Total Pageviews

226,745

Friday, November 4, 2011

ஓம் நமோ நாராயணா


விடுதலை வேண்டி விதைத்து நகர்கின்றேன்,
விடுதலைக்காக விரைந்து செயல்படுகின்றேன்
காலம் எனைக் கவர்ந்தாலும்
காணும் கனவெல்லாம் விடுதலையில்தான்


கடவுளைத் தியானம் செய்பவரும்- உண்மை
கடமையைத் தியாகம் செய்பவரும் .........?


மனமே நினைத்துப் பாராயோ!
அறப்பொருளை ஆன்மா கண்டுவிட்டால்
புறப்பொருளை புனிதர்கள் தேடுவரோ?


மனமே உன் உள் நோக்கந்தான் என்ன?
சித்தம் போக்கு சிவம் போக்கு என்றிராமல்
மனமே நித்தம் நித்தம் உன்னிடத்தில் உண்மைதேடு


அத்துவித தத்துவங்கள் அறியவேண்டாம்
புத்திதனை தெளிவாக வைத்துக்கொண்டால்
பஞ்சபூதம் அத்தனையும் பஞ்சாட்சரத்தில் அடக்கம்
அட்டமா சித்தியெல்லாம் ஒம் நமோ நாராயணா!

No comments:

Post a Comment