Total Pageviews

Wednesday, February 9, 2011

கௌரவர்கள் 100 பேர்





நேற்று ஒரு போன்,

"ஹலோ"

"யார் பேசுறீங்க"

"சார், கௌரவர்களின் நூறுபேரின் பெயரும் தெரியுமா?'

"நீங்க யாரு?'

"..........................."


தொலைபேசி துண்டிக்கப்பட்டது.



அந்த நூறு பேர்களின் பெயர்களை புத்தகங்களில் தேடித் தேடி..........................யுரேகா,யுரேகா................. கண்டுபிடிச்சுட்டேன்.



அதான் இந்த போஸ்ட்.

கௌரவ சகோதரர்களின் பெயர்கள்:




1 துரியோதனன்

2 துச்சாதனன்

3 துஸ்ஸகன்

4 துஸ்ஸலன்

5 ஜலகந்தன்

6 சமன்

7 சகன்

8 விந்தன்

9 அனுவிந்தன்

10 துர்தர்ஷன் (நம்ம தூர்தர்ஷன் இல்லீங்க)

11 சுபாகு

12 துஷ்ப்ரதர்ஷன்

13 துர்மர்ஷன்

14 துர்முகன்

15 துஷ்கர்ணன்

16 விகர்ணன்

17 சலன்

18 சத்வன்

19 சுலோசன்

20 சித்ரன்

21 உபசித்ரன்

22 சித்ராக்ஷன்

23 சாருசித்திரன் ( ''சித்ர'' ங்கற பேரை நாலு பேருக்கு வச்சிருக்காங்க. ஒரு வேளை அவங்க குலதெய்வம் பெயரை வச்சிருப்பாங்களோ)

24 சராசனன்

25 துர்மதன்

26 துர்விகாஷன்

27 விவில்சு

28 விகடிநந்தன்

29 ஊர்ணநாபன்

30 சுநாபன்

31 நந்தன்

32 உபநந்தன்

33 சித்ரபாணன்

34 சித்ரவர்மன்

35 சுவர்மன்

36 துர்விமோசன்

37 அயோபாகு

38 மகாபாகு

39 சித்ராங்கன் ( சின்னதாத்தா சித்ராங்கதன் பேரை கொஞ்சம் மாத்தி வச்சுட்டாங்க போல)

40 சித்ரகுண்டலன்

41 பீமவேகன்

42 பீமபேலன்

43 வாலகி

44 பேலவர்தன்

45 உக்ராயுதன்

46 சுஷேணன்

47 குந்தாதரன்

48 மகோதரன்

49 சித்ராயுதன்

50 நிஷாங்கீ

51 பாசி (வழுக்கி விட்டுடுவாரோ மத்தவங்கள)

52 வ்ருந்தாரகன்

53 த்ரிதவர்மன்

54 த்ருதக்ஷத்ரன்

55 சோமகீர்த்தி

56 அந்துதரன்

57 த்ருதசந்தா

58 ஜராசந்தன்

59 சத்யசந்தன்

60 சதாசுவக்

61 உக்ரஸ்ரவஸ்

62 உக்ரசேனன் (கம்சன் அப்பா இல்ல இவர்)

63 சினானி

64 துஷ்பராஜா

65 அபராஜிதன்

66 குந்தசாயி

67 விசாலாக்ஷன்

68 துராதரன்

69 த்ருதஹஸ்தன்

70 ஸுஹஸ்தா

71 வாதவேகன்

72 சுவர்ச்சன்

73 ஆதித்யகேது

74 பஹ்வாசி

75 நாகதத்தன்

76 உக்ரசாயி

77 கவசி

78 க்ரதாணன்

79 குந்தை

80 பீமவிக்ரன்

81 தனுர்தரன்

82 வீரபாகு

83 அலோலுமன்

84 அபயா

85 த்ருதகர்மாவு

86 த்ருதரதாஸ்ரயன்

87 அநாத்ருஷ்யன்

88 குந்தபேடி

89 விராவை

90 சித்ரகுண்டலன்

91 ப்ரதமன் ( ஐயோ!எனக்கு அடப்ரதமன்,சக்கப்ரதமன்லாம் ஞாபகத்துக்கு வருதே)

