Total Pageviews

Sunday, October 14, 2012

"எபிலெப்சி" எனும் கால் கை வலிப்பு நோய்

மாஸ்டர், காக்கை வலிப்புநோய் நரம்புநோய்தானே???இதற்கும் இரும்புக்குக்கும் என்ன சம்பத்தம்???????.......ராகவன்...நண்பர் ராகவன் சொல்வது போல "எபிலப்சி" எனும் காக்கை வலிப்பு நோய்...நரம்புநோய்தான்...மறுக்கவில்லை, ஆனால்..... இந்த நோய்க்கு "கால்- கை வலிப்பு நோய்" என்பதுதான் சரியே தவிர காக்கைக்கும் இந்த நோய்க்கும் சம்பத்தமில்லை.


நமது பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவம்,மூர்ச்சை (மூர்ச்சா), கால்கைவலி எனும் காக்கை வலிப்பு (அபஸ்மார), பைத்தியம் (உன்மாத), மூளைக்கோளாறுகள் (அ) மனக்கோளாறுகள் (மானஸதோஷ), திக்குவாய் போன்ற உச்சரிப்புக் கோளாறுகள், ஞாபகமறதி (ஸ்மிருதிக்ஷய),போன்ற நோய்களுக்கு மூளையே காரணம் எனக்கூறுகிறது.


ஆனால்.....ஐம்பூதங்களாலான இந்த மனித சரீரத்தில்,"மஜ்ஜைகளின் குவியல் " என அழைக்கப்படும் மூளையும்,நரம்புகளும்,நீர் பூதத்தை வைத்து வேலை செய்யக்கூடிய "சிறுநீரகத்தின்"கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக, சீன மருத்துவமான அக்குபஞ்சரும்,நமது சித்தர்களின் மருத்துவமான வர்மமருத்துவமும் சான்று கூறுகிறது.எபிலெப்சியும், ஸ்ட்ரேமெரிங் எனச் சொல்லக்கூடிய திக்குவாயும் கிட்னியின் சக்திக்குறைவு என்பதை, TCM(Traditional chinish medichine) எனச்சொல்லக்கூடிய சீன மருத்துவ சாஸ்திரம் தெளிவுபடக்கூறுகிறது. மனித உடலில் அதிகமான கோப உணர்வினால் கல்லீரல் பாதிப்பதாகவும், அதிகப்படியானத் துக்க உணர்வினால் நுரையீரல் பாதிப்பதாகவும் கூறுகிற இதே சீன மருத்துவம், பய உணர்வினால் கிட்னி பாதிப்பதாகவும் கூறுகிறது....ஒரு எல் -கே -ஜி படிக்கின்ற குழந்தை,.... வகுப்பாசிரியை பிரம்பை எடுத்தவுடன் பய உணர்வினால் சிறுநீர் கழித்துவிடுகிறதா, இல்லையா???????பயம் வரும்பொழுது வாந்தி வரலாமே , ஏன் சிறுநீர் வருகிறது???இப்பொழுது சொல்லுங்கள் பய உணர்வினால் கிட்னியில் ஏதோ ஒரு பாதிப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதானே!!!!!!.


நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் பயத்தினால் திக்குவதை நாம் பார்த்திருக்கிறோமே!!! அதேபோல் பயத்தினால் நரம்புகள் வலுவிழந்து உடல் நடுங்குவதைப் பார்த்திருகிறோமே!!!!......அதிகப்படியான பய உணர்வினால் கிட்னி பாதிக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் நரம்புகளும் பாதிக்கப்பட்டு அதன் தொடர்விளைவாக எபிலெப்சி எனும் காக்கை வலிப்பு நோய் உண்டாகிறது.
நமது பாரம்பரிய மருத்துவமான சித்தமருத்துவம் யாருக்கு இரும்புச்சத்துக் குறைவோ, அவர்களுக்கு மனபயமும்,நரம்புத்தளர்ச்சியும் இருக்குமெனக் கூறுவதோடு ..இவர்களுக்கு அயச் செந்தூரம் கலந்த மருந்துகளை தரச் சொல்கிறது. ஹிஸ்டீரியா எனக் கூறப்படுகிற மன நோய்களுக்குக்கூட உடலின் இரும்புச் சத்துக் குறைவு ஒரு காரணம் என்பதை நவீன மருத்துவமும் ஏற்றுக்கொள்கிறது.
நமது கிராமங்களில் பெரியவர்கள், "பயமெனும்" பேய் பிடிக்காமல் இருக்க இரும்பை கையில் வைத்துக்கொள் எனச் சொன்னது பொய் இல்லை நண்பர்களே! நமது கிராமங்களில் பிள்ளைதாச்சி எனச் சொல்லக்கூடிய கர்ப்பஸ்ரிகளின் கால்களிலுள்ள குட்டிவிரல்களில் இரும்பு மெட்டி அணிவித்ததும், பூப்பெய்திய பெண்களுக்கு அருகில் இரும்பு பூண் பொருத்திய உலக்கைகளை வைத்ததும் மூடப்பழக்கமில்லை நண்பர்களே! இரும்பு அருகிருந்தால் பய உணர்வு குறையும் என்னும் அற்புத விஞ்ஞானம்....
நமது முன்னோர்கள் ஆன்மீக மெய்ஞானிகள், அவர்கள் சொன்னது என்றும் பொய்க்காது.....காக்கை வலிப்பு நோய் கண்டவருக்கு கையில் இரும்பை கொடுப்பதால் ..பய உணர்வு குறைகிறது...சிறுநீரகம் சக்தி பெறுகிறது...அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் நரம்புகளும், மூளையும் வலிமையடைந்து...நரம்பு நோயான காக்கை வலிப்பு தற்காலிகமாகக்குறைகிறது!!!!!!.
என்ன நண்பர்களே, முன்னோர்களின் வைத்தியம் முத்தான வைத்தியம் தானே!!!
சரி,யோக மருத்துவத்தில் இதற்கு என்ன தீர்வு?
நோயாளிக்கு ரத்த அழுத்தம் இல்லாத பட்சத்தில், சர்வங்காசனமும், மச்சாசனமும் நல்ல பலன் அளிக்கும்...புஜங்காசனம்,சலபாசனம், செய்யலாம்...."பஞ்சபூத சங்கமம்" நல்லபலனைக் கொடுக்கும். "நடனசந்தனா" , சாந்தி ஆசனம் மூளைக்கு ஓய்வும் , சக்தியும் அளித்து இந்நோயிலிருந்து மீண்டெழ உதவிசெய்யும்..கிரியாக்களில் "வமன தெளதி" பித்ததைக் குறைத்து நோயைக் கட்டுக்குள் கொண்டுவரும்.


பித்தமிலாது சித்தம் கெடாது என்பது பழமொழி.....பித்த பிரகிருதியில் உள்ளவர்களுக்கே இந்த நோய் அதிகமாகக் காணக் கிடக்கிறது. "கல்யாணக்கிருதம்' எனும் அருமருந்து இந்த நோய்க்குத் தீர்வாக அமையும். விபத்து போன்ற காரணங்களால் தலையில் அடிபட்டு அதன் விளைவாகத் தலைக்குள் ரத்தம் கட்டி அதன் மூலமாக இந்த நோய் உண்டாகும் பட்சத்தில் பஞ்சகர்மா சிகிச்சையில் ஒன்றான"சிரோதாரா" நல்ல பலன் கொடுக்கும்.


திரிதோஷ அறிவையும், உளவியலையும் இணைத்து செய்யப்படும் ஒரு சிகிட்சை முறையே இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டுவரும். 


3 comments:

AK said...

"நடனசந்தனா" மற்றும் "வமன தெளதி" என்றால் என்ன சார் ?

Yoga Yuva Kendra said...
This comment has been removed by the author.
Yoga Yuva Kendra said...

நடன சந்தனா என்பது சுவாமி குவலாயனந்தரால் 30 வருட ஆராய்ச்சிக்குப்பின் உருவாக்கப்பட்ட ஒரு பிராணாயாமப்பயிற்சி, இது நாதப்பிராணாயாம வகையைச் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட லயத்தில் ஒரு சப்தத்தை உருவாகும் போது, சுவாசத்தின் நீளத்தை அதிகமாக்கி அதன் மூலமாக மனத்தை அமைதிப் படுத்தும் ஒரு பயிற்சி. இதன் மூலமாக இன்சோமேனியா, பிரஷர் போன்ற நோய்களையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும்........

உடல் உள்ளுருப்புகளைச் சுத்தப்படுத்த யோகத்தில் "சத்கிரியாக்கள் என ஒரு பெரிய பகுதியே இருக்கிறது .... அவற்றுள் வமன தெளதிக்கிரியை ஒன்றரை லிட்டர் உப்புத்தண்ணீரைக்குடித்து வாந்தி எடுத்து நோய் தீர்க்கும் ஒரு யோக மருத்துவமுறை........இதனால் பித்த சம்பத்தமான வியாதிகளைக் குறைக்கலாம்...

Post a Comment