Total Pageviews

Friday, May 4, 2012

புத்தத்தேடல்.....





சுத்தோதனின் உத்தம புத்திரன், 
அருமை மகன், அவன் பெயர் சித்தார்த்தன்,
கண்ணின் இமைப்போல் காக்கப்பட்டான் 
உலகம் தெரியாது வளர்க்கப்பட்டான்
ஜாதகம் சொன்னதில் தந்தைக்குச் சாதகம் இல்லை! 
'பெரிய அரசனாவான் அல்லது யோகியாவான்'
அரசகுமாரன் ஆக்கும் முயற்சி கொடுக்கப்பட்டது 
பல பயிற்சி தரப்பட்டது
தந்தையின் அதிக பராமரிப்பு........
தாயின் அதிக ஆதரிப்பு, 
கவசமான பெற்றோர்கள் சூழ்ந்து காக்கும் ரக்ஷகர்கள்
அரண்மணைக்குள் பல வித்தைகள் விதைக்கப்பட்டன 

மனம் நிறையவில்லை, எதிலும் சுவையில்லை
மனதில் தெளிவில்லை ராஜபோகத்தில் ஈர்ப்புமில்லை

அவனுக்குத் தேவை ஒரு மாற்றம் அதுவே மாப்பிள்ளைத் தோற்றம்
வந்தால் கிளிபோல் ஒரு கன்னி 'யசோதரா' 
அவனையே எண்ணி,
ஒரு மகனையும் அளித்தாள் 
ராஹுல் என்ற பெயரும் கொடுத்தாள்

அந்த நாள் யசோதராவிற்குச் சோதனை நாள்
உலகத்திற்கு நல்ல நாள் 
வெளி வந்தான் சித்தார்த்தன்
தேரோட்டி உதவியுடன்
தேரிலேறி பவனி வந்தான்
 
வாழ்க்கையில் திருப்புமுனை
கௌதமபுத்தர் ஆன அரிய சுனை.


கண்டான் ஒரு காட்சி
வந்தது ஒரு சவம்
எங்கும் நிரம்பிய சோகம் 
சிவமாய் இருந்த உடல்
இன்று ஏன் சவமானது? ஒரே குழப்பம்!
மனதிலே கேள்விக்குறி விரகித்தியடைந்த மனம்
கேட்டது ஒரு வினா இதுவா வாழ்க்கை?

அங்கொருத் தொண்டு கிழவன்
கூனல் முதுகு, கையில் தடி, காலில் நடுக்கம்
மனம் பதைபதைத்தான் சித்தார்த்தன்
இதுவா வாழ்க்கை?


தொடர்ந்த பிரயாணம், கண்டான் அங்கு ஒரு நோயாளி
உடலாட உள்ளம் தாக்க கண்கள் சொருக மரமாக சாய
ஆ இது என்ன? இப்ப்டியும் ஒரு பிறப்பா ?
இதுவா வாழ்க்கை?


வேண்டாம் வேண்டாம் ஆடம்பரம் வேண்டாம்
ராஜ போகம் வேண்டாம் 
நிம்மதி
வேண்டும்!!!! அமைதி வேண்டும்!!!!!!

தேடல் தொடங்கியது
பிறப்பின் காரணம் தேடல்!!!!!! படைப்பின் ரகசியம் தேடல்!!!!!!


மனம் தத்தளித்தது வீடு கசந்தது, 
நடு நல்லிரவு
மனைவி யசோதராமீது ஒருபார்வை
பிஞ்சு பாலகன் மீது ஒரு பார்வை
வைராக்கியம் புகுந்தது எல்லாம் உதறினான்
உள்ளோளி தேடினான் திரும்பிப் பாராமல்
வேகமாய் நடை தொடர்ந்தது!!!! 
தேடலும் தொடர்ந்தது!!!!
தொடர்ந்த தேடல் கயாவில் நின்றது 

தியானத்தில் நிலைத்தது
நீண்ட தியானம் அரச மரத்தின் கீழ்
தன்னை மறந்த நிலை 
திடீரென்று ஒரு ஒளி
பரமானந்தநிலை
உள்ளே ஒளி தெரிந்தது 
ஞானோதயம் பிறந்தது
சித்தார்த்தன்'கௌதமபுத்தர்' ஆனார் 
"எட்டடி பாதைகள்
புத்தமதத்தின் சிறப்பு"
ஆயிரம் பிறையும் கண்டார்
'ஆசியாவின் ஒளி'யும் ஆனார்



புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி

No comments:

Post a Comment