கழுத்து எலும்பு தேய்மானம்
கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு "மன்யாஸ்தம்பம்" அல்லது" க்ரிவாக்ரகம்" என்று பெயர். நவீன காலத்தில் கழுத்து எலும்பு தேய்மானம் பொதுவாக காணப்படும் ஒரு நோயாகி விட்டது .90 சதவீத மக்கள் இந்த நோயினால் அவதிப்படுகிறார்கள் . இதில் 50 % இந்த நோய் வந்ததிற்கான அறிகுறிகளுக்கு வைத்தியம் பண்ணுகிறார்களே தவிர இந்த நோய் பற்றிய முழு விழிப்புணர்வு பெற்றவர்களாக இல்லை. கழுத்து உடம்பின் மிக முக்கியமான பகுதியாகும்.
கழுத்துப்பகுதியில் ஏழு எலும்புகளும் , முப்பத்து இரண்டு தசைகளும், நான்கு முக்கிய இரத்தக் குழாய்களும் உள்ளன.கழுத்து வலி ஏற்பபடும்வரை நாம் கழுத்தைப்பற்றி சிந்திப்பது இல்லை. stiffneck என்று சொல்லக்கூடிய கழுத்து பிடிமானத்தை அனுபவிக்காதவர்கள் குறைவு.
நமது முதுகுத்தண்டு வடத்தில் மொத்தம் 34 எலும்புகள் உள்ளன. அவற்றில் மேலிருந்து கீழாக முதல் 7 எலும்புகளும் செர்விக் என வழங்கப்படுகிறது . இந்த எலும்புகளில் ஏற்படும் தேய்வே கழுத்து எலும்பு தேய்மானம் என வழங்கப்படுகிறது.
கழுத்து எலும்பு தேய்மானம் காரணம்.
நமது உடலில் 40 வயதில் அஸ்தி(எலும்பு), பலம் குறைவதாக யோகநூல்களும் ,ஆயுர்வேத நூல்களும் கூறுகின்றன . இயல்பாகவே அதிகமாக பயன்படுத்தும் கழுத்து எலும்பு தேய்வடைகிறது.
அடக்கிவைக்கப்பட்ட துக்கம் , மன அழுத்தம் ,போன்றவை இந்த நோய்க்கு முதல் காரணமாகிறது.பரபரப்பான வாழ்க்கை உடையவர்கள், கணிணியில்வேலை செய்பவர்கள்,பஸ் கண்டக்டர், போன்றோருக்கு இந்த நோய் வர வாய்ப்பு இருக்கிறது
உயரமான தலையணையைப் பயன்படுத்துவதாலும், டிவி பர்க்கும்போதோ, அல்லது கணினி பார்க்கும் போதோ சரியான இருக்கையைப் பயன்படுத்தாதனாலோ இந்நோய் வரலாம்.
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, குறிப்பாக ஸ்கிப்பிங் போன்ற குதிக்கும் பயிற்சிகளைச் செய்பவர்களுக்கு இந்நோய் வரலாம்.பளுதூக்கும் வீரர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம்.
அதிகமான உடற்பயிற்சியினால் அட்ரீனலின் இயக்கம் அதிகமாகி மூலப்பிராணன் செலவாகிறது, அதன் தொடர் விளைவாக கிட்னி சக்தி குறைவாகிறது. கிட்னியே எலும்புகளுக்கும், எலும்புமஜ்ஜைக்கும் பொறுப்பாவதால் எலும்புகள் பலம் குறைகின்றன.
சுயஇன்பம் தவறல்ல என்பது போன்ற கருத்துகளை சில ஆங்கில மருத்துவர்கள் தொலைக்காட்சியில் கூறுவதை நான் கேட்டு இருக்கிறேன்.ஆனால் சுய இன்பத்தால் நெஞ்சு எலும்புகள் இறுகி கொள்கின்றன. இதன் தொடர் விளைவாக கழுத்து எலும்பு தேய்மானம் உண்டாவதைத் தடுக்க முடியாது.
மலச்சிக்கல் அதிகமாக இருந்தால் அபான வாயுவின் இயக்கம் அதிகமாகி அதன் விளைவாகவும் எலும்பு தேய்வு ஏற்படலாம். கழுத்து எலும்புத்தேய்வு யோகத்தில் வாத நோயாகவே கருதப்படுகிறது.
வாத பிரகிருதிக்காரர்கள், குண்டு குழியான பாதையில் தொடர்ந்து இரண்டு சக்கர வாகனம் அதிகமாக ஓட்டுவதாலும், ஒரே கையினால் நீண்ட தூரம் அதிகமான எடையைத் தூக்கிச் செல்வதாலும் இந்நோய் வரலாம்.
“அதாரனீயவேகமான “ தும்மலை அடக்குவதாலும் இந்நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக யோகமருத்துவ நூல்கள் கூறுகின்றன.
