வணக்கம் !
நாலந்தா பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.தேர்வாகிய முதல் மாணவர் யார் தெரியுமா? தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜீவகன் . இவர் புத்த பெருமானுடைய சீடர்களில் ஒருவர் . சேர்க்கைக்காக மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா ?மருத்துவ பயன் இல்லாத "இலை" எது? என்பதே. ஜீவகன் மட்டுமே மருத்துவ பயன் இல்லாத "இலை" பிரபஞ்சத்தில் கிடையாது என்பதை கூறி முதல் மாணவனாக தேர்வு செய்யப்பட்டார் .
இன்று நாம் சில "இலைகளைப்" பற்றி பார்போம். "ஸ்பர்சவேதி" என்றொரு இலை பற்றிய குறிப்பு சித்தர் பாடல்களில் காண முடிகிறது . இந்த இலையால் இரும்பைத்தொட்டால், அது தங்கமாகிவிடுமாம். கொங்கன சித்தருக்கு, போகமஹரிசியால்அறிமுகம் செய்யப்பட்டது இந்த ஸ்பர்சவேதி . ஆதிசங்கரர் போன்ற மகான்கள், இந்த இலையைப் பல
இடங்களில் உதாரணமாக கூறியிருக்கிறார்கள். (தாராபுரம் பக்கத்தில் பொன்னூதி மலை இருக்கிறது. இந்த மலையில் இந்த இலை இருப்பதாக
சொல்லப்படுகிறது. நானும் இந்த மலைக்கு போயிருக்கிறேன். இலையைத்தேடி அல்ல, கொங்கனச்சித்தர் தவம் செய்த அந்த குகையைப் பார்ப்பதற்கு),
"தன ஆகர்ஷ இலை'' என்று சதுரகிரியில் இருப்பதாக சாமி என்னிடம் கூறி இருக்கிறார். குழந்தை கர்ணனை குந்தி பேழையில் வைத்து ஆற்றில் விடுகிறாள் . அந்தப் பேழை ஒதுங்கிய இடம் தன ஆகர்ஷ இலைகள் நிறைந்த மூலிகை வனம். அதனால் தான் எத்தனை தானம் கொடுத்தாலும் கர்ணன் அள்ள அள்ளக் குறையாத செல்வத்துடன் வாழ்ந்து வந்தான் என பாரதம் கூறுகிறது.
"பாதாள பைரவி' என்றொரு கொடி. இந்தக் கொடியை வீடுகளில் யாரும் வளர்ப்பதில்லை. காரணம் ,இந்தக் கொடி எந்தத் திசையை நோக்கிப் படருகிறதோ அந்தப் பக்கத்தில் இருக்கிறவர்களோடு பகைமை ஏற்படும் என சொல்லப்பட்டு இருக்கிறது.
"கொல்லன் கோவை" என்றொரு செடி இருக்கிறது . இதனை படுக்கை அறையில் கட்டித் தொங்கவிட்டால் நன்றாக தூக்கம் வரும். மேலும் பயமுறுத்தக் கூடிய கனவுகள் இருக்காது. நான் திருவண்ணாமலையில் தங்கி இருந்த சமயம் குறிப்பிட்ட ஒரு செடியில் இருந்து சாமி சில இலைகளைப் பறித்து தருவார். அதைச் சாப்பிட்டவுடன் பசி இருக்காது என்பதுடன் ஒரு புத்துணர்வு ஏற்படுவதையும் உணர்ந்து இருக்கிறேன் .பின்னாட்களில் , சாமி தங்கி இருந்த குகையில் இந்தஇலைகளை சிவகாசி மாணவர்களிடம் காண்பித்து இருக்கிறேன்.
வெங்காய இலைகளும், வெங்காய சருகுகளும் , கதிர் அலைகளால் ஏற்படக் கூடிய விளைவுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது என்பதை போகர் கூறி இருக்கிறார் . செல்போன் அதிகமாக பயன் படுத்துபவர்கள், கணணியை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள், வெங்காய இலைகளையும், சருகுகளையும் இருக்கையாகப் பயன்படுத்தலாம்.
