மனித சரீரத்தின் வெளிப்பாடே கோவிலிலுள்ள கோபுரமும், கொடிமரமும், ஒருவகையில் நமது புராணங்களும், இதிகாசங்களும் உருவச்சிலைகளும் ,அவற்றிற்குத் தொடர்புடைய சமயச்சின்னங்களும், சரீரம், மனம் மற்றும் உயிர் இவற்றோடு தொடர்புடையவையே,,,,,,,
.
வெறுமனே கோவிலுக்குச் செல்வதோடு நின்றுவிடாமல் அனைத்தையும் ஒரு
மறுஆய்வுக்கு உட்படுத்தி உண்மையை உணர வேண்டியது அவசியமாய் இருக்கிறது.
அன்பு என்பது ஓர் அகஉணர்வு. உயிர்கள் மட்டுமே இந்த உணர்வை அனுபவிக்க முடியும். உயிராகிய சிவமும் இந்த அன்பும் வேறு வேறு அல்ல அதனால்தான் "அன்பும் சிவமும் இரெண்டென்பார் அறிவிலார்" என்று சொல்லப்பட்டது ...........
அகத்தில் அன்புபொங்க புறத்தில் உடல் மூலமாக அது செயல்படுத்தப்படுகிறது.
வெளிப்படுத்தப்பட்ட அன்பின் விளைவை உயிர் அனுபவிக்கிறது.
ஆக அன்போ அல்லது அதற்கு அபரமான காமமோ,
மாற்றான கோபமோ எதுவாகினும் அது உணர்வாக மனதில்
மாற்றான கோபமோ எதுவாகினும் அது உணர்வாக மனதில்
தோன்றி சரீரத்தின் மூலமாக செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது . இவை அனைத்துக்கும்
சாட்சியாக ஆன்மா சாட்சியாக "சும்மா' இருக்கிறது.
அறிவியல் பூர்வமாக ஒரு உயிருக்குள் உணர்வு பயணிக்கும் தொனியை உணர முடியுமா..? சிவச் சின்னங்களில் ஒன்றான திரி சூலத் தத்துவத்தை உணர்ந்து கொண்டால் உணர்வு உயிருக்குள் பயணிக்கும் உள்அனுபவத்தை ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடியும்.
திரிசூலத்தைக் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உண்மை விளங்கும்.
மனிதனின் ஆறறிவும் உடலில் ஒவ்வொரு புலனையும், பஞ்சபூதத்தையும் ஊடகமாக கொண்டு செயல்படுகிறது.
நிலம்-தொடு உணர்வு-உடல்(நிலத்தில் செடி உடலில் முடி)
நீர் _சுவைத்தல்-நாக்கு( நீர் ஊறும் புலன்)
நெருப்பு-ஒளி-கண்(உள்ளொளி கொண்டு அகவொளி காணல்)
காற்று-வாசம்-மூக்கு (சுவாசித்தல்)
ஆகாயம்-ஒலி-செவி (ஆகாசவாணியாய் ஓசையைக் கேட்டல்)
ஐம்புலன்களுக்கு ஐந்து பூதங்களென ஐந்து அறிவு வரை சூத்திரம் சரியே.
ஆறாவது அறிவு எது- அது பகுத்தறிவு என நம் பிள்ளைகளுக்கு சொல்லி தந்தோமே தவிர
அதற்கு மேல் இம்மி அளவு கூட நாம் ஆறாவது அறிவு பற்றிய அறிதலில்
செயல்படவில்லை.
இத்தனைக்கும் பலாயிரம் ஆண்டுக்கு முன்பே ஆறாவது அறிவுக்கு ஒரு
தொல்காபபியன் பெயர் வைத்தும் இன்னும் நாம் அதை பயன்படுத்துவதில்லை.
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அவற்றொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆற்றறிவதுவே அவற்றொடு மனனே..
நேரிதை உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
இது தொல்காப்பிய சூத்திரம். ஆறாம் அறிவுக்கு பெயர் மனம்.
மற்ற ஐந்து அறிவுக்கும் உள்ளது போலவே மனதுக்கும் தான் செயல்பட ஒரு ஊடகம் தேவை.
மனதின் ஊடகம் மூளை.(இரண்டாவது மூளை; முதுகுத்தண்டு) மனதின் செயல் ஆணைகளை மூளை மூன்று வெவேறான தலங்களிலிருந்து செயல்படுத்துகிறது.
வலது மூளை-இடது மூளை-நடு மூளை(முகுளம்)
வலது மூளை-இடது மூளை-நடு மூளை(முகுளம்)
இப்படிகூடச் சொல்லாம்
இடகலை-பிங்கலை-சுழுமுனை.
இந்த மூன்று முனைகளைக் குறிக்கும் அடையாளமே திரிசூலத்தின் தலைப்பகுதி.
இரண்டு முனைகள் வலதிடதாய் இருக்க நடுமுனை வானம் பார்த்து இருக்கும்.
தெருவிளக்கு கம்பத்தில் உள்ள மின்சாரத்தை வீட்டிற்குள் கொண்டுவரும்போது
என்ன செய்கிறோம்..?
phase -nutral- என பிரித்து முறையாக wiring செய்கிறோம் அல்லவா..?
