Total Pageviews

Monday, February 7, 2011

"ரத சப்தமி" என்ன செய்யலாம்?

வரும் வியாழக்கிழமை ரத சப்தமி

சூரிய பகவானுக்குரிய நாளாக ரதசப்தமி நாள் கருதப் படுகிறது. தை மாத அமாவாசை நாளுக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமியாக இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏழு வண்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் சூரிய பகவான் வானத் தில் வலம் வருவதாக ஐதீகம் உள்ளது. சூரிய ஒளி இல்லா விடில் பூவுலகில் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப் படுகின்றனர். சூரிய பகவானின் ரதத்திற்கு அருணன் சாரதியாக உள்ளார்.


ரதசப்தமியன்று எருக்க இலைகளை சிரசின்மேல் வைத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும்.ரதசப்தமி திருநாளில் சூரியனின் கிரணங்கள் எருக்க இலைகள் மூலம் ஈர்க்கப்பட்டு, உடலில் ஊடுருவிச் சென்று, வியாதிகளைப் போக்கி குணம் தருகின்றனவாம். அதேபோல், இந்த தினத்தில் ஆறு அல்லது குளத்தில் நீராடுவது சிறப்பு! ரதசப்தமியன்று வீட்டு வாசலை மெழுகி, தேர்க்கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். பிறகு, சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜிக்க வேண்டும். இந்தப் புண்ணிய தினத்தில், வீட்டு பூஜையறையிலும் சூரிய ரதம் போன்று கோலம் வரைந்து, உரிய ஸ்லோகங்கள் கூறி சூரியனை வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்
 தன்னுடய சுழற்சிப் பாதையில்ஆறு மாதமாகச் சூரியனிடமிருந்து  தொலைவில் சுற்றிக் கொண்டிருந்த பூமி அடுத்த ஆறு மாதங்கள் சூரியனுக்கு நெருக்கமான பாதையில் சுற்ற ஆரம்பிக்கிறது. இதனை முறையே தட்சிணாயணம், உத்திராயணம், என்று அழைக்கிறோம். 

சப்தமி என்றால் ஏழாவது நாள் எனப்பொருள் .தை மாதம் வளர்பிறையின் ஏழாம் நாள் பூமி, சூரியனை நெருங்க ஆரம்பிக்கும் முதல் நாள். இந்தக் குறிப்பிட்ட நாளில் சூரியனிடமிருந்து ஒரு விசேஷ ஒளிஆற்றல் வெளிப்படுகிறது..  இந்த விசேஷ ஒளிஆற்றலை நாம் கிரகித்துக்கொண்டால் அடுத்து வரக்கூடிய கோடைகாலத்தில் ஏற்படும் வெம்மையிலிருந்து நமது உடலைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.இந்த விசேஷ ஒளி ஆற்றலை எப்படி கிரகிப்பது?
அன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து உடலில் யோகச்சக்கரங்கள் இருக்கும் இடங்களில் எருக்கம் இலைகளை வைத்து நீராடவேண்டும்.  காரணம் சூரியனுடைய விசேஷ ஒளிஆற்றலைக் கிரகிப்பதற்கான நாடிகளில் இருக்கும் தடைகளை எருக்கம் இலை வெளியேற்றிவிடும்.சூரியனார் கோயில் ஸ்தல விருச்சம் எருக்கம் செடி என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.  
பொதுவாக எருக்கம் இலைக்கு toxin ஐ வெளியேற்றக்கூடிய சக்தி உண்டு.
(இந்த ரகசியம், பீஷ்மருக்கு வேத வியாசரால் உபதேசிக்கப்பட்டது) 


குளித்தபின்பு, ஆதித்ய முத்திரையுடன் கூடிய சில விசேஷப் பிராணயாமப் பயிற்சிகளைச் செய்யலாம்.  ஜுவாலா முத்திரையுடன் கூடிய சுரக்ஷா(ஒளி) த்யானம் செய்யலாம்.

பிரணயாமம் தெரியாதவர்கள் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.ஆதித்ய கிருதயம், சூரிய சஹஸ்ரநாமம், பாராயணம் செய்யலாம்.   காயத்ரீமந்திரம் ஜெபம் செய்யலாம்.      


                                                                                                              ஓம் தத் சத் 

9 comments:

Athiban said...

toxin means what master
by.
hema

Yoga Yuva Kendra said...

toxin means poison produced by a living organism

gayathri said...

அருணன் என்பவர் யார் ?

gayathri said...

காயத்ரி மந்த்ரம் சொல்வதற்கு ஏதேனும் விதி முறைகள் உள்ளதா?எப்படி சொல்ல வேண்டும் ?தயவுகூர்ந்து சொல்லவும் மாஸ்டர்.

gayathri said...

ஆதித்ய முத்திரை ஜுவலா முத்திரை எப்படி செய்ய வேண்டும் ?plz tell master

Yoga Yuva Kendra said...

காஷ்யபருக்கு வினதை மற்றும் கர்த்துரு என்ற மனைவியர் இருந்தனர். இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவனை வழி பட்டனர். அவர்களுக்கு ஒரு முட்டையைக் கொடுத்த சிவன், ஓராண்டு காலம் பாதுகாக்கும்படி சொன்னார். வினதையிடம் இருந்த முட்டையில் இருந்து கருடன் பிறந்தது.

அது மகாவிஷ்ணுவின் வாகனமாகும் தகுதியைப் பெற்றது. கர்த்துருவின் முட்டையில் இருந்து ஏதும் வராததால், அவசரப்பட்ட அவள் அந்த முட்டையை உடைத்துப் பார்க்க அதனுள் இருந்து குறை உடலுடன் ஒரு குழந்தை பிறந்தான். அவள் மிகவும் வருத்தப்பட்டு சிவனிடம் மன்னிப்பு கோரினாள்.

சிவனும் அவளை மன்னித்து, அந்தக் குழந்தை சூரியனின் ஏழு குதிரை கொண்ட தேரை ஓட்டும் சாரதியாவான் என்றும், சூரிய உதயத்தை அவனது பெயரால் "அருணோதயம்' என வழங்குவர் என்றும்
அருள் செய்தார்.(காச்யபர் யாருன்னு கேட்கக் கூடாது)

gayathri said...

thank u master

Yoga Yuva Kendra said...

"காயத்ரீ" மந்திரம் பற்றி தனிப்பதிவு எழுதலாம் என்றிருக்கிறேன். விரைவில் எழுதுகிறேன்.

tirupathi said...

ADITYA MKUTHURAI AND SURIYA MKUTHURAI BOTH ARE SAME OR NOT PLEASE CLARIFIE MASTER

Post a Comment