Total Pageviews

Saturday, March 3, 2012

அகிலம் அழியும் புரளியும் ... ... அப்போகாலிப்ஸ் தியரியும் ...(பாகம் - 2·

அகிலம் அழியும் புரளியும் ... ... அப்போகாலிப்ஸ் தியரியும் ...(பாகம் - 2·




இரண்டாம் பாகத்தை துவங்கும் முன் ஒரு விபரத்தை தெளிவு படுத்தி விடுகிறேன். மாயன் இந்தியர்கள் 21.12.2012 அன்று உலகமே அழிந்துவிடும் என்று சொல்லவில்லை. தமது சூரியனுக்கான கோயிலில் அதன் வடிவத்திலேயே அந்த 'காலண்டரை' அமைத்திருந்தார்கள்.




அந்தக் கோயிலின் நாற்புறமும் (ஒவ்வொரு புறமும் 13 படிகளாக) கீழே அகலமாகவும் மேலே செல்ல செல்ல குறுகலாகவும் சென்று முடியும்.
ஒவ்வொரு படியும் 400 ஆண்டுகள் வீதம் 5200 ஆண்டுகள். (நமது காலண்டர் கணக்குப் படி 5125 ஆண்டுகள்).
தற்போது நடைபெறுவது நான்காவது 13 ம் படியில் இறுதி ஆண்டு. அதில் அவர்களின் கணக்குப்படி முடியும் நாள் நமது கணக்குப் படி 2012 டிசம்பர் 21ம் நாள். சிலர் இதை டிசம்பர் 23ம் நாள்தான் சரி என்கின்றனர்.




மாயன் இந்தியர்களின் காலண்டர் அத்துடன் முடிகிறது. 14 வது (Baktun) பக்டனின் துவக்கம் குறித்து எந்த குறிப்புகளும் இல்லை.
அதற்கும் உலகமே அழிந்துவிடும் என்ற கருத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்.?

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்..மாயன் காலண்டர் சூரியனின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்று.
தற்போதைய அறிவியலார்கள் மாயன் காலண்டரை பின்னோக்கி சென்று ஆராய்ந்தார்கள். அதிர்ந்தார்கள்.
அதை பின்னர் பார்ப்போம்.

நாள் 21ன்றா அல்லது 23 ன்றா அல்லது 2012 க்குப்பதிலாக இன்னும் பல ஆண்டுகள் கழித்தா என்பது இருக்கட்டும்.

அதற்கு முன் 'உலகம் அழிவது' என்பது சாத்தியம் தானா அது உண்மையானால் எந்த நிகழ்வுகளால் அது சாத்தியம் என்று தெரிந்து கொள்வோம்.

அதற்கு கீழ்க்கண்டநிகழ்வுகளே காரணமாக அமையக்கூடும் என்று ''அறிவியலார்கள்'' கூறுகின்றனர்.

1.  A Sudden reversal of Magnetic field  ( காந்தப் புலத்தின் திடீர் மாற்றம்)

2.  A Sudden Ecological Collapse    ( திடீர் இயற்கை சமநிலை வீழ்ச்சி )

3.  Sun spot storm or solar flare.  ( சூரியப் புயல் அல்லது சூரிய சீற்றம்)

4.  Cosmic conjuntion of earth or sun  ( பிரபஞ்ச சுழற்சியில் பூமி அல்லது சூரியனின் நகர்ச்சி)

5.  Solar shift ,a venus transit which end in violent earth quakes.  ( சூரியன் மற்றும் வீனஸ் கிரகத்தின் பாதை (Zodiac) மாற்றத்தால் பூமியில் ஏற்படக்கூடிய பயங்கர பூகம்பங்கள்.)

அது ஒவ்வொன்று குறித்தும் , அவைகளில் ஏதாவது ஒன்றோ பலவோ தற்போது நிகழக்கூடுமா என்பதை அறிந்தவரை அறிவோம்.


