Total Pageviews

Saturday, March 3, 2012

அகிலம் அழியும் புரளியும்....'அப்போகாலிப்ஸ்' தியரியும்...



அகிலம் அழியும் புரளியும்....'அப்போகாலிப்ஸ்' தியரியும்...



  ( Part - 1)


2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ம் தேதி அகிலம் அழியுமா ??

இது இன்றைக்கு சற்றேறக்குறைய உலகமக்கள் அனைவர் நெஞ்சிலும் அலைபாயும் கேள்வி.??!!

ஆம்.
1960களில் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒலிக்கத் துவங்கிய இக் கேள்வி இன்றைக்கு மேலும் வலுப்பெற்று அதன் பதில் போல் ஹாலிவுட் மாயாஜாலங்களால் மிகப் பிரும்மாண்டமான திரைப்படம் ஒன்றும் உருவாக்கப்பட்டு அகிலம் முழுதும் அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ,அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு , தெரியாதவர்களையும் தெரியவைத்தாயிற்று.


நாற்பது ஆண்டுகாலமாக மெல்ல மெல்ல அகிலத்தை அச்சமூட்டத் துவங்கியிருக்கும் இக்கேள்விக்கு என்னதான் ஆதாரமாம்.?!
மாயன் காலண்டர்.
ஆம். அதுதான் ஆதாரமாம்.

உலகம் ஒருநாள் அழியும் என்பது இன்றைக்கு ,நேற்றைக்கு சொல்லப்பட்டு வருகின்ற விஷயமல்ல.
அதில் சிலவற்றைப் பார்ப்போம்.

1. இந்துக்களின் நம்பிக்கைப்படி கலியுகமுடிவில் . (தற்போது நடைபெறுவது கலியுகம்.)
2. அனைத்து கிரகங்க்களும் ஒரே நேர்கோட்டில் ஒன்றை ஒன்று நெருங்கிவரும் போது. இந்நிகழ்வு அடுத்து நிகழவுள்ள நாள் 2040 செப்டம்பர் 8.
3.இஸ்லாம் காலண்டர் முடிவுறும் போது. 2076. கி.பி.
4. யூதர்களின் காலண்டர் முடிவுறும்போது. 2240.கி.பி.
5. மாயன் காலண்டர் முடிவுறும் போது. கி.பி. 2012 டிஸம்பர் 21ம் நாள்.

இதே போல் 'வீனஸ்' சுழற்சி என்ற பெரும் சுழற்சியில் (Great cycle) 28.10.2011 ல் உலகம் அழியும் என்று ஸ்வீடனில் கூறப்பட்டது.ஆனால் அழியவில்லை.

தற்போது நம்மை ஆட்டிப் படைப்பது ''மாயன் காலண்டர்''.

பொதுவாக ஆண்டுகள் குறிப்பிட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை.
1.தமிழ்ப் பஞ்சாங்க ஆண்டு.
2.ஆங்கில ஆண்டு.
3.திருவள்ளுவராண்டு.
4. இஸ்லாம் காலண்டர் ஆண்டு.
5.யூதர்கள் ஆண்டு.
6. மாயன் காலண்டர் ஆண்டு.
இப்படிப் பல.

ஆங்கில ஆண்டு அனைவரும் அறிந்ததே.ஊர
நமது தேவைக்கு இரண்டை மட்டும் எடுப்போம்.
1.தமிழ்ப் பஞ்சாங்க ஆண்டு.
2. மாயன் காலண்டர்.

தமிழ்ப் பஞ்சாங்க ஆண்டு என்பது சித்திரையில் துவங்கி பங்குனியில் முடிவது.

சூரியனின் நீள்வட்டப்பாதையை (elliptical) பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து , ஒவ்வொரு பகுதியையும் ஒரு ராசியாக கணக்கிட்டு மேஷம் முதல் மீனம் வரை சூரியன் சுற்றிவருவது 
தமிழ்ப் பஞ்சாங்க ஆண்டு ஆகும்.
அதன்படி,
சூரியன் மேஷராசியில் (பகுதியில்) நுழையும் நொடி சித்திரை பிறப்பு. ஆண்டுத் துவக்கம். மீன ராசியிலிருந்து வெளியேறும் நொடி பங்குனி முடிவு. அதாவது ஆண்டின் முடிவு.

