எகிப்தில் மம்மி எப்படி உருவாக்கப்பட்டது?
பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப்பட்டன. இறந்தவரின் உடலை எகிப்தியர்கள் எப்படி மம்மியாக மாற்றினர் என்பதை நாம் இங்கே பார்ப்போம்.
1. இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்திப் பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் அவரை அலம்புவார்கள்.

2. உடலில் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.

3. நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டுக் கல் உப்பில் பதப்படுத்தப்படும். இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.

4. ஒரு நீண்ட வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள்.

5. பின்னர் உடலில் உள்ள ஈரப்பதத்தை நீக்குவதற்காக உடல் நாட்ரான் எனப்படும் கல் உப்பால் மூடப்படும்.

உடலை வெட்டும் போது வரும் ரத்தம் சதை ஆகியவற்றை தனியாக சேகரித்து வைத்து மம்மியை அடக்கம் செய்யும் போது அதனுடன் வைத்து விடுவார்கள்.
6. நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணைகளைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும்.

7. தேவையான உலர்ந்த உடல் உறுப்புகளை தனியாக எடுத்து கநோபிக் ஜார் (canopic jars) எனப்படும் ஜாடிகளில் தனித்தனியாக வைக்கப்படும்.

8. இந்த ஜாடிகளும் உடலுடனே சேர்த்து பாதுகாக்கப்படும்.

9. பின்னர் உடலுக்குள் உமி, காய்ந்த இலைகள், துணிகள் என சில பொருட்களை வைத்து மூடுவர். இப்பொழுது உடல் துணியால் மூடுவதற்கு தயாராகி விட்டது.

10. உடலில் நறுமணம் வீசும் திரவியங்கள் மற்றும் எண்ணையை தடவி உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.

11. சுற்றிய துணியின் நடுவே அமுலட் எனப்படும் ஒரு பதக்கத்தை வைப்பார். இது இறந்தவருக்கு அடுத்த உலகத்தில் துணையாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

12. உடலை துணியில் கட்டி கொண்டிருக்கும் போது மதகுரு இறந்தவரின் தலை அருகே நின்று கொண்டு சில புனித வார்த்தைகளை உரக்க கூறி கொண்டிருப்பார். இது கெட்ட சக்திகளை விலக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

13. கைகளையும் கால்களையும் இறுக்கமாக கட்டி பின் கட்டிய கைகளுக்கு நடுவே "இறந்தவரின் புத்தகத்தில்" உள்ள சில வரிகளை பாபிரஸ் தாளில் எழுத்து வைத்து விடுவர்.

No comments:
Post a Comment