1. A Sudden Reversal of Magnetic field . ( காந்தப் புலத்தின் திடீர் மாற்றம் ):
    ________________________________________________________________

1. பூமியின் காந்தப் புலன் சுழற்சி :-
__________________________________

                                                                    2004ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பூகம்பம் அதைத் தொடர்ந்த மிகபெரிய சுனாமி அலைகள் அறிவியலார்களை அதிர வைத்தது. அதற்கு ஒரு வேளை பூமியின் காந்தப் புலன் நகர்வு காரணமாக இருக்கக்கூடுமோ என்ற அவர்களின் ஆராய்ச்சியின் பயனாக NASA ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டது. பூமியின் வடதுருவ காந்தப் புலனில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக காந்தப்புலனில் வடக்கு நோக்கிய ஒரு சிறு நகர்ச்சி தோன்றியது உண்மைதான் என்பதுதான் அது. ஆனால் பொதுவாக பூமியில் காந்தப்புலன் நகர்ச்சி என்பது மிக மிக மிக மெதுவாக நடைபெறக்கூடிய நிகழ்வு. ஆனால் வடக்கு-தெற்கு நகர்ச்சிக்கு இடையேயான கால இடைவெளி குறைந்த பட்சம் 5000 ஆண்டுகள். அதிக பட்சம் 500 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்தது.
கவலைவிட்டது.

2. சூரியனில் காந்தப்புலன் மாற்றம் :-
_____________________________________

                                                                     சூரியனில் காந்தப்புலன் மாற்றம் ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் ஒருமுறை. ஒவ்வொருமுறையும் பூமியின் கூதிர்காலத்தில் ஏற்படும் (Winter solastice). இறுதியாக 2001 ல் நிகழ்ந்தது. மீண்டும் நிகழப்போவது இந்த ஆண்டு 2012 டிஸம்பரில். அது முற்றிலுமானது. மேலிருந்து கீழ்.கீழிருந்துமேல்.(Top to turvy). இது ஒரு பொதுவான நிகழ்வுதான். ஒவ்வொரு பதினொரு ஆண்டுகளுக்கும் ஒருமுறை நிகழ்வதுதான். ஆனால் இந்தமுறை அது நிகழும் போது சூரியன் தனது நீள்வட்டப்பாதையில் (Zodiac)இருக்கின்ற இடம்தான் அறிவியலார்களை ஆச்சரியப்படவைத்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் சொல்வது இதுதான் '' Let us wait and see this 'winter solastice'..''. சரி. நாமும் காத்திருப்போம். (இதற்கும் மாயன் காலண்டருக்கும் சம்பந்தம் இருக்கிறதா?.ஆம். இருக்கிறது.இது குறித்து விரிவாக அடுத்த பத்திகளில் பார்ப்போம்.)




2. Total Ecological Collapse: ( உலக உயிரின சுற்றுப்புற சூழ்நிலையின் திடீர் அழிவு)
______________________

                                                                        பூமியில் எல்லாவகை உயிரினங்களும் வாழ்வதற்காக இருக்கும் இயற்கை சூழல் திடீரென மாறினால் என்னவாகும்? மடிதல் தவிர வேறு வழியில்லை. அந்த சூழ்நிலை வாழும் உயிரினங்கள் முற்றிலுமாகவும் அழிந்துவிடும்.(Extinct).
(உ-ம்) அன்னப்பறவைகள், டைனோசாரஸ் மற்றும் ப்ராங்க்கோசாரஸ் உயிரினங்கள்.

இவ்வகை உயிரினங்களை நாம் இப்போது படங்களில்தான் கண்டு மகிழ்கிறோம். இவையெல்லாம் ஒட்டு மொத்த மாக எப்படி அழிந்துபோயிருக்கக்கூடும்?

உலக அறிவியல் அறிஞர்கள் 'ஒட்டு மொத்த குரலில்' சொல்லும்வாசகம்: ' collision of aesteroid '. அதாவது சூரியனைச் சுற்றிவரும் விண்துகள் (aesteroid) பூமியின் மீது மோதினால் நிகழும் விளைவு.




சூரியனைச் சுற்றிவரும் எண்ணற்ற விண்மீன்களில் ஒன்றோ பலவோ தன் பாதை மாறி பூமியின் வளி மண்டலத்தினுள் புகுந்தால் அது பூமியின் மீது மோதியே தீரும்.
சரி.
இவ்வாறு இதற்கு முன் நிகழ்ந்துள்ளதா?
ஆம்.
இன்றைக்கு சற்றேறக்குறைய 655 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்துள்ளது. அந்த மோதலின் போதுதான் 'டைனோசாரஸ்' போன்ற விலங்கினங்கள் முற்றிலும் அழிந்து(extinct) போயின என்பது
அறிவியலார்கள் கருத்து.
அந்த நிகழ்வு K.T. Extinction event என்று அழைக்கப்படுகிறது.
அது நிகழ்ந்த காலம் கிரிடசியஸ்(Cretaceous period) காலம்.
நிகழ்ந்த இடம் : யுகாட்டன் தீபகற்பம்.(yucaton penisula).
மிகச் சரியாகச் சொல்லப்போனால் சுமார் 15 கிலோ மீட்டர்கள் விட்டம் (அகலம்) உள்ள அந்த சூரியத்தூள் மோதிய இடம் ஸிக்சுலப்ஸ் (Chicxulub) என்று இன்று அழைக்கப்படுகிறது.
அது சரி.அந்த இடம் எந்த நாட்டில் உள்ளது.
அது உள்ள இடம் மாயன் இந்தியர்கள் வாழ்ந்த பகுதியான மெக்ஸிகோவில் உள்ளது. மாயர்களால்தான் அந்த இடம் 'ஸிக்சுலப்' என்று அழைக்கப்பட்டது.
அதன் பொருள் ''கொம்புள்ள பேய்'' என்பதாகும்.

