Total Pageviews

Monday, May 9, 2011

பயணங்கள் முடிவதில்லை










எதையெதையெல்லாமோ
சேர்த்து வைக்கிறோம்
தேவைப்படலாமென.
எதுவுமே
தேவையற்றுப்போவதாக
முடிவுற்று
நிறைகிறது பயணம்.

எதுவும் பேசமுடிவதில்லை
பயணிக்கையில்.
பேசாதும்
இருக்கமுடிவதில்லை


வாழமுடியாத போதும்
வாழ்ந்தபடி இருப்பது போல.
வாழமுடியாத போதும்
வாழ்கிறோம்.


செல்ல விரும்பாதபோதும்
செல்கிறோம்.
வாழ்க்கை நம் கையில்
என்றாலும்
வாழ்வதும் செல்வதும்
நம் கையில் இல்லை.

பயணங்கள்
துறவிகளை உருவாக்குகின்றன.
அதன்பின்
பயணங்களைத்
துறவிகள் உருவாக்குகின்றனர்.


உணரமுடிவதில்லை
துறவிகளுக்குள் நீளும்
பயணங்களையும்
மனதிற்கடியில்
உருளும் கற்களையும்.

2 comments:

velvijayan said...

வாழமுடியாத போதும் வாழ்ந்தபடி இருப்பதற்கு கொஞ்சம் சேர்த்து வைக்க வேண்டாமா மாஸ்டர்?

Venkat said...

நான் சமீபத்தில் படித்த ஒரு வரி ...
Earn money to live... don't live to earn money!

Post a Comment