Total Pageviews

Friday, February 4, 2011

கவளம்(oil pulling) தெரியுமா?


Master what about oil pulling??? Is it really works...........jananiramya.


ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த ஆயில் புல்லிங் பற்றி நமது யோகிகள் கூறும்போது மேலை நாட்டவர் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ரம்யா,.அதையே அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டினார் இந்நாளைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர்.

அதன் பிறகே ஆயில் புல்லிங் உலகம் முழுவதும் பிரபலமாகியது.
இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் இந்த ஆயில் புல்லிங் செய்தி வந்தபின்பு நம்மவர்களும் இந்த மருத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள்.

இந்த ஆயில் புல்லிங் ஒரு holistic treatment என்பதில் சந்தேகமில்லை. இந்த மருத்துவத்தினால் நாள்பட்ட நோய்கள்கூடக் கட்டுப்படுகிறது என்பது அனுபவ உண்மை. கிட்டத்தட்ட நம் உடலில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான நோய்களுக்கும் ஓர் எளிய, பாதுகாப்பான, மலிவான மருத்துவ முறை ஒன்று உண்டு என்றால், அது இந்த ஆயில் புல்லிங் தான்.ஆனால் இது நவீன காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையல்ல. நமது யோகிகளால் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்ட "கவளம்" என்ற மருத்துவமுறை.

மூலிகைகளினால் காய்ச்சப்பட்ட எண்ணெய்யைக் கொண்டு வாய்க்கொப்பளிப்பதற்கு "கவளம்"என்று பெயர். இந்தக் கவளம் நோயின் தன்மையைப் பொறுத்து நான்காகப் பிரிக்கப்பட்டது.


ஸ்நேகன கவளம்: இது வாதத்தைத் தணிப்பது.


சமன கவளம் : பித்தத்தைத் தணிப்பது.


சோதன கவளம்: கபத்தைத் தணிப்பது.


ரோபண கவளம்: வாய்ப்புண் மாற்றுவது.


ஸ்னேகன கவளம் என்பது எண்ணெய்யைக் கொண்டோ, எள்ளை அரைத்துக் காய்ச்சியத் தண்ணீரைக் கொண்டோ வாய்க்கொப்பளிப்பது. வாத நோய்களுக்கும், குறிப்பாக பல் நோய்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும். அரிமேதாதி தைலத்தினால் செய்யப்படும் கவளம் பல் நோய்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சமன கவளம் என்பது கசப்பு, துவர்ப்பு, இனிப்பு,சுவைகள் சேர்ந்த மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயங்களைக் கொண்டும், குளிர்ச்சி தரக்கூடிய மூலிகைச் சாறைக்கொண்டும் வாய்க்கொப்பளிக்கும் முறை. தேன் கலந்த திரிபலா கஷாயம் இதற்கு எடுத்துக்காட்டு. மன நோய்களுக்கு இது சிறந்தத மருந்து.சோதன கவளம் என்பது காரம், புளிப்பு போன்ற சுவைகளையுடைய கஷாயங்களால் செய்யப்படுகிறது. இதனால் சுவை அறியும் திறன் கூடுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயன்படும். இஞ்சிக் கஷாயத்துடன் தேன் சேர்த்து சோதன கவளம் செய்யலாம்.


ரோபண கவளம் அதிமதுரக் கஷாயத்தால் செய்யப்படுவது. இது வாயில் வரக்கூடிய கேன்சரைக்கூட குணமாக்கும் என்ற மருத்துவச் செய்திகளைக் கண்டு நான் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.


இந்த ஆயில்புல்லிங் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் செய்தல் நலம். விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தைச் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே எண்ணெயையாவது அல்லது Brand-ஐயாவது மாற்றிவிடுங்கள். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!

இந்த மருத்துவத்தை, கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய் நிமித்தம் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. அணையப் போகும் நெருப்பு சுடர் விட்டு கொஞ்ச நேரம் எரியுமல்லவா..? அதுபோலத்தான்.

சரி.. இப்படி செய்வதால் எப்படி எல்லா நோய்களும் குணமாகும் என்று கேட்கிறீர்களா? அதற்கு சரியான விளக்கமும் அறிவியல் ரீதியில் தரப்படுகிறது. அதாவது, பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து mucus membrane மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலின் Metabolism புத்துணர்வு பெற்று நாள்தோறும் நலத்துடன் மிளிர்கிறது.

ஒரு மனிதனுக்கு உமிழ் நீர் ஒழுங்காகச் சுரந்து, கட்டிப்படாமல் நீர்மத்தன்மையுடன் காணப்பட்டாலே ஆரோக்கியம் தானாக வந்துவிடும். "கோதடர்ந்த உமிழ்நீரை முறிய வைத்தால் கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே" என்பது அஹஸ்தியர் வாக்கு. .பாதி ஜீரணம் உமிழ் நீருடன் கலந்து, மென்று சாப்பிடுவதிலேயே முடிந்து விடுகிறது.உமீழ்நீர்ச்சுரப்பிகளை ,ஆயில்புல்லிங் நன்றாகச் சுரக்க வைக்கிறது.

சாமி எனக்குக் கூறிய வைத்தியம் ஒன்று இருக்கிறது ரம்யா, வெம்பிய கண்டங்கத்தரிப் பழத்தை பல இடங்களில் ஊசியால் நன்கு குத்தி நல்லெண்ணெய் விட்டு வறுக்க வேண்டும். இதனை பிழிந்து எண்ணெயை வடித்து, ஈறு கரைந்துள்ள இடங்களில் தடவ ஈறு இறுகும். பழத்தை இளஞ்சூட்டுடன் மென்று வாய் ஈறில் வைத்து அடக்கி வர ஈறு பலப்படும். வெம்பிய கண்டங் கத்தரிப்பழங்களை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யால் வாய் கொப்புளித்து வர (ஆயில் புல்லிங்) பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடையும்

3 comments:

vijay said...

Thank you master for giving us such a detailed answer which is like a mini thesis on oil pulling

jananiramya said...

Thank u master.

gayathri said...

இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? தோல் வியாதி உள்ளவர்கள் எந்த மாதரி செய்ய வேண்டும் மாஸ்டர்?

Post a Comment