Total Pageviews

Saturday, January 22, 2011

நானே முதல் குற்றவாளி- கவிதை

தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச் சுட்டி
எதைப்பற்றி நான்
எழுதப் போகிறேன்?

பாசம் மனசு நட்பு
எல்லாமே பொய்யாகிவிட்ட
வாழ்க்கையை இனியும்
வாழ்ந்து எதை
சாதிக்கப்போகிறது
எனது எதிர்காலம்..

வலிக்கிறது
என் விரல்களும் இதயமும்..

கருகிப்போன கனவுகளை
மீண்டும் யாசிக்கிறது
என் கண்கள்..
உருகிப்போன நினைவுகளை
மீண்டும் வேண்டுகிறது
என் கணங்கள்

வலிகளில் நிறைந்து போன
என் விழிகளைப்பற்றி
ரணங்களில் புதைந்து போன
என் ஆத்மார்த்தம் பற்றி
துயரப்பாடல்கள் உச்சரிக்கும்
என் பேனா பற்றி
காயங்களின் சுவடுகளை ஏந்தி நிற்கும்
என் பாவப்பட்ட இதயம் பற்றி
இனிப்பேச யாருமில்லையா?

உலுக்கி எடுக்கும்
அதிர்வுகளைத் தாங்கி
வாழ்தல் மீதான பயணம்
நீள்வது அத்தனை எளிதில்லை

இனியும் என்ன இருக்கிறது?

சேரத்து வைத்த ஆசைகள்
அநாதையான பின்பும்
நம்பியிருந்த உறவுகள்
சுக்கு நூறான பின்பும்
தேக்கி வைத்த நம்பிக்கை
வேரிழந்த பின்பும்

இனியும் என்ன இருக்கிறது?

காலியாகிப்போன பாசப்பைகளில்
இனி நான் இடப்போவதில்லை
சில்லறை மனிதர்களை..

எல்லா இதயங்களிலும்
போர்வைகள்..
எல்லா முகங்களிலும
முகமூடிகள்..
எல்லா புன்னகைகளிலும்
விஷங்கள்..
எல்லா பார்வைகளிலும்
வக்கிரங்கள்..

உறவென்னும் தேசத்தில்
அகதியாக்கப்பட்டவன் நான்

மனிதர்களைத் தேடிய
என் நித்திய பயணத்தில்
எப்போது நிகழும்
திடீர் திருப்பம்?

யாரையும் குற்றம் சாட்டவில்லை
காரணம் முதல் குற்றவாளி
நான்தானே?

தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச்சுட்டி
இன்னும்
எதைப்பற்றி நான்
பாடப்போகிறேன்?

உன் அண்ணன்

உறவுகள் சாதகமில்லை
உணர்வுகள் புரியவில்லை!
உணவு இறங்கவில்லை
உறங்கவும் முடியவில்லை!

பாசத்தை எதிர்பார்த்து
மானமும் போய்விட்டது!
வினாடிகளை எண்ணிக்
காலத்தைக் கரைக்கிறான்!
மரணம் இவனுக்கு
மட்டும் முரண்டு பிடிக்கிறது!

Friday, January 21, 2011

நான் அழிய வரம் தா




நடை கவனி


வளி புரியும்


வளி கவனி


ஒளி தெரியும்


ஒளி கவனி


'நான்' அழியும்


சத்குருவே


'நான்" அழிய வரம் தா

Thursday, January 20, 2011

ஜென் என்றால் என்ன?





ஜென் என்கிற சொல், சம்ஸ்கிருத சொல்லாகிய தியான் என்கிற சொல்லில் இருந்து வருகிறது.

கெளதமபுத்தர் தியானம் சொல்லித்தந்தார்.போதிதர்மா சீன நாட்டுக்கு தியானத்தை சொண்டு சேர்த்தார்.அது அங்கே சீயான் என்று ஆனது.

இந்த சீயான் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்ற போது ஜென் என்று ஆனது.ஜென் என்பது வேதங்கள் இல்லாத, விதிமுறைகள் இல்லாத,குறிப்பிட்ட பயிற்சிகள் இல்லாத ஒரு தன்மை. அது வரையறுக்கப்படாத பாதை. அது யோகாவிலிருந்து வேறுபட்டதல்ல அது தான் யோகா.



விவரிக்க முடியாத நிலையே ஜென் . பாதையும் , பயணமும், பயணத்தின் முடிவும் அதுவே . ஜென் ஒரு புரிந்து கொள்ளலே . அதையும் மீறி ஜென்னைவிமர்சிக்க முயற்சி செய்தால் அது ஜென்னை இழிவு படுத்தியதற்க்குச் சமம் ..............



