Total Pageviews

226,755

Saturday, June 4, 2011

எதை எழுதுவது


நிறைய எழுதவேண்டியதிருக்கிறது'என்னை"ப் பற்றி.

எதையும் பற்றாமல் 
 எதைப்பற்றியும் இல்லாமல்
"என்னை"ப் பற்றிக்கொண்டு 
எழுதியாகவேண்டும்.
"எனக்கு" மட்டும் தெரிந்த
துரோகம்
வலி
கனவு
வாழ்க்கை
கண்ணீர்
கவிதை
பாசம் 
பரிதவிப்பு
ஏமாற்றம்
பட்டறிவு
அனைத்திற்குமான தீர்ப்புகள் 
எழுதியே தீர வேண்டும்.
ஆனால்உச்சரிக்கும் முன்பே
ஊமையாகிப் போன
பேனாவை வைத்துக்கொண்டு
எதை எழுதுவது?

1 comment:

Hemamalini said...

master anbu patri elluthungal

Post a Comment