92 அமப்ரமாதி

93 தீர்க்கரோமன்

94 சுவீர்யவான்

95 தீர்க்கபாகு

96 சுஜாதன் (பேரு பஞ்சம் வந்து லேடீஸ் பேர மாத்தி வச்சுட்டாங்க போல)

97 காஞ்சனத்வாஜன்

98 குந்தாசி

99 விராஜஸ்

100 யுயுத்ஸூ (த்ருதிராஷ்டிரனுக்கும் ஒரு வேலைக்காரிக்கும்

பிறந்தவன்.............அட இது வேறயா?)



அப்பாடி! ஆம்பளைங்க கும்பல் முடிஞ்சது.அடுத்து




101 துர்ச்சலை (பெண்)




(இந்த திருதிராஷ்டிரனை யார் இவ்வளவு பெத்துக்க சொன்னது.லிஸ்ட்

குடுக்கறதுக்குள்ள மூச்சு வாங்குதுடா சாமி)




கேள்வி கேட்டவங்களுக்கு திருப்தியா?

Tuesday, February 8, 2011

பிராண சிகிச்சை


பிராண சிகிச்சை உண்மையா?






ஆரம்ப காலத்தில் இந்த பிராண சிகிச்சையைப் பலபேரிடம் கற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் இதனை வெறும் "டுபாக்கூர்" என்றுதான் நினைத்திருந்தேன்..திருச்சுழி ரமண வித்யா பீடம் நர்மதா அம்மாவிடம் இதனைக் கற்றபோது கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அப்போதெல்லாம் சாமியிடம் இது பற்றிக் கேட்கத் தயக்கம் இருந்தது. ஒருநாள் இந்த மருத்துவம் பற்றி , இதனுடைய சூட்சுமம் பற்றி சாமியே கூறியபோது,

இதனுடைய முக்கியத்துவம் பற்றி உணர்ந்து கொண்டேன்.
பின்னாட்களில் சாமியிடம் முறையான பயிற்சி பெற்று இந்த மருத்துவ முறையைப் பயன்படுத்திப் பார்த்தபோது உடல், உள்ள நோய்கள் குறைவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.



தூரத்தில் இருந்தபடியே சிகிச்சை அளிக்கும் முறை () இப்போது பிரபலமாகி வருகிறது. காரணம், மிகவும் பயனுள்ள, நலம் பயக்கிற உறுதி செய்யப்பட்ட ஆற்றல் வாய்ந்த சிகிச்சை முறையாக இந்தச் சிகிச்சை இருந்து வருகிறது.  ஆனால் இந்த பிராண சிகிச்சையை ஒரே நாளில் கற்றுக்கொடுக்கிரார்களே,  அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஒரு அருமையான மருத்துவக்கலையை வியாபாரம் ஆக்குகிறார்களே என்ற கவலை எனக்குண்டு.
இந்தச் சிகிச்சை முறையில் வெற்றி பெற சாதகன் யோக தாரணையிலும், பிராணயாமப் பயிற்சிகளிலும் தேர்ச்சியடைந்தவராக இருப்பது மிக முக்கியம்.  இந்த இரண்டு சாதனைகளையும் விடாது பின்பற்றி வந்தால் யாராலும் ஒரு நல்ல ஹீலராக மாறமுடியும். 
 பிராணனைத் தனக்குள் தேக்கி வைத்துக் கொள்ளத் தெரிந்தவராலேயே, உபரியானப் பிராணனை மற்றவருக்குத் தனது கைகளின் மூலமாகக் கொடுக்க முடியும்.  நன்றாகப் பயிற்சி பெற்ற ஒரு யோகியால் கண்கள் மூலமாகவே நோயைக் குணமாக்கமுடியும்.