ஜென் மார்க்கத்தில் ஹீயூட்டி என்று ஒருவர் இருந்தார். அவர் யாருக்கும் ஜென் போதித்ததில்லை .ஆனால் குருமாராக அறியப்பட்டார். எல்லோரும் அவரை குரு என்று மதித்தார்கள்.

ஆனால் அவர் எந்த போதனைகளையும் தந்ததில்லை. தோள்களில் ஒரு பெரிய பையை அவர் சுமந்து கொண்டு செல்வார்.அதில் பெரும்பான்மையானவை இனிப்புகளாக இருக்கும். அவர் போகிற ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் அவரை சூழ்ந்து கொள்ளுவர். அவர் இனிப்புகளை வினியோகிப்பார் பிறகு சென்றுவிடுவார். அவ்வளவு தான் .

மக்கள் அவரிடம் வந்து போத்னைகளை கேட்பார்கள். அவர் சிரித்து விட்டு சென்று விடுவார்....

இன்னொரு குரு என்பனின் என்பவர் மிகவும் புகழ்பெற்றவர். அவர் ஹீயூட்டியை சந்திக்க வருகிறார். அவர் ஹீயூட்டி உண்மையாகவே ஜென் மார்க்கத்தில் இருக்கிறாரா??? இல்லையா ?? என்பதை தெரிந்து கொள்ள வந்தார்.

அவரிடம் ஜென் என்றால் என்ன??? என்றார். உடனே ஹீயூட்டி கையிலிருந்த சாக்கை நழுவவிட்டு நேராக நின்றார். அவர் அடுத்து ஜென்னின் நோக்கம் என்னவென்றார்??? ஹீயூட்டி அந்த சாக்கை எடுத்து தன் தோள்களில் போட்டுக்கொண்டு நகர்ந்து விட்டார்.

இது தான் யோகா என்பது எனவே நீங்கள் யோகாவையோ ஜென்னையோ அடைய வேண்டும் என்று விரும்பினால் உங்களிடம் இருக்கிற சுமையை கீழே போட்டு விட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுதந்திரமாக நேராக நிற்கவேண்டும். இது தான் முக்கியம்.சில சமயம் சுமையோடும் அதை செய்ய முடியும். அது மிக மிக அரிது . லட்சத்தில் ஒருவரால் அது முடியும். எனவே சுமையை இறக்குங்கள்


ஜென் என்றால் என்ன?..” கேள்வி எழுந்தது ஒரு மாணவனிடமிருந்து.





துறவி அவனைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார், “யாரும் அதைத் தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்”





மாணவன் விடுவதாய் இல்லை “அப்படியனால் சுவாமி. ஜென் என்னதான் சொல்லுகிறது?”





“zen teaches nothing. ஜென் சொல்லித்தருவது எதுவுமில்லை”.





“அப்படியானால்…..” மாணவன் இழுத்தான்…





“சும்மாயிரு..” வெகு வேகமாய் குருவின் குரல்.





மாணவன் தெளிந்தான்.

Tuesday, January 18, 2011

சிசேரியன் தேவையா?



Sir, இன்று நெறைய பேர் சிசேரியன் விரும்பி செய்கிறார்களே... பிரசவ வலி இல்லை, இரண்டு நாள் tour போறமாதிரி ஆஸ்பத்திரி போயிட்டு வந்திடுறாங்க. இது சரிதானா? விளைவுகள் தான் என்ன?       S. ARAVIND






அமெரிக்காவிற்கும், ஈராக்கிற்கும் சண்டை வரக்கூடிய சூழல் உண்டானபோது சண்டை வந்து விட்டால் சரியான மருத்துவ வசதிகள் கிடைக்காதே என்பதற்காக ஏராளமான பெண்கள் சிசேரியன் செய்து கொண்டார்கள் என்பதை நான் கேள்விபட்டிருக்கிறேன். அதுபோல 2௦௦௦ ஆண்டு முடிந்து புதிய நூற்றாண்டு பிறக்கிற நேரத்தில் தனது குழந்தை பிறக்க வேண்டும் என்கிற நோக்கில் உலகம் முழுக்க சிசேரியன் செய்து கொண்டவர்கள் அதிகம்.


ஆனால் நமது நாட்டில் எந்த காரணமும் இன்றி சிசேரியன் அதிகரித்து வருவது வருந்தத்தக்க விஷயமாகவே இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 15 சதவீதத்திற்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் தேவை இல்லை என உலக சுகாதார மையம் கூறிய போதும் இந்த குறிப்பிட்ட அளவை விட ஏழுமடங்கு அதிகமான சிசேரியன் நடை பெறுவதாக ஆய்வுகள்தெரிவிக்கின்றன.