நோய்க்கான அறிகுறிகள்
நேரடியாகவே கழுத்தில் வலி இருக்கும். சிலருக்கு கைகள் மரத்து போகும் .கைகளில் வலியும், சில நேரங்களில் எறும்பு ஊர்வது போன்ற உணர்வும், எரிச்சல் போன்றும் வலி ஏற்படும். எலும்புத் தேய்வின் அளவு, திசை, மற்றும் எந்த எலும்பு தேய்ந்துள்ளது என்பதைப் பொறுத்து வலியும், வேதனையும் மாறுபடும்.
சிலருக்கு தலைவலி, மற்றும் தலைச்சுற்று (vertebro basilar insufficiency) ஏற்படலாம். சிலருக்கு உடலை சமநிலையில் வைத்துக்கொள்ள முடியாது. சிலருக்கு பயணத்தின் போது மட்டும் வரக்கூடிய தலைவலி, ரயிலில் செல்லும்போது வண்டி செல்லக்கூடிய திசைக்கு எதிர்த்திசையில் அமர்ந்தால் வியர்வையுடன் கூடிய தலைச்சுற்று.
மணிக்கட்டை சுற்றும்போது எலும்பு உரசியதுபோல சப்தம் வந்தால், அதிகமான கோபஉணர்வு, மன அழுத்தம், ஏதாவது ஒரு கையினால் மட்டும் பொருட்களைப் பற்றிப்பிடிக்க முடியாமை, போன்ற அறிகுறிகள் கழுத்து எலும்புத்தேய்வை வெளிப்படுத்துகிறது.
கழுத்து எலும்புத் தேய்வா என எப்படி முடிவு செய்வது ?
நோயாளியின் அறிகுறிகளை வைத்து மருத்துவர் மட்டுமே முடிவு செய்ய முடியும், சில நேரங்களில் x-ray, MRI போன்ற பரிசோதனைகள் செய்ய வேண்டியது வரலாம்.
தீர்வு
ஆங்கில மருந்துகள்:
வலி நிவாரணிகளைக் கொடுப்பார்கள். இல்லை என்றால் அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்று சொல்லி விடுவார்கள். ஆனால் இதனால் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. வலி மாத்திரைகள் வயிற்றைக் கெடுத்து அல்சரை உண்டாக்கும். அதனால் எச்சரிக்கை தேவை. அறுவை சிகிட்சை செய்தபின்னும் குணமாகாத நோயாளிகளை நான் பார்த்திருக்கிறேன்
ஹோமியோபதி மருந்துகள்:
cimicifuga, aloes, arnica, rhustox, bryonia போன்ற மருந்துகள் முழுமையான பலனைத் தரும். வலிகளைக் குறைப்பதோடு தசைகளை இலகுவாக்கி நிரந்தரமாக குணப்படுத்தும். பயோகெமிக் மருந்துகளும், பயோகெமிக் கூட்டுக்கலவை மருந்துகளும் உடனடி பலனை அளிக்கும். கழுத்து எலும்புத்தேய்வு நோய்க்கு யோகப்பயிற்சிகளுடன் கூடிய ஹோமியோபதி மருத்துவம் நிரந்தர நிவாரணம் அளிக்கும் என்பது நிச்சயம். எனவே அச்சம் தேவையில்லை.
யோகத்துடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை
இம்மாதிரி நோயாளிகள் அர்த்தபுஜங்காசனம் , புஜங்காசனம், பூரணசலபாசனம் போன்ற கிட்னிக்கு பலம் அளிக்கக் கூடிய ஆசனங்களைச் செய்யலாம். இதனால் மேலும்மேலும் எலும்புகள் தேய்வதைக் குறைக்க முடியும்.
அபான வாயுவின் சீற்றத்தால் ஏற்படும் தேய்மானத்திற்கு பவனமுக்தாசனம் நல்ல பலனைத்தரும். இதனால் மலச்சிக்கல் தீர்வதோடு கழுத்தில் தங்கி இருக்கிற அபான வாயுவையும் கீழிறக்க முடியும்.
ஸ்கந்தசக்ரா எனும் யோகப்பயிற்சி புஜங்களில் ஏற்படும் இறுக்கத்தையும், வலியையும் குறைக்கும். இந்தப் பயிற்சியினால் கைகளுக்குச் செல்லும்.ரத்த நாடிகளில் ஏற்படும் தடைகளையும், பிராண ஓட்டத் தடைகளையும் நீக்கி விடமுடியும்.
மனிபந்தச்சக்ரா, மற்றும் அங்குலிநமன், மனிபந்தநமன், அங்குலி வியாசகா போன்ற பயிற்சிகள் கைகளில் இழந்த சக்தியை மீட்டுத்தரும் .