நமது உடல், ஐந்து கோஷங்களை உள்ளடக்கியது என்பதை அறிந்திருக்கிறோம். அவற்றுள் அன்னமயகோஷத்தில் நோயினுடைய தாக்கம் வெளிப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே நமது பிராணமயகோஷம் பாதிப்படைகிறது. 
இதனை ஸ்கேனிங் என்னும் முறையினால் ஒரு நல்ல ஹீலரால் உணர்ந்து கொள்ளமுடியும். "முத்திரை" பயிற்சி பெற்றவரால் இந்த ஸ்கேனிங் முறையைக் கற்றுக்கொள்வது எளிது.


டாக்டர் ஜான் ஏ. ஆஸ்டின் என்ற அமெரிக்க டாக்டர். யூனிவர்சிட்டி ஆப் மேரிலாண்ட் ஸ்கூல் ஆப் மெடிசனில் உதவி பேராசிரியர்.இவர் இந்த முறைகளை ஆய்வு செய்து, ‘பொதுவான உண்மை ஒன்று உள்ளது. அது, பிராண சிகிச்சை அனைத்தையும் குணப்படுத்தும்’ என்று கண்டுபிடித்துள்ளார். இது பற்றிப் புத்தகமும் எழுதியுள்ளார். தூரத்து சிகிச்சை என்பது பிரபஞ்ச பிராண சக்திதான் என்கிறார்.

பிராண சிகிச்சை செய்யும்போது, நோயாளி ஓய்வான மனநிலையில் படுக்கையில் படுத்திருக்கலாம் அல்லது உட்கார்ந்திருக்கலாம். சிகிச்சை நேரம் பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். சிகிச்சையைப் பெறும் நோயாளி அந்த நேரத்தில் அமைதியாக இருப்பதே மிகவும் முக்கியம்.


ஆங்கில மருத்துவமோ அல்லது வேறு மருத்துவமோ செய்து கொள்பவர்கள் இந்தத் தூரத்துச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது தூரத்து சிகிச்சை மற்றும் மருந்துகள் இணைவதால் குணமளிப்பது எளிதாகிவிடுகிறது.
சில ஆங்கில மருத்துவர்கள், ‘அறிவியல் ரீதியாக நிரூபிக்காமல், சக்திமிக்க மருத்துவம் இது என்று நீங்கள் சொல்வதை எங்களால் ஏற்றக் கொள்ள முடியாது’ என்று டாக்டர் ஆண்டினை அவமதித்து எதிர்ப்பும் தெரிவித்தார்கள்.
ஆனால், அமெரிக்க மக்கள் தொகையில் 4% பேர் இந்த தூரத்துச் சிகிச்சையை செய்து நன்கு குணம் பெற்றுள்ளனர். இப்போது இந்த சதவிகிதம் உயர்ந்துவிட்டது.
2000 ஆம் ஆண்டு 2,774 நோயாளிகளை 23 விதமான ஆய்வுகள் மூலம் மீண்டும் ஆராய்ந்தபோது பிராண சிகிச்சை, தூரத்தில் இருந்து குணப்படுத்துவது முதலியன அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகபட்ச பலன்களைத் தந்துள்ளது. டாக்டர்களின் எதிர்ப்பால் ஆழ்ந்து செல்லாமல் ஆய்வு செய்தபோதே இந்தச் சிகிச்சையின் நன்மைகள் பிரமிக்கத்தக்கதாக இருப்பது ஆச்சரியம்தான் என்கிறார் டாக்டர் ஆஸ்டின். உடல் நோய்களுடன் மனக்கவலைகளும் உறுதியாய் குணமாகிவிடுகின்றனவாம், இந்த தூரத்துச் சிகிச்சையில்!


