Total Pageviews

Tuesday, February 8, 2011

பிராண சிகிச்சை


பிராண சிகிச்சை உண்மையா?


ஆரம்ப காலத்தில் இந்த பிராண சிகிச்சையைப் பலபேரிடம் கற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் இதனை வெறும் "டுபாக்கூர்" என்றுதான் நினைத்திருந்தேன்..திருச்சுழி ரமண வித்யா பீடம் நர்மதா அம்மாவிடம் இதனைக் கற்றபோது கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அப்போதெல்லாம் சாமியிடம் இது பற்றிக் கேட்கத் தயக்கம் இருந்தது. ஒருநாள் இந்த மருத்துவம் பற்றி , இதனுடைய சூட்சுமம் பற்றி சாமியே கூறியபோது,

இதனுடைய முக்கியத்துவம் பற்றி உணர்ந்து கொண்டேன்.
பின்னாட்களில் சாமியிடம் முறையான பயிற்சி பெற்று இந்த மருத்துவ முறையைப் பயன்படுத்திப் பார்த்தபோது உடல், உள்ள நோய்கள் குறைவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.தூரத்தில் இருந்தபடியே சிகிச்சை அளிக்கும் முறை () இப்போது பிரபலமாகி வருகிறது. காரணம், மிகவும் பயனுள்ள, நலம் பயக்கிற உறுதி செய்யப்பட்ட ஆற்றல் வாய்ந்த சிகிச்சை முறையாக இந்தச் சிகிச்சை இருந்து வருகிறது.  ஆனால் இந்த பிராண சிகிச்சையை ஒரே நாளில் கற்றுக்கொடுக்கிரார்களே,  அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஒரு அருமையான மருத்துவக்கலையை வியாபாரம் ஆக்குகிறார்களே என்ற கவலை எனக்குண்டு.
இந்தச் சிகிச்சை முறையில் வெற்றி பெற சாதகன் யோக தாரணையிலும், பிராணயாமப் பயிற்சிகளிலும் தேர்ச்சியடைந்தவராக இருப்பது மிக முக்கியம்.  இந்த இரண்டு சாதனைகளையும் விடாது பின்பற்றி வந்தால் யாராலும் ஒரு நல்ல ஹீலராக மாறமுடியும். 
 பிராணனைத் தனக்குள் தேக்கி வைத்துக் கொள்ளத் தெரிந்தவராலேயே, உபரியானப் பிராணனை மற்றவருக்குத் தனது கைகளின் மூலமாகக் கொடுக்க முடியும்.  நன்றாகப் பயிற்சி பெற்ற ஒரு யோகியால் கண்கள் மூலமாகவே நோயைக் குணமாக்கமுடியும்.

நமது உடல், ஐந்து கோஷங்களை உள்ளடக்கியது என்பதை அறிந்திருக்கிறோம். அவற்றுள் அன்னமயகோஷத்தில் நோயினுடைய தாக்கம் வெளிப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே நமது பிராணமயகோஷம் பாதிப்படைகிறது. 
இதனை ஸ்கேனிங் என்னும் முறையினால் ஒரு நல்ல ஹீலரால் உணர்ந்து கொள்ளமுடியும். "முத்திரை" பயிற்சி பெற்றவரால் இந்த ஸ்கேனிங் முறையைக் கற்றுக்கொள்வது எளிது.


டாக்டர் ஜான் ஏ. ஆஸ்டின் என்ற அமெரிக்க டாக்டர். யூனிவர்சிட்டி ஆப் மேரிலாண்ட் ஸ்கூல் ஆப் மெடிசனில் உதவி பேராசிரியர்.இவர் இந்த முறைகளை ஆய்வு செய்து, ‘பொதுவான உண்மை ஒன்று உள்ளது. அது, பிராண சிகிச்சை அனைத்தையும் குணப்படுத்தும்’ என்று கண்டுபிடித்துள்ளார். இது பற்றிப் புத்தகமும் எழுதியுள்ளார். தூரத்து சிகிச்சை என்பது பிரபஞ்ச பிராண சக்திதான் என்கிறார்.

பிராண சிகிச்சை செய்யும்போது, நோயாளி ஓய்வான மனநிலையில் படுக்கையில் படுத்திருக்கலாம் அல்லது உட்கார்ந்திருக்கலாம். சிகிச்சை நேரம் பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். சிகிச்சையைப் பெறும் நோயாளி அந்த நேரத்தில் அமைதியாக இருப்பதே மிகவும் முக்கியம்.


