Total Pageviews

Tuesday, April 14, 2015

எலுமிச்சை கட்டுவது மூடநம்பிக்கையா????






வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சைப்பழம்,
மிளகாய் கட்டும் பழக்கம் மூட நம்பிக்கையா?????



நம்ம முன்னோர்கள் செய்த எந்த செயலும் மூடத்தனமாகாது....நம்மதான் அவர்களுக்கு அறிவில்லை என நினைக்கிறோம்....ஆனால் அவர்கள் செய்த ஒவ்வொரு சிறு விசயங்களும் ஞானத்தின் வெளிப்பாடு....நவீன விஞ்ஞானத்தின் முன்னோடிகள் நமது முன்னோர்கள் என்றால் அது மிகையாகாது....நமது உடல் தசவாயுக்களால் இயங்குகிறது....அதில் உதான வாயுவின் பங்கு இன்றியமையாதது.....இந்த உதான வாயுவைக்கொண்டே பறவைகள் பறக்கின்றன......மீன்கள் நீந்துகின்றன....இந்த அரிய உதான வாயுவே நம் உடம்பில் இரத்த சுழற்சிக்கு ஆதாரம்.....நாம் சுறுசுறுப்பாக இருப்பதற்கு உதான வாயு ஒரு காரணமாகிறது.........சரி அதற்கும் எலுமிச்சை பழத்திற்கும் என்ன தொடர்பு எனக்கேட்கிறீர்களா??????


எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக்அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலம், மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid)என்னும் அல்கலையுடன் (காரத்துடன்) வேதி வினைபுரிந்து ,இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் உதான வாயுவிற்கு இனையான ஒருவகைஉந்து வாயுவை வெளியிடுகிறது. 

இந்த அரியவகை வாயுவை வாகனத்தின் பேனட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட்(Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான
உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரைக் கடத்துகிறது, அந்த வாயுவானது ஓட்டுனரைஉறங்காமல், உற்சாகமாகஇருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாரத்துக்கொள்கிறது!

இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால்,ஒரு வாரம் மட்டுமே 
இந்தவாயு,மேற்சொன்ன இரசாயனப்பகுப்பால்கிடைக்கப்பெறும்.....அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டதை மாற்றிவிட்டுப்புதிதாகக் கட்டப்படுகின்றது. 

மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்யக்காரணம்; பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் தெற்கே 5டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம்நடக்கிறது !!

பாருங்கள் நம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் விஞ்ஞானத்துடன் அன்றே ஒன்றியிருக்கிறார்கள்!! இது போல நிறைய செய்திகளை போகர்பெருமானின் கிரந்தங்களில் காணமுடிகிறது.....என்ன ...எங்க அவசரமா போறீங்க......ஓ ....எலுமிச்சைப்பழம் வாங்கவா?????,,,,வாழ்த்துக்கள்....





1 comment:

Allen Jasson said...

Nice article, very useful information.


Massage In Park Meadows

Post a Comment