ராஜபாளையத்தில் இருந்துகொண்டுஅமெரிக்காவில் உள்ள உங்கள் மாமியார் குணமாக இருபது நிமிடங்கள் ஹீலிங் செய்யுங்கள். உங்கள் மூளை அனுப்பும் அதிர்வுகள் விண்வெளியில் பயணிக்கும். மாமியாருடைய உடல் நம்முடைய அதிர்வுகளைக் கிரகிக்கும். முடிவில் அது மாமியாரின் உடல் உள்ளே வரை உடனே சென்றடைந்து விடும். நம்முடைய அதிர்வுகள் எங்கும் நிறைந்துள்ள உயிர்ச்சக்தியை () அனுப்புவதால், அது நோயாளி உடலில் இறங்கி குணப்படுத்தி விடுகிறது. ராஜபாளையத்தில் ஹீலிங் செய்பவர், தன் பிராணசக்தி தன் மாமியாருக்குச் சென்றடைவதை பாவனையில் காட்சியாகப் பார்ப்பது தான் தூரத்து சிகிச்சையில் மிகவும் முக்கியம்.  (இதற்குத்தான் தாரணாப் பயிற்சி அவசியம்). ‘ரெய்கி’ மருத்துவர்கள் தூரத்துச் சிகிச்சை முறையில் தங்கள் அருகில் இல்லாத நோயாளிகளையும் எளிதாகக் குணப்படுத்திவிடுவது இதனால் தான்.
தூரத்துச் சிகிச்சையில் மற்றவர்களுக்காக ஹீலிங் செய்யும் போது, நோயாளியின் உடலில் இண்டர்லெகின்ஸ் என்ற பொருள் சுரந்து, இரத்தத்தில் கலப்பதால் உடலில் உள்ள நோய்களும், தொற்றுநோய்க் கிருமிகளும் கட்டுப்பட்டு ஆரோக்கியத்தைத் திரும்பப் பெற்று விடுவார்.
 அமெரிக்க டாக்டருக்கு புரிந்த இந்த உண்மைகளை நாமும் பின்பற்றுவோம். நலம் பெறுவோம்.

Monday, February 7, 2011

"ரத சப்தமி" என்ன செய்யலாம்?

வரும் வியாழக்கிழமை ரத சப்தமி

சூரிய பகவானுக்குரிய நாளாக ரதசப்தமி நாள் கருதப் படுகிறது. தை மாத அமாவாசை நாளுக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமியாக இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏழு வண்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் சூரிய பகவான் வானத் தில் வலம் வருவதாக ஐதீகம் உள்ளது. சூரிய ஒளி இல்லா விடில் பூவுலகில் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப் படுகின்றனர். சூரிய பகவானின் ரதத்திற்கு அருணன் சாரதியாக உள்ளார்.


ரதசப்தமியன்று எருக்க இலைகளை சிரசின்மேல் வைத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும்.ரதசப்தமி திருநாளில் சூரியனின் கிரணங்கள் எருக்க இலைகள் மூலம் ஈர்க்கப்பட்டு, உடலில் ஊடுருவிச் சென்று, வியாதிகளைப் போக்கி குணம் தருகின்றனவாம். அதேபோல், இந்த தினத்தில் ஆறு அல்லது குளத்தில் நீராடுவது சிறப்பு! ரதசப்தமியன்று வீட்டு வாசலை மெழுகி, தேர்க்கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். பிறகு, சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜிக்க வேண்டும். இந்தப் புண்ணிய தினத்தில், வீட்டு பூஜையறையிலும் சூரிய ரதம் போன்று கோலம் வரைந்து, உரிய ஸ்லோகங்கள் கூறி சூரியனை வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்




 தன்னுடய சுழற்சிப் பாதையில்ஆறு மாதமாகச் சூரியனிடமிருந்து  தொலைவில் சுற்றிக் கொண்டிருந்த பூமி அடுத்த ஆறு மாதங்கள் சூரியனுக்கு நெருக்கமான பாதையில் சுற்ற ஆரம்பிக்கிறது. இதனை முறையே தட்சிணாயணம், உத்திராயணம், என்று அழைக்கிறோம். 