அதிலும் நம்ம தமிழ் நாட்டில் அதிகமான சிசேரியன் நடைபெறுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அரவிந்த் கூறியதுபோலஇரண்டு நாள் டூர் போயிட்டு வருவது போல சிசேரியன் பண்ணிட்டு வந்துடுறாங்க. ஆனால் இதனோட பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை.


மனித உடல் மிகவும் சூட்சுமமாக செய்யப்பட்ட இயந்திரம். இந்த இயந்திரத்தில் உள்ள நரம்புகள் மட்டுமே நவீன கால மருத்துவத்திற்குத் தெரிந்திருக்கிறது. இதற்கும் மேலாக பிராண சக்தியைக் கொண்டு செல்லக் கூடிய நாடிகளைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு ஏற்பட வேண்டும். நமது சித்தர்களும், யோகிகளும் இந்த நாடிகளைப் பற்றிக் கூறும்போது மேலை நாட்டவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.


காரணம், நரம்புகளைப் பற்றிய நுட்பங்களைத் தெரிந்துகொள்ள MRI Scan இருப்பது போல நாடிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள மருத்துவ கருவிகள் இல்லாமல் இருந்ததே. ஆனால் சமீப காலத்தில் கிரிலியன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டக் கருவியால் நாடிகளையும் படமெடுக்க முடிகிறது . இந்த கருவியால் படமெடுக்கும்போது நாடிகள் மட்டுமல்லாது நமது யோகிகள் கூறிய யோகச்சக்கரங்களையும் பார்க்க முடிகிறது.








                                                           





                                                       (KRILIAN PHOTOGRAPHY)




நமது உடலில் 72000 நாடிகள் இருக்கிறது.

(இருப்பான தேகம் எழுபத்திரண்டாயிரமான நாடிதனில்,

ஏலப்பெரு நாடி ஒக்கத் தசமத் தொழிலை

ஊக்கத் தசவாயுக்கள் தக்கபடியானதே சார்பு.- அகஸ்தியர் )

இந்த நாடிகளில் முக்கியமான நாடியாக சுழுமுனை நாடி சொல்லப்படுகிறது.
சுழுமுனை நாடியிலிருந்தே பிற நாடிகளுக்கு vital energy எனச் சொல்லக்கூடிய பிராண சக்தி பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த சுழுமுனை நாடியே உடல் உள்ளுறுப்புகளுக்குப் பிராண சக்தியை வழங்கக்கூடிய முக்கியமானஓடுபாதை .

சுழுமுனை நாடி உடலின் மையத்தில் முன்னும் பின்னுமாகச் செல்கிறது(REN channel,  DU channel) இதனை போகமஹரிஷியால் கற்றுக்கொடுக்கப்பட்ட சீன வைத்தியமும் ஏற்றுக்கொள்கிறது. சிசேரியன் செய்யும்போது இந்த முக்கியமான நாடி வெட்டப்படுகிறது. இதன் காரணமாக மண்ணீரல்(sp12, sp13)., கிட்னீ,(ki12, ki13) பித்தப்பை போன்ற உள்ளுறுப்புகளுக்குச் செல்லக்கூடிய பிராண ஒட்டப்பாதை தடை செய்யப்படுகிறது.


இதன் தொடர்விளைவுகள் என்னவென்று பார்ப்போமா!



மண்ணீ ரலுக்குச் சக்திக்குறைவு ஏற்படும்போது, மண்ணீரலின் விஷேச குணமான "பிடித்து வைக்கும் தன்மை" குறைகிறது. இதனால் உடல் பருமன் உண்டாகிறது.  குடல் இறக்கம், மூலம், உதரவிதான இறக்கம், கர்ப்பப்பைஇறக்கம் , போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.







கிட்னியின் சக்திக்குறைவால் அடி முதுகு வலி ஏற்படலாம். நரம்புகளிலும் எலும்புகளிலும் கால்சியத்தின் அளவு குறையலாம். செவித்திறன் குறையலாம். பித்தப்பையின் சக்திக்குறைவினால் உடம்பில்அளவுக்கதிகமான கொழுப்புப்படிமம் ஏற்படலாம். நமது உடலில் தசை நார்களின் கட்டுப்பாடு பித்தப்பையில் இருப்பதால் தசை நார்களின் ஆற்றல் குறையலாம். இத்தனை சிரமங்களையும் ஏற்றுக்கொண்டு சிசேரியன் தேவையா?