ஆனால் இந்த சூரிய விண்துகள் சமுத்திரத்தில் மோதினால் கற்பனைக்கும் எட்டாத ஆழிப்பேரலைகள் (Tsunamies) உருவாகும். அப்படிப்பட்ட சுனாமிகள் எப்படிப்பட்ட பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது நாம் அறிந்தது தானே.
அது சரி.
அதுபோல் இப்போது நிகழ வாய்ப்புள்ளதா ?
வாருங்கள்.
விஞ்ஞானிகள் முதலில் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.
அவர்கள் சொல்லுவதை நாம் அறிந்து கொள்ள ஒரு சில சூரிய நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்வோம்.

3. Sunspot storm or Solar flare : ( சூரியக் கரும்புள்ளிப் புயல் அல்லது சூரிய சீற்றம்) :
____________________________________________________________________________









சூரியனின் மேற்பரப்பில் திடீரெனத்தோன்றும் கரும்புள்ளிகள்தான்ஆங்கிலத்தில் 'ஸன் ஸ்பாட்'(Sun spots) என்று அழைக்கப்படுகின்றன.
இவை 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் புறப்பகுதியில் தோன்றுகின்றன.
இது சூரிய சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.
இது குறித்து தொடர் ஆய்வு நடத்திவரும் நாஸா ((NASA:the National Aeronautic Space Administration) வெளியிட்டுள்ளதகவல்கள் விந்தையானவை.
சூரியனின் அன்றாட செயல் பாட்டிற்கும் இந்த சூரிய கரும்புள்ளிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு.
சரி.
சூரியக் கரும்புள்ளிகள் என்றால் என்ன?
ஒரு நிலவு அளவிலான ஒரு வாயு அல்லது திரவ ''காந்த உருண்டை'' தான் இந்த சூரியக் கரும் புள்ளி. It is a magnatic ball.
பதினோரு ஆண்டுகள் இடைவெளியில் இவை தோன்றி மறைவதை வானியலார் 'சூரிய கரும்புள்ளி சுழற்சி' (Sunspot cycles)என்று அழைக்கிறார்கள்.
NASA இதற்கு முன்னர் 23 சூரிய கரும்புள்ளிகள் சுழற்சிகள் மீது ஆய்வு மேற்கொண்டுள்ளது.
தற்போது 24 வது சுழற்சி துவங்கியுள்ளது.
ஒரு சூரிய சுழற்சியின் போது உருவாகும் சூரியக் கரும்புள்ளிகளின் அடிப்படையில் சூரியனின் புறப்பகுதியில் ஏற்படும் நிகழ்வு மாற்றங்கள் ஆராயப்பட்டன.
சமீப கால ஆராய்ச்சியில் 1955லிருந்து 1960ம் ஆண்டு வரையான காலத்தில் சுமார் 250 சூரிய கரும் புள்ளிகள் உருவானதுதான் அதிகமாகக் கருதப்படுகிறது.
சரி.
இந்த சூரியக் கரும்புள்ளிகள் எதற்கு அறிகுறி?
ஒரு சூரிய சுழற்சி தொடங்கியவுடனேயே வானியலார் சூரியனை கூர்ந்து கண்காணிக்கத் தொடங்கிவிடுவர்.
ஒரு சூரிய புறத்திரள் வெளியேற்றம் (Coronal Mass Ejection)நடைபெறக்கூடும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. CME என்றும் Solar wind என்றும் Solar Buz என்றும் இதனை அழைப்பார்கள்.
சிலநேரங்களில் இது சூரிய சீற்றமாக (Solar flare) அண்டவெளியைத் தாக்குவதும் உண்டு.
சரி.
அவ்வாறு சூரிய சீற்றம் ஏற்படுவதால் உண்டாகக்கூடிய விளைவுகள் என்ன ?
சூரியனின் புறப்பகுதிலிருந்து மின்காந்த அலைகள் விண்வெளியில் வீசப்படும். இது பொதுவாக சூரியனின் அருகில் மட்டுமே நிகழும். சில நேரங்களில் அதன் சீற்றம் அதிகமாக இருந்தால் அருகிலுள்ள கிரகங்களைத் தாக்கும்.
அந்த அலைகளில் பெரும்பான்மையாக கீழ்க்கண்டவை அடங்கியிருக்கும்.
1. எலக்ட்ரான்கள்.
2. புரொட்டான்கள்.
3. ஹீலிய வாயுத்துகள்கள்.
4. ஆக்ஸிஜன்.
5. இரும்புத்துகள்கள்.
சில நேரங்களில் அதிக அளவிலான எக்ஸ்-ரே கதிர்களும், புற ஊதாக் கதிர்களும் (Ultra violet Rays) நேரடியாக விண்வெளியைத்தாக்கும்.
இதனால் விண்வெளியின் அயனி மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
சரி. 
இந்நிகழ்வு பூமிக்கிரகத்தை தக்கியுள்ளதா?
ஆம். 
1859 ல் அதாவது 242 வருடங்களுக்கு முன் கனடா நாட்டருகே சூரிய சீற்றம் தாக்கியுள்ளது. 
இதனால் அப்போதிருந்த தந்திக் கருவிகள் செயலிழந்தன. அவ்வளவுதான்.
இந்தக் காலத்தில் சூரிய சீற்றம் நிகழ்ந்தால் கீழ்க்கண்ட பாதிப்புகள் ஏற்படும். 
1.RADIO COMMUNICATION. (வானொலி அலைவரிசைகள்).
2.Operation od Radors  ( ரேடார்கள் முற்றிலும் பாதிக்கப்படும்)
3.Defect in the Electro Magnatic waves. ( மின்காந்த அலைகள் பாதிப்பு).