சப்தமி என்றால் ஏழாவது நாள் எனப்பொருள் .தை மாதம் வளர்பிறையின் ஏழாம் நாள் பூமி, சூரியனை நெருங்க ஆரம்பிக்கும் முதல் நாள். இந்தக் குறிப்பிட்ட நாளில் சூரியனிடமிருந்து ஒரு விசேஷ ஒளிஆற்றல் வெளிப்படுகிறது..  இந்த விசேஷ ஒளிஆற்றலை நாம் கிரகித்துக்கொண்டால் அடுத்து வரக்கூடிய கோடைகாலத்தில் ஏற்படும் வெம்மையிலிருந்து நமது உடலைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.



இந்த விசேஷ ஒளி ஆற்றலை எப்படி கிரகிப்பது?




அன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து உடலில் யோகச்சக்கரங்கள் இருக்கும் இடங்களில் எருக்கம் இலைகளை வைத்து நீராடவேண்டும்.  காரணம் சூரியனுடைய விசேஷ ஒளிஆற்றலைக் கிரகிப்பதற்கான நாடிகளில் இருக்கும் தடைகளை எருக்கம் இலை வெளியேற்றிவிடும்.சூரியனார் கோயில் ஸ்தல விருச்சம் எருக்கம் செடி என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.  
பொதுவாக எருக்கம் இலைக்கு toxin ஐ வெளியேற்றக்கூடிய சக்தி உண்டு.
(இந்த ரகசியம், பீஷ்மருக்கு வேத வியாசரால் உபதேசிக்கப்பட்டது) 






குளித்தபின்பு, ஆதித்ய முத்திரையுடன் கூடிய சில விசேஷப் பிராணயாமப் பயிற்சிகளைச் செய்யலாம்.  ஜுவாலா முத்திரையுடன் கூடிய சுரக்ஷா(ஒளி) த்யானம் செய்யலாம்.

பிரணயாமம் தெரியாதவர்கள் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.ஆதித்ய கிருதயம், சூரிய சஹஸ்ரநாமம், பாராயணம் செய்யலாம்.   காயத்ரீமந்திரம் ஜெபம் செய்யலாம்.      


                                                                                                              ஓம் தத் சத் 

Saturday, February 5, 2011

அறுசுவை


Six tastes


பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.

தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.



துவர்ப்புச் சுவை (Astringent)
Astringent


இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.

இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.


இனிப்புச் சுவை (Sweet)
Sweet


மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.

இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
                           


 புளிப்புச் சுவை (Sour)
Sour


உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.



                           
 காரச் சுவை (Pungent)
Pungent


பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.

அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


கசப்புச் சுவை (Bitter)
Bitter


அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.

இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.
                    
                        
உவர்ப்புச் சுவை (Salt)
Salt


தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.

இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.

உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.

கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

வண்ண(பழ) மருத்துவம்



இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள்.
நம்மில் சிலர் பழங்களை சாறு எடுத்து அருந்துவார்கள். சிலர் சாறு எடுக்கப்பட்டு பாட்டில்களில் ரசாயனம் சேர்த்து பதப்படுத்தப் பட்டிருக்கும் பழச்சாறுகளை விரும்பி அருந்துவார்கள். பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் சில வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு நிறைய கிடைக்கும்.
பழங்களில் பல நிறங்கள் உள்ளன. அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை. இப்பழங்களின் நிறத்துக்குத் தகுந்தவாறு அதன் சத்துக்கள் இருக்கின்றன.


சிவப்பு நிறப் பழங்கள்

கண்ணைக் கவரும் பழங்கள்தான் சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை.


ஆப்பிள்,பிளம்ஸ்,செவ்வாழை,மாதுளம்பழம்,இலந்தை,செர்ரி,போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும்.


வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.





மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.


கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த
சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன






மண் நிற பழங்கள்

சப்போட்டா பழம், விளாம்பழம் இதில் அடங்கும்.
இது உடலுக்கு ஊக்கமளிக்கும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். சீரண சக்தியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடற்புண்களை ஆற்றும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்




              நீல நிறப் பழங்கள்








நீலத் திராட்சை, நாவல்பழம், நீல பிளம்ஸ் போன்றவை அடங்கும். 


மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய பழங்கள் நீல நிறப் பழங்களாகும். துவர்ப்பு சுவை மிகுந்ததாக இருக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மூளையின செல்களை தூண்டி புத்துணர்வு பெறச் செய்கிறது.

தொண்டைக்கம்மல், வறட்டு இருமலைப் போக்கும். தலைவலி, தலையில் நீர்க் கோர்வையைப் போக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும். இரத்தம் உறைவதை துரிதப் படுத்தும்.




ஆரஞ்சு நிறப் பழங்கள்


மாம்பழம், ஆரஞ்சு, ஸ்டார் பழம் போன்றவை ஆரஞ்சு நிறப் பழங்களுள் அடங்கும்.


உடலுக்கு சக்தியைக் கொடுத்து ஊக்கம் அளிக்கின்றன. இவற்றில் வைட்மின் பி3, சி, டி, இ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது. இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்பப் சக்தியைத் தூண்டுகிறது. கண்பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது. இதயத்தைப் பலப்படுத்தி
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.




பச்சை நிறப் பழங்கள்

பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், சீத்தாப்பழம், கொய்யா, பலாப்பழம், பேரிக்காய் போன்றவை அடங்கும் .
இப்பழங்கள் காய்கறிகளை ஒத்து இருப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் போல் இவ்வகைப் பழங்களிலும் உள்ளன. உடலின் வளர்சிதை மாற்றங்களில் இத்தகைய பச்சை நிறப் பழங்கள் மிகுந்த பங்களிக்கின்றன.




மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் உட்கொண்டால் இளைத்த உடல் எளிதில்
தேறும்




மஞ்சள் நிறப் பழங்கள்

எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழம், அன்னாசிப் பழம் போன்றவை மஞ்சள் நிறப் பழங்களில் அடங்கும்.
மஞ்சள் நிறப்பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் இரத்தம் சுத்தமடையும்.




பொதுவாக மஞ்சள் நிறப் பழங்கள் எல்லோரும் சாப்பிடலாம். இது நரம்புத் தளர்வைப் போக்கும். மயக்கமுள்ளவர்களுக்கு உடனே உணர்வை உண்டாக்கும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்களை ஆற்றும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கண் பார்வையையைத் தெளிவுபடுத்தும். 






வாழைப்பழம் - பொதுவாக கை கால் நடுக்கம், உதறல் போன்றவற்றைத் தடுக்கும் தன்மை கொண்டது. குடற்புண், வாய்நாற்றத்தை நீக்கும். அஜீரணத்தைக் குறைக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். முகப்பொலிவு கொடுக்கும். பெண்களுக்கு கழுத்துப்பகுதி, முகம், கை கால் முட்டிகளில் ஏற்படும் கரும்படலத்தைப் போக்கும்.


ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். மலச்சிக்கலைத் தவிர்க்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும். இது ஒரு கிருமி நாசினி.

Friday, February 4, 2011

கவளம்(oil pulling) தெரியுமா?






Master what about oil pulling??? Is it really works...........jananiramya.


ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த ஆயில் புல்லிங் பற்றி நமது யோகிகள் கூறும்போது மேலை நாட்டவர் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ரம்யா,.அதையே அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டினார் இந்நாளைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர்.

