Total Pageviews

Friday, January 6, 2012

"ஷுக்யோ" - ஜென்கதை



காலை ஏழு மணி. கலாதரன் செய்தித்தாளும் கையுமாக சோஃபாவில் உட்கார்ந்தான். சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்த அவன் மனைவி கல்பனா தீவிரமாக முறைத்தாள்.



 ‘நேத்து நைட் சொன்னது மறந்துபோச்சா?’

‘என்ன?’

‘தொப்பை ரொம்ப அதிகமாயிடுச்சு, இனிமே டெய்லி யோகா கிளாஸ் போறேன்னு சொன்னீங்களே!’

‘ஷ்யூர்’ என்றான் கலாதரன். 



‘இன்னிக்குக் கொஞ்சம் வேலை ஜாஸ்தி இருக்கு. ஆஃபீஸுக்குச் சீக்கிரம் போகணும், நாளைலேர்ந்து ஆரம்பிச்சுடறேன்.’

‘யாருக்குதான் வேலை ஜாஸ்தி இல்லை?’ என்றாள் கல்பனா. 



‘நான் காலையில நாலு மணிக்கு எழுந்து வீட்டு வேலையெல்லாம் செய்யலியா? இத்தனைக்கும் நடுவுல முத்திரை செய்வதற்கு1 ஹவர் ஒதுக்கமுடியுதே, நீங்க கொஞ்சம் சீக்கிரம் எழுந்து யோகா கிளாஸ் போய்ட்டு வந்தா என்னவாம்?’

’செய்யறேன்ப்பா… சும்மா கத்தாதே’ சங்கடமாகச் செய்தித்தாளைப் புரட்டினான் கலாதரன். ‘இதெல்லாம் ஒரு பழக்கமா வரணும், உங்களால எப்படிதான் முடியுதோ தெரியலை, எனக்கு நினைச்சாலே மலைப்பா இருக்கு.’

‘ஷுக்யோ!’ என்று சிரித்தாள் கல்பனா.

‘அப்டீன்னா?’

‘நேத்துதான் ஒரு ஜென் புத்தகத்துல படிச்சேன், "ஷுக்யோன்னா", ஒரு செயல்ல மாஸ்டராகறது. அது ஓவர்நைட்ல நடக்கற விஷயம் இல்லை, பல நாள், பல வாரம், பல மாசம், பல வருஷம், வாழ்நாள்முழுக்க ஒழுக்கமாத் தொடர்ந்து பயிற்சி எடுக்கறதால வர்றது.’

‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’

’எப்படிதான் தினமும் யோக கிளாஸ் போறேனோ-ன்னு நினைச்சுப் பிரமிச்சுப்போய் உட்கார்ந்துட்டா, நீங்க என்னிக்கும் யோகா செய்ய மாட்டீங்க, பாக்கி நாளைப் பத்திக் கவலைப்படாம இன்னிக்கு கிளாசை மட்டும் கவனிங்க, அப்புறம் நாளைக்கு கிளாஸ், அப்புறம் நாளன்னிக்கு, "ஷுக்யோ" தானா நடக்கும்.’

No comments:

Post a Comment