இதனால் எந்த உயிரிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது.       அப்பாடி.

தற்போது சூரியனில் 24 வது சூரியக் கரும்புள்ளிகளின் சுழற்சி 2001 ம் ஆண்டு செப்டம்பரில் துவங்கியுள்ளது. இதன் உச்ச கட்டம் 2012 டிசம்பர் என்பது வானியலார் எதிர்பார்ப்பு.
ஆனால் NASA இந்த முறை 180 லிருந்து 190 கரும்புள்ளிகளே தோன்றக்கூடும் என்று கணித்துள்ளது.





ஆனாலும் 26000 ம் ஆண்டுகளுக்குப் பின் தற்போது சூரியன் சென்றுகொண்டிருக்கும் இடம் , தனது பாதையில் (Zodiac) 2012 கூதிர்காலத்தில் சூரியன் இருக்கப்போகும் இடம் ஆகியவை ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பை விஞ்ஞானிகளிடம் உருவாக்கியுள்ளது. 
அதை அறிந்த அறிவியலார் சொல்லும் மந்திர வார்த்தைகள் இதுதன். '' Yes. Mayans are really GENIUS''.

அது என்னவென்று பார்ப்போம்.

4. Cosmic conjuntion of Sun or Earth. (பிரபஞ்சத்தில் சூரியன் மற்றும் பூமியின் நகர்ச்சி)
______________________________________________________________________________


                                                               பிரபஞ்சத்தில் சூரியனின் மற்றும் பூமியின் சுழற்சி பற்றி அறியும் முன் பிரபஞ்சத்தைப் பற்றி சிறிது அறிந்துகொள்வோம்.

நாம் காணும் பிரபஞ்சம் அல்லது அண்டம் ஒரு எல்லையில்லா திறந்தவெளி. அந்த அண்டவெளியில் சூரியன் ஒரு விண்மீன். அது தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் தனக்கென ஒரு நீள் வட்டப் பாதையில் அண்டத்தை சுற்றிவருகிறது. சூரியனை பூமி முதலான கிரகங்கள் அதே தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் சுரியனையும் ஒரு நீள் வட்டப்பாதையில் சுற்றிவருகின்றன.
இது ஒரு சூரியக்குடும்பம். 
இந்த சூரியக்குடும்பம் போல் ஆயிரக்கணக்கான சூரியகுடும்பங்கள் பிரபஞ்சத்தில் உலா வருகின்றன. இவை தான் நம்மால் நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவை சில இடங்களில் கூட்டமாகக் காணப்படும். அவை காலக்ஸி (Galaxy) என்று அழைக்கபடுகின்றன.
இவையெல்லாம் பலரும் அறிந்தவைதான்.
இந்த நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றி ஆராயும் போது கலீலியோ கண்டறிந்ததுதான் 'பால்வீதி'.
( Milky way).