சிஷேரியனுக்கு மருத்துவர்களின் பணம் பண்ணும் ஆசை தான் முக்கிய காரணம் என்று சொல்வதை என்னால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தரவர்க்கத் தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் மூலம் குழந்தைபெற்றுக்கொள்கிறார்கள் என்ற உண்மையையும் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன.


இதற்கு முதன்மையான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்கமுடியாததுதான் என்றாலும், சில தாய்மார்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தனது செல்வச் செழிப்பின் ஒரு குறியீடாகக் கொள்வதாகச் சில ஆய்வுகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. (அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பெருமையாக சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்)..


இன்னொரு முக்கியமான செய்தி, ஜோதிடம் என்ற மூடநம்பிக்கையினால் விளைவது. சில குடும்பங்கள் தங்கள் ஜோதிடர்களிடம் ஆலோசனை செய்து சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என நினைத்து மகப்பேறு மருத்துவர்களிடம் சிசேரியன் பிரசவம்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதும் நடைபெறுவதுமுண்டு.

இதுபோன்று இன்னும் எத்தனையோ படித்த குடும்பத்தில் உள்ளவர்கள் இன்னும் மூடநம்பிக்கையில் நாகரிகம் என்ற பெயரில் தெரிந்தே இதுபோன்ற ஆபத்துக்களை தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொள்கிறார்கள் . நண்பர்களே ஒருவேளை உங்களிலோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாரேனும் இதுபோன்ற எண்ணங்களில் இருந்தாலோ அல்லது கேட்க நேர்ந்தாலோ உடனே இன்றே அவற்றை அடியுடன் நிறுத்திவிடுங்கள் . அறிவியல் வளர வளர அன்றாட வாழ்க்கைமுறை மாறுகிறது .


இன்றைய அறிவியல் வளர்ச்சி நமது வாழும் நாட்களை அதிகரிக்கப் போவதாக எண்ணி அதில் சிக்கி சீரழிந்து விட வேண்டாம் . அறிவியல் வளர்ச்சிகளை நம்மால் இயலாத செயல்களை செய்வதற்கு பயன்படுத்துங்கள் . நம்மால் இயன்ற செயல்களை அழிக்கும் வகையில் அவை அமையவேண்டாம் . அப்படி ஒருவேளை அமைந்தால் அப்பொழுது இந்த உலகத்தில் மனிதர்களாகிய நாம் முழுவதும் அழிந்து நாம் உருவாக்கிய அறிவியல் வளர்ச்சிகள் மட்டுமே மீதம் இருக்கக்கூடும் இந்த உலகத்தில். சற்று சிந்தித்து செயல்படுங்கள் . இனியாவது நாம் வாழப்போகும் இந்த சிறிது காலத்தை இயற்கையுடன் இணைந்து இனிமையாக வாழுங்கள் . இயந்திரங்களுடன் சேர்ந்து இழந்துவிட வேண்டாம் .

சிலநேரங்களில், தவிர்க்க முடியாத காரணங்களால் சிசேரியன் தவிர்க்க முடியாது தான். குழந்தையின் தலை திரும்பாத நேரங்களில் சிசேரியன் தவிர்க்க முடியாது. ஆனாலும் இந்த சூழ்நிலை ஏற்படாமல் இருக்கத் , துவிபாதபீடம் நல்லமருந்து. இடம் மாறியுள்ள சிசுவை சரியான நிலைக்குத் திருப்பிவிடுவதற்குத் துவி பாத பீடம் , வெற்றிகரமாக கையாளப்பட்டுள்ளது. முதல் இரண்டு மாதங்கள் துவிபாதபீடம் செய்பவர்களுக்கு சிசேரியன் செய்யத்தேவையில்லை என்பதை என்னால் உத்திரவாதத்துடன் உறுதிகூறமுடியும்.குழந்தை கொடி சுற்றி பிறக்கிறது என்று சொல்கிறார்களே, இந்த நிலையையும்  துவி பாதபீடம், உத்தான பாதாசனா, பூரண தித்திலிகிரியா சரிசெய்யும்.