அதன் பிறகே ஆயில் புல்லிங் உலகம் முழுவதும் பிரபலமாகியது.
இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் இந்த ஆயில் புல்லிங் செய்தி வந்தபின்பு நம்மவர்களும் இந்த மருத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள்.

இந்த ஆயில் புல்லிங் ஒரு holistic treatment என்பதில் சந்தேகமில்லை. இந்த மருத்துவத்தினால் நாள்பட்ட நோய்கள்கூடக் கட்டுப்படுகிறது என்பது அனுபவ உண்மை. கிட்டத்தட்ட நம் உடலில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான நோய்களுக்கும் ஓர் எளிய, பாதுகாப்பான, மலிவான மருத்துவ முறை ஒன்று உண்டு என்றால், அது இந்த ஆயில் புல்லிங் தான்.



ஆனால் இது நவீன காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையல்ல. நமது யோகிகளால் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்ட "கவளம்" என்ற மருத்துவமுறை.

மூலிகைகளினால் காய்ச்சப்பட்ட எண்ணெய்யைக் கொண்டு வாய்க்கொப்பளிப்பதற்கு "கவளம்"என்று பெயர். இந்தக் கவளம் நோயின் தன்மையைப் பொறுத்து நான்காகப் பிரிக்கப்பட்டது.


ஸ்நேகன கவளம்: இது வாதத்தைத் தணிப்பது.


சமன கவளம் : பித்தத்தைத் தணிப்பது.


சோதன கவளம்: கபத்தைத் தணிப்பது.


ரோபண கவளம்: வாய்ப்புண் மாற்றுவது.


ஸ்னேகன கவளம் என்பது எண்ணெய்யைக் கொண்டோ, எள்ளை அரைத்துக் காய்ச்சியத் தண்ணீரைக் கொண்டோ வாய்க்கொப்பளிப்பது. வாத நோய்களுக்கும், குறிப்பாக பல் நோய்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும். அரிமேதாதி தைலத்தினால் செய்யப்படும் கவளம் பல் நோய்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சமன கவளம் என்பது கசப்பு, துவர்ப்பு, இனிப்பு,சுவைகள் சேர்ந்த மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயங்களைக் கொண்டும், குளிர்ச்சி தரக்கூடிய மூலிகைச் சாறைக்கொண்டும் வாய்க்கொப்பளிக்கும் முறை. தேன் கலந்த திரிபலா கஷாயம் இதற்கு எடுத்துக்காட்டு. மன நோய்களுக்கு இது சிறந்தத மருந்து.



சோதன கவளம் என்பது காரம், புளிப்பு போன்ற சுவைகளையுடைய கஷாயங்களால் செய்யப்படுகிறது. இதனால் சுவை அறியும் திறன் கூடுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயன்படும். இஞ்சிக் கஷாயத்துடன் தேன் சேர்த்து சோதன கவளம் செய்யலாம்.


ரோபண கவளம் அதிமதுரக் கஷாயத்தால் செய்யப்படுவது. இது வாயில் வரக்கூடிய கேன்சரைக்கூட குணமாக்கும் என்ற மருத்துவச் செய்திகளைக் கண்டு நான் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.


இந்த ஆயில்புல்லிங் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் செய்தல் நலம். விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தைச் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே எண்ணெயையாவது அல்லது Brand-ஐயாவது மாற்றிவிடுங்கள். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!

இந்த மருத்துவத்தை, கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய் நிமித்தம் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. அணையப் போகும் நெருப்பு சுடர் விட்டு கொஞ்ச நேரம் எரியுமல்லவா..? அதுபோலத்தான்.

சரி.. இப்படி செய்வதால் எப்படி எல்லா நோய்களும் குணமாகும் என்று கேட்கிறீர்களா? அதற்கு சரியான விளக்கமும் அறிவியல் ரீதியில் தரப்படுகிறது. அதாவது, பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து mucus membrane மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலின் Metabolism புத்துணர்வு பெற்று நாள்தோறும் நலத்துடன் மிளிர்கிறது.