படம் -1.

படம் -1ல் கலீலியோ கண்ட பால்வீதியைக் காணலாம். 
இந்த பால் வீதீ மிக நீண்ட ஒரு வித்தியாசமான அமைப்பாக இருந்ததோடு 'தீக் குழி' போல் தகதக வென ஜொலித்தது.
ஒரு ஒளி வெடிப்புப் பிளவினுள் பல நட்சத்திரக் குவியல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அண்டவெளியில் அப்படியொரு நட்சத்திர வீதி இருந்ததை அறிந்த வானியலார் அதனை ஆராய முற்பட்டார்கள்.






படம் -2.

பால்வீதியை ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. நீண்ட அந்த நெருப்பு குழி போன்ற வெடிப்பில் பல நூறு காலக்ஸிகள் காணப்பட்டன. பால் வீதியில் மொத்தம் 400 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கக்கூடும் என்று கணக்கிடுகிறார்கள் இன்றைய அறிவியலார்கள். (ஒரு பில்லியன் என்பது மில்லியன் மில்லியன் !)
அது மட்டு மில்லாது அதன் நடுவில் ஒரு பெரிய 'கருந்திரள் ஓட்டை' (Super massive black hole) இருந்ததை அறிந்தார்கள்.இதை DARK RIFT என்றும் அழைப்பார்கள்.
இந்த சூப்பர் மாஸ்ஸிவ் ப்ளாக் ஹோல் ன் மையம்தான் அண்டத்தின் மைய்யமாகக் கருதப் படுகிறது.(Galactic center)
சுருள் வடிவ அமைப்பைக் கொண்ட இந்த பால் வீதியின் விட்டம் (அகலம்) 100,000 ஒளி ஆண்டுகள் ஆகும்.
இந்த பால் வீதியின் மையத்திலிருந்து நமது சூரியக் குடும்பத்தின் தொலைவு சுமார் 28000 ஒளி ஆண்டுகள்.அதாவது சுமார் 24.24 மில்லியன் கிலோமீட்டர்கள்.

அட என்னங்க மாயன் பத்தி சொல்ல ஆரம்பிசிட்டு சும்மா 'வானியல்' பாடம் நடத்துறீங்க என்று நீங்கள் கருதக் கூடும் .
ஆனால் 
இன்றைய விஞ்ஞானிகளெல்லாம் பல அளவீட்டு முறைகளைக் கொண்டு கணக்கிடுவதை விடஅன்றைய மாயன் இந்தியர்கள் இவற்றை துல்லியமாகக் கணக்கிகீடு செய்துள்ளார்கள் என்பதுதான் விந்தை.
அவர்கள் கணக்கீடு செய்ததை விடுங்கள்..அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.
அவர்கள் (மாயன் இந்தியர்கள்) கண்டு சொன்ன இன்னொரு விஷயம். 
இந்த 2012 டிசம்பர் மாதத்தில் இந்த மிகப்பெரிய பால் வீதியை சூரியன் தன் குடும்பத்துடன் கடந்து செல்கிறான் என்பதுதான்.

பூமியைச் சுற்றி எப்படி ஒரு இல்லாத 'பூமத்திய ரேகை' (Equator) யை நாமே உருவாக்கி கணக்கிடுகிறோமோ அதே போல அண்டத்தை சரி பாதியாக பிரித்துக் கணக்கிடும் ஒரு கற்பனைக்கோடுதான் அண்ட மத்திய ரேகை. ( Galactic Equator).
அது செல்லும் பாதை இந்த 'பால் வீதியின்' மைய்யத்தினூடேதான்.
பல நேரங்களில் பல இடங்களின் வழியாக இந்த 'காலக்டிக் ஈக்குவேடரை'க் கடந்த நமது சூரிய மண்டலம் வரும் (2012)டிசம்பரில் இந்த பால் வீதியின் மைய்யத்தில் அந்த Galactic Equator-ஐ கடக்கிறது.

அதாவது அந்த சூப்பர் மாஸ்ஸிவ் ப்ளாக் ஹோல் ' வழியாக.
இந்த கருங்குழியை (Demon hole) பேய்க்குழி என்று வருணிக்கும் அறிவியலார்களும் உண்டு.

