Total Pageviews

Wednesday, March 9, 2011

ஸ்படிக மருத்துவம்


கிறிஸ்டல் சிகிச்சை என்றால் என்ன?




இன்றைய அறிவியல் உலகில் அனைத்து கருவிகளும் இயங்குவதற்கு அதி முக்கியமாக தேவைபப்டுவது குவார்ட்ஸ் கிரிஸ்டல்கள் எனப்படும் ஸ்படிகக் கற்கள். இவைகள் பூமிக்கு அடியில் வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் உருமாறியுள்ளன. நம் முன்னோர்கள் ஸ்படிகம் எனப்படும் கிரிஸ்டல் கற்களை மாலைகளாக அணியும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதனால் உடலுக்கு எப்போதும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. பல நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது. விஞ்ஞான ரீதியாக கிறிஸ்டல் கற்கள் தன்னுள் இருந்து நொடிக்கு நான்கு லட்சம் அதிர்வு அலைகளை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கற்கள் எந்த ஓர் சக்தியையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டே இருக்கின்றன. சக்திகளை எப்போதும் வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. இந்த மூன்று குணங்களும் தன்னுள் அடக்கி, அற்புத ஆற்றல் பெற்ற இந்த கற்களை எலக்ட்ரானிக் கருவிகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.



சீன நாட்டில் பரவலாக மனித உடலில் காணப்படும் ஏழு ஆதார சக்கரங்கள் எனும் புள்ளிகளான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா எனும் ஏழும் இடங்களில் ஏழு வித வண்ணக் கற்களை வைத்து நோய்களை தீர்க்கின்றனர். வயலட், இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்களும் முறையே தலையில் இருந்து முதுகுத் தண்டின் அடிப்பக்கம் வரை நம் உடலில் உள்ள ஏழு ஆதாரப் புள்ளிகளில் இருந்து வெளிப்படுகிறது. உடலின் எல்லா உறுப்புகளின் இயக்கங்களும் இntha ஆதாரப் புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளவை. உடலின் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளதோ அதன் தொடர்பு உள்ள ஆதாரப் புள்ளியை நோக்கும்போது அப்புள்ளியில் இருந்து வெளிப்படும் நிற அலைகள் மங்கிவிடும். இதை கிரில்லியன் படமுறையில் நிரூபித்துள்ளனர். இவ்வாறு மங்கிய நிறம் வெளிப்படும் புள்ளியில் அந்தப் புள்ளியின் நிறத்தை உடைய மணிக் கற்களை பதினைந்து நிமிடம் தினசரி காலை, மாலை வைத்து வந்தால் அந்த நிறங்களைப் பெற்று அப்புள்ளிகள் பலம் பெற்று, நோய் நீங்குகிறது.


சீன நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் இம்முறையில் வைக்கப்படும் நவமணியை சார்ந்த இக்கற்கள் விலை அதிகம். க்ரோமோ தெரபி எனும் வண்ண மருத்துவத்தில் வண்ணங்களை செலுத்தி நோயை நீக்கும் முறை வட இந்தியாவில் பரவலாக பயன்படுகிறது. இம்முறையில் ஏழு வண்ணங்களை தன்னுள் அடக்கியுள்ள, சக்தி மிகுந்த ஸ்படிக கற்கள் தற்போது சிகிச்சைக்காக எளிய முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

2 comments:

suganya shankar said...

Is there any relation between these stones and the navarathnam stones(apart from it is nine in number). Wearing the navarathnam ring in the finger or a necklace does it do the same effect as these seven crystal stones.

I used to think it is a fashion to wear these rings but after reading the above wonderful information I just started thinking about the corelation between these two. Is it true?

Shankar Ganesh

Yoga Yuva Kendra said...

இதற்கான பதிலை தனிப பதிவாக எழுதுகிறேன் சுகன்யா

Post a Comment