 ஒரு ஆண்டில் சூரியன் கீழ்க்கண்டவாறு பன்னிரண்டு பகுதிகளைக் கடக்கிறது.

1.மேஷம் - சித்திரை.

2.ரிஷபம் - வைகாசி.

3. மிதுனம் - ஆனி.

4. கடகம் - ஆடி.

5. சிம்மம் - ஆவணி.

6. கன்னி - புரட்டாசி.

7. துலாம் - ஐப்பசி.

8. விருச்சிகம் - கார்த்திகை.

9. தனுர் - மார்கழி.

10. மகரம் - தை.

11. கும்பம் - மாசி.

12.  மீனம் - பங்குனி.

                      இந்த ராசிப் பகுதிகளில் மற்ற கிரங்கள் நுழைவதும் வெளியேறுவதும்தான் 'ஜாதகக் கணிப்பின்' அடிப்படை.

சூரியனின் நீள் வட்டப் பாதயின் பயணம் 'தமிழ்ப் பஞ்சாங்க ஆண்டு.'
_______________________________________

ஆனால் சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளின் அடிப்படைதான் மாயன் காலண்டர்.
                ____________________________________________


இநதக் காலண்டரைப் பற்றி நாம் அறியும் முன் அது உருவான விதத்தை அறிவோம்.

''மாயன் காலண்டரை'' உருவாக்கியவர்கள் மாயன் இந்தியர்கள்.

யார் இந்த மாயன் இந்தியர்கள் ?

வட அமெரிக்க பகுதியில் உள்ள குவாந்தமாலா, மெக்ஸிகோ, ஹோண்டுரா, எல் சால்வடார் மர்றும் பெலிக்ஸ் மலைக்காடுகளில் வாழ்ந்த பழங்குடியினர்தான் ''மாயன் இந்தியர்கள்''.




இவர்கள் கடைப்பிடித்து வந்தது ''மெஸோ அமெரிக்கன்''  நாகரீகம் என்று அழைக்கப்படுகிறது.
இவர்களின் மத அடிப்படை பழக்க வழக்கம்தன் ''அப்போகாலிப்ஸ்''.
இவர்களின் தெய்வம் ''சூரியன்''.
சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளின் அடிப்படையில் இவர்கள் உருவாக்கிய காலண்டர்தான் 'மாயன் காலண்டர்.'

இவர்களின் காலம் கி.மு. 2600 க்கும் முன்னால் என்று சொல்லப்படுகிறதே தவிர சரியான கால அளவு இதுவரை வரயறுக்கப் படவில்லை.
இவர்களின் நாகரீகம் (மெஸோ அமெரிக்கன்) பற்றிய அகழ்வாராய்ச்சி , அனைத்து துறைகளிலும் இவர்கள் ''நிபுணத்துவம்'' பெற்றிருந்ததைப் பறைசாற்றுகிறது.

கடுங்காடுகளை ஒழுங்கு படுத்துதல் , திறமையான விவசாயம் என்பது மட்டுமல்ல கடும் கோடையில் நன்னீர்ப் பஞ்சம் வராமல் இருக்க பூமிக்கு கீழ் ஆழ்துளை ஆழ்துளை சேகரிப்பு மையங்களை அமைத்து, மழைநீர் சேகரிப்புக்கு முன்னோடியாக விளங்கியுள்ளார்கள் இந்த மாயன் இந்தியர்கள்.
இவர்களின் கணிதநிபுணத்துவம் பிரமிப்பூட்டுவதாக உள்ளது என்றும் மகத்தானது என்றும் அனைவராலும் போற்றப்படுகிறது.
அந்த நிபுணத்துவத்தின் வெளிப்பாடுதான் மாயன் காலண்டர்.






'ட்ஜோல்கின்'(Tzolkin) என்பதே மாயன் காலண்டரின் அடிப்படை. அதாவது 20 களின் மடங்கு.
ஒரு வருடத்திறறுகு 365 நாட்கள் என்பதுபோல் இவர்கள் ஆண்டுக்கு 360 நாட்கள் என்று கணக்கிட்டார்கள்.
ஒரு ஆண்டுக்கு 18 மாதங்கள். ஒரு மாதத்திற்கு 20 நாட்கள்.  18x20=360 நாட்கள்.

மாதங்கள் யுய்னல்ஸ் (uinals) என்று அழைக்கப்பட்டது.

18 யுய்னல்ஸ் ஒரு 'டன்'(Tun).

