Total Pageviews

Wednesday, February 9, 2011

கௌரவர்கள் 100 பேர்

நேற்று ஒரு போன்,

"ஹலோ"

"யார் பேசுறீங்க"

"சார், கௌரவர்களின் நூறுபேரின் பெயரும் தெரியுமா?'

"நீங்க யாரு?'

"..........................."


தொலைபேசி துண்டிக்கப்பட்டது.அந்த நூறு பேர்களின் பெயர்களை புத்தகங்களில் தேடித் தேடி..........................யுரேகா,யுரேகா................. கண்டுபிடிச்சுட்டேன்.அதான் இந்த போஸ்ட்.

கௌரவ சகோதரர்களின் பெயர்கள்:
1 துரியோதனன்

2 துச்சாதனன்

3 துஸ்ஸகன்

4 துஸ்ஸலன்

5 ஜலகந்தன்

6 சமன்

7 சகன்

8 விந்தன்

9 அனுவிந்தன்

10 துர்தர்ஷன் (நம்ம தூர்தர்ஷன் இல்லீங்க)

11 சுபாகு

12 துஷ்ப்ரதர்ஷன்

13 துர்மர்ஷன்

14 துர்முகன்

15 துஷ்கர்ணன்

16 விகர்ணன்

17 சலன்

18 சத்வன்

19 சுலோசன்

20 சித்ரன்

21 உபசித்ரன்

22 சித்ராக்ஷன்

23 சாருசித்திரன் ( ''சித்ர'' ங்கற பேரை நாலு பேருக்கு வச்சிருக்காங்க. ஒரு வேளை அவங்க குலதெய்வம் பெயரை வச்சிருப்பாங்களோ)

24 சராசனன்

25 துர்மதன்

26 துர்விகாஷன்

27 விவில்சு

28 விகடிநந்தன்

29 ஊர்ணநாபன்

30 சுநாபன்

31 நந்தன்

32 உபநந்தன்

33 சித்ரபாணன்

34 சித்ரவர்மன்

35 சுவர்மன்

36 துர்விமோசன்

37 அயோபாகு

38 மகாபாகு

39 சித்ராங்கன் ( சின்னதாத்தா சித்ராங்கதன் பேரை கொஞ்சம் மாத்தி வச்சுட்டாங்க போல)

40 சித்ரகுண்டலன்

41 பீமவேகன்

42 பீமபேலன்

43 வாலகி

44 பேலவர்தன்

45 உக்ராயுதன்

46 சுஷேணன்

47 குந்தாதரன்

48 மகோதரன்

49 சித்ராயுதன்

50 நிஷாங்கீ

51 பாசி (வழுக்கி விட்டுடுவாரோ மத்தவங்கள)

52 வ்ருந்தாரகன்

53 த்ரிதவர்மன்

54 த்ருதக்ஷத்ரன்

55 சோமகீர்த்தி

56 அந்துதரன்

57 த்ருதசந்தா

58 ஜராசந்தன்

59 சத்யசந்தன்

60 சதாசுவக்

61 உக்ரஸ்ரவஸ்

62 உக்ரசேனன் (கம்சன் அப்பா இல்ல இவர்)

63 சினானி

64 துஷ்பராஜா

65 அபராஜிதன்

66 குந்தசாயி

67 விசாலாக்ஷன்

68 துராதரன்

69 த்ருதஹஸ்தன்

70 ஸுஹஸ்தா

71 வாதவேகன்

72 சுவர்ச்சன்

73 ஆதித்யகேது

74 பஹ்வாசி

75 நாகதத்தன்

76 உக்ரசாயி

77 கவசி

78 க்ரதாணன்

79 குந்தை

80 பீமவிக்ரன்

81 தனுர்தரன்

82 வீரபாகு

83 அலோலுமன்

84 அபயா

85 த்ருதகர்மாவு

86 த்ருதரதாஸ்ரயன்

87 அநாத்ருஷ்யன்

88 குந்தபேடி

89 விராவை

90 சித்ரகுண்டலன்

91 ப்ரதமன் ( ஐயோ!எனக்கு அடப்ரதமன்,சக்கப்ரதமன்லாம் ஞாபகத்துக்கு வருதே)

92 அமப்ரமாதி

93 தீர்க்கரோமன்

94 சுவீர்யவான்

95 தீர்க்கபாகு

96 சுஜாதன் (பேரு பஞ்சம் வந்து லேடீஸ் பேர மாத்தி வச்சுட்டாங்க போல)

97 காஞ்சனத்வாஜன்

98 குந்தாசி

99 விராஜஸ்

100 யுயுத்ஸூ (த்ருதிராஷ்டிரனுக்கும் ஒரு வேலைக்காரிக்கும்

பிறந்தவன்.............அட இது வேறயா?)அப்பாடி! ஆம்பளைங்க கும்பல் முடிஞ்சது.அடுத்து
101 துர்ச்சலை (பெண்)
(இந்த திருதிராஷ்டிரனை யார் இவ்வளவு பெத்துக்க சொன்னது.லிஸ்ட்

குடுக்கறதுக்குள்ள மூச்சு வாங்குதுடா சாமி)
கேள்வி கேட்டவங்களுக்கு திருப்தியா?

3 comments:

suganya shankar said...

Sir

You have taken so much pain to get these names but I am wondering what is that gentleman/lady is going to get benefit, by knowing these names. Hats of to you Sir.

I apologise if I had commented anything wrong.

Shankar Ganesh

gayathri said...

தங்களை மிஞ்ச யாரும் இல்லை என்று நிறுபித்து விட்டீர்கள் ?super master......................

jananiramya said...

Master if u start answering for all such questions then i too have a question :- master r u master shiva or encyclopedia shiva.....( havg answers 4 all our questns). master it was not me who called u.!!!!!!!!!!!

Post a Comment