Total Pageviews

227,157

Sunday, January 9, 2011

நானே இல்லாத போது.........


தூக்கத்தில் தொலைந்து
போன என் கனவுகளை
கண் விழித்து தேடிப் பார்த்தேன்

என் கனவுகள் எல்லாம்
இறந்து கிடக்க
குற்றுயிரும் குலையுயிருமாக
ஒரு கனவு மட்டும்
துடிக்கக் கண்டேன்

ஏன் இக்கதி எனக் கேட்டேன்
அக்கனவிடம், அது என்னைப்
பார்த்து ஏளனமாய் சிரித்தது ..

கனவை
கொண்டவனும் நீயே
கொன்றவனும் நீயே
என பழி போட்டது

நான்
இல்லை என்று மறுத்தேன்
இன்னும் சொல்லப்போனால்
தெரிந்தும் பொய்யுரைதேன்
"நானே" இல்லாத போது
கனவுகள் மட்டும் எப்படி?

1 comment:

Hemamalini said...

valkaiya kanavacum pothu thiyanamum anupavum kanava r.hema

Post a Comment