சாணிப்பிள்ளையாரின் மேல் அருகம்புல்லை சொருகி வைப்பது ஏன் தெரியுமா?. அருகம்புல் சொருகப்பட்ட சாணியில் புழு, பூச்சிகள் ஏற்படுவதில்லை . அருகம்புல் பொதுவாக ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
குயிலின் குரல் இனிமைக்கு "மாந்தளிர்" ஒரு காரணம் . குயில் மாமரத்தின் இழந்தளிர்களை பிரியமுடன் சாப்பிடுகிறது. கரகரப்பான குரல் இருப்பவர்களும் , தொண்டை அலர்ஜி இருப்பவர்களும் தினமும் மாமரத்தின் இழந்தளிர்களை சாப்பிட்டால் குரல் இனிமையாகும். அதுமட்டுமல்ல அஜீரணத்தால் கஷ்டப்படுபவர்களும், மாதவிடாய் பிரச்னைகளால் கஷ்டப்படுபவர்களுக்கும் மாந்தளிர் ஒரு நல்ல மருந்து.
அதுபோல மாவிலை ஒரு முக்கியமான கிருமி நாசினி . தண்ணீர்ப் பாத்திரங்களில் மாஇலைகளைப் போட்டு வைத்தால் தண்ணீரின் கடினத்தன்மை குறையும். மாவிலைகளைக் கோவில்களிலும், வீடுகளிலும் விசேஷக் காலங்களில் பயன்படுத்துகிறார்களே ஏன் தெரியுமா?. மாவிலை பிராண சக்தியைச் சேமித்து வைக்கக்கூடிய பேட்டரி போலச் செயல்படுகிறது. அதனால்தான் கும்பாபிஷேக காலங்களில் கும்பத்தில் மாவிலைகளை வைக்கிறார்கள்.
வைரஸ், பாக்டீரியா, போன்ற நுண்ணுயிர்கள் நம்மைத் தீண்டாமல் இருக்க "வேப்பிலை" ஒரு முக்கியமான மருந்து . தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருக்க வீட்டு வாசலில் வேப்பிலையைக் கட்டித் தொங்கவிடுவது பண்டையகால மரபு.தீய சக்தியால் பீடிக்கப் பட்டவர்களை வேப்பிலையால் மந்திரிப்பது தொன்று தொட்டு இருந்துவரும் பழக்கம். பிரசவ காலத்தில் தனியாகச் செல்லும் பெண்களின் தலையில் பூவுக்குப் பதிலாக வேப்பிலை வைத்து அனுப்புவது பண்டைய காலப்பழக்கம்.
பாதாளப் பைரவி சண்டையை வளர்க்கும் என்றால், நட்பை வளர்க்க ஒரு இலை இருக்க வேண்டுமே !இருக்கிறது அதுதான் நம்ம "வெற்றிலை". வெற்றிலைக்கொடி பூக்காது, காய்க்காது,வெற்று இலையை மட்டுமே தருவதால் இதற்க்கு வெற்றிலைக்கொடி என்று பெயர். அந்தக்காலத்தில் பண்டமாற்று நடைபெறும்போது, வெற்றிலைப்பாக்குடன் சேர்த்தே மாற்றிக்கொள்வர். இதனால் உறவு வளருமாம். அதனால்தான் இன்றும் கல்யாணத்திற்கு முன்பாக வெற்றிலைப்பாக்கு மாற்றிக்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது
துறவி என்பவர் பற்றற்றவர் . அவருக்கு உறவுகள் தேவையில்லை . எனேவேதான் துறவிக்கு உறவைக்கொடுக்கும் தாம்பூலம் கொடுப்பது இல்லை. கணவன் மனைவி இடையே பரஸ்பரம் உறவு மேம்பட வேண்டும் என்பதனாலேயே தாம்பூலம் பரிமாறச் சொன்னார்கள்.தெய்வத்திற்கும் நமக்கும் உள்ள உறவு நீடிக்கவேண்டும் என்பதற்க்காகவே அர்ச்சனையின்போது தாம்பூலம் சமர்ப்பிக்கிறோம். உறவு வலுக்க வேண்டும் என்பதற்க்காகவே நவராத்திரியின் போது வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கிறோம்.