அப்படியானால் அந்த பால் வீதியுனுள் நமது சூரிய மண்டலம் இந்தேரம் நுழைந்திருக்கவேண்டுமே ?
ஆம். 
நமது சூரிய மண்டலம் தனது அனைத்து கோள்களுடன் 1983 லேயே நுழைந்து விட்டது.
Yes. Now We are on it!.
It is said ''The solar passage over the Galactic Equator exactly begun on 1983 and end in 2019.''






நான் முன்னரே பால்வீதியின் அகலம் ஏறக்குறைய ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் என்று குறிப்பிட்டு இருந்தேன்.
அதில் நமது சூரியக்குடும்பம் தனது 'பரிவாரங்களுடன்' நுழைந்து முற்றிலுமாக வெளியேற 36 ஆண்டுகள் ஆகும்.
ஆம்.
1983 ம் ஆண்டு நுழைந்து 2019 ம் ஆண்டு வெளியேறும்.
இதில் சுழற்சியில் பூமி ஆண்டுக்கு ஒருமுறை சூரியனுக்கும் , மையத்திற்கும் நடுவில் இருக்கும். ஒருமுறை பூமிக்கும் , மைய்யத்திற்கும் நடுவில் சூரியன் இருக்கும்.

சரிதானே.

ஒரு வானியல் அறிஞர் '' மாயன் இந்தியர்களின்'' பிரபஞ்ச அறிவு குறித்து சொல்வதை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். பின்னர் தமிழுக்கும் வருகிறேன்.

'' The only interesting of the new aspect of this year2012 will be the Sun appearing to just touch one part of the DARK RIFT (கருந்திரள் குழி)  that snakes its way along the GALACTIC EQUATOR . This is an agree of the Night Sky cosidered important to MAYA COSMOLOGY most notably with RESPECTS ''Spiritual Rebirth'' mythologies. It will however to take some twenty years or so, to travel completely through this DARK REGION of the sky.''

ஆம். மாயன் இந்தியர்களின் பிரபஞ்ச அறிவை மரியாதையுடன் நோக்கும் அந்த அறிவியலார் சொல்வது இதுதான்.
" இந்த ஆண்டின் மிகவும் விசித்திரமான வானியல் நிகழ்வு என்பது சூரியன் இந்த (2012) ஆண்டில் பால்வீதியின் மையத்தை (கருந்திரள் குழியை)  அண்ட மத்திய ரேகை (Galactic Equator)வழி கடந்து செல்வதுதான். நாம் மரியாதையுடன் நோக்க வேண்டிய மாயர்களின் பிரபஞ்ச கணக்குப் படி அவர்களின் புராணீய பாம்பு வாலைத் தொடும் நாள் ,புதிய காலம் ஒன்று தொடங்கும் என்பதாகும்.ஆனாலும் அது நிகழ ( பால் வீதியை முற்றிலுமாகக் கடக்க)இருபது அல்லது மேலும் பல ஆண்டுகள் ஆகலாம்."




இந்தப் படத்தை உற்று நோக்குங்கள். அதிலே சிவப்பு புள்ளி போல் பால்வீதியை நடுவில் கடப்பதுதான் நமது சூரியக் குடும்பம்.

So, at last Mayans has proved ''they are Right.''

இந்த 2012 கூதிர்காலத்தில் (Winter solastice) சூரியக் குடும்பம் 26000 ம் ஆண்டுகளுக்குப்பின் பால்வீதியின் மையத்தை கடக்கிறது.
அதன் மிகச் சரியான மைய நாள் : 21.12.2012.


5. Solar shift a Venus Transit end in violent earth quakes : (சூரியக்குடும்பத்தின் இடம் மாற்றம்.)
____________________________________________________________________________________

                                                                    வானியலார்களின் மற்று மொரு கருத்து 2012 ல் சூரியக் குடும்பம் பால் வீதியினூடே அண்ட நடுக்கோட்டைக் (Galactic Equator)கடந்த பின் தன் சுழற்சியில் அந்த மையக்கோட்டிற்கு கீழ்ப்புறமாகவே தனது பயணத்தைத் துவங்கும் என்பதாகும்.
அதாவது இதுவரை அண்டவெளியில் Galactic Equator க்கு மேல் புறத்தில் வாசம் செய்த நமது சூரியக்குடும்பம் இந் நிகழ்வுக்குப் பின் அண்டவெளியில் Galactic Equator க்கு கீழே தன் பயணத்தைத் தொடரும். இதனால் சூரியக் குடும்ப கிரகங்கள் பாதிக்கப்படலாம். பூமியில் அசாதாரண பூகம்பங்கள் ஏற்படலாம்.
ஆனால் இது ஒரு அனுமானம்தான்.

