Total Pageviews

Saturday, December 3, 2011

தேடல்.......



ஏதோ ஒன்றைத் தேடித்தான் 
எந்தன் மனதும் அலைகிறது
தேடும் பொருளேத் தெரியாமல்-அது
திசைகள் எங்கும் பறக்கிறது.

காற்றில் ஏறிப் பறக்கிறது
கடலின் மீது மிதக்கிறது
மலையில் ஏறி மலைக்கிறது-கவலைக்
கடலில் மூழ்கி தவிக்கிறது

எல்லாம் எனக்கு இருந்தாலும்
ஏதோ ஒன்று இருக்காது
எதுவும் இல்லை என்றாலும்- அதுக்கு 
"சும்மா" இருக்கத் தெரியாது

அதனால் என்ன பூ மனமே
நீ அலையாதே என் மனமே
வெளியில் தேடும் பொழுதெல்லாம்-நீ
உந்தன் இருப்பை உணர்வாயே

ஞானம் தேடி நான் அலைந்தேன்
ஞானமோ என்னைத் தேடியது
தேடுவதை நிறுத்திக் கொண்டேன்-நானே
ஞானமாக உணர்ந்து கொண்டேன்.



1 comment:

vijay said...

எதிரே நிற்ப்பவரை பிரதிபலிக்கும் கண்ணாடி ,
எடுத்த குவளையின் வடிவம் பெறும் நீர் ,
போன்று இருப்பவர் அல்லவோ ஞானியர். அவர்களுக்கென்று
சொந்த விறுப்பு ,வெறுப்பு தேடல் ஏது ???
ஞானியரிடம் நம்மையும் ,
நம்மிடம் ஞானியரையும் காணலாம் அன்றோ !
உங்களையும் அவ்வாறே காண்கிறோம் மாஸ்டர்

Post a Comment