Total Pageviews

Tuesday, June 7, 2011

பாசப்பறவைகள்


"பாசம்" பாமரர்களை மட்டுமல்ல நண்பர்களே,  பட்டற்ற ஞானிகளையும் பாடாய்ப் படுத்தி இருப்பதை ஆன்மீக வரலாற்றில் பார்க்க முடிகிறது. பட்டினத்தானையும் கூடப் பாசம் விட்டுவைக்கவில்லை அன்னை இறந்தவுடன் அழுது புலம்ப வைத்திருக்கிறது.  பால்பிரண்டன் பிரிந்து தனது சொந்த நாட்டிற்குச் செல்லும்போது ரமண பகவானும்,சோகத்தால் சோர்ந்து போயிருக்கிறார்.  ஹிருதயன் இறந்தபோது "என் போன்ற சாதுக்களையே பாசம் படுத்துகிறதே, பாமரர்கள் என்ன செய்வார்கள், பாவம்" என ராமகிருஷ்ணரும் கூறுவதைப் பார்க்க முடிகிறது.


பாசத்தினால், தேட்டமும் கவலையும், துன்பமும், உண்டு! நாம் யார் மீது பாசம் வைத்து உள்ளோமோ அவர்களைப் பிரியும் போது நம் உள்ளம் கடுமையாக பாதிக்கப் படலாம் என்பதை மனிதர்களாகிய நாம் யதார்த்தத்தில் அறிந்தே வைத்துள்ளோம். 


இன்று நான் பதிவு செய்ய நினைத்த செய்தி மனித பந்தம் பற்றியதல்ல நண்பர்களே!மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களில் பாசம் எனும் உணர்வு பாதிப்பை உண்டக்குகிறதா?இல்லையா?என்பதை பற்றியதே!


மிருகங்களுக்கும் பாச உணர்ச்சி உண்டு என்பதை ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன. இதில் சந்தேகப்படவோ ஆச்சரியப்படவோ ஒன்றுமில்லை. நம்மைப் போன்றே அவற்றுக்கும் மூளையின் “லிம்பிக்” எனும் அமைப்பு, உணர்ச்சிகள் எழும் மையமாக இருக்கிறது. சரி......... பாச உணர்வினால் இவைகள் என்னன்ன செய்கின்றன என்பதைப் பற்றியான ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளைப் பார்ப்போமா?


ஸீ லயன்கள் என்று சொல்லக்கூடிய கடல் சிங்கங்களின் குட்டிகளைத் திமிங்கலங்கள் கொன்று தின்னும்போது அவை துயரத்தில் ஓலமிடுகின்றனவாம். 



கடலினுள் இறந்து போன தன் குட்டியை டால்பின்கள் கடலின் மேற்பரப்புக்குத் தள்ளி வந்து உயிர்ப்பிக்க முனைகின்றனவாம். 


சிம்பன்ஸீ குரங்குகளும், யானைகளும் தங்கள் நட்பு மற்றும் சுற்ற வட்டத்தில் இழப்புகள் நேரும்போது வருந்துகின்றனவாம். 


கொரில்லாக்கள் இறந்தவர்களுக்காக இரங்கி அழுகின்றனவாம். பாஸ்டன் பிராங்க்ளின் ஜூவில் புற்றுநோயால் இறந்த தன் துணைக்காக ஒரு கொரில்லா ஓலமிட்டுத் தன் நெஞ்சில் அறைந்து கொண்டதாம்.. 

இறந்த ஒரு கொரில்லாவுக்குப் பிடித்தமான பண்டத்தை இறந்துபோன கொரில்லாவின் கையில் தந்து இறந்ததை எழுப்பப் பார்த்த அதன் சக கொரில்லாவின் பாசம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

 [தன் இறந்த குழந்தைக்காக அழும் கொரில்லா]


மாக்பை என்ற சிறு பறவைகள், தம் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கும்போது அவற்றை எழுப்ப முயற்சி செய்கின்றதையும், அதன் அருகில் சுள்ளிகளை வைத்து அஞ்சலி செலுத்துகின்றதையும் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இறந்த ஒருவகை நரிகள் சக நரிகளால் புதைக்கப்படுகின்றனவாம். யானைகள் உடல் ஊனமுற்ற சக யானைக்காக நிதானித்து அதையும் தம்முடன் அழைத்துச் செல்கின்றனவாம்.

யானைகள் புதிதாக அறிமுகமாகிக் கொள்ளும்போது அவ்வளவு சீக்கிரம் பழகுவதில்லை. பாஸ்டன் பிராங்க்ளின் சரணாலயத்துக்கு கொண்டு வரப்பட்ட யானைகளில் இரு வயதான யானைகள் ஒன்றை ஒன்று கண்டதும் பிளிறி அழைக்கத் துவங்கின. அவை இருந்த கூண்டுகளின் கம்பிகளுக்கு இடையே தம் துதிக்கைகளை நுழைத்து ஒன்றை ஒன்று தொட்டுத் தடவின. என்ன நடக்கிறது இங்கே?, என்ற ஆச்சரியத்துடன், இந்த யானைகள் குறித்த ஆவணங்களைத் தேடிப் பார்த்தபோதுதான் இவை இரண்டும் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் இணைந்திருந்திருக்கின்றன என்ற தகவல் தெரிய வந்ததாம். யானைகளின் பாசம்!   ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!!!!! 


நம்ம ஊரில் நடந்த ஒரு பாசக் கதையைப் பார்ப்போமா! ஒரு குருவிக்கு நிகழ்ந்தது.............













