Total Pageviews

Friday, May 25, 2012

அன்பின் அருமை.....





அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! 

முன்னொரு காலத்தில் ஒரு தீவில் எல்லா மனித உணர்ச்சிகளும் வாழ்ந்து வந்தன. --மகிழ்ச்சி,வருத்தம்,அறிவு,அன்பு போன்ற அனைத்து உணர்ச்சிகளும். ஒரு நாள் அவைகளுக்குத் தெரிய வந்தது அந்தத் தீவு கடலில் மூழ்கப் போகிறதென்று. உடனே எல்லாம் படகு கட்டித் தீவை விட்டுப் புறப்பட்டன-அன்பைத்தவிர. 

கடைசி நொடி வரை அன்பு அங்கேயே இருக்கத் தீர்மானித்தது. அந்தத் தீவு கிட்டத்தட்ட மூழ்கி விட்ட நிலையில்,அன்பும் வெளியேறத் தீர்மானித்தது. அப்போது பணம் ஒரு அழகிய படகில் சென்று கொண்டிருந்தது. அன்பு அதனிடம் உதவி கேட்டது. “என் படகில் தங்கம்,வெள்ளி,வைரம் எல்லாம் இருக்கிறது.உனக்கு இடமில்லை” என்று சொல்லிச் சென்று விட்டது. அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்த வீண் பெருமையை உதவி கேட்டது அன்பு.

அது சொன்னது”நீ முழுவதும் நனைந்து போயிருக்கிறாய்.என் படகை நாசப்படுத்தி விடுவாய்” வருத்தத்தைக் கேட்க அது சொன்னது”எனக்கு அமைதி வேண்டும் .நான் தனியாக இருக்க விரும்புகிறேன்” மகிழ்ச்சி அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது,அன்பு கேட்டதே அதன் காதில் விழவில்லை. அப்போது ஒரு குரல் கேட்டது “வந்து என் படகில் ஏறிக்கொள்” ஒரு வயதானவரும் உடன் வேறு சில வயதானவர்களும் படகில் இருந்தனர். அன்பு படகில் ஏறிக்கொண்டது. படகு நல்ல தரையில் நின்றது. அன்பை அழைத்த அந்த உணர்வு நிற்காமல் போய்விட்டது. அன்பு அருகில் இருந்த அறிவு என்னும்முதியவரைக் கேட்டது “அது யார்?” “காலம்” பதில் வந்தது. “காலம் ஏன் எனக்கு உதவி செய்தது?” 

அறிவு ஒரு அறிவார்ந்த பார்வையுடன் சொன்னது ”ஏனென்றால், காலத்துக்குத்தான் தெரியும்,அன்பு எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று”

1 comment:

gayathri said...

காலங்கள் கடந்து செல்கையில் தான் அன்பின் ஆழங்கள் புரிகின்றன.....

Post a Comment