ஆங்கில மருத்துவமோ அல்லது வேறு மருத்துவமோ செய்து கொள்பவர்கள் இந்தத் தூரத்துச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது தூரத்து சிகிச்சை மற்றும் மருந்துகள் இணைவதால் குணமளிப்பது எளிதாகிவிடுகிறது.
சில ஆங்கில மருத்துவர்கள், ‘அறிவியல் ரீதியாக நிரூபிக்காமல், சக்திமிக்க மருத்துவம் இது என்று நீங்கள் சொல்வதை எங்களால் ஏற்றக் கொள்ள முடியாது’ என்று டாக்டர் ஆண்டினை அவமதித்து எதிர்ப்பும் தெரிவித்தார்கள்.
ஆனால், அமெரிக்க மக்கள் தொகையில் 4% பேர் இந்த தூரத்துச் சிகிச்சையை செய்து நன்கு குணம் பெற்றுள்ளனர். இப்போது இந்த சதவிகிதம் உயர்ந்துவிட்டது.
2000 ஆம் ஆண்டு 2,774 நோயாளிகளை 23 விதமான ஆய்வுகள் மூலம் மீண்டும் ஆராய்ந்தபோது பிராண சிகிச்சை, தூரத்தில் இருந்து குணப்படுத்துவது முதலியன அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகபட்ச பலன்களைத் தந்துள்ளது. டாக்டர்களின் எதிர்ப்பால் ஆழ்ந்து செல்லாமல் ஆய்வு செய்தபோதே இந்தச் சிகிச்சையின் நன்மைகள் பிரமிக்கத்தக்கதாக இருப்பது ஆச்சரியம்தான் என்கிறார் டாக்டர் ஆஸ்டின். உடல் நோய்களுடன் மனக்கவலைகளும் உறுதியாய் குணமாகிவிடுகின்றனவாம், இந்த தூரத்துச் சிகிச்சையில்!


ராஜபாளையத்தில் இருந்துகொண்டுஅமெரிக்காவில் உள்ள உங்கள் மாமியார் குணமாக இருபது நிமிடங்கள் ஹீலிங் செய்யுங்கள். உங்கள் மூளை அனுப்பும் அதிர்வுகள் விண்வெளியில் பயணிக்கும். மாமியாருடைய உடல் நம்முடைய அதிர்வுகளைக் கிரகிக்கும். முடிவில் அது மாமியாரின் உடல் உள்ளே வரை உடனே சென்றடைந்து விடும். நம்முடைய அதிர்வுகள் எங்கும் நிறைந்துள்ள உயிர்ச்சக்தியை () அனுப்புவதால், அது நோயாளி உடலில் இறங்கி குணப்படுத்தி விடுகிறது. ராஜபாளையத்தில் ஹீலிங் செய்பவர், தன் பிராணசக்தி தன் மாமியாருக்குச் சென்றடைவதை பாவனையில் காட்சியாகப் பார்ப்பது தான் தூரத்து சிகிச்சையில் மிகவும் முக்கியம்.  (இதற்குத்தான் தாரணாப் பயிற்சி அவசியம்). ‘ரெய்கி’ மருத்துவர்கள் தூரத்துச் சிகிச்சை முறையில் தங்கள் அருகில் இல்லாத நோயாளிகளையும் எளிதாகக் குணப்படுத்திவிடுவது இதனால் தான்.
தூரத்துச் சிகிச்சையில் மற்றவர்களுக்காக ஹீலிங் செய்யும் போது, நோயாளியின் உடலில் இண்டர்லெகின்ஸ் என்ற பொருள் சுரந்து, இரத்தத்தில் கலப்பதால் உடலில் உள்ள நோய்களும், தொற்றுநோய்க் கிருமிகளும் கட்டுப்பட்டு ஆரோக்கியத்தைத் திரும்பப் பெற்று விடுவார்.
 அமெரிக்க டாக்டருக்கு புரிந்த இந்த உண்மைகளை நாமும் பின்பற்றுவோம். நலம் பெறுவோம்.

6 comments:

gayathri said...

distance ஹீலிங் செய்யும் போது நோயாலியும் அதனை பற்றி தெரிந்திருக்க வேண்டுமா ?எந்த விதமான நோயையும் குனபடுத்த முடியுமா?

gayathri said...

இது நோயாளியின் கர்மாவை நாம் ஏற்று கொள்வதுபோல் ஆகாதா?self healing செய்து கொள்வது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

suganya shankar said...

Sir,

It's is the first time I have heard about this. Very well said and I am astonished the facts about distance healing. How amazing it is to know about our ancient medical practice. I used to wonder how it is possible to treat diseases through siddha, homoepathy during my college days. Probably it was only the commercialised part I understood.

Many thanks for this valuable information.

Shankar Ganesh

abarnavijay said...

"பிராணனைத் தனக்குள் தேக்கி வைத்துக் கொள்ளத் தெரிந்தவராலேயே, உபரியானப் பிராணனை மற்றவருக்குத் தனது கைகளின் மூலமாகக் கொடுக்க முடியும். "is it possible for me to learn this master?if so please explain master?

AK said...

Sir, is "prAna sikichai" the same as "reiki" ??

viveka said...

நன்றி வாழ்த்துக்கள்

Post a Comment