மச்சாசனம், TRACTION தரக்கூடிய பயனைத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை. பார்ச்சுவகோனாசனம் நெஞ்சுஎலும்புகளை விரியவைத்து கழுத்து எலும்புத் தேய்வைக்குறைக்கும். மேரு தண்டமுத்திரை, மற்றும் உபாத்தியாயமுத்திரை, விக்ன முத்திரை, நமஸ்கார முத்திரை, பிராணயாமங்கள் , இந்நோயை சரி செய்யும்.
ஒரு சரியான யோகஆசிரியரால் கழுத்து எலும்புத்தேய்மானத்தைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரமுடியும். இம்மாதிரி நோயாளிகள் யோகப்பயிற்சிகளைச் செய்வதற்கு முன்பாக கொட்டம்சுக்காதி தைலம், கார்பாஸாஸ்த்யாதி தைலம், பஞ்சஸ்னேககுழம்பு போன்ற ஏதாவது ஒரு தைலத்தை இளஞ்சூடாக்கி வலி உள்ள இடத்தில் வைத்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதற்குப் பின்பாகவே பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
ஆயுர்வேத சிகிச்சை முறையில் “கிழி’ என்ற ஒத்தடம் கொடுக்கும் சிகிச்சையும், சிரோதாரா , சிரோவாஸ்தி, என்ற சிகிச்சைகளும், மூக்கில் எண்ணெய் விட்டு செய்கிற நஸ்யமும் நல்ல பலனைக் கொடுக்கும்.
முக்கிய குறிப்புகள்
கழுத்துப் பயிற்சி செய்யும்போது எப்போதும் கழுத்தை மெதுவாகவே திருப்பவோ, அசைக்கவோ வேண்டும். கண்டிப்பாக வேகமாக பயிற்சி செய்யக்கூடாது . .
தலையில் அதிகபாரம் தூக்கக் கூடாது.
தலை துவட்டும் போது மெதுவாக துவட்ட வேண்டும்.
உயரமான தலையணைகளைப் பயன்படுத்தக் கூடாது. இந்நோயாளிகளுக்கானத் தலையணைகள் இப்போது கடைகளில் கிடைக்கிறது.
கணிணியில் வேலை செய்பவர்கள், வண்டி ஓட்டுபவர்கள் இடை இடையே கழுத்துப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.
பயிற்சிகளை ஆசிரியரின் நேரடிப் பார்வையில் செய்யவும்.
உருளைக்கிழங்கு, பட்டாணி, காராமணி, வாழைக்காய், அதிக புளி, குளிர்பானங்கள் ஆகியவற்றை இந்த நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக வாயு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய உணவுப்பொருட்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். உணவில் முடக்கறுத்தான் கீரை, இஞ்சி, புதினா, பூண்டு போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
என்ன நண்பர்களே! மீண்டும் மற்றொரு நோய் பற்றிய குறிப்புகளோடு சந்திக்கிறேன்.
ஓம் தத் சத்
13 comments:
அனைவர்க்கும் புரியும் விதமாக படத்தின் மூலம் புரியவைத்தது மிகவும் அற்புதம்.நன்றி மாஸ்டர்
Master, Yet another wonderful and very useful read. I am one of those longtime computer users and this article for sure has helped me understand the potential harms behind sitting long hours before computer. Thanks a million for this!
I also lift lot of weights (not a weight lifter but I do some body building). After reading your article, I think I have to reduce the exercise time.
Myself, K.Ruba Soundar I got affected by the same problem during May 2011, Taken many medicines till August 2011, and it is not get fully cured. Then thro my relative I came to know about Master, and I contacted him. He taught some yoga as in this pictures and within One month. Now my health is very good. Thanks and Thanks a Lot Master.
idu eankku migavu udaviyaga irunthadu mikka nandri
நன்றி, கழுத்து எலும்பு ஜவ்வு விலகினால் எந்த விதமான சிகிச்சை செய்ய வேண்டும்
கழுத்து எழும்பு பிரச்சனையால் எனக்கு மயக்கம் ஏற்படுகிறது. என்ன செய்வது?
வழி காட்டுங்கள்......ப்லீஸ்
முதுகெழும்பு டிஸ்க் தேய்ந்து போனால் எப்படி சரி செய்யலாம்? தயவு செய்து கூறுங்கள்.வலி அதிகமாக உள்ளது.நிற்க நடக்க முடியவில்லை.நன்றி.
இந்தியாவில்தான் அதிகளவில் எலும்பு நோய் காணப்படுகின்றது
தண்டமுத்திரை, மற்றும் உபாத்தியாயமுத்திரை, விக்ன முத்திரை, நமஸ்கார முத்திரை please translate this in english please.
ஐயா எனக்கு 18 வயது இரண்டு வருடங்களாக கழுத்து வலி என்ன செய்வது?
Yanakku kaluthu valiyum. Mayakkam athigam ullathu.pls vazhi solluggal
அருமை
Nice Informative Post. Thanks for sharing
Angel Healing Services Provider, soma chatterjee
Post a Comment