Total Pageviews

Wednesday, March 7, 2012

ராஜ யோகா......




பகுத்தறிவு என்றால் என்ன?

”பகுத்” ஐ எடுத்து விடுங்கள். மிச்சம் என்ன இருக்கிறது?

அறிவு.

அவ்வளவுதான்.

மூளை, மனிதனின் செண்ட்ரல் பிராஸஸிங் யூனிட்.

ஐம்புலன்கள், அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி இவையெல்லாம் இன்புட் சானல்கள். இந்த இன்புட்களை பிராஸஸ் செய்து ரிஸல்ட் தரவேண்டியது மூளையின் வேலை. இந்த பிராஸஸ் உங்களுக்கு, எனக்கு, உங்களுக்கும் எனக்கும் நண்பர்கள், விரோதிகள் எல்லாருக்கும் பொது. ஆனால் அவுட்புட்கள் வித்தியாசமாக இருக்கின்றன.

ஏன்?

எல்லாக் கம்ப்யூட்டர்களிலும் செண்ட்ரல் பிராஸசிங் யூனிட்கள் இருக்கின்றன. எல்லாமே இன்புட்களை சரியாகப் பிராஸஸ் செய்து சரியான அவுட்புட்களைத் தருகின்றனவா?

உங்களுக்கு ஒரு டிராயிங் வேண்டும். கீ போர்ட்தானே இன்புட், என்னதான் இன்புட் கொடுத்தாலும் டிராயிங் வருமா? ஆட்டோகேட் சாஃப்ட்வேர் இருந்தால்தானே வரும்?.

நீங்கள் டைப் செய்வது ஒரு கடித வடிவில் வரவேண்டும். கீபோர்ட் மட்டும் போதுமா?

எப்படி வரும்?

எம்.எஸ். வேர்ட் இருக்க வேண்டும்.

ஒரு அக்கவுண்டிங் ஸ்டேட்மெண்ட் வேண்டும்.

எக்ஸெல் வேண்டுமல்லவா?

ஆக, இன்புட்களுக்கு மீறி ஒரு விஷயம் தேவையிருக்கிறது, சாஃப்ட்வேர்.

அப்போது மனித சி.பி.யூ வில் கடவுள் அவுட்புட்டாக இருக்க வேண்டுமானால் என்ன சாஃப்ட்வேர் இருக்கிறது? அல்லது எப்படி புரோக்ராம் செய்வது? யாராவது சொல்லியிருக்கிறார்களா?

ஆம்.

சொல்லியிருக்கிறார்.

யார்?

ஸ்வாமி விவேகானந்தா.

அந்த புரோக்ராம் பெயர் என்ன?

ராஜ யோகா.

ஒரு விஞ்ஞானியாகவோ, பொறியாளனாகவோ ஏகப்பட்ட பிராக்டிகல் செஷண்கள் இருக்கின்றன. நாம் நம்மை (அல்லது கடவுளை) அறிய பிராக்டிகல்ஸ் இருக்காதா?

அவைகளைச் செய்து பார்த்த பிறகும் நமக்கு எதுவும் பிடிபடவில்லை என்றால் அப்புறம் நாத்திகர்கள் ஆகலாமே?

எப்படி சவுகர்யம்?

ராஜயோகா கற்க விருப்பமா? 


நீங்கள் தயாராயிருந்தால் வகுப்புகள் ஆரம்பிக்கலாம்.





2 comments:

Jananiramya said...

S master we r ready....The above verses r very practical and true!!!!!

gayathri said...

வகுப்புகள் ஆரம்பிக்க நீங்க தயாராக இருந்தால்,கற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் மாஸ்டர் ........வகுப்புகள் எப்பொழுது மாஸ்டர் ?

Post a Comment