Total Pageviews

Wednesday, April 6, 2011

நமது பலம்


நம்மைப் பற்றி நமது கருத்து?
யோக வகுப்புகளில் மாணவர்களிடம் உங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? எனும் கேள்வியைக் கேட்பது வழக்கம். மாணவர்கள்
பெரும்பாலும் திணறவே செய்வார்கள். அதிசயமாக, அவர்கள் இதற்கான பதிலைத் சொன்னால் பெரும்பாலும் கூட்டியோ குறைத்தோதான் சொல்வார்கள்.
இது அவர்களுக்கு உள்ள தாழ்வு மனப்பான்மையையுயம் (Inferiority Complex) உயர்வு மனப்பான்மையையும் (superiority complex)தான் வெளிக்கொண்டுவரும்.
உண்மையைச் சொல்லப்போனால் நம்மில் பலர் சுயமதிப்பீடுகளில் தெளிவாக இல்லை என்பதே உண்மை.
நாம் மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்களோ அந்தக் கருத்தையே நம்மைப் பற்றிய மதிப்பீடுகளாகவும் எடுத்துக் கொள்கிறோம்.
 இந்த உலகம் பொய்மை நிறைந்தது என்பதை நாம் உணரவேண்டும். முகத்திற்கு முன்னால் ஒன்றையும், முதுகிற்குப் பின்னால் ஒன்றையும் பேசும் உலகம் இது. அதுமட்டுமா? காரியம் ஆனபிறகு ஒன்றும் காரியம் மறுக்கப்பட்டால் வேறு கருத்தும் சொல்லும் இந்தச் சுயநல உலகை நம்பியா நம்மைப் பற்றிய முடிவுக்கு வரப்போகிறோம்? செய்யவேண்டாமே.
அதற்காக நம்மைப் பற்றிய மதிப்பீடுகளில் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. சீர்தூக்கிப் பார்த்து மனசாட்சியையே மையமுள்ளாகக் கொண்டு கருத்து எடுத்துக்கொண்டால் நல்லது.
நம்மைப் பற்றிய சுயமதிப்பீடுகளைச் சரிவரத் தெரிந்து வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப் போகிறோம் என்கிறீர்களா?
சுயபலம், பலவீனம் தெரியாததாலேயே பலவிஷயங்களைக் கோட்டைவிட்டு, நல்வாய்ப்புகளை இழக்கிறோம். இதுமட்டுமா? சுயபலவீனம் தெரியாததால் பல நேரங்களில் மூக்கு உடைபடுவதும், அவமானப் படுவதும்.பெரும் பொருளாதாரச் சேதங்களையும் ஏற்படுத்திக்கொள்கிறோம்.

2 comments:

suganya shankar said...

சார்

நமது சுயபலம் , பலவீனம் நாம் மற்றவர்களை compare செய்து தானே நிர்னைத்துகொள்கிறோம். அப்படி செய்யும்போது automatically ஒரு காம்ப்ளெக்ஸ் வந்து விடுகிறது. அதை நாம் ignore செய்தலும் எங்கோ ஒரு முலையில் அது ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அது நமது மனதையும் உடம்பையும் பாதிக்கிறது. இதை எப்படி நாம் control செய்வது. இது நமது குழந்தைகளுக்கும் கண்டிப்பாக கற்றுகொடுக்கவேண்டிய ஒன்று.

suganya

Unknown said...

excuse me boss,suyapalam patthi enaku sollenga

Post a Comment