ஒரு அதிகாலை நேரம். குதூகலமாக இரை தேடித், தாழப் பறந்த குருவியொன்று காரில் அடிபட்டுக் கீழே விழுந்தது. அது என்ன சக மனிதனா, இடித்தவர் இறங்கி வந்து காப்பாற்ற அல்லது உதவ ?




விழுந்த குருவியால் எழுந்து பறக்க முடியவில்லை. வீழ்ந்து தவிப்பதை அதன்சக குருவியொன்று கண்டது. அருகில் வந்து பார்த்தது. அதனைத் தூக்கிக் கொண்டு பறக்கும் எண்ணம் உதித்தாலும் அதனால் முடியவில்லை. 





செய்வதறியாது துடித்த சக குருவி, இரையெடுத்து வந்து, தன் அன்பையும் நேசத்தையும் அரவணைப்பையும் ஒன்றாகக் கலந்து மருந்தென அடிபட்ட குருவிக்கு ஊட்டியது.மீண்டும் இரையெடுத்து வந்து பார்த்தபொழுதில் அடிபட்டக் குருவியின் உயிர் விட்டுப் போயிருந்தது. அதை உணராச் சக குருவி, கண்ணீர் தளும்பிய விழிகளுடன் தனக்குள் அழுதது.

தன் சிறு கால்களால் தட்டித் தட்டி எழுப்பியது. குருவி எழவில்லை.சலனமற்ற குருவியின் பிரிந்து போன உயிருக்குக் கூடக் கேட்கும் வண்ணம் சக குருவி அழைத்தது, அழுதது, அலறியது, மன்றாடியது. எதையும் அறியாக் குருவியின் சடலம் காற்றுக்கு மட்டும் சிறு இறகசைத்தபடி வீதியிலே விழுந்து கிடந்தது.



ஆசையாசையாய்ச் சேமித்த வாழ்வின் கனவுகள் நடுவீதியில் கலைந்துபோயிற்று. இரை தேடிப் பறக்கும் எண்ணமின்றி, தன் கூட்டத்தைத் தேடியலையும் எண்ணமின்றி தனது எந்த ஆர்ப்பரிப்புக்கும் இறுதி வரை எழாத இறந்த குருவியின் அருகிலேயே உயிர்க்குருவி மௌனித்து அமர்ந்தது..........

பாழும் பாசம், பறவைகளையும் விட்டுவைக்காது போலும்!
தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை 
முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்,
பற்றிப் பிடித்து யமன் பாசத்தால் கட்டும்வண்ணம் 
சுற்றி இருக்கும் வினை சூழ்ந்தனையே நெஞ்சமே பட்டினத்தார் 
          
நன்றி; ராஜகுமார்

4 comments:

suganya shankar said...

Sir,
I read an interesting article about how elephants match human emotions a lot. I have posted the article below.
It is quite amazing to think that they feel a lot of emotions that we feel. Is this why animals have been given a lot of importance in our religion, ancient Egyptians, Chinese etc ?


Elephants flirt, argue and have tiffs like humans
London, June 6 (IANS)

Elephants flirt and argue like humans, and their family outings too have their share of tiffs over directions.

Conservationists have discovered such rows are common among herds of elephants thundering across Africa’s vast plains.

It is one of several striking features of elephants' intriguing social system which suggests their behaviour is remarkably similar to that of humans.

In the world’s longest continuous study of elephants, researchers who have spent nearly 40 years observing their behaviour at the Amboseli National Park in Kenya said that the animals use complex communications in what appeared to be discussions over which route to take.

They also used body language and sounds in other distinctly human ways, rubbing shoulders or entwining trunks as a greeting and folding their trunk under their tusks as an invitation to play, the Daily Mail reports.

A calf may reassure itself by sucking its trunk, just like a human baby sucks its thumb. And female elephants sometimes appear to flirt by glancing over their shoulders at suitors with their eyes opened wide.

Negotiations over directions often begin with a common signal known as the "let’s go" rumble.

The elephants then engage in lengthy exchanges until a consensus is reached and the herd moves in the chosen direction.

Phyllis Lee, of Stirling University, Scotland, co-editor of "The Amboseli Elephants", a new book revealing the research, said elephants could take up to an hour discussing which way to go. "It’s wonderful to watch and a real process of negotiation," she said.

The study provided evidence for elephants’ capacity for empathy. They have long been known to display human traits such as grief, but the research showed they may also wince at each other’s pain.

In one example, when a young elephant approached an electric fence, an older female "looked alarmed, waiting for it to get zapped", said Cynthia Moss, who founded the Amboseli Elephant Research Project in 1972.

"Her posture and blinking eyes showed she was wincing," said Moss.
Other elephants have been seen pulling out tranquilliser darts from fellow herd members. Two were once seen propping up another between them after it was tranquillised.

Yoga Yuva Kendra said...

thank u suganya

velvijayan said...

அன்பே அமுதே என்னிலும் சிறப்பே
எனப் பிறிதொன்றில் பற்றிய சிந்தையை
என்றுமே என்னுடையதாம் எனது மூலத்தில்
பற்றிய பொழுதினிலே பறந்திடுமே துயரமே !

manjushiva said...

master,kuruviyin paasam silirka vaithathu...aanal manithargalagiya naamum intha paasathinalaeyae katundu kidakiromae...intha paasathil irunthu velivara vali yaethum irukindratha?
nandrigaludan manjushiva from yogayuvakendra

Post a Comment