"தூது வளை" என்றொரு இலை. யோக மார்க்கத்தில் சக்தியாகிய மனதையும் , சிவமாகிய ஆத்மனையும் இணைப்பது தூதுவனாகிய "காற்று". காற்று தூதாக செல்ல வேண்டிய வேளையில் இடைமறிக்கக் கூடிய சளியை அகற்றும் மருந்து என்பதால் இதற்கு "தூதுவேளை" எனப்பெயர்.

"தை வாழை" என்றொரு இலை இருக்கிறது . தை மாதத்தில் மட்டுமே அதிகமாகக் காணப்படும் .தை மாதத்தில் பனியின் சீற்றத்தினால் தலையில் சேரக்கூடிய கபத்தை எடுப்பதற்கு இந்த இலையைச் சமூலமாக அரைத்துப் பிழிந்து அந்தச் சக்கையை ஒரு வெள்ளைத்துணியில் வைத்து தலையில் கட்டிவிடுவார்கள். இதனால் தலையில் உள்ள கபம் குறைகிறது. தை மாதத்தில் பயன்படுகிற இலை என்பதால் இதற்கு "தை வேளை' என்பதே சரியான பெயராகும் .
கண்ணுபிள்ளை இலை என்று ஒன்று இருக்கிறது. சிறு நீரக கற்களுக்கு இது சிறந்த மருந்து. இதுபோல் நெருஞ்சில் இலைகளும், சிறுநீரக கற்களுக்கு சிறந்த மருந்து. பெரும்பாடு என்று சொல்லக்கூடிய ரத்தப்போக்கு நோய்க்கு தொட்டாசினுங்கியின் இலைகளை அரைத்து சாப்பிட்டால் குணமாகும்.
மலச்சிக்கலுக்கும், மூலத்திற்கும், வாயுத்தொல்லைகளுக்கும் லெட்சக்கட்டைஎனும் மரத்தின் இலைகளை சமைத்து சாப்பிடலாம். 'சிக்கன் குனியா' ஜுரத்தினால் கைகால்கள் வீங்கி வலி இருந்தால் புளிய இலைகளை அவித்து ஒத்தடம் கொடுக்கலாம்.கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய நெல்லியின் இலைகளை அரைத்து மோரில் சாப்பிடலாம். குற்றாலத்திற்கு மேலுள்ள மலையில் "ஒட்டுப்பலா" என்றொரு மரம் இருக்கிறது. இந்த மரத்தின் இலைகள் மனிதனின் ரத்தத்தை உரிஞ்சக்கூடியக் குணம் கொண்டவை. இந்த இலைகளை "ரத்த மோட்சம்' என்று சொல்லக் கூடிய ஆயுர்வேத
சிகிட்சையில் பயன்பட்டதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.
என்ன நண்பர்களே ! மருத்துவப் பயன் இல்லாத "இலை" இல்லை என்பது எத்தனை உண்மை என்பது புரிகிறதா ?.........
அப்பாட......... ஒருவழியா முடிச்சுட்டேன் ...... மறக்காம உங்களது கருத்துகளைப் பதிவு பண்ணுங்கப்பா......
7 comments:
பயனுள்ள குறிப்புகள்
சாமி சொன்ன பசி தணிக்கும் மூலிகை பெயர் என்ன மாஸ்டர்?
வேல்விஜயன், அந்த மூலிகையோட பெயர்
எனக்குத்தெரியல ஆனால் அந்த மூலிகைய உள் கிரிவலப்பாதையில பார்த்திருக்கேன்.நானும் சாமிட்ட கேக்கனும்னு நினைச்சிருக்கேன்.
Master, Thanks a million for this article! I happened to understand some very interesting things, its history/meaning ...
It would be great if you let us know if there's something for Thyroid disease ...
good
அருமையான தகவல்.நன்றிகள் ஐயா...
நன்றி மாஸ்டர் மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏
Post a Comment