20 'டன்' கள் ஒரு 'காட்டன்'  ( Katun) இருபது ஆண்டுகள்.

20 'காட்டன்'கள் ஒரு 'பக்டன்'.  (20 katuns=1 Baktun

அதாவது 20x20 =400ஆண்டுகள் ஒரு பக்டன்.

ஒரு காலண்டரின் மொத்த கணக்கீடு 13 பக்டன்கள் = 13x400 = 5200 ஆண்டுகள்.

மாயன் இந்தியர்களின் இந்த காலண்டர் துவங்கிய நாள் கி.மு. 3114  ஆகஸ்டு திங்கள் 11ம் நாள்.
அந்த காலண்டரின் கணக்குப் படி இறுதிப் 13 வது பக்டனின் முடிவு நாள் தான் ...

கி.பி. 2012 டிஸம்பர் 21 ம் தேதி முற்பகல் 11.00 மணி 11.00 நிமிடம்.

அதன் பின்பான அடுத்த 14 பக்டனுக்கான கணக்கீடு அங்கே இல்லை.

மாயன் இந்தியர்களின் 'சூரிய கோயில்'  நால் புறமும் 13 படிக்கட்டுகளைக் கொண்ட ஒரு அமைப்பு.
ஒவ்வொரு படிக்கட்டும் ஆண்டுகளைக் குறிப்பது.

அவர்கள் சூரியன் ஒரு புள்ளியிலிருந்து புறப்பட்டு மறுமுறை அவ்விடம் வந்து சேருவதற்கு 52 ஆண்டுகள் என்று கணக்கிட்டு, ஒவ்வொரு 52 ஆண்டு முடிவிலும் சூரியன் வெகுண்டு எழுந்து 'தம்மை'த்தாக்குவான் என்று கணித்தார்கள்.

அவ்வாறு சூரியன் தம்மை தாக்காமல் இருக்க அந்த 52ம் ஆண்டு முடிவில் அந்தக் கோயிலில் ஒரு சூரியத் திருவிழா நடத்தி ( Appocalyps) ஒரு நரபலியை அரங்கேற்றி வந்தார்கள்.

அதன் படி ஒரு மனிதனின் நெஞ்சை உயிருடன் கீறி இதயத்தை எடுத்து ''அந்த'' குறிப்பிட்டநேரத்தில் சூரியனை நோக்கி வீசுவார்கள்.
அவ்வாறு செய்தால் அடுத்த 52 ஆண்டுகள் ''அச்சமில்லை'' என்பதுதான் அந்த ''அப்போகாலிப்ஸ்'' நம்பிக்கை.

பின்னர் ஒரு சமயம் ஸ்பானிஷ் மக்களால் மாயன் இந்தியர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டனர் என்பது வேறுகதை.
ஆனால் அந்த மாயன் இந்தியர்களின் கோயிலில் கி.பி.2012 டிஸம்பர் 21 ம் நாளுக்கு பின் கணக்கீடு எதுவும் இல்லை என்பதால்..
அன்றுடன் அகிலம் முடிந்துவிடுமோ என்பதுதான் தற்போதைய கேள்வி.

பொதுவாக உலகம் அழிவதற்கு கீழ்க் கண்ட சாத்தியக்கூறுகள் மட்டுமே உள்ளது.

1.Sun spot storm. ( சூரியப் புயல்).

2. Cosmic conjunction of earth or Sun. ( பிரபஞ்ச சுழற்சியில் மாற்றம்)

3. Ecological collaps  ( இயற்கை சமநிலை வீழ்ச்சி)

4. A sudden reversal of Magnetic field. ( காந்தப் புலத்தின் திடீர் மாற்றம்)

5. Solar shift ,a Venus transit and violent earth quakes ( சூரியன் மற்றும் வீனஸ் கிரகத்தின் நகர்ச்சி அதனால் பூமியில் ஏற்படக்கூடிய பயங்கர பூகம்பங்கள்.)

எல்லாம் சரி.
ஆனால் 
இவைகளில் ஏதாவது ஒன்று 21.12.2012 அன்று ஏற்பட வாய்ப்புள்ளதா???



அந்தக் கேள்விக்கான பதிலை ''இரண்டாம் பாகத்தில்'' பார்ப்போம்.










By
AR. SHANMUGAMURTHY.




No comments:

Post a Comment