சரி.
மேற்கண்ட ஐந்து காரணிகளிலிருந்து நாம் அறிவது என்ன?
2012 டிசம்பர் 21ம் தேதி அகிலம் அழிந்துதான் போய்விடுமா ?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலாவதாக காந்தப் புலன் திடீர் மாற்றம். இது 5000ம் ஆண்டுகாலம் மிகவும் மெதுவாக நிகழக்கூடிய நிகழ்வு. இதற்கான சாத்தியக் கூறுகள் தற்போது இல்லை என்று கூறிவிட்டனர்.

இரண்டாவதாக இயற்கைச் சமநிலை திடீர் அழிவு. இது புறக்காரணிகளால் மட்டுமே நிகழக்கூடிய ஒன்று.இதற்கு முன் 655 லட்சம் ஆண்டுகளுக்கு முன் (Cretaecious period)ஒரு சூரிய விண்கோள் (aesteroid)வட மத்திய அமெரிக்கப் பகுதியில் மோதிய போது இந்நிகழ்வு ஏற்பட்டு உயிரினங்கள் மாண்டன. டைனோசாரஸ் போன்ற விலங்கினங்கள் முற்றிலுமாக (Extinction)அழிந்தன. தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறிவிட்டனர்.

மூன்றாவதாக, சூரிய சீற்றம்.(Solar flare). இது சூரியனின் புறப்பகுதியில் தோன்றும் கரும்புள்ளிகளின்(Sunspots) என்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இது 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக்கூடியது .சூரியசுழற்சி என்று அழைக்கப்படும் இந்நிகழ்வில் இப்போது நிகழ்வது 24 வது சுழற்சி .2001-2012 குட்பட்ட இந்த சுழற்சியில் சுமார் 180 முதல் 190 வரையான சூரியக் கரும்புள்ளிகள் தோன்றக்கூடும் என்று NASA அறிவித்துள்ளது. இதற்குமுன் 1960 களில் 250 கரும்புள்ளிகள் தோன்றியது.
அப்படியே கரும்புள்ளிகள் கூடுதலாகத்தோன்றி சூரியசீற்றம்(Solar flare) ஏற்பட்டாலும் சூரியனின் புறப்பகுதியிலிருந்து மின் கானந்த அலைகள் விண்வெளியில் வீசப்படும். இதனால் அயனி மண்டலம் மற்றும் மின்னணு சாதனங்கள் மட்டுமே செயலிழக்கும். உயிரினங்களுக்கு ஆபத்தில்லை.

நான்காவதாக Solar Conjunction. இதுதான் நாம் ஆராயவேண்டிய ஒரு அம்சம்.

அது என்ன?

நமது சூரியக் குடும்பம் தனது பரிவாரங்களுடன் தனது பாதையில் (Zodiac)சுற்றிவருவதில் தற்போது பால்வீதியில் பவனிவருகிறது என்பதுதான் அது. வரும் டிசம்பர் மாதத்தில் அது பால்வீதியின் மையத்தை கடக்கிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் மாயன் இந்தியர்களின் கணக்குப்படி 21.12.12 அன்று முற்பகல் 11.11. மணிக்கு சூரியகுடும்பம் பால்வீதியின் மையப்பகுதியான கருந்திரள் குழியை (Super Massive Black Hole) கடக்கிறது.
அது இந்திய நேரப்படி 2012 ம் ஆண்டு 21ம் தேதி நள்ளிரவு நேரம் ஆகும்.

                                             மாயன் இந்தியர்களின் இந்த மிகத் துல்லியமான கணக்கீடு இன்றைய விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் அனுமானம் அத்தோடு உலகம் அழிந்துவிடும் என்பதாக இருக்கலாம். அது ஒரு யூகமாகத்தான் இருக்க முடியும்.

ஏனென்றால்,

 பொதுவாக இந்த நிகழ்வு 26000 ம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது..நாம் கிரிடேஸியஸ் காலத்தில் நிகழ்ந்த பேரழிவை (extinction of dinosaurus)மனதிற்கொண்டால் இடைப்பட்ட 655 லட்சம் ஆண்டுகளில் இந்நிகழ்வு 25 கோடி முறைகளுக்கு மேல் நிகழ்ந்திருக்ககூடும்.

