சக்கரங்கள் செயல்படும் மையங்கள்.இடதும் வலதும் சமனிலைப்பட வேண்டும். மாறானால் இயல்பு நிலையில் மாற்றம் உண்டாகும். 



ஆயிரம் ஐன்ஸ்டின்கள் ஒன்று சேர்ந்தாலும் நம் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் 
அறிவியல் தன்மைகளோடு மனித சமூகத்தை வழிநடத்தும் இந்தக் காலநாகத் தத்துவத்தை உண்டாயிருக்க முடியாது 





வெளியே இருக்கும் காலநாகத்தைப் பாருங்கள். அது நம் உள்ளேயும் இருக்கிறது. சுவாசத்தால் அந்த பாம்புகளைச் சுகமாய் வைத்திருக்க முடிந்தால், நம் ஜீவனுக்கும் சுகமே. இதைத்தான் யோக உள்நிலை விஞ்ஞானமாகித் தந்திருக்கிறார்கள் நமது யோகிகள். 

.


முறையாகக் கற்றுக்கொடுத்தால் நம் ஆன்மிகத்தின் மகத்துவத்தையோ..பெருமையையோ நம் இளைய சமூகம் ஒருபோதும் மறுதலிக்காது. 

இது என் கருத்து மட்டுமல்ல திடமான முடிவும் கூட.


வாருங்கள்! நம்முள் இருக்கும் காலநாகத்தையும் பிராணயாமப் பயிற்சியால் ஒரு சுற்று சுற்றி வருவோம்.



சந்திரனைச் சூரியனைத் தாவித் தீண்டினாய்
சங்கரனுக்கு ஆபரணத் தானுமாகினாய்
மந்திரத்திற் கடங்கினாய் மண்டலமிட்டாய்
வளைந்து வளைந்து நின்று ஆடுபாம்பே!..........பாம்பாட்டிச்சித்தர்

8 comments:

Ram kumar said...

intresting message. thanq sir

Yoga Yuva Kendra said...

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராம்குமார்

Dhanu said...

really interesting message!!

Yoga Yuva Kendra said...

thank dhanu

manjushiva said...

master,

THANK YOU for guiding us to enter a new path,really we all are gifted to be your students master.

Radhika said...

udambai pullaravaikum information koduthadarku mikka nandri sir

Yoga Yuva Kendra said...

மஞ்சு, ராதிகா, ஊக்கத்திற்கு நன்றி

AK said...

Thanks for the wonderful article, Sir.
One doubt though - how is it possible for the arasa maram to perform photosynthesis in the absense of light, Sir ?

Post a Comment