Total Pageviews

Friday, February 11, 2011

உடல் வலியா? கவளி வர்மமும் ,444 ம்- தெரிந்து கொள்வோமா?






செங்கோட்டை கிருஷ்ணன் வாத்தியார்.

கரையான் குழி(நாகர்கோவில்), டேவிட் ஆசான்.

குன்னிக்கோடு பாஸ்கரன் நாயர்.


இவர்கள் மூவரும் எனக்கு வர்மம் கற்றுக்கொடுத்த குருமார்கள். இவர்களுள் கிருஷ்ணன் தாத்தா எனக்கு வர்மத்துடன் சிலம்பமும் கற்றுக்கொடுத்தார். இப்போது இவர்கள் மூவருமே நம்முடன் இல்லை. இந்த ஜென்மத்தில் எனக்குக் கிடைத்த பொக்கிஷம் இந்த குருமார்கள். மனித உடற்கூறு ரகசியத்தை கல்லூரி சென்று படிக்காமல் சுயமாகவே உணர்ந்து கொண்ட "சுயம்பு" இவர்கள்.


சகோதரரின் சிகிச்சைக்காகத்தான் , டேவிட் ஆசானைப் பார்க்க போயிருந்தோம். எனது ஆர்வத்தைக் கவனித்து, அவராகவே வர்ம மருத்துவத்தைக் கற்றுக்கொடுத்தார். அது எனது பாக்கியம்.

ஒருமுறை அவருடைய வைத்தியசாலைக்கு, 
ஒரு பெண் தன்னுடய சிறு குழந்தையைக் கொண்டு வந்து, "குடல் ஏறி" இருப்பதாகக் கூறினார். 

ஆசான், அந்தக் குழந்தையின் பெரு விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையிலுள்ள இடத்தில் தனது விரல்களால் பரிசோதித்த பின் "குடல் தட்டி விட்டார்".




வழக்கமாக நாடிப்பரிசோதனை செய்யும் இடத்திலில்லாமல் இந்தக்"குறிப்பிட்ட" இடத்தில் பரிசோதனை செய்ததைப் பற்றி ஆசானிடம் கேட்டபோது ,இந்த இடத்தில் தான் பெருங்குடலின் சக்தி, மையம் கொள்வதாகக் கூறினார் .

நண்பர்களே! இந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஒரு வர்மம் இருக்கிறது. இதற்கு"கவளி வர்மம்" என்று பெயர். (பொதுவாகவெற்றிலைக்கட்டிற்கு,வெற்றிலைக்கவளி எனப்பெயர். கட்டை விரலுக்கும், மற்ற நான்கு விரல்களுக்கும் இடைப்பட்ட இடத்தில் எவ்வளவு வெற்றிலை பிடிக்குமோ அந்த அளவிற்குத்தான்  வெற்றிலைக்கட்டு இருக்கும்").

கவளி என்றால் என்ன பொருள் தெரியுமா?

க+வளி. அதாவது கவனிக்கப்படவேண்டிய வளியாகிய(வளி என்றால் காற்று) அபான காற்று.


கவளி வர்மம் என்பது, மனித உடலில் முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய அபான வாயு மையம் கொண்டுள்ள வர்மம்,



இந்தக் கவளி வர்மத்தின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?. மனித உடலிலுள்ள வர்மங்களை இளக்க, முதலில் இந்தக் கவளி வர்மத்தை இளக்கினால் போதும். நாடி பரிசோதனைக்கு முன் இந்த கவளி வர்மத்தை இளக்கினால் நாடிகளைத் துல்லியமாகக் கணிக்கலாம்.




பின்னாளில் அக்குபஞ்சர் படித்தபோது ஒரு ஆச்சர்யம்!


அட! நம்ம கவளி வர்மம் தான், LI 4



அக்குபஞ்சரில், இந்த LI 4 ன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?


உடலிலுள்ளக் கழிவுகளை வெளியேற்ற இந்த LI 4 ஒரு முக்கியப்புள்ளி. வாயுவால் வரக்கூடிய வலிகளில் இருந்து நிவாரணம் பெற இந்த LI 4 ஐ தூண்டினால் போதும்.

வாய்வுக்கோளாறுகளைத் தீர்க்க இந்த LI 4 ஒரு முக்கியப் புள்ளி.

மருத்துவ யோக முத்திரைகளில், வாயு முத்திரையும் வாய்வு நோய்களுக்கு முழு நிவாரணம் தரக்கூடியதுதான். இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், வாயு முத்திரை செய்யும்போதும் இயக்கப்படுவதும், இந்த "கவளி' வர்மமே.



அக்குபஞ்சர் மருத்துவத்தில் 444 என்பது பிரசித்தம். அதாவது LI 4 ம் ST 44 ம் சேர்ந்து 444 என வழங்கப்படுகிறது. உடல் வலியோ, சோம்பலோ அதிகமாக இருக்கும் போது இந்த இரு புள்ளிகளிலும் அழுத்தம் கொடுங்கள். இந்த ST 44 என்பது வயிற்றுப் பாதையிலுள்ள water point.
                                                                                                                                      




என்ன? வலி போயிந்தியா!!!!!!!?

                                                                                                                                                                                                                                    இன்னும் சில அக்கு
புள்ளிகளுடன் பின்பு சந்திக்கிறேன்.


                                                                                      

3 comments:

gayathri said...

thank u very much master, for making us to know about acupressure and varma points too....it is very useful.waiting to know more....

vijay said...

Thank you *Master* we are blessed by your three *GURUs* through *YOU* to know about this accupressure subject .i-e. we are
blessed by them to see those supreme souls in a single form, that is you our *MASTER*.Awaiting for more presious informations.Thank you master.

ganesan said...

பிடித்திருக்கிறது

Post a Comment