ஆனால் பூமியில் எதுவும் நிகழவில்லை.
Yes.
 So far Earth is intact.
மேலும் மாயர்கள் 26000ம் ஆண்டுகளில் ஒரு 5200 ஆண்டுகள் போக பின் மீதமுள்ள 20800 ஆண்டுகளை 5200 ஆண்டுகள் வீதம் நான்கு பகுதிகளாக (ஒவ்வொன்றும் 13 பக்டன் களாகப் பிரித்து) அதை தமது சூரியக் கோயிலின் நான்கு 13 படிகள் கொண்ட சுவர்களாக அமைத்திருந்தனர்.






கி.மு. 3114 ல் துவங்கிய இக்கணக்கீடு முடிவடையும் நாள் 21.2012.
அவர்களைப் பொறுத்தவரை அந்த நாள் ஒரு முடிவு நாளாகக் கருதப்பட்டிருக்கலாம்.
அதனால் அதற்கு அடுத்த காலண்டரை அவர்கள் உருவாக்கவில்லை. அவ்வளவுதான்.

சில வானியலார் இதுவரை சூரியன் அந்த மையம் அருகே சென்றதில்லை. இந்த முறை மிகவும் அருகில் செல்கிறது. எனவே எதுவும் நடக்கலாம் என்றும் சொல்லுகிறார்கள்.

ஆனால் நாம் இப்போது நமது பூமியின் மேல் 1983 ம் வருடம் முதல் சூரியனுடன் பால்வீதியில் உலா வந்துகொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.
அன்று எதுவும் நிகழாவிட்டால் 2019 ம் ஆண்டு முடிவில் பால்வீதியை விட்டு வெளியேறுவோம் என்பதும் உண்மை.
அதன் பின்பு Galactic Equator க்கு கீழே சூரியனும் பூமியும் shift ஆகி தனது பயணத்தை தொடந்தால் அதற்குரிய பருவநிலைகளை நாம் சந்திக்கப்போகிறோம்.

அவ்வளவுதான்.

ஆனால் ஒன்று.


மாயன் இந்தியர்களின் துல்லிய கணக்கின்படி அவர்களின் கோயிலில் பாம்பு ஒன்று மோதிர வடிவில் வட்டமாய் வளைந்து தன் வாலை தானே தன் வாயால் தொடுவதுபோல் ஒரு சிற்பம். அந்த வால் முடியும் நுனிதான் 21.12.12 என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இதே போல சீனப் புராணத்திலும் இந்த பாம்பு சிற்பங்கள் இதேபோல் காணப்படுவதாய் உள்ளது.

இன்னொன்று.

நமது தமிழ்ப் பஞ்சாங்கத்திலும் உலகத்தின் காலம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.க்ரேத யுகம், த்ரேத யுகம், துவாரபா யுகம் மற்று கலியுகம்.
இதில் தற்போது நடை பெறுவது கலியுகம்.
இதில் என்ன வியப்பு என்றால், நமது தமிழ்ப் பஞ்சாங்களில் (வரும் நந்தன வருடம்) 21.12.2012 அன்று ''பிரளய கல்பம்'' என்று குறிக்கப் பட்டிருப்பதுதான்.
இது குறித்து பலரிடம் அறிய முற்பட்டபோது சரியான தகவல் என்னால் பெற இயலவில்லை.
ஆனால்
அந்த பஞ்சாங்கம் மாயன் காலண்டர்போல் அத்துடன் முடியவில்லை.
மொத்தத்தில் ஒரு விசித்திரமான கால கட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.

அப்படியானால் 'அகிலம் ' அழியுமா?

யாருக்குத் தெரியும்.???

வானியலார் வழியில் நின்று நாமும் அந்நாளை '' ஆவலுடன்'' எதிர்பார்த்திருப்போம்.

By
AR. SHANMUGAMURTHY. 

***************************************************************************************************
Notes based on:-
1. 2012 ''Will world end?''- Book by Suci Thirugnaanam.( appreciated by Mailsamy Annadurai sir.)
2. All about 2012. (google) 
3. Milky way             "
4. Conjunction of sun  "
5. Mystery of myths,   "
************************************************************************************************

2 comments:

Viji Raja said...

very bi............g article.it was very interesting like seeing a thrilling movie.awaiting for that particular day to come &see what is going to happen.

Jeyaram said...

Very much informative. This article shows the quantum of pain taken by you for collecting the facts.

Post a Comment