ஒரு மனிதனுக்கு உமிழ் நீர் ஒழுங்காகச் சுரந்து, கட்டிப்படாமல் நீர்மத்தன்மையுடன் காணப்பட்டாலே ஆரோக்கியம் தானாக வந்துவிடும். "கோதடர்ந்த உமிழ்நீரை முறிய வைத்தால் கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே" என்பது அஹஸ்தியர் வாக்கு. .பாதி ஜீரணம் உமிழ் நீருடன் கலந்து, மென்று சாப்பிடுவதிலேயே முடிந்து விடுகிறது.உமீழ்நீர்ச்சுரப்பிகளை ,ஆயில்புல்லிங் நன்றாகச் சுரக்க வைக்கிறது.

சாமி எனக்குக் கூறிய வைத்தியம் ஒன்று இருக்கிறது ரம்யா, வெம்பிய கண்டங்கத்தரிப் பழத்தை பல இடங்களில் ஊசியால் நன்கு குத்தி நல்லெண்ணெய் விட்டு வறுக்க வேண்டும். இதனை பிழிந்து எண்ணெயை வடித்து, ஈறு கரைந்துள்ள இடங்களில் தடவ ஈறு இறுகும். பழத்தை இளஞ்சூட்டுடன் மென்று வாய் ஈறில் வைத்து அடக்கி வர ஈறு பலப்படும். வெம்பிய கண்டங் கத்தரிப்பழங்களை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யால் வாய் கொப்புளித்து வர (ஆயில் புல்லிங்) பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடையும்

Thursday, February 3, 2011

மீண்ட சொர்க்கம்- மன நலம்






நட்பிலும், உறவிலும் தொழில் தொடர்புகளிலும் அன்பாய், பாசமாய் உயிருக்குயிராய்ப் பழகிவிட்டு, திடீரென்று விலகிப் போய்விடுகிறவர்கள் உண்டு.  
புது உறவுகளும்,தொடர்புகளும் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியிலோ, அல்லது வாழ்வின் தேவை அல்லது காலத்தின் கட்டாயத்தாலோ, இவர்களைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ, இவர்களைத் தேடிக் கொள்வதோ இல்லை. அந்த அளவிற்கு நாம் யந்திரர்களாக ஆகிப்போனோம். பழைய நண்பர்களோ, ‘நிம்மதி’ என்று எண்ணும் தந்திரர்களாகவும் ஆகிப்போனார்கள். இவர்கள் மீது சற்றே கவனம் செலுத்தினால் இழந்த நட்பை, உறவை மீண்டும் பெறலாமே!
இவர்களுக்கு நம்மீது என்ன வருத்தம்? நம்மைப் பொறுத்தவரை ஏன் இப்படி பாசமாய் இருந்து பின்பு மாறிப் போனார்கள் என்கிற கேள்விகளை எழுப்பிக் கொண்டு முகவரி, தொலைபேசி எண் பெற்றுப் பேசி நேரில் தேடிப் போய்ப் பார்த்துப் பேசினால் வலுவான காரணங்களோ, வலுவற்ற காரணங்களோ தெரிய வரும்.


நாம் அணுகிய அன்பால் நெகிழ்ந்துபோய் வலுவான காரணங்களைக் கூட மறந்துவிட முன்வருவார்கள். வலுவற்ற காரணங்கள் இருப்பின் இந்த நட்பு உறவு அந்தக் கணமே புதுப்பிக்கப்பட்டுவிடும்.
இதைச் சாக்காக வைத்துக் கொண்டு சிறுசிறு நல் நிகழ்வுகளுக்கு இவர்களை அழைக்கலாம். இதற்கிடையில் பழங்கதைகளைப் பேச வேண்டி வரும். இது வாழ்வின் சுவையைக் கூட்டும்.
‘மீண்ட சொர்க்கம்’ என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அது வேறு ஒன்றுமில்லை. இதுதான்.