நண்பர்களே! மற்றொரு பதிவில் சிசேரியனுக்கான காரணங்களையும், தவிர்க்கும் வழி முறைகளையும் பற்றிப் பார்ப்போம்

Monday, January 17, 2011

உன்னையே நீ அறிவாய்




கி.மு.469 ல் கிரேக்க நாட்டில் ஓர் ஏழைச் சிற்பியின் மகனாகப் பிறந்தவர் சாக்ரட்டீஸ்.
 "நீ யார்?, எதற்காக வந்திருக்கிறாய்? என்ன செய்யப்போகிறாய்? என்பதை முதலில் தெளிவாக அறிந்துகொள், பின், அதன்படி நட!" என்றார் அவருடைய அப்பா. தனது நாற்பதாவது வயதுவரை ஒதுங்கி இருந்த சாக்ரட்டீஸ்அதன் பின்பு தன் எண்ணங்களை தைரியமாக, பேசத்தொடங்கினார்.


கடவுளை அவர் மறுக்கவில்லை, ஆனாலும் கடவுள் பெயரால் நடைபெறும் முட்டாள்தனங்களை எதிர்த்தார். உருண்டையான சப்பை மூக்கு , பிதுங்கி நின்ற கண்கள், குட்டையான உருவம், அசிங்கமான தோற்றம் இதுதான்
சாக் ரட்டீஸ்.ஆனாலும் அவர் பேச்சைக் கேட்க இளைஞர்கள் கூட்டமாக வந்தார்கள்.

எழுபதாவது வயதில் இளைஞர்களைக் கெடுக்கப் பார்க்கிறார் எனும்குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டது . "மன்னிப்பு கேட்டால் உயிர் பிழைக்கலாம் என நீதிபதிகள் சொன்ன போதும் "உயிரை விட என்னுடைய
கருத்துக்கள் உயர்ந்தவை" என்று உயிர்விட தயாரானார்.




மரணத்தேதி குறித்த அந்தக் குறிப்பிட்ட நாளும் வந்தது .


"நீங்கள் வாழ்வதற்கு தயாராகுங்கள் நான் விடை பெறுகிறேன்" என சுற்றி நின்ற, சீடர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு மகிழ்ச்சி குறையாமல் தனக்கான நஞ்சுக்கொப்பையை வாங்கிக் கொண்டார் சாக்ரட்டீஸ். " நஞ்சினை இப்பொழுதே குடிக்க வேண்டாம் சற்று நேரம் கழித்து குடிக்கலாம்" என சீடர்கள் சொல்ல 'காலம் தாழ்த்துவதால் நீங்கள் வீடு திரும்ப நேரமாகலாம் " எனக்கூறி விஷத்தை ஒரு சொட்டுக் கூட மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தார்.


"உங்கள் இறுதிச்சடங்கு எப்படி அமைய வேண்டும்," என சீடர்கள் கேட்டனர் .



"மரணத்துக்குப் பின் என்னை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது, என் உடலை என்ன செய்தாலும் எந்தப் பயனும் இல்லை" எனக்கூறி விடைபெற்றார் சாக்ரட்டீஸ்.




அந்த மாமனிதன் நமக்காக செய்த உபதேசம் என்ன தெரியுமா?




"உன்னையே நீ அறிவாய்"




"நண்பர்களே ! உண்மையான அறிவு என்ன தெரியுமா? தன்னை அறிவது தான்."

தன்னை அறிந்தால் மட்டுமே சுற்றி உள்ள உண்மைகளை உள்ளது உள்ளபடி அறிய முடியும். வாழ்வை வெல்லமுடியும்.







"தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே ."





                                                                         ஒம்தத் சத் 

Saturday, January 15, 2011

இதுவும் கடந்து போகுமா............

" நான்" எனும் பாதரசம் பூசிய

மாயக் கண்ணாடி என் மனம்.....


முகம் பார்க்கும் மாயக் கண்ணாடியில்
உலகம் பார்க்க நினைத்தது யார் குற்றம்?


மாயக் கண்ணாடி
அந்தப் பாதரசம் இழக்கத் தயாராயில்லை
உலகம் காட்டவும் தயாராயில்லை

தனக்கான முகங்களை மட்டும்
தப்பிக்க விடாமல் தன்னுள்
பத்திரப் படுத்திக் கொண்டேயிருந்தது...........

தப்பியோட முடியாத பிம்பங்கள்
விட்டு விலகாத "நான்" பிம்பங்கள்
சுகமாய்த்தான் இருந்தது
அந்த" அன்பு மழையில்"
நனையும் வரை


அந்த அன்பெனும் அடைமழையில்
நனைந்தது மாயக் கண்ணாடி


 மழை நின்றாலும் பரவாயில்லை
காணாமல் போய்விட்டது. 
உதிர்ந்து கரைந்தது பாதரசம்
"நான்" இழந்தது மாயக் கண்ணாடி.