Total Pageviews

Friday, March 30, 2012

சிந்திப்போம்.............


பாவப்பட்டச் சிட்டுக்குருவிகள்!




சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா....


சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...,

ஏ குருவி... சிட்டுக்குருவி...


-இப்படியெல்லாம் இன்னும் கொஞ்சநாட்களுக்குப் பிறகு பாடவே முடியாது. காரணம்? சிட்டுக்குருவி என்று ஒன்று இருந்தால்தானே! அவையும்கூட அன்னப் பறவை, சக்கரவாக பறவை போல, ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்த பறவைகளின் பட்டியலில் இடம்பெறும் நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன செல்போன் டவர்கள். ஆம், அவற்றிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் வீரியம்... சிட்டுக்குருவிகளுக்கு எமனாக இருக்கிறது என்று கண்டறிந்து சில ஆண்டுகளாகவே எச்சரித்து வருகின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

இந்நிலையில்,  20/03/12 உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, சென்னையிலிருக்கும் சிட்டுக்குருவிகளைக் கணக்கெடுக்கத் தீர்மானித்துள்ளது இயற்கை ஆர்வலர்கள் சங்கம்!

ம்... இந்த மனிதனால் எதையுமே படைக்க முடியாது. ஆனால், எதையும் அழிக்க முடியும். இதற்கு ஏற்கெனவே பல உதாரணங்கள் உண்டு. சமீபத்திய பரிதாப உதாரணம்... பாவப்பட்ட சிட்டுக்குருவி!



சிட்டுக்குருவி மட்டுமல்லாது பட்டுப்பூச்சிகளும் அழிந்து விடும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.........மற்றொரு சமீபத்திய ஆராய்ச்சி, வரப்போகும் மிகப்பெரிய அபாயத்தை எண்ணி அதிர்ச்சியடைய வைக்கிறது......தேனீக்கள் தேன் சேகரித்துவிட்டுத் திரும்பும்போது தனது கூட்டிற்குத் திரும்பும் வழிப்பாதையை இந்த செல்போன் டவர் ஏற்படுத்தும் அதிர்வுகள் மறைத்து விடுகிறதாம் . இதனால் என்ன நிகழ்ந்து விடப்போகிறது? என நீங்கள் நினைக்கலாம். வேலைக்காரத் தேனீக்கள் கூட்டிற்குத் திரும்பாவிடில் ராணித்தேனீ இறந்துவிடும் .....இதன் பின் விளைவாகத் தேனீக்கூட்டமே அழிந்துவிடும் அபாயமேற்படும். பட்டாம்பூச்சிகளும்,தேனீக்களும் அழிந்துவிட்டால் மகரந்தச்சேர்க்கை ஏற்படாது...இதன் தொடர் விளைவாக ஒட்டுமொத்தத் தாவர இனமே அழிந்துவிடும் ....தாவரத்தை நம்பி வாழும் கால்நடைகள்?.....மனித இனம்?.....








சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வழிமுறை 1 :


தண்ணீர் : சிறிய மண் சட்டியிலோ அல்லது தட்டையான ஒரு பாத்திரத்திலோ, தினமும் தண்ணீர் வைக்கலாம். அன்றே அப்பொழுதே பறவைகள் வந்து நீரை அருந்தும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் வையுங்கள். வந்து பழகிய பின்னர், அவை தொடர்ந்து வரும்.




சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வழிமுறை 2 :



உணவு : வளர்ந்து வரும் கான்கிரீட் காடுகளில் சிட்டுக்குருவிகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வது அவசியம். கம்பு போன்ற தானியங்களை அவற்றுக்கு உணவாக வழங்கலாம். அன்றே அப்பொழுதே பறவைகள் வந்து உண்ணும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஆனாலும் தொடர்ந்து வையுங்கள். வந்து பழகிய பின்னர், அ
வை தொடர்ந்து வரும். குறிப்பாக நாட்டுக் கம்பு அளவில் சிறியதாக இருப்பதால் அவற்றை விரும்பி உண்ணும். ஒரு மண் தட்டிலோ, மாடியிலோ, வீட்டின் சுற்றுச் சுவரிலோ, இவற்றை வைக்கலாம்..!!




சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வழிமுறை 3 :

புழு, பூச்சிகளை உண்ணும் சிட்டுக்குருவிகள், அதன் குஞ்சுகளுக்கும் அவற்றை உணவாக கொடுக்கும். நாம் வளர்க்கும் அழகுச் செடிகளில், குரோட்டன்ஸ் போன்ற செடிகளில், புழு பூச்சிகள் வராது. எனவே நம்முடைய மண் சார்ந்த பாரம்பரிய செடிகளை வீட்டைச் சுற்றி வளர்க்கலாம். அவற்றில் இருக்கும் புழு பூச்சிகள் சிட்டுக்குருவிகளுக்கு உணவாகும்.