இதே அமைப்புதான் சமச்சீராய் பிரிந்திருக்கும் மனித உடலிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இடது பக்கத்திற்கும் வலது பக்கத்திற்கும் உயிராற்றல் என்கிற மின்சாரத்தை எடுத்து செல்ல wiring செய்யப்பட்டிருக்கும் பாதையே முதுகு தண்டுவடம்.
திரிசூலத்தின் தலைப் பகுதியோடு இப்பொழுது தண்டுவடத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.
எண்ணங்க்ள்தாம் செயல்கள். செயல்களால் விளைவு. அதற்கு பின் கிடைக்கிற அனுபவம் இன்பம் அல்லது துன்பம். இப்படி நிகழ்வது ஒரு சக்கரம்.
எண்ணங்கள் செயலாய் பரிணமிக்க மனம் நினைத்து-மூளை அதை வாங்கி-உடல்உறுப்புகளுக்கு ஆணையிட- அங்கங்கள் அதை செய்யும்.
இந்த நிகழ்விற்கு ஆதாரமாய் இருக்கும் மூன்று மூளையையும் உடலின் அனைத்து உறுப்புகளோடும் இணைத்து வைத்திருப்பது நரம்பு மண்டலம்.
அந்த நரம்பு மண்டலம் முறையாக நம் தண்டுவடத்தில் wiring செய்யப்பட்டிருக்கிறது.
தண்டுவடத்தை எந்த அளவிற்கு நிமிர்த்தி வைக்கிறோமோ..அந்த அளவுக்கு மினசாரப்
பகிர்மாணம் தடை இல்லாமல் இருக்கும்.
அன்பை காட்டுவதால் சிவனாகிப்போன நம் ஒவ்வொருவரும் நம் சூலத்தை எப்படி
நிமிர்த்தி வைத்திருக்க வேண்டுமென இப்போது புரியும்.
சூலம் சரி அது என்ன நடுவில் ஒரு உடுக்கை..?
இதுவும் உடல் தத்துவமே.
உடுக்கையைப் பிரித்து பாருங்கள். ஓசை எழுப்புக்கூடிய இரண்டு பக்கங்கள், தோலை வைத்து இறுக்கக் கட்டப்பட்டிருக்கும் விதம், இவையெலாம் சாதாரண சங்கதிகள் அல்ல. வலது புறம் இறுக வேண்டுமெனில் அதற்கான இறுக்கத்தை இடது பக்கத்திலும், இடது பக்கத்தை வலது புறமாய் இறுக்க வேண்டும். அதாவது நம் உடலில் வலது பக்கம் முழுவதையும் இடது மூளை கட்டுப்படுத்துகிறது.
இடது பக்கம் முழுவதையும் வலது மூளை கட்டுப்படுத்துகிறது.
உடுக்கையின் மையத்தில் உள்ள ஓசை எழுப்பும் மணியானது உடுக்கையை வலதிடதாய்
அசைக்கும்போது வலது பறையில் இடது மணியும்..இடது பறையில் வலது மணியும் ஓசை
எழுப்ப்ம் வண்ணம் ஏற்பாடு.(மணி என்றால் காற்று அதாவது நமது சுவாசம் எனப்பொருள்கொள்ளவேண்டும்)
அதனால்தான் வலது கையோ காலோ இயங்காமல் போனால் சிகிச்சை இடது மூளைக்கு
நடக்கும். இயக்கம் இடதில் தடைப் பட்டால் சிகிச்சை வலதுமூளைக்கு நடக்கும்.
நம் ஒவ்வொருவரின் உணர்வுகளும் உடலுக்குள் செயல்வடிவம் பெறுவதற்கான blueprint இதுதான்.
நமக்குள் இருக்கும் நம்க்குச் சொந்தமான திரிசூலத்தை இன்று முதல் நாம் பூஜிக்கலாமா..?
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்.
தேடுவோம்..அனைத்தையும் உள்முகமாய் தேடுவோம்
அறிவியல் ஆன்மீகம் அனைவர்க்கும் நலம் தரும்..
.
8 comments:
It is really a helpful blog to find some different source to add my knowledge. Best Yoga Classes Melbourne
Very nice explanation! Your blog is a treasure to keep . Thank you so much Master🙏🏼
Very much informative blog with lot of information, Thank you master!
Thanks for sharing this helpfull blog
Pregnancy yoga classes Delhi
Corporate Yoga Classes Delhi
Excellent Blog! I would like to thanks for the efforts you have made in writing this post.
I am hoping the same best work from you in the future as well. This is very beneficial to me.
I’m happy I came across this website. I still learn something new from your posts! It will give
you a great idea about
best yoga teacher training hk
Thanks for sharing.
If you are looking for personal yoga trainer in delhi then please contact us for more information.
Thanks for sharing this insightful information! The 200 Hrs Yoga Teacher Training at Ayushman Yog looks incredible for anyone wanting to deepen their practice and gain teaching skills. The curriculum seems comprehensive, covering everything from asanas to the philosophy of yoga, and the setting in India adds such an authentic experience. Perfect for those looking to